Guthithadum kuzhandhai manam Shortstory by Karkavi. குதித்தாடும் குழந்தை மனம் குறுங்கதை - கார்கவி

குதித்தாடும் குழந்தை மனம் குறுங்கதை – கார்கவி

நினைவுகள் அலாதி… அந்த நிகழ்வை நினைத்து பார்க்கையில், இப்பொழுது என்னை அறியாது ஒரு இன்ப மழை மனதில் கொட்டி தீர்த்து விடும்….

அந்த இன்பத்தை அறிய சற்று பதினெட்டு ஆண்டுகள் பின்னோக்கி செல்வோம்….

அன்று ஒர் அற்புதமான நாள்… ஆம், எனது குடும்பத்தின் இளவரசன் பிறந்தநாள்… ஆனால் நாங்கள் வைத்த பெயரோ விக்னேஷ் குமார்…..

அவனுக்கு முன்னே பிறந்த மூத்த இளவரசி நான் (வினி) என்பதில் பெருமை கொள்கிறேன்…

கதையின் கரு மகள் அடுத்ததாய் என் சகோதரி…..திவி

அவளின் அற்புத அறியாமையே இந்த கதையின் கரு…. கதைக்கு செல்வோமா…

பதினெட்டு வருடம் முன்பு செப்டம்பர் மாதம் 28 ம் நாள் வந்து குதித்தான் என் தம்பி விக்கி…

அவன் பிறந்து இரண்டாம் நாள்..அம்மாவின் வலி மெல்ல மெல்ல குறைய, அப்பாவின் ஆறுதலில் தேடி வருகிறாள் என் அம்மா….

தம்பியை பார்க்கும் ஆசையில் துள்ளலும் துடிப்புமாக மருத்துவமனை விரைந்தோம்..அப்பாவின் கைப்பிடித்து…

கட்டிலில் அம்மாவையும் தம்பியையும் கண்டு, ஆசை தீர கொஞ்சி தீர்த்தோம்…

அங்கு நடந்த சம்பவமோ…நினைத்தாலே சிரிப்புதான்….

தம்பியை கண்ட தங்கையின் மனம்…வன் கைப்பிடித்து ‘ என் விரல் பிடி” வா ஓடி விளையாடலாம் என்று விளையாட்டாய் பேசினால்…சிறிது நேரத்தில் அவள் அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டாள்..

இப்பொழுதே தம்பி எழ வேண்டும்,என் விரல் பிடித்து நடக்க வேண்டும். என்று அசட்டுத்தனமான விளையாட்டில் அடம் பிடித்தாள்…

இதை பார்த்த எங்களுக்கு சொல்ல முடியாத புன்னகை..சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போனது….

அப்பா வாங்கி கொடுத்த அனைத்து தீனிகளும் சாக்கடைக்கு விருந்தானது…

அடிப்பாவி என்னிடமாவது தரலாமே என அந்நாளில் என் மனம் ஏங்கியது….

தம்பியின் பிறந்தநாள் வந்தாலே இந்த சம்பவம் எங்களுக்கு புன்னகை விருந்து….

அழகான குடும்பத்தில் நான் கடந்து வந்த அற்புதமான இன்ப தருணமிது….

யதார்த்தமாக நினைத்து பார்த்த பொழுது பகிர்ந்து விட்டேன் தாங்களுடன்….புன்னகை வரிகளாய்…..

கரு-1
குழந்தைகள் அறியாமை மிக்கவர்கள்..அவர்கள் விரும்பும் எதுவும் நடைபெறுமா என யோசிக்க இயலாத வயதினை உடையவர்கள், நினைத்தது நடக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டு செயல்படுபவர்கள்…

குறிப்பாக சொன்னால்…”

*யானையை கூட பானையில் அடைக்கும் ஆசையும் அறியாமையையும் கொண்டவர்கள்*”

அதை சரி செய்து சாதாரண நிலைக்கு கொண்டு வருவது என்பது பெற்றோருக்கு உரிய திறமை….

அதையே என் பெற்றோர் கையாண்டனர்….

மேற் சொன்ன கருவில் பிள்ளைகளின் அறியாமை புலப்பட்டது…

அதையும் தாண்டி அற்புதமான நிகழ்வை நாம் உணரவேண்டும்…

கரு-2
“*அந்த சின்னஞ்சிறு வயதிலேயே தம்பியின் மீது அக்காள் கொண்ட விலையில்லா,கணக்கில்லா,எல்லையில்லா அன்பின் உச்சத்தை இந்த நிகழ்வு அவ்வப்போது நினைவு கூறுகிறது*”

“அக்கா அம்மாவின் மறுரூபமே..தம்பி தந்தையின் பிம்பமே”

குழந்தைகள் மனம் அறிவோம்…மகிழ்வாக வைத்திருப்போம்….

