Budhdha robo poem புத்தா ரோபோ கவிதை

புத்தா ரோபோ (கவிதை) – க. புனிதன்



புத்தா ரோபோ பேசுவதில்
புள்ளினங்களின் மொழி
இருந்தது
அரண்மனை விட்டு
வெளியேறும் போது
உலோக காலம் விட்டு
காகத்தின் எச்சில் முளைத்த
விதையின் தொன்ம காலம்
நோக்கி நகர்ந்த
ரோபோவின் கதை இருந்தது
குயிலின் மொழி
உணவு கொண்டு போகும்
எறும்புகளின் சாரை
ஜென் கதைகள்
மனம் எனும் மூலிகையின்
வாசம் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருந்தது
வாழை இலை மேல்
மழைத் துளி தங்கும்
மெழுகில் முழுக்க பூசப்பட்டிருந்தது
யசோதரவின்
பெண் மொழியும்
தேநீர் மொழியும்
அதில் சேர்க்கப்பட்டிருந்தன.

K.Punithan's Poetry is Based on The story of the fox who betrayed the crow (Crow And Fox). Book Day Is Branch of Bharathi Puthakalayam

காகத்திடம் ஏமாந்த நரி கதை – க. புனிதன்



காகத்திடம் ஏமாந்த நரி கதை

புத்தரின்
போதி மரத்தடியில்
வடை சுடும் பாட்டி

வடையை அலகால்
கொத்திக் கொண்டு
போதி மரக்கிளை மேல்
அமரும் காகம்

காகத்தைப் பொறுத்த வரை
அது திருடு அல்ல

காகம்
இன்றைய நவீன மனிதன் போல
மென்மையாய் சாப்பிடுகிறது

காகத்தைப் பாடல் பாடச் சொல்லியும்
நடனம் ஆடச் சொல்லியும்
வடை கீழே விழும்
என எதிர்பார்த்து ஏமாந்த
நரி
இன்றைய சந்தையில்
எதுவும் வாங்காமல் திரும்பும்
அப்பாவி மனிதனை
ஒத்தது

…க. புனிதன்

K. Punithan's Poetry Olipenaval Kavithai Katrukolbavan. Book Day (Website) is Branch of Bharathi Puthakalayam.

ஒளிப் பேனாவால் கவிதை கற்றுக் கொள்பவன் – க. புனிதன்

ஒளிப் பேனாவால் கவிதை கற்றுக் கொள்பவன் ரோஜா ரோஜா பாடலில் ரோஜா தோட்டத்தின் பின்னணியில் தாஜ்மஹால் காணும் பொழுது ஆக்ரா நதியில் மீன் பிடித்து சுட்டுத் தின்பது போலத் தொன்மக் கனவு தட்டான் தட்டான் வண்டி கட்டி பாடலில் மழை பின்ணணியில்…
K.Punithans Poems (Vilakkai Amaithipaduthu, Pugaippadam Veliyilai Kuraithu Vaippaval). Book Day is Branch of Bharathi Puthakalayam.

க. புனிதனின் இரண்டு கவிதைகள்

விளக்கை அமைதிப்படுத்து விளக்கை அமைதிப்படுத்து அம்மா சொன்ன வார்த்தைகளை கற்று கொண்டேன் காலையில் பூத்த பூக்களிடம் துரிதமாக நகரும் நத்தையிடம் அவள் செய்த பூரியிடம் இன்னும் எத்தனை சொற்களை தெரிந்து வைத்திருப்பாளோ இது மாதிரி அவள் சொன்ன வார்த்தைகள் மறந்து போய்…
வெறுமனே இருத்தல் – க. புனிதன்

வெறுமனே இருத்தல் – க. புனிதன்

வெறுமனே இருத்தல்   விளையாட குண்டு மணிகள் இருக்கின்றன. அலங்காரத்திற்காக ரசிக்க மயில் மாணிக்கம் செடி பூக்கள் இருக்கின்றன. காபி தூள் போட்டால் ரோஜா செடி நன்றாக வளரும் என்று தெரியும். வாழை நாரில் உதிரிப் பூக்களை வைத்துக் கட்டி வைத்தால் நன்றாக…
விலங்குகளின் பாஷை – க. புனிதன்

விலங்குகளின் பாஷை – க. புனிதன்

விலங்குகளின் பாஷை மூன்று பூனைகள் போல் எட்டி பார்க்கின்றன அரளி பூக்கள் அம்மாரி யானை போல் அசைகிறது செம் பூக்கள் மரம் ஆட்டுக்குட்டி போல் என் காதைத் தருகிறேன் உன் வருடலுக்கு உடலை நெட்டி எடுத்த பின் சிலிர்க்கும் பூனையின் சிலிர்ப்பு…
கோடை தென்றலும் தள்ளாடும் சில பூக்களும் – க. புனிதன்

கோடை தென்றலும் தள்ளாடும் சில பூக்களும் – க. புனிதன்

கோடை தென்றலும் தள்ளாடும் சில பூக்களும் பிச்சைக்காரனை போல் போய் நிற்கிறேன் நகைச்சுவை சொற்களாய் நிரம்புகின்றன தட்டில் ஏழை வீட்டில் கோடையில் நின்று போன மலை அருவியின் வற்றிய சொற்களோடு வந்திருக்கும் ஏழை நம்பிக்கை தரும் சில கடவு சொற்களால் தன்னைப்…
தன்னிலை படரும் கொடி – க. புனிதன்

தன்னிலை படரும் கொடி – க. புனிதன்

தன்னிலை படரும் கொடி மாமரத்தில் கட்டியிருந்த ஜானி நாயை பார்த்து சர்வேஷ் குட்டி கேட்டான் மழை வந்தால் குளிர் வந்து ஜானிக்கு காய்ச்சல் வந்திறாதா அவனுக்குத் தன்னிலை உணர்வு சுரந்து கண்கள் கலங்கி இருந்தன தன்னிலை உணர்வைச் குறைக்க மாத்திரை இருந்தால்…
சாம்பல் நோய் – க. புனிதன்

சாம்பல் நோய் – க. புனிதன்

சாம்பல் நோய் ஐந்தாயிர வருட பழைமையான விவசாயி நான் அதற்கு பிறகு வந்த உங்கள் கடவுள் வழிபாட்டை தொன்மை என்கிறீர்கள் நீங்கள் கட்டிவைத்த மாட்டை வைக்கோல் குளிர்ந்த தவிடும் பொட்டும் கொடுத்து வளர்க்கும் விவசாயி நான் நீங்கள் அதை புராதன வழிபாடு…