Posted inPoetry
கனகா பாலனின் கவிதைகள் !!
**சுமைதாங்கி** அன்றொருநாளின் தனிமையில் எதுவுமற்ற திசைநோக்கி எதையோ இழந்ததின் விசாரத்தில் அவளிருக்கும் மையத்தில் தொடங்கி சுருள் சுருளாய் விரிகின்றன பிளாஷ்பேக் வளையங்கள்... ஒரு முனை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் அவளை தொடர்ந்து மாறும் நினைவாகிய காட்சிகள் உள்நுழைத்து நுழைத்து உருவி எடுக்கின்றன…