என் வாழ்வில் கடந்து வந்த அனுபவ புன்னகை வரிகள்….

தாங்களுக்காக…. இதோ…

Karkaviyin Kavithaigal 10 கார்கவியின் கவிதைகள் 10

கார்கவியின் கவிதைகள்

1)
மிடறு மிடறாய் மனம்
****************************
நான் கூற
நினைத்ததை
தவிக்கும் நாணலுக்கு
இடையில் மிடறுகின்றது
யாரும் பேசிடாத
வரைமுறை உண்மை…………………

நீ இங்ஙனம் கொட்டித்தீர்க்கும்
சொற்களுக்கெல்லாம்
தாகம் தீர்த்துவிடுகிறது
மிடறுகளில் ஏற்கனவே
நீ கொட்டிவிடாத சொற்களின்
சிறு ஈரம்………………..

பாசாங்குகளில் சிறு விழுங்கல் இருந்தாலும்
ஏறி இறங்கும் ஒரு நொடியில்
சிறு மென்மையில்
துள்ளியாடுகின்றன
இந்த சரீரமிடறுகள்……………..

சிரத்தைத் தாங்கிய உனக்கு
மனதோடு தோன்றிய சொற்களைச் சற்று
தண்ணீர் தெளித்து வெளியேற்றிவிட
வழியில்லாமல் போன மிடறுகள்தான் கவலைக்கிடம்……………

சிறு நேராக
சற்று வளைந்தாடி
எலும்பில் சதைப்பற்றுக் குறைந்த உன் மிடறுகளில்
எத்தனை உறவுகள்
வறண்டு போயிருக்கும்
வளர்ந்து போயிருக்கும்………………

ஒரு சொட்டுத் தண்ணீரோ
பலர் ஏற்ற உண்மைகளோ
இலகுவாக
ஆழச்செல்கிறது
யார் வருவதையும்
செல்வதையும் கண்டுகளிக்காத
சிறிய மென்மை கொண்டதோர்
மிடறு மிடறாக மனம்……………..

2)
மாறா நிலைபாடு

*********************
உனது அனைத்துச் செயலிலும்………….
நீ கொண்ட
சிறு மௌனம் எப்படியும்
அதனைச் சரியாகச் செய்யும் அளவிற்கு
ஒரு நிலைபாடினை வழங்கும்……………………..
நீர் நிரம்பும் குவளை
முழுதும் நனைவதை எண்ணி
நனைவதில்லை…………….
அரை தம்ளர் நீரில்
ஆகாயம் சிறியதாக சுருங்கிவிடாது…………….
பார்வை என்பது
செயலின் ஒட்டுமொத்த
ஆழ்மௌனமே……………..

3)
நிரந்திரக் கடப்பு
********************
துண்டு துண்டாக
வெட்டப்பட்ட
நீர்க்குழாயில்
துண்டுபடாமல்
கோர்த்துச் செல்கிறது
நீரோட்டம்………………………
நிரந்தரமில்லாத
நீ எம்மாத்திரம்?…………………
எத்தனைத்
திருப்பங்கள் இருப்பினும்
கை கோர்த்து
நடைபோடுகின்றன

நீர்சுழிகள்…………………
நீ
நான்
எத்தனை நாம்……………….

Muthal Pennam Moothevi Shortstory By Karkavi முதல் பெண்ணாம் மூதேவி குறுங்கதை - கார்கவி

முதல் பெண்ணாம் மூதேவி குறுங்கதை – கார்கவி

நேற்று மகள் இன்று மருமகள்…….

அவளுக்கு குடும்பம் என்றால் என்னவென்று அறியாத வயது, அம்மா அப்பா பேச்சே வேதவாக்கு….

அவர்கள் கூறியதை அச்சுபிறழாமல் செய்வதில் கெட்டிக்காரி,அம்மாவின் மேல் அளவில்லாத அன்பு…..

முதல் குழந்தை என்பதால் முழுவதும் சுதந்திரம்… எடுத்தது கிடைக்கும்,பிடித்தது கிடைக்கும்.

படிப்பில் கெட்டி அதற்குள் பிறந்துவிட்டனர் தங்கையும்,தம்பியும்..

நேரம் கூடிவிட்டது, பெற்றவருக்கு பாரம் கூடிவிட்டது…கிடைத்துவிட்டான் மாப்பிள்ளை,சரி என்றான் தாய்மாமன் தலை ஆட்டியபடி கண்ணீரில் அவள்….

