கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை | Karisal Kuyil Krishnasamy Tribute Poem (Anjali Kavithai)

கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை

ஆழ்ந்த இரங்கலில்தான் அதிகாலை கண்விழித்தேன்! தோப்பில் இருந்து ஒரு குயில் தொலைந்து போயிருக்கிறது! மடியில் கட்டிக் கொண்டு அலையும் மரணம் கொலைப் பசியிலிருக்கிறது.... திடீரெனத் தின்று தீர்க்கிறது! காதுகளில் விழுந்த அதன் இசையின் அதிர்வுகள் அடங்கும் முன்பே குயில் காணாமல் போக...…