நூல் அறிமுகம்: அ.கரீம் ‘முகாம்’ – இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம்: அ.கரீம் ‘முகாம்’ – இரா.சண்முகசாமி




நூல் : முகாம்
ஆசிரியர் : அ.கரீம்
விலை : ரூ. ₹300
வெளியீடு : எதிர் வெளியீடு

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

‘முகாம்’ அய்யோ இந்த நாவலை ஏன் படிக்க எடுத்தேனோ தெரியவில்லை. 364 பக்கத்தில் விடுதலை போராட்ட கால பகுதியில் மட்டும் ஆனந்தக் கண்ணீரும், மற்ற ‘முகாம்’ இடங்களில் எல்லாம் வெம்பிய கண்ணீர் மட்டுமே வந்து கொட்டுகிறது. படித்து முடித்து இன்னும் வேதனையிலிருந்து மீளவில்லை. அதனால் முழு பதிவும் போட முடியவில்லை. சற்று நிதானத்திற்கு வந்தவுடன் தான் பதிவுக்கு கட்டை விரல் போகும்.

அதுமட்டுமல்ல சாமானிய எளிய உழைக்கும் மக்கள், அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் அதாவது இந்து மதமாகவே இருந்தாலும் முகாமில் அடைபடுவது உறுதி என்பதாகவே நமக்குத் தோன்றும். தோழர் Samsu Deen Heera அவர்களின் ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ நூலை வாசித்தவர்கள் அசாமில் 19 லட்சம் மக்கள் முகாமில் அடைபட்டது புரியும். அதேபோல் குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் வில்லங்கம் வந்தால் அப்போது தோழர் Kareem Aak அவர்களின் முகாம் நாவலில் சொன்னது போல் எல்லோருக்கும் நடக்கும். விரைவில் முழு பதிவுடன் வருகிறேன் தோழர்களே. இப்போதைக்குத் தோழர் Kareem Aak அவர்களின் கைபிடித்து உச்சி முகர்கிறேன் அவரின் முதல் நாவலிலே நெஞ்சத்தை உருக்கிப் பிழிந்ததால்.

இரா.சண்முகசாமி
புதுச்சேரி