வழிகாட்டும் கேரளம் : பின்பற்றட்டும் இந்தியா- சிவகுரு நடராஜன் | Kerala leads the way: Let India follow - Antibiotics - medicines

வழிகாட்டும் கேரளம் : பின்பற்றட்டும் இந்தியா- சிவகுரு நடராஜன்

வழிகாட்டும் கேரளம் : பின்பற்றட்டும் இந்தியா- சிவகுரு நடராஜன் இந்தியாவில் மருந்துகளின் பயன்பாட்டில் அதுவும் குறிப்பாக நோய்கொல்லி மருந்துகள் (ANTIBIOTICS) கட்டுப்பாடு இல்லாமல் பயன்பாட்டில் இருப்பது பெரும் சவால் தான். இதனால் அந்த மருந்தின் நோய் எதிர்ப்புணர்வு (ANTI MICROBIAL RESISTANCE)வெகுவாக…
fiscal relations

மிகச் சிறந்த முறையில் நிதியை நிர்வகிப்பதில் கேரளா இந்தியாவிற்கே முன்னோடி

12-08-2024 அன்று ஏசியன் இதழியல் கல்லூரி வளாகத்தில் இந்தியாவில் ஒன்றிய – மாநில நிதி உறவுகள் தொடர்பான சவால்கள் மற்றும் முன்னோக்கிய பாதை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு  முன்னாள் கேரள நிதி அமைச்சர் டாக்டர். தாமஸ் ஐசக் அவர்கள் தலைமை…
வயநாடு - இயற்கை அழிகிறது, மானுடம் மரிக்கிறது! | In Kerala Wayanad Landslides (வயநாடு நிலச்சரிவு) environment

வயநாடு – இயற்கை அழிகிறது, மானுடம் மரிக்கிறது!

வயநாடு - இயற்கை அழிகிறது, மானுடம் மரிக்கிறது!   பரம்பிக்குளத்துக்கு ஒருமுறை சென்றிருந்தபோது, அங்கிருந்த பழங்குடி மக்களின் மாகாளிதான் எங்களுக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். கேரள எல்லையில் மலையில் இருக்கும் காட்டுப்பகுதிக்குள் ஓர் ஏரி என மிக அற்புதமான இடம் அது. வலது…
வயநாடு - இயற்கை இடர் துன்பங்கள்தவிர்த்திருக்க இயலுமா? | Wayanad - Can the sufferings of natural disasters be avoided? -https://bookday.in/

வயநாடு – இயற்கை இடர் துன்பங்கள் தவிர்த்திருக்க இயலுமா?

வயநாடு -இயற்கை இடர் துன்பங்கள் தவிர்த்திருக்க இயலுமா? சமீபத்தில், நம் அருகிலுள்ள கேரளா மாநிலத்தில் நடந்த இயற்கை இடர் பாடு, மிகவும் துயரம் நிறைந்தது. 30.07.24 அன்று அதிகாலை வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி, சூர மலைப்பகுதியில், அடுத்து அடுத்து நிகழ்ந்த, மழை வெள்ள…
கேரளா வயநாடு நிலச்சரிவு - நடந்தது என்ன? | why the landslide again in kerala (Wayanad landslides ) - chooralmala - https://bookday.in/

வயநாடு நிலச்சரிவு – நடந்தது என்ன?

வயநாடு நிலச்சரிவு - நடந்தது என்ன? எதனால் மீண்டும் நிலச்சரிவு....   "யாராவது ஓடி வாருங்களே.. எங்களின் வீடுகள் அனைத்தும் போய்விட்டது கூட இருந்தவர்களை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. சேற்றில் மாட்டிக்கொண்டார்கள். அவர்கள்  உயிரோடு இருக்காங்களான்னு தெரியவில்லை. மண்ணுக்குள்ள மாட்டிக்கொண்டார்கள். வாயெல்லாம் சேறு,…
Why is South India rejecting Modi? | தென்னிந்தியா ஏன் மோடியை நிராகரிக்கிறது?  

