Jeyakanthan's Cinimavukku Pona Sithalu [சினிமாவுக்கு போன சித்தாளு] Book Review By Karthik Kirupakaran. Book Day, Bharathi Puthakalayam

ஜெயகாந்தனின் *சினிமாவுக்கு போன சித்தாளு* – கார்த்திக் கிருபாகரன்



என் நண்பர் ஒருவர் எனக்கு பரிசாகக் கொடுத்த புத்தகமே இது. சினிமா பார்க்கும் மோகத்தால் ஒரு குடும்பம் சின்னாபின்னமாகிப்போவதை கதை மூலமாக ஜேகே அவர்கள் தெளிவு படுத்துகிறார். 1975 க்கு முந்தைய காலகட்டங்களிலே கதைக்களம் அமைகிறது.

அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கை என்று இரண்டில் வெற்றி வாழ்க்கை வாழ்ந்தவர் வாத்தியார் (பெயர் குறிப்பிடவில்லை). அவரது மிக தீவிர ரசிகராக இருக்கிறார் ரிக்ஷா வண்டி ஓட்டும் செல்லமுத்து, அவனது மனைவி சித்தாள் கம்சலை. புருஷன விட பொண்டாட்டி கம்சலை வாத்தியாருக்கு மிக தீவிர ரசிகை. வாத்தியார் படம் புதுசா ரிலீஸ் ஆனா தியேட்டர்ல புருஷனுக்கு முன்ன இவ போயிடுவா! படம் பாத்து அப்புடியே மயங்கிடுவா! படம் பாக்குறப்ப தியேட்டர்ல பக்கத்துல எவனாவது இவகிட்ட சில்மிஷம் பண்ணாகூட இவளுக்கே தெரியாது. அவளோ மதிமயங்கி வாத்தியார் படத்த ரசிப்பா, சரி படம் பாக்கும் போது ரசிச்சா பரவயில்லை, டீ கடையில வாத்தியார் பட பாட்டு ஓடுனா கேட்டு ரசிச்சுட்டே நிக்கிறதும், சுவத்துல வாத்தியார் போஸ்டர பாத்தா முத்தம் குடுக்குறதும், வாத்தியார நினைச்சுகிட்டே புருஷனோட வாழ்றதும்,வாத்தியார் முகம் போட்ட பனியன் புருஷன் போட்டுருந்தா! அப்ப அவ ஆசைய வெளிபடுத்துறதுன்னு இருந்தா. இதுமூலமா சினிமா, சினிமாகாரர் மேல பைத்தியமா இருந்த சமுதாயத்த கதை மூலமா சொல்லிருப்பாரு.

Jeyakanthan's Cinimavukku Pona Sithalu [சினிமாவுக்கு போன சித்தாளு] Book Review By Karthik Kirupakaran. Book Day, Bharathi Puthakalayamஒருகட்டத்துல கம்சலையோட பைத்தியகார தனத்த புரிஞ்சுக்குற செல்லமுத்து. அவள எங்கயும் போகவிடாம, வீட்டுக்குள்ளே இருக்குற மாதிரி கண்ரோல் பண்ணுறான். ஒரு மாசத்துக்கு அப்பறம் வாத்தியார் நடிச்ச புதுப்படம் ரிலீஸ் ஆகுது, அவளுக்கு படம் பாக்க ரொம்ப ஆசை ஆகுது, ஆனா படத்துக்கு போககூடாதுன்னு புருஷன் கண்டிசன். இந்த சமயத்துல பக்கத்து வீட்டுகாரன் சிங்காரம் இவகிட்ட ஆசை வார்த்தை பேசி, தெரிஞ்சவங்க மூலமா வாத்தியார் சூட்டிங்க்கு கூட்டிட்டு போறேன். யாருக்கும் தெரியாம படத்துக்கு கூட்டிட்டு போறேன்னு அவள சீரழிக்கிறான். சித்தாள் கம்சலை, செல்லமுத்து வாழ்க்கை என்னாச்சு ? மனசு கனத்த வெளிபடுத்துற விதமா கதைய முடிச்சிருப்பாரு ஜேகே.

சினிமாக்குள்ள அரசியலையும், மக்களோட அறியாமைய பயன்படுத்திகிற சில நடிகர்கள், சினிமாவ சினிமாவா பாக்காத மக்கள். இந்த எண்ணம் தான் தமிழ்நாட்டுல பிழைக்க வந்த சிலர் அரியனை ஏறினாங்க. சிலர் இப்ப அரியனை ஏற முயற்சியில இருக்காங்க.

Jeyakanthan's Cinimavukku Pona Sithalu [சினிமாவுக்கு போன சித்தாளு] Book Review By Karthik Kirupakaran. Book Day, Bharathi Puthakalayam

சிலர் சொல்லி கேட்டுருக்கேன். அந்தகாலத்துல வாத்தியார் அடி வாங்குற சீன் வந்தப்ப உணர்ச்சிவசபட்டு ஓருத்தன் ஸ்கீரின கிழிச்சான்னு, வாத்தியார அடிச்ச வில்லன நேர்ல எங்கயாவது பாத்தா கல் ஏறிவாங்கன்னு, இவ்வளவு அறியாமையுள்ள மனுசங்க இருந்தத நினைச்சா! சிரிப்பும், வேதனையும் தான் வருது. நண்பர் புத்தகத்த குடுத்தப்ப உனக்கு சேத்துதான் இந்த புத்தக கருத்து, ஹீரோவ சினிமாவுல ரசிக்கிறதோட நிறுத்திக்கோன்னு அட்வைஸ் பண்ணாரு. ஆனா நம்ம தலைமுறை கொஞ்சம் முன்னேற்றபாதையில போகுது. ஏன்னா ! சினிமா ஹுரோகள்ல யார் பெரிய ஆள்ன்னு சண்டை போடுறது இப்ப அதிகம் பாக்க முடியுறதுல்ல. இனி வர காலம் பெரிய மாற்றம் உருவாகும். நடிகர்கள் எல்லாம் சக மனிதனாவும், எந்த ஓரு நாட்டு பிரச்சனைக்கும் அவர்களை முதன்மை படுத்தாத சமூகம் உருவாகும்.

தமிழ்படம் பார்ட் 1& 2 அனைத்து முன்னனி நடிகர்கள் நடிப்ப, அவங்க படத்த கலாய்ச்சு வந்திருந்தது. வரவேற்கதக்கது தான். யாதர்த்த வாழ்க்கையை வேறு கோணத்துல காட்டிய சினிமா படங்களின், முகதிரையை கிழித்தது இந்தபடம் தான்.

புத்தகம் படிச்சப்ப கலைவாணர் சொன்னது நினைவு வந்தது. “நாங்கள் சிரிப்பதும், அழுவதும் மக்களாகிய உங்களுக்காக அல்ல, பணத்திற்காக”.

ஜேகே எழுதிய இந்த புத்தகம் மனிதனின் யாதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.

– கார்த்திக் கிருபாகரன்

புத்தக அறிமுகம்: ஜெயகாந்தன் சிறுகதைகள் – பெ. அந்தோணிராஜ் 

புத்தக அறிமுகம்: ஜெயகாந்தன் சிறுகதைகள் – பெ. அந்தோணிராஜ் 

        தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் வாசகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய எழுத்தாளர். இவருடைய எழுத்துக்கள் திரைப்படமாகியுள்ளன. சாகித்ய அகாடெமி விருதுபெற்றவர்.பத்மபூஷன் விருது பெற்றவர். இந்தியா இலக்கிய விருதுகளில் உயர்ந்த விருதான ஞானபீட விருது பெற்று…