அசைந்த்தை விற்றுவிட்டார்,அசையாத்தை வைத்துவிட்டார் ஐம்பது பவுன் போட்டு அழகான ஓர் கல்யாணம்…

புது வீடு புது முகங்கள்..அனைத்தும் நகர்ந்தது ஆரம்ப புன்னகையில்….

துணைவன் எல்லாம் அவன்.. இடம் மனம் கொடுத்தான் உயிர் கொடுத்தான்.. அம்மைக்கும் மனைவிக்கும்……

பொகப்போக சலிப்பு புன்னகை அவ்வப்போது கடன்,கிடைக்காத சுகம் காரணம் வாங்கி வந்த வரம்…

அம்மை அப்பனாய் வந்தவர்கள் மாமனார் மாமியாராய் பிரதிபலித்தனர்….

உணவெல்லாம் விசமாகி போனது கற்றுத்தேராத சமையலின் முன்னால் மாமியார் வார்த்தைகள், மௌனத்திலும் கொடுமையானது மாமனாரின் அமைதி…

கடந்து மிதந்து நகர்ந்தேறுகிறாள் அவ்வப்போது மன ஓடத்தில்..கணவனின் ஆறுதல்களால்…

புகுந்த இடத்தில் புரியாத புதிராகி போகிறது எல்லாம்…

அமைதி முக்கியம்…..
அதிகமாக பேசாதே…
ஆசைகளை மற….
அனாவசிய பேச்சை துற….
ஆடைகளில் இயல்பை கொள்……
இதுதான் உலகமறி….

எல்லாம் கடந்து வந்த பிறகு கைக்கு கிட்டவில்லை இன்பமென்னும் ஓடம்…..

காலம் இப்படியே செல்லாது…..நம்பிக்கையுடன் அவள்…. முதல் பெண்ணாம் மூதேவி…..

Muyarchiyin Muthal Karu Muyalamai Shortstory By Karkavi. முயற்சியின் முதல் கரு முயலாமை குறுங்கதை - கார்கவி

முயற்சியின் முதல் கரு முயலாமை குறுங்கதை – கார்கவி

அங்கே ஓங்கி உயர்ந்த பனையில் பலகாலமாக துளையிட்ட மரங்கொத்தி ஏதோ ஒரு பருவ நிலையில் குஞ்சுகளை பேணிக்காக்க இடம்பெயர்தலை கையாண்டது…..

பருவ மழை கொட்டி தீர்த்தது, காகமும் பறந்துகளும் மரத்தினை வட்டமிட்டு பறந்து சென்று, ஆங்காங்கே அமர்ந்து இறைகளை தின்று கக்கி எசறிவிட்டு சென்றது….

கார்காலம் முடிந்து பனிக்காலம் வந்தது, வெயில் காலம் பல் இழித்து பச்சை உயிர்களுக்கு உயிர் கொடுத்தது……

அயராது காற்றில் ஓங்கி பறந்த செத்தைகள் மறந்தை தாண்டி, மறப்பொந்தையும் அடைந்தன…

அளவான வெயில் விழும் தருணம், பதமான மழைநீரின் தேங்கல்,.. காற்று நுழைந்து வெளிவர ஏற்ற தகவமைப்பு,….

அன்று சுத்திய காகமோ, பருந்தோ அள்ளி எசறி தின்று மென்று துப்பி விட்டு போன எத்தனையோ எச்சத்தில் ஒன்று இன்று துளிர்த்து…..

அந்த ஐம்பதடி வளைநெழி பனையில் அயராது அழகால் கொத்தி எதர்ச்சையாக விட்டு சென்ற மரங்கொத்தியின் பல நாள் உழைப்பு துளையில்…

இன்று பல இயற்கை மாற்றத்தில் மரத்தினுள் உள்ளே ஓர் விதை துளிர்விட்டது….

இதுவே *இயற்கை எனும் முயற்சியின் முதல் கரு* ஆனது….

மனிதனின் மனம் அப்படித்தான்…

எங்கோ பணியாற்றி இரத்தத்தை சிந்தி பலன் கிடைக்கும். சமயத்தில் சந்தர்ப்ப சூழலால் அதை விட்டு விலகி வர வேண்டிய நிலை உருவாகிறது…

இருப்பினும் மனிதன் அதனை மனதில் கொள்ளாது முயற்சியை கையில் கொண்டால்…

மென்மேலும் எந்த இடர் வந்தாலும் பயம் இன்றி மேலே சென்று கொண்டே இருக்கலாம்…

வாழ்வில்… அடுத்த நிலைக்கு செல்லாத காரணம்…

முயற்சியின் முதல் கரு முயலாமை….