தென்னிந்தியா ஏன் மோடியை நிராகரிக்கிறது?  – ஆண்டி முகர்ஜி

ஆண்டி முகர்ஜி  ப்ளூம்பெர்க்  2024  ஏப்ரல் 8 பிறக்கின்ற குழந்தைக்கு பிறந்து ஐந்து வயது வரையிலும் உயிர்வாழக் கிடைக்கும் வாய்ப்பு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையைக் காட்டிலும் தென்னிந்தியாவில் கேரளாவில் கூடுதலாகவே இருக்கிறது. ஆனால் வட இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் அந்த நிலைமை ஆப்கானிஸ்தானைக்…
Director Seenuramasamy - Tamil Cinem | சீனுராமசாமி

சீனுராமசாமியின் 17 ஆண்டுகள்: இரா.தெ.முத்து

இது குதிரைதான் ஓடும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே சினிமாவில் ஒருவர் தாக்குப் பிடித்து நிற்க இயலும். ஓராண்டு ஐந்தாண்டு பத்தாண்டு பதினைந்து ஆண்டு என கடந்து திரையுலகில் நிற்பதற்கு வேறு எதையும் விட படைப்பூக்கமும் படைப்புத்திறனும் ஒருவருக்கு வேண்டும். இந்த…
ஊழல் குறைந்த மாநிலம் கேரளா ஏன்? கட்டுரை – அரவிந்த் வாரியார்  (தமிழில் அ.பாக்கியம்)

ஊழல் குறைந்த மாநிலம் கேரளா ஏன்? கட்டுரை – அரவிந்த் வாரியார் (தமிழில் அ.பாக்கியம்)




அரவிந்த் வாரியார்
(தமிழில்: அ.பாக்கியம்)

கேள்வி: தென்னிந்தியாவில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா இருப்பது ஏன்?

பதில்: பின்வரும் காரணங்களால் தென்னிந்தியாவில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா உள்ளது.

1) மலையாளிகள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு மிக அதிகமாக உள்ளது. அவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என மனுக்கள் தொடர்ந்து கொடுப்பதும் போராட்டங்களும் நடத்துகிறார்கள்.

2) எந்த அரசியல்வாதியையும் வணங்கும் பழக்கம் கேரளாவில் இல்லை. அரசியல்வாதிகள் எந்த தவறான செயல்களிலிருந்தும் தப்பிக்க முடியாது என்ற சூழல் நிலவுகிறது.

3) கேரளாவில் உள்ள மலையாள செய்தி சேனல்கள் அரசாங்கத்திற்கு இணங்கி போவது இல்லை. மேலும் அவை பிரைம் டைம் விவாதங்களில் அரசாங்கத்தின் குறைபாடுகளையும், கமிஷன் பற்றியும் விமர்சன ரீதியாக ஆய்வு செய்கின்றன.

4) மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கேரளாவில் ஆட்சி அதிகாரம் மிகவும் பரவலாக்கப்பட்டுள்ளது. இது ஊழலின் அளவைக் குறைக்கிறது. ஏனெனில் பஞ்சாயத்துகள் உள்ளூர் நிர்வாகம் தொடர்பான பல விஷயங்களில் முடிவுகளை எடுக்க அதிகாரம் பெற்றுள்ளன.

5) கேரளாவில் டிஜிட்டல் கல்வியறிவு மிக அதிகமாக உள்ளது. இது அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான மனித தொடர்புகளைக் குறைக்கிறது. இது ஊழலைக் குறைக்கிறது.

நன்றி:
அரவிந்த் வாரியார் (Arvind variar.
Quora தளத்தில் எழுதியது.)

“கழிசடை” கவர்னர் கட்டுரை – அ.பாக்கியம்

“கழிசடை” கவர்னர் கட்டுரை – அ.பாக்கியம்




இப்போது கேரள முதல்வரின் மீது மீண்டும் தங்கக் கடத்தலை கையில் எடுப்பேன் தலையிடுவேன் என்று கழிசடைத்தனமான களத்தில் இறங்கி உள்ளார் கேரள கவர்னர் ஆதி முகமது கான்.

தனது பதவி வெறும் சம்பிரதாயமான தகுதி என்பதை மறந்துவிட்டார். அவருக்கு இருக்கும் சுதந்திரமான அதிகாரங்களுக்கு எல்லைகள் உண்டு என்பதையும் அதை மீறினால் மற்றவர்கள் தலையிடுவார்கள் என்பதையும் அவர் புரிந்து கொள்ளவில்லை.

நிதி அமைச்சர் தனது மகிழ்வுக்கு ஏற்றபடி நடக்கவில்லை நீக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். முதலமைச்சர் பினராய் விஜயன் அன்புக்கு பஞ்சமில்லை என்று பதில் அளித்து விட்டார்.

பின்னர் துணை வேந்தர்களை வெளியேற்ற முயற்சி செய்து ராஜினாமா கோரி கடிதம் வழங்கினார். யாரும் ராஜினாமா செய்யவில்லை. அதற்கு விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்தார். யாரும் பதில் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் துன்புறுக்கக் கூடிய முறையில் கவர்னர் நடக்க கூடாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்று முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இப்போது மத்திய புலனாய்வு அமைப்புகள் பலமுறை விசாரணை செய்தும் ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த பிறகும் அதை கையில் எடுப்பேன் என்று கவர்னர் புலம்புகிறார்.

