காலச் சக்கர பயணம் சிறுகதை – சாந்தி சரவணன்
உலகமே ஊரடங்கில் முடங்கிக் கிடக்கிறது. இருட்டி கிடக்கும் வானத்தில் மின்னல் அடிப்பது போல் ஊரடங்கு விலக்கு சில நேரங்களில் அளிக்கப்படுகிறது பல நாட்களாக வெறிச்சோடிப் போய் இருந்த சாலைகள் ஒரு மனிதனை கண்டாலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கின்றன சாலைகள் மட்டுமல்ல இன்று நடைப்பயணம் மேற்கொண்ட எழிலிசை மன நிலையும் அவ்வாறே இருந்தது பல நாட்கள் கழித்து வெளி உலகத்திற்கு நடை பயிற்சிக்கு வந்தவள் சாலையில் ஏதோ ஒன்று தன் நடைபாதையில் மின்னிய வண்ணம் கிடந்தது. அதன் அருகே சென்று பார்த்தாள். ஆம் காலச் சக்கரம் கருவி (Time travel machine) அவள் அந்த கருவியைப் பற்றி ஏற்கனவே புத்தகத்தில் படித்து இருக்கிறாள்.
இந்த காலத்தில் இப்படி ஒரு வாய்ப்பா இது ஏன் எனது கண்களில் பட்டது என வியந்த படி அக்கருவியை தன் அறைக்குள் கொண்டு வந்து பத்திரமாக பூட்டி வைத்தாள். அதிசிய கண்டுபிடிப்பு இப்போது தன்னிடம். ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி.
மாலை அலுவலகம் முடிந்து வந்தவுடன் அதனை எடுத்து ஆராய்ச்சி செய்து கொள்ளலாம் என முடிவு செய்து அவசரமாக அலுவலகத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டு கிளம்பினாள்.
“அம்மா அம்மா டைம் ஆகுது. டிப்பன் ரெடியா மா? “ என கேட்ட வண்ணம் எழிலிசை பூஜை அறைக்குள் சென்று எல்லா சாமிகளுக்கும் ஒரு வணக்கம் வைத்து விட்டு ஹாலுக்கு வந்தாள்.
அப்பா இராமானுஜம் இந்து நாளிதழ் படித்து கொண்டு இருந்தார். ஓய்வு பெற்ற அறிவியல் ஆசிரியர். அவர்கள் குடியிருக்கும் திருப்பத்தூரில் அரசு பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றார். ஒரே மகள்.
“அப்பா குட் மார்னிங்…. “
*குட் மார்னிங் எழில். கிளம்பிட்டியா மா... ஆபிஸ் வேலை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்குமா.……. “
*ஒகே பா... “
“ஆன்லைன் வேலை செய்ய பழகி விட்டதால் சற்று கடினமாக உள்ளது.… ஆனால் பழகி விடும்.. “
“அம்மா… அம்மா.. டைம் ஆகுது…. மா”
“இதோ வந்துட்டேன் மா.…. என அம்மா சரஸ்வதி ஒரு கையில் தோசை தட்டோடு மறு கையில் டிபன் பாக்ஸோடு வந்தார்.. “
“அம்மா தோசை வேண்டாமா.… சாப்பாடு மட்டும் தானே கட்ட சொன்னேன் என செல்லமாக “
“என் செல்லம் இல்ல... இந்த இரண்டு வாய் வாங்கிட்டு போ... அம்மா ஊட்டி விடுகிறேன் என்றாள். “
“அந்த அன்பு கட்டளையை மீறி அவளால் செல்ல இயலவில்லை... “
“சரி.. என தோசையை சாப்பிட.… அம்மா தேங்காய் சட்னி சூப்பர்... “
இராமானுசர் உடனே உங்க அம்மா எப்போதும் சூப்பர் தான்.…. என்று சொல்ல..
போதும் போதும் இரண்டு பேரும் சேர்ந்து கொண்டால் அவ்வளவு தான்.… என்றார் வெட்கத்தோடே..
சரி சரி கிளம்பு. பார்த்து பத்திரமாக போய் வா... என அப்பாவும் அம்மாவும் வாசல் வரை வந்து மகளை வழி அனுப்பி வைத்தனர்..
அன்று முழுவதும் எனோ அவளுக்கு அலுவலகத்தில் நாட்டமே இல்லை கூகுள் சர்ச் முன்னே அமர்ந்து ராஜராஜசோழன் ஆட்சி ஆண்டு எந்த வருடம் தஞ்சை பெரியகோயில் கட்டிட அமைப்பு எப்போது தொடங்கியது என அனைத்து தகவல்களையும் குறிப்பு எடுத்துக்கொண்டு அலுவலகத்தில் அரை நாள் விடுப்பு சொல்லிவிட்டு வேகமாக தன் வீட்டை அடைந்தாள்.
கணினியில் எப்படி அந்த கால சக்கரத்தை பயன்படுத்துவது என முழுமையாக பார்த்து தெரிந்து கொண்டாள்.
