மொழிபெயர்ப்புக் குறுங்கவிதைகள் – வசந்ததீபன்
மேற்குத் தொடர்ச்சி மலையில்
இடி மின்னல்
தருமபுரியின் பரந்த சமவெளியிலிருந்து,
சத்தியமங்கலம் காடுகள் வழியாக, கொங்கனின் மலபார் கடற்கரைக்கு
அவர்களின் கடினமான கேள்விகள்,
நிலையற்ற காற்று
பின்னர் அவர்களின் பயிற்சி
மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கியது.
தண்டகாரண்யத்தின் ஆவியை உறிஞ்சுதல்
ஆயுதப் படைகளின் அணிவகுப்புடன்,
வளைந்து நெளியும் காவேரி நதி
சிவப்பு நிறமாக மாறியது.
(ஜெயா, ‘இது தென்மேற்கு பருவமழைக்கான நேரம்’, தெலுங்கு)
தெலுங்கு : வரவரராவ்
ஆங்கிலம் மூலம் தமிழில் : வசந்ததீபன்
நன்றி : Manitha Mugam
போஸ்மார்டம் ரிப்போர்ட்
******************************
குண்டடிபட்டு __
ஒரு வாயிலிருந்து வெளிவந்தது
” ராம் ”
இன்னொரு வாயிலிருந்து
வெளிவந்தது
” மாவோ ”
ஆனால்
மூன்றாவது வாயிலிருந்து வெளி வந்தது
” உருளைக்கிழங்கு ”
போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்
முதல் இரண்டு வயிறுகள்
நிரம்பி இருந்தன.
ஹிந்தியில் : சர்வேஸ்வர் தயாள் சக்ஸேனா
தமிழில் : வசந்ததீபன்