ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது - ராம்குமார். ரா

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது – ராம்குமார். ரா

      சாதியம் பற்றியும் மதவாதம் பற்றியும் அதன் உள் நோக்கங்களையும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும் வரலாற்றின் மூலம் விளக்கும் கட்டுரை நூல். ஆதவன் தீட்சண்யா அவர்களின் பல உரைகளும் அனுபவங்களின் மூலம் இவை விவரிக்கப்பட்டுள்ளது. சாதி இல்லை என்று…
நூல் அறிமுகம்: ஆதவன் தீட்சண்யாவின் ‘கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது’ –  பிரவீன் ராஜா

நூல் அறிமுகம்: ஆதவன் தீட்சண்யாவின் ‘கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது’ – பிரவீன் ராஜா




மொத்தம் 18 கட்டுரைகள்.

சாதியை பற்றிய புரிதல் கம்யூனிஸ்ட்களுக்கு அவ்வளவாக இல்லை என்ற புரிதலை மாற்றும் கட்டுரைகள் என நான் நினைக்கிறேன்.

தோழரி‌ன் பேச்சுகளை பெரும்பாலும் கேட்டதன் காரணமாக, புத்தகத்தை படிக்கும் போது, அவரின் குரல் வழியே படிப்பது போன்ற ஒரு உணர்வு.

100 பெரியார்கள் வேண்டும் என்றால் நமக்கு என்ன அதைவிட பெரிய புல் புடுங்குர வேளை இருக்க போகிறது என்ற வெளிப்படையான கேள்வி நடுநிலை என்னும் போர்வையில் வாழும் எலைட்கள் கன்னத்தில் பளீர் என்று அறைந்த வலியை கொடுக்கும்.

கல்வி என்பது அறிவின் வளர்ச்சியையும், சமூகத்துடன் சமமாக பழகும் குணத்தையும், பகுத்தறிவை வளர்க்கும் இடமாக இல்லாமல் போனதுக்கு தனியார் கல்வி நிறுவனங்களும், பெற்றோர்களின் வெட்டி தற்பெருமையுமே காரணம் என்பதை அரசு பள்ளி மாணவர்களின் பக்கம் நின்று பேசி இருக்கிறார்.

இறைவனின் படைப்பில் மனிதனுக்கு மட்டும் தான் பகுத்தறிவு உள்ளது என தொடங்கிய வரிகள் போதும், கொள்கை புரிதலுடன் எவ்வளவு பேர் பயணிக்கிறார்கள் எ‌ன்று.

சாதி ஒழிப்பில் தலித் மக்களை அரசியல்படுத்துவதில் உள்ள சிக்கலையும், தலித் அல்லாதார் செய்யவேண்டிய சுய சாதி எதிர்ப்பு, சாதி மறுப்பு திருமணம் போன்ற முன்னெடுப்புகள் பற்றியும் அழகாக பேசி இருக்கிறார்.

தோழர் திருமாவின் இயக்க அரசியல் முதல் ஓட்டு அரசியல் பயணம் வரை இருந்த ஈர்த்த மற்றும் முரண்பட்ட விஷயங்கள் குறித்து பேசியது எல்லாம் அருமை.

இருக்கையில் உட்காரும் போது குத்தும் சின்னஞ்சிறு ஊசி உண்டாக்கும் வலியை அனைத்து கட்டுரையிலும் உணர்த்தி இருக்கிறார்…

அந்த வலி சாதியும் மதமும் முக்கியமாக கருதும் கூட்டத்திற்கு எதிராக மனித மாண்பினை மீட்கும் உண்மையான மனிதர்களை ஒன்றிணைக்கும் என்று நானும் அவரை போலவே நம்புகிறேன்.

– பிரவீன் ராஜா

நூல் : கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது
ஆசிரியர் : ஆதவன் தீட்சண்யா
விலை : ரூ.₹80
வெளியீடு : நூல்வனம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

புத்தக அறிமுகம்: கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது – ஆசிரியை.உமா

புத்தக அறிமுகம்: கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது – ஆசிரியை.உமா

2016 இல் நூல் வனம் பதிப்பகத்தால் வெளிவந்துள்ள கட்டுரைத் தொகுப்பு நூல் இது.18 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. சமூகத்தின் அரசியல் பார்வை ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படையாகத் தெரிகிறது. அது ஆணவக் கொலையாகட்டும் , கார்ப்பரேட் நிறுவன சுரண்டலாகட்டும் தெள்ளத் தெளிவாகப் பேசப்பட்டுள்ளது.  …