அவள் விரும்பிய வண்ணம் இராஜ இராஜ சோழன் காலத்திற்கு பயணிக்க கருவியின் இயக்கத்தில் பதிவு செய்து பயணிக்க தொடங்கினாள்
ஏதும் அறியாமல் சுற்றி முற்றும் பார்த்தவள் திடீரென தஞ்சை பெரிய கோயிலின் வாசலில் அமர்ந்து இருப்பதை கண்டு மகிழ்ந்தார்
2021 ஜனத்தொகை 1020 ஆண்டுகள் பின்நோக்கி இருந்த ஜனத்தொகை ஒரு வேற்றிடத்தை உணர முடிந்தது. கருப்பு வெள்ளை புகைப்படத்தில் பின்புலத்தில் மட்டுமே கலர் என்பது போல இயற்கை வளங்கள் பச்சைபசேலன கண்னை பறித்தது
அழகாபுரி என்பது தஞ்சாவூரின் பெயர். சோழநாட்டின் தலைநகரமாக விளங்கிய ஊரே தஞ்சையாகும் .
தஞ்சைக் கோயில் கல்வெட்டில் இராஜராஜனின் மெய்க் கீர்த்தியை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருந்தன “திருமகள் போல பெருநிலச் செல்வியும் தனக்கே யுரிமை புண்டமை……
என மெய்கீர்த்தியோடு கோயில் கல்வெட்டு பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தன.”
எழிலிசை கல்வெட்டு எழுத்துகளை சமீபத்தில் தான் கற்றுக் கொண்டாள். தமிழி எழுத்துகள் படிக்க துவங்கினாள்
தஞ்சை மாநகரின் பெரிய கோவிலைக் கட்டிய பெருமை முதலாம் ராஜராஜசோழன் தான். எழிலிசை அங்கு செய்திகளை சேகரித்து கொண்ட வண்ணம் இருந்தாள்.
இக்கோவிலுக்கு மூன்று வாசல்கள் உருவாக்க திட்டம் வரையரைத்து கொண்டு இருந்தார்கள்.
சிற்பங்கள் சிலிர்க்க வைக்கும் வண்ணம் அமைய வேண்டும் என இராஜ இராஜ சோழன் கட்டளையிட்டு கொண்டு இருந்தார்.
செய்திகளில் வரலாற்று ஆவணங்களில் பார்க்கும் அரசனை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி செயலற்று நிற்கிறாள் எழிலிசை. மேலும் அவர் கட்டளை பிரபித்து கொண்டே இருந்தார்.
108 வித நாட்டியக் கலை உள்ளது என குறிப்புள்ளது. அவற்றை எல்லாம் செதுக்க வேண்டும் என சிற்பிகளுக்கு அமைச்சர்கள் வாயிலாக கட்டளை இடப்பட்டது
கோபுரத்தின் மேல் தங்கத் தகடுகளைப் போர்த்தி கட்டமைக்கவும் உத்தரவு பிறபித்தான் சிற்ப கலை மட்டுமே அன்றி ஒவியம் கலையிலும் சிறந்து விளங்க வேண்டும் என கட்டளைகள் பரந்த வண்ணம் இருந்தது.
திட்டமிடலில் சிறந்து விளங்கினான் இராஜ இராஜ சோழன். வருமானத்தில் கோவிலுக்கு செலவு போக எஞ்சிய பணத்தில் ஒரு பகுதி கல்விக்காகவும், ஒரு பகுதி மருத்துவத்திற்காகவும் கட்டளைகள் இயற்றப்பட்டது.
எழிலிசை இந்த திட்டம் நமது திட்டம் தானா? இன்று ஆஸ்திரேலியாவை பார்த்து நாம் இந்த திட்டத்தை கண்டு வியக்கிறோம். ஆனால் 1012 ஆண்டுகளுக்கு முன்பே இராஜ இராஜ சோழன் கடைப்பிடித்த அரசு திட்டம். வருங்கால அமைச்சர்கள் தான் அதை மாற்றி இருட்டு அடைப்பு செய்து உள்ளனர் என புரிந்து கொண்டாள் எழிலிசை.
அதுமட்டுமின்றி தனது சமயத்தை தான் அனைவரும் பின்பற்ற வேண்டும் என அவன் கட்டாயப் படுத்தவில்லை. எல்லா மதத்தினரயும் நேசிக்கும் குணம் கொண்டு இருந்தான்
ஆச்சரியம் தரும் கூடிய செய்தி என்னவென்றால் மழைநீர் சேகரிப்பு திட்டம் அன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தன.
கோவில் கட்டும் பணியாளருக்கு நீர் மோர் கொடுத்து கொண்டு இருந்தனர் பெண்கள்.
கல் சக்கரம், அலங்கார கல் ஜன்னல் போன்றவை 1011ஆண்டுக்கு முன்பே தமிழனின் திறமைகளை உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது
இராஜ இராஜ சோழன் என்ன ஒரு ஆளுமை. இந்த மாபெரும் ஆளுமையின் வழிகாட்டலில் தானே இன்றும் தஞ்சை கோயில் பிரமாண்டமாக நம் கண் முன்னே நிற்கிறது என நினைத்தபடி தஞ்சை கோயிலின் கட்டிட பணிகளை பார்த்த வண்ணம் இருக்க, அவளின் கைபேசி அடிக்க கால சக்கரத்தின் மேல் விழுந்தது. அதன் காலம் இன்றைய தேதியில் பதிவு செய்ய அவள் அவளின் வீட்டில் இருந்தாள்.
அம்மாவின் கதவு தட்டும் சத்தம், “எழிலிசை…… என்னம்மா செய்ய…. வெளியே வா.….. காபி சாப்பிட, ” என அழைத்து கொண்டு இருந்தாள்.
எழிலிசை கால சக்கர இயந்திரத்தை பத்திரமாக உள்ளே வைத்து விட்டு நாளை மீண்டும் பயணத்தை துவங்கலாம் என காபி அருந்த வெளியே வந்தாள்.