Posted inPoetry
காத்திருக்க கற்றுக்கொள்வோம் கவிதை – சாந்தி சரவணன்
விடியலை வரவேற்க சேவல் இரவெல்லாம் காத்திருக்கின்றது!
மொட்டு மலராக சில நாட்கள் காத்திருக்கிறது!
கூட்டு புழு பட்டாம்பூச்சியாக சில வாரங்கள் காத்திருக்கிறது!
காய் கணியாக சில மாதங்கள் காத்திருக்கிறது!
ஒரு உயிர் ஜணிக்க ஐ இரு மாதம் தாயின் கருவில் காத்திருக்கிறது!
ஆதவன் இருளை நீக்கி உதிக்க இரவெல்லாம் காத்திருக்கிறது!
மனிதா,
நீ மட்டும் ஏன் காத்திருக்க மறுக்கிறாய்?
காசை கொடுத்து “கையூட்டை” வளர்கிறாய்?
காத்திருந்து தான் பாரேன்!
தமிழ் அகராதியில்
“கையூட்டு”
என்ற சொல்லையே நீக்கிய பெருமையை நம் சந்ததியினருக்கு
வரமாக ஈன்று தான் செல்வோமே!