நூல் அறிமுகம்: பெ. கண்ணப்பதாஸ்  ’நட்ட கல்லும் பேசுமோ’ – பிரேம்குமார்

நூல் அறிமுகம்: பெ. கண்ணப்பதாஸ் ’நட்ட கல்லும் பேசுமோ’ – பிரேம்குமார்




நூல் : நட்ட கல்லும் பேசுமோ சித்தர் பாடல்கள் ஓர் அறிவியல் நோக்கு 
ஆசிரியர்கள் : பெ. கண்ணப்பதாஸ்
விலை: ரூ. 180/-
பக்கம் : 240

வெளியீடு : தமிழினி 
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்தை அடையாளம் காட்டும் என்பது போல நான் வாசித்த “ஆசைப்படாதே எதுவும் கிடைக்காது! தேடு எல்லாம் கிடைக்கும்” என்ற புத்தகத்தில் நான் வாசித்த சிவவாக்கியரின் பாடல் வரிகள் “நட்ட கல்லும் பேசுமோ ” புத்தகத்தின் அட்டைப்படத்தில் தலைப்பாக பார்த்தவுடன் இந்த புத்தகத்தை வாங்கிவிட்டேன்.

“நட்ட கல்லும் பேசுமோ ” என்ற இந்த புத்தகத்தின் வாசிப்பு சித்தர்களின் மீதான ஈர்ப்பு இன்னும் கூடிவிட்டது. வேதியியல், வானியல், மருத்துவம், ஜோதிடம் என்று பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக விளங்கும் இவர்கள் இறைத்தன்மையை உணர்வதற்கு இடையூறாக இருக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் சாதி பேதங்களுக்கும் எதிராக குரல் கொடுத்திருக்கின்றனர் என்ற தன்மைகள் நான் அறியாதது. அதற்காக சித்தர்கள் சொல்லுவதே வேதவாக்கு என்று முன்மொழியாமல் அதில் உள்ள இடைச்செருகல்களையும் சுட்டிக்காட்டி வாசகர்களுக்கு ஒரு முழுமையான பார்வையை இந்த கட்டுரை தொகுப்பில் உதாரணங்களுடன் திறம்பட சொல்லி இருக்கிறார் எழுத்தாளர் பெ.கண்ணப்பதாஸ். இதற்காக இவர் எடுத்துக்கொண்ட உழைப்பு அபாரமானது. நமது புராணங்களின் உண்மை தன்மையையும் கேள்விகூறியது என்று பல அவதானிப்புகள் இன்றியமையாதது.

சித்தர்களுடைய எல்லாப் பாடல்களையும் வாசித்து அதன் உட்கருத்தையும் மறைமுக தகவலையும் உள்வாங்கி ஆய்வதற்கு இந்த ஆயுள் போதாது. அப்படி இருக்க இது போன்று ஒரு கண்ணோட்டத்தை வாசகர்களுக்காக விட்டு சென்றதற்கு எழுத்தாளர் பெ.கண்ணப்பதாசை பாராட்ட வேண்டும்.

சித்தர் இலக்கியம் வாசிப்பதற்கு முன் வாசிக்க வேண்டிய புத்தகமாக நான் இதை கருதுகிறேன்.

இந்த புத்தகம் மேலும் பல புத்தகங்களை வாசிக்க வழி காட்டி இருக்கிறது.

– பிரேம்குமார்