Posted inBook Review
நூல் அறிமுகம்: முதல் பேனாவில் முகிழ்த்த பூக்கள்! – தேனிசீருடையான்
"அறம்” என்ற தமுஎகசவின் உட்கிளை ஐநூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது. அவர்கள் கையில் இலங்கும் 75 பேரின் பேனாக்கள் முதன்முறையாய்க் கவிதைகள் எழுதியிருக்கின்றன. கடந்த 2019ஆம் ஆ;ணடு ஜுன் 23 அன்று சென்னையில் துவங்க்ப்பட்ட தமுஎகச அறம் கிளை தமிழகமெங்கும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. அக்கு பங்சர் மருத்துவத்தின் வழியே நலவாழ்வுப்பணியாற்றும் அவர்கள் இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டு செயல்படுகிறார்கள் என்றால் ஆச்சர்யந்தான்.ஆச்சர்யம் அல்ல: யதார்த்தம். உடலுக்கு சிகிச்சை அக்கபங்சர். மனதுக்கு சிகிச்சை இலக்கியம். அவர்களின் பார்வையைப் பண்பாட்டுத் திசைநோக்கித் திருப்பிவிட்ட பெருமை மாநிலக்குழு உறுப்பினரும் அறம் கிளைச் செயலாளருமான தோழர் உமர் பரூக் அவர்களையே சாரும். தோழர் உமர்பரூக் இளம் வயதிருந்தே இலக்கியத்தின் மீதும் பண்பாட்டுத்தரவுகள்மீதும் அளவிலா ஆர்வம் கொண்டு கற்றுத் தேர்ந்தார். அவரும் தமிழ்மணியும் இணைந்து நடத்திய கவியரங்கங்களும் இலக்கியம் ;சார்ந்த சிறுபத்திரிகைகளும் அந்த நாளில் அதிகம் கவனம் பற்றவை. பிறருக்கும் பயன்தந்து தஙகள் திறமையையும் வளர்த்துக்கொண்டனர். பெற்ற திறமையை வீணடிக்காமல் தமிழ்பேசும் சகலருக்குமான பயன்பாடாய்த் தகவமைத்துக் கொண்டிருக்கிறார் உமர்பரூக். முதலில் திரைக் காட்சிகள் வழியாக அறம் கிளை உறுப்பினர்களை இலக்கியத்தின் பக்கம் ஈர்த்தார். அடுத்து சிறுகதை நூல்களை வாசிக்கத்தந்தார். காட்சி உருவில் கண்டவற்றையும் எழுத்து ரூபத்தில் வாசித்தவற்றையும் பற்றி ஏதேனும் எழுதச் சொன்னார். அவர்களும் மனமுவந்த எழுதினார்கள். அந்தப் பதிவுகள் இலக்கிய இன்பம் நனி சொட்டச் சொட்ட மிளிர்ந்தன. பத்துக்கும் மேற்பட்ட படைப்புகளைக் கண்டும் வாசித்தும் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு கட்டுரைகளை எழுதியுள்ளனர் அறம் கிளை உறுப்பினர்கள்.. இந்தியாவில் 33 விழுக்காட்டுக்கே இன்னும் கதவுதிறக்காத நிலையில் அறம் கிளையின் ஐம்பது விழுக்காட்டுக்கும் அதிகமான பெண்கள் வாசிக்கவும் எழுதவும் ஓங்கிய கரலில் தங்கள் கருத்துக்களைப் பேசவும் உரிமைபெற்றவர்களாய் மாறியிருக்கின்றனர். இப்படியான ஒரு சாதனை பண்பாட்டுத்தளத்தில் நிகழ்ந்திருப்பது அறம் கிளையில் தவிர வேறெங்கம் இருப்பதாகத்…