முயற்சி நல் வினை ஆக்கும்…..

Eakkam Niraintha Sudugadum Muthalai kanneeril Sathikkadum Article By Karkavi. ஏக்கம் நிறைந்த சுடுகாடும் முதலைக்கண்ணீரில் சாதிக்காடும் - கார்கவி

ஏக்கம் நிறைந்த சுடுகாடும் முதலைக்கண்ணீரில் சாதிக்காடும் – கார்கவி

உலகில் இயற்கை தோன்றி அழகுற காட்சிதந்து அதன் பின் ஒவ்வொன்றாக உருவானது… இதில் மனிதன் எனும் மிகச்சிறந்த உயிரானது உருவானது…. இயற்கையே வியந்து பார்க்கும் அளவில் உயர்ந்து இருந்த மனிதனின் வாழ்வில்…..

எவராயினும் பிறந்தால் இறப்பது உறுதி… இடைப்பட்ட காலத்தில் அவன் செய்யும் நன்மை, தீமை பொறுத்து அவனுடைய அனைத்து தேவைகளும் இல்லாமலும், இன்பம் குறையாமலும் செல்கிறது….

இத்தருணத்தில் இயற்கை படைத்த மனிதன் சிந்தையில் சிக்கிக்கொண்டு மிக்க கொடுரமாக உருவெடுத்தது சாதி எனும் வெற்று தீ….

அனைத்து வேளைகளிலும் நிரம்பி வழிந்த சுடுகாடு கேட்பாரற்று சுனங்கி கிடக்கிறது.

ஆங்காங்கே விழுந்த பிணங்கள் காரணத்தின் அடிப்படையில் கொரானா என்பதால் காடுவரை அல்ல, வீடுவரைகூட வர இயலாது அனாதை சூழலில் அடக்கம் செய்யப்பட்டது.. எங்கே சென்றதடா சாதி..

இப்போது எரிக்க சொல்லுங்கள் தலையில் பிறந்தவன் முதல் காலில் பிறந்தவன்வரை தனித்தனியாக கட்டிவைத்த காலி கட்டிடமாக தோற்றமளிக்கும் ஆளில்லா சுடிகாட்டு கட்டிடங்களை….

ஆத்தோரங்களில் அந்தந்த சாதி பிரியர்களின் வெள்ளைதுணி போத்திய பிணங்கள் யாரும் அறியாத பத்தடி மின்சார அடுப்பில் திணிக்கப்பட்டு வேகாது வெந்து சாம்பலானது…

அப்போதும் மாறாத சாதிப்பிணங்கள் பிணக்கிடங்கிலும் தம்பட்டம் அடித்து முந்திக்கொண்டு இருக்கிறது…. எங்கு தான் தீருமோ சாதி நோய்கள், கொரானா கொஞ்சம் கொஞ்சமாக மக்களை பஞ்சத்தில் ஆட்படுத்தி தானாக இறக்கச் செய்து பெயரை மட்டும் வாங்கிச் செல்கிறது….

கொரானா என்று கொன்றது போதுமடா… மக்களை சுயமாக சிந்திக்க வைத்து பிச்சையாவது எடுத்து உண்ண செய்யுங்களடா…

கொரானா ஆள்கிறதொ இல்லையோ.. சாதி எனும் நோய் ஆழ்கிறது…

யாருமே இல்லாத தனிமையின் வருத்தத்தில் ஆங்காங்கே எரியாத சுடிகாடுகள் யாருமில்லா கவலையில் எட்டிப்பார்த்து ஏக்கத்தில் காத்திருக்கிறது இன்றுவரை… காலம் விரைவில் விளக்கம் கூறும் மாறாத..G

Watchman Shortstory By Karkavi வாட்ச்மேன் குறுங்கதை - கார்கவி

வாட்ச்மேன் குறுங்கதை – கார்கவி

“என்னய்யா வேலைய பாக்க சொன்னா உட்காந்துகிட்டே தூங்குற….”

“என்னய்யா இது, நீ எனக்கு முன்னாடி சேர் போட்டு உட்காந்துட்டு இருக்க…”

“யோவ் நீ வேலை பாத்த லட்சணம் போதும், போய் எல்லார்க்கும் டீ வாங்கிட்டு வா…”

“என்னய்யா நீ வேல பாக்கற லட்சணம்….ஆபிசுல அவ்ளோ மண்ணு… அத சுத்தம் பண்ண என்னயா உனக்கு…நீ் என்ன கலக்டர் வேல பாக்கிறதா நெனப்பா…”

“யோவ் வாட்ச்மேன், அந்த நேம் ரிஜிஸ்டர் எங்கயா….!”

