Kanneer Paatu Kavithai By Vasathadheepan கண்ணீர் பாட்டு கவிதை - வசந்ததீபன்

கண்ணீர் பாட்டு கவிதை – வசந்ததீபன்

கண்ணீர் பாட்டு
********************
பெண்ணின் தினத்தில்
கர்ப்பிணி பலி
கண்ணில் குருதி ஊற்றெடுக்கிறது
ஆணின் அதிகாரத்தின் திமிர் நறுக்கப்பட வேண்டியது
பெண் இன்றி ஆண் இல்லை
ஆண் இன்றி பெண் இல்லை
இருவரின்றி வாழ்வு இல்லை
பெயர் பெற்றவர்கள் இறந்தால்
நாடே துக்கப்படும்
பெயரற்றவர்கள் மறைந்தால்
சிறு சலனம் கூட எழாது
எவரையும் எதையும் எதற்க்கும்
மரணம் பொருட்படுத்தாது.
ஓரமாகவே செல்கிறேன்
ஒதுங்கி ஒதுங்கி விலகுகிறேன்
முட்டிமோத கனவுகள் ஓடி வருகின்றன.
காலார நடந்து செல்ல முடியவில்லை
ஆற அமர யோசிக்க முடியவில்லை
பதட்டமாகவே பொழுது கழிகிறது
உண்மை உன் முன்
குற்றுயிராய் கிடக்கிறது
கண்மூடி கடந்து போகிறாய்
இடி உன்னைத் தேடுகிறது
ஏழு சுரங்கள்
எண்ணமுடியா ராகங்கள்
சின்னஞ் சிறு இதயத்தில்
ஆயிரம் பாட்டுகள்.