புத்தரின் நகைச்சுவைத் துணுக்கு கவிதை – க. புனிதன்
போதி மரத்திற்குக்
கொஞ்சம் எரு
சேர்த்துப் போட்டு
ஆசை காட்டினேன்
பூக்கள் பூத்தன….
ரொம்ப நாள் கழித்து
முதல் முறையாக
எடுத்து கொள்ளும்
மூலிகை
ரொம்ப நாள் கழித்து
முதல் முறை தீண்டும்
தாழி வைக்கும்
பசுவின் மேனி
ரொம்ப நாள் கழித்து
முதல் முறை பருகும்
தேநீர்க் குவளையின்
வித்தியாசமான வடிவம்
ரொம்ப நாள் கழித்து
சாப்பிடும் வடையில்
கொத்த மல்லி வாசம்
அனைத்திலும் உணரும்
மனம்
கடைக்கார பாட்டியிடம்
வடை வாங்கி சாப்பிடாத
குறையைப் போக்கும் நிலா
கொசு
நிலா
சமரசம்
வாழ்க்கை
பூக்கள்
கற்பனை
தானியம்
விவசாயி
புன்னகை
பறவைகள்
வானம்
அழகிய யுவதி
ஸ்வீட்டர் அணிந்த முதியவள்
ஒலி ஒளி படம்
விளம்பரங்கள் அனைத்தும்
புத்தரின் நகைச்சுவைத் துணுக்குகள்
போல் தோன்றியது
புத்தர் சினிமா கவிதை – க. புனிதன்
பிரமாண்ட அரண்மனை செட்
போதி மரம் செட்
வீதியே பார்த்திராத
ராஜ வம்சம் சார்ந்த
ஒருவன்
ஒரு நாள் இரவில்
துறவி ஆகி வெளியேறும்
கதை
மனைவியைப் பிரிந்த
சோக இசை அமைப்பு
அரண்மனை ஆடைகள்
துறவி ஆடைகள்
சிறப்பான உணவு வகைகள்
அம்பு எய்த அன்னத்தின்
காயத்திற்கு மருந்திடும் சிறுவன்
சிறந்த பின்னணிக் கதை
உலகின் உயர்ந்த இசை
மௌனம் எனும்
சிறப்பு சப்தம்
முழு நிலவில்
முற்றும் உணர்ந்தவன்
புத்தர் பற்றி படமெடுக்க
எவ்வளவு பிரமாண்ட செலவாகும்…
கழிவிரக்கத்தின் நிறம் கவிதை – க. புனிதன்
நொறுங்கும்
கூரைச் சருகு போன்ற
நிலையில்
மனக் குளத்தில் விழும்
மழை துளி போல்
நம்மால் மட்டும் என்ன செய்ய முடியும்
எனும் சுய கழிவிரக்கமே
நம்மைக் காப்பாற்றுகிறது
நவீன ஓவியமாய்
மழைக்காலத்தில்
கோழி இட்ட எச்சத்தில்
என்ன அழகாய்
கழிவிரக்கத்தின் நிறம்