கவிவாணனின் கவிதை

கவிவாணனின் கவிதை




உயர்த்தப்படுவதும்
உயர்த்துவதற்காகவே
உருவாக்கப்பட்டதும்
எதுவெனக் கொள்ளும் போது.

உயர்த்துவதின் அர்த்தங்கள்
வெகு மனிதர்களின் நரம்புகளை
பிரித்தெடுத்துக் கொண்டே செல்கின்றன.

பிரிப்பதும் பிரித்தாளுவதும்
ஒற்றை..ஒற்றைப் பிறப்பென கொண்டாடுவதும்
எத்தனை நாழிகை
அனைத்தையும் கழுவில் ஏற்றும்
காலம் விரைகின்றன

உன்னையும் என்னையும்
குரல் எழுப்பச் சொல்லி நிற்கிறது

அப்போது-
வணங்கப்படும் எவையும்
உதவாது
உயிர்க்காது!

அப்போதேனும்
அப்போதேனும்
பிறப்பின் அர்த்தம் உணர்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென!

– கவிவாணன்