பாஜக தலைவர்கள் எழுப்பும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கவர்னர் எழுப்புகிறார். இவர் RSS-ன் அடமான பொருளாக இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேற ஆதாரம் தேவையில்லை.

கும்மணம் ராஜசேகரன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது பாஜகவின் ஊடகத் துறை தலைவராக இருந்த ஹரி எஸ் கர்த்தா இப்போது ஆளுநரின் கூடுதல் தனி உதவியாளராக இருக்கிறார்.

இந்த கர்த்தாவை நியமித்தது மாநில அரசுதான். ஆனால் இது 18. 01.2019 மாநில ஆளுநரின் பரிந்துரையின் அடிப்படையில் நடைபெற்றது. எனவே இவர் பாஜகவின் ஊது குழலை வாயிலே வைத்துக் கொண்டு ஊதிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சியாகும்.

உ.பி.யை விட கேரளா சிறந்த மாநிலம் என்று சொன்னால் அது என்ன தேச துரோகமா. கடந்த தேர்தலின் போது யோகி ஆதித்யநாத் கேரளாவை இழிவு படுத்தி அறிக்கை வெளியிட்டார். கேரள மக்கள் யோகி ஆதித்யநாத்தின் கருத்தை விமர்சித்தார்களே தவிர கவர்னரை யாரும் விமர்சிக்கவில்லை.

இப்போது உ.பி. விட கேரளா சிறந்த மாநிலம் என்று பாலகோபால் சொன்னால் தேசத் துரோகம் என்று கவர்னர் முத்திரை குத்துவது புத்தி கெட்ட காரணத்தினால் தான்.

கேரளா போதைப் பொருட்களின் தலைநகரம் என்று ஆளுநர் குற்றம் சாட்டுகிறார் ஒரு பத்திரிக்கையாளரின் சந்திப்பில் இந்த முட்டாள்தனத்தை அவர் வெளிப்படுத்தினார். எந்த தகவல் அடிப்படையாகக் கொண்டு இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார் என்று விளக்கவில்லை. எரிச்சலில் எரிந்து விழுகிறார்.

இந்திய அரசு வெளியிட்ட விபரங்கள் கூட ஆளுநரின் கருத்துக்கு முரணாக உள்ளது.

இந்தியாவிலேயே போதைக்கு எதிரான செயல்களை நடத்துகிற மிக முன்னுதாரணமான மாநிலம் கேரளா. இங்கு நடைபெறும் போதைக்கு எதிரான செயல்கள் கண்டு கவர்னர் ஏன் பொறாமைப்படுகிறார். இந்த விஷயத்திலும் கேரளா உ.பி. யை விட மிக மிக முன்னிலையில் இருக்கிறது.

தற்போது கேரளாவுக்கு இருக்கும் ஒரே வருமானம் மது மற்றும் லாட்டரி என்ற முட்டாள்தனமான கருத்தை கவர்னர் முன் வைத்துள்ளார்.

இந்திய அரசின் புள்ளிவிவரப்படி ஆரிப் முகமது கானின் சொந்த ஊரான உ.பி.யில் நிலையை விட கேரளாவின் நிலை மேம்பட்டது.

ஜிஎஸ்டி வரிக்குப் பிறகு கேரளா அரசுக்கு லாட்டரி மூலம் கிடைக்கும் லாபம் விற்பனை வரியில் மூன்று சதவீதம் மட்டும் தான் என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும்.

மதுவிலும் மிக மிக குறைந்த வருமானம் தான் கிடைக்கிறது. மதுவிலும் ஆற்றிலும் இன்றைய அரசு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. எத்தனை ஆட்சி மாறினாலும் இந்த நிலை கேரளாவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து வளர்ச்சி குறியீடுகளிலும் கேரளா தேசிய சராசரியை விட மிக அதிகமாக உள்ளது. அரசியல் செயல்முறை மூலம் இடதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் மலையாளிகள் அனைவரும் இதை நினைத்து பெருமை கொள்ள உரிமை உண்டு என்பதை ஆர் எஸ் எஸ் என் அடிவருடியாக இருக்கும் ஆரிப் முகமது கான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆளுநரின் மிரட்டல் கேரளாவில் பலிக்காது என்று முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கடுமையாக எச்சரித்து உள்ளார்.

– அ.பாக்கியம்