“என்னயா நீ வேல பாக்ர..ஒரு டீ வாங்கிட்டு வர இவ்ளோ நேரமா…அதுல சூடில்ல ..சொரண இல்ல…உனக்கு சுகர்னா நாங்களும் சாப்டக் கூடாதா என்ன…!”

“ஓடிப் போய் கேட் திறய்யா, டைம் ஆயிட்டு…. இதுக்குதா வயசானவங்கள வேலைக்கு வைக்கக் கூடாதுன்றது ….”

“என்னயா இது பேனா எழுதமாட்டங்குது..ஒரு பேனா கூட வாங்கி வைக்க மாட்டியாயா…!”

“யோவ் இன்னக்கு ஆபிசர்லாம் வருவாங்க, அந்த சானிடைசர் எங்கயா…என்னய்யா முழிக்கிற கைல ஊத்தி துடைப்பாங்கள்ள .. அந்த பாட்டில் எடுத்து வை…போய்யா….”

“அந்த மூஞ்சில போடுறத ஒழுங்கா போடு..இவனுங்க வேர கழுத்தறுக்குறானுங்க…”

“என்னய்யா புது ட்ரஸ்லாம் போட்டுக்கிட்டு அமர்க்களமா நிக்கிற…. சம்பளம் வாங்கியாச்சா..பெரிய ஆளுதான்யா, சும்மா நின்னுகிட்டே சம்பாதிக்கிற கஸ்டமில்லாம….!”

Ezhuthal Nagarthu Ennathai Uyarthu Poem By Karkavi எழுத்தால் நகர்த்து எண்ணத்தை உயர்த்து கவிதை - கார்கவி

எழுத்தால் நகர்த்து எண்ணத்தை உயர்த்து கவிதை – கார்கவி




ஊற்றோடு ஊற்றாக மை ஊற்றப் பழகு..!
செல்லும் இடமெல்லாம்
நம்பிக்கை கொண்டு செல்லப் பழகு..!
உயிர் மெய் உனதாக்கு..!
உலகமே நமக்கென பறைசாற்று..!
ஏணியை வானுக்குப் போடு…!

எட்டாத நிலை வந்தால் எழுதுகோல் எடு…!
உலகத்தை ஒருகையில் ஏந்து..!
உண்மையை சாட்டையாக்கு…!
தளர்வுகளில் ஆசை ஊற்று…!
தயங்காமல் கடல் செய்…!

தற்குறி என கூறலாகாதே…!
தட்டிக் கொடுப்போரிடம் முதுகுடன் கண் கொடு…!
வானுக்கு மை நிரப்பு..!
சின்னதொரு நம்பிக்கை வை..!
நாளை உன் வாசல் வர வை….!

ஆணுக்கு பெண் தேடு..!
பெண்ணுக்கு ஆண் தேடு..!
இரண்டிலும் நீள் உண்மை தேடு…!
கடலுக்குள் முத்தை தேடு..!
கடைசியாக ஒரு சொட்டு நீர் விடு..!

அண்டத்தில் புது பூமி தேடு…!
அங்குலம் நிறைந்த கைரேகை தேடு..!
அணு அளவு அணிசேர்..!
எவனாளாலும் வெற்றியை கொள்..!
அகிலம் நிறைந்த வெற்றி காண்..!

ஏணி ஏறி நடைபோடு
எழுத்தால் நகர்த்து-உன்
எண்ணத்தை உயர்த்து…!

Puthumanai Poem By Karkavi புதுமனை கவிதை - கார்கவி

புதுமனை கவிதை – கார்கவி




தினம் ஒருவரின் வருகை
அறை அழகு
சமையலறை சிறியதென்கிறார்…
நான்கு பேருக்குப் போதவில்லையென்கிறார்…

இருவருக்கு இவ்வளவு பெரிய வீடா என்றனர்
காற்று வரவில்லை என்றும்
வாஸ்து மாறியதென்றும்
சன்னல் சிறியதென்றும்
போனமாதம் வரை இருந்தவர் பற்றியும்
தலா நாளைக்கு பத்துப்பேர் விசாரித்த வண்ணத்தில்
நிலைக்கதவை கடந்து செல்ல…
போதும் என்றவரின்
நிறைவான
பாதங்களை மட்டும்
சேகரித்து வைக்கிறது
ஒட்டடைகள் நிறைந்து
திறந்த சன்னல் வழியாக நிறைந்த
மண்துகள்களில்
சேகரிக்கிறது
தினம் பலர் குடிபோகும்
புதுமனை…..!
நாளை யார் வருவாரோ…..