மொழி பெயர்ப்பு கவிதை: என் ஆன்மாவே என்னிடம் கருணை காட்டு..! (Have Mercy on Me, My Soul..!) - கலில் ஜிப்ரான் (Kahlil Gibran) | Kahlil Gibran's Have Mercy on Me - My Soul Poem Translated in Tamil  | www.bookday.in

மொழி பெயர்ப்பு கவிதை: என் ஆன்மாவே என்னிடம் கருணை காட்டு..! (Have Mercy on Me, My Soul..!) – கலில் ஜிப்ரான் (Kahlil Gibran)

முறிந்த சிறகுகளுக்குப் பிறகு கலில் ஜிப்ரான் என்னும் கவிஞானியை மொழி பெயர்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே என்ற நினைப்பில் மீண்டும் அவருடைய கவிதை ஒன்றை வாசிக்க எடுத்தேன். இந்த உலகில் கவிதை வாசிப்பை ஆனந்த அனுபவமாக மாற்றிவிடக்கூடிய மகா கவிஞர்களில் ஒருவர்…
கலீல் ஜிப்ரான் எழுதிய மணலும் நுரையும் - நூல் அறிமுகம் | Lebanese-American writer and poet Kahlil Gibran - Manalum Nuraiyum Book review - https://bookday.in/

மணலும் நுரையும் – நூல் அறிமுகம்

மணலும் நுரையும் - நூல் அறிமுகம்   நூலின் தகவல்கள் :  நூல் : மணலும் நுரையும் ஆசிரியர் : கலீல் ஜிப்ரான் தமிழில்  : டாக்டர் ரமணி வெளியீடு : கவிதா வெளியீடு பக்கம் :  56 விலை : …
Laws And Law Giving poem By Kahlil Gibran in tamil translated by Thanges. கலில் ஜிப்ரானின் ஆங்கில கவிதை சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் - தமிழில்: தங்கேஸ்

கலில் ஜிப்ரானின் ஆங்கில கவிதை சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் – தமிழில்: தங்கேஸ்




சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் (LAWS AND LAW GIVING)
முன்னொரு காலத்தில்
ஒரு அரசன் இருந்தான்
அவன் அறிவுக் கூர்மை
கொண்டவன்

ஒரு நாள் அவன் தன் குடிமக்களுக்காகப்
புதிதாகச் சட்டங்கள் இயற்ற வேண்டுமென்று நினைத்தான்
ஓராயிரம் இனக்குழுக்களிலிருந்து
ஓராயிரம் அறிவாளிகளைத் தேர்ந்தெடுத்துத்
தன் தலை நகரத்துக்கு அழைத்தான்
அவர்களிடம் “நீங்கள் புதிதாகச் சட்டங்களை எழுதுங்கள் ” என்றான்

அதன் படி
ஆயிரம் சட்டங்களும் செம்மறி ஆட்டுத் தோலின் மீது எழுதப்பட்டு
அவன் முன்னே வைக்கப்பட்ட போது
அதை வாசித்து விட்டு அவன்
ஆத்மார்த்தமாய் அழுதான்

கண்ணீர் நிற்கவில்லை
காரணம் கேட்ட போது
” தன் நாட்டில் இப்படி ஓராயிரம் குற்றவாளிகள்
உலவிக் கொண்டிருக்கிறார்களே
அதை தான் முன்பே அறிய முடியவில்லையே” என்றான்

பிறகு தன் எழுத்தரை அழைத்து
உதட்டில் ஒரு புன்னகையுடன்
எழுதிக் கொள்
இனி இந்த நாட்டின் சட்டங்களை
என்று ஒவ்வொன்றாக உரைக்க
ஆரம்பித்தான்
அவன் இயற்றிய சட்டங்கள் மொத்தமே ஏழுதான்

அழைக்கப்பட்டிருந்த அத்தனை அறிவாளிகளும்
ஆறாத கோபத்துடன்
தங்கள் வசிப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்
தாங்கள் எழுதிய சட்டங்களை
தங்கள் இனக்குழுக்களின் மீது பிரயோகித்தனர்

அன்றிலிருந்து ஒவ்வொரு மனிதனும்
தனக்கு விதிக்கப்பட்ட சட்டத்தை
பின்பற்ற ஆரம்பித்தான்
அதனால் தான் இன்றும் உலவிக் கொண்டிருக்கின்றன
ஆயிரமாயிரம்
சட்டங்கள்

இது ஒரு பெரிய தேசம்
இங்கு ஓராயிரம் சிறைகள்
ஓராயிரம் சிறைகளிலும்
ஆண்கள் பெண்கள்
அத்தனை பேரும் சட்டத்தை மீறியவர்கள்

இது ஒரு பெரிய தேசம் தான்
மக்கள் அனைவரும்
ஓராயிரம் சட்டங்களை இயற்றியவர்களின்
வம்சா வழியில் தோன்றியவர்கள்
ஆனால் அரசன் மட்டும் ஒரே அரசன்

மூலம்: கலில் ஜிப்ரான்
மொழி பெயர்ப்பு: தங்கேஸ்

Kahlil Gibran's poem Fear in tami translated by Krithika Prabha கலீல் ஜிப்ரானின் பயம் கவிதை தமிழில் கிருத்திகா பிரபா

கலீல் ஜிப்ரானின் பயம் கவிதை – தமிழில் கிருத்திகா பிரபா



Fear
by Kahlil Gibran

It is said that before entering the sea
a river trembles with fear.
She looks back at the path she has traveled,
from the peaks of the mountains,
the long winding road crossing forests and villages.
And in front of her,
she sees an ocean so vast,
that to enter
there seems nothing more than to disappear forever.
But there is no other way.
The river can not go back.
Nobody can go back.
To go back is impossible in existence.
The river needs to take the risk
of entering the ocean
because only then will fear disappear,
because that’s where the river will know
it’s not about disappearing into the ocean,
but of becoming the ocean.

பயம்
கலீல் ஜிப்ரான்

கடலோடு இணையுமுன்
கலக்கமுண்டு நதிக்கு…
காடுகள், மலைகள், ஊர்கள் என
கடந்து வந்த பாதை
காட்சியாய் மனதிற்குள்…
கண் முன்னே விரியும்
கடலின் பிரமாண்டம், தனை
காணாமல் செய்திடுமோ?
ஆனால், கதியில்லை வேறு
கலப்பதுவன்றி…
திரும்புதல் என்பது
நதிக்கென்ன, எவருக்குமில்லை!
துணிவே பயம் முறிக்கும்…
இது தொலைத்தலில்லை
புதுப்பித்தல் என்ற
உண்மை உறைக்கும்!

தமிழில்: கிருத்திகா பிரபா

Kahlil Gibran’s Yesterday, Today and Tomorrow English Poetry in Tamil Translation by Thanges. Book day is Branch of Bharathi Puthakalayam

கலில் ஜிப்ரானின் (Kahlil Gibran) மொழி பெயர்ப்பு கவிதைகள்

நேற்று, இன்று மற்றும் நாளை நான் என் நண்பனிடம் சொன்னேன் கை நீட்டி நண்பா அதோ பார் அவன் தோளில் சாய்ந்திருக்கிறாளே அந்த அழகிய பெண் அவள் தான் நேற்று இது போலவே என் தோளில் சாய்ந்திருந்தாள் ..... ஆம் என்…