நூல் அறிமுகம்: கலீல் ஜிப்ரான்: வாழ்க்கை வரலாறு – சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம்: கலீல் ஜிப்ரான்: வாழ்க்கை வரலாறு – சு.பொ.அகத்தியலிங்கம்

      “ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை ஒரு கவிதை நூலை வாசிப்பதுபோல் அத்தனை சுவையோடும் தாளலயத்தோடும் வாசிக்க முடியும் என்பதை இந்நூலை வாசிப்பதற்கு முன் நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை.” இதயத்தின் ஆழங்களை நோக்கி கடந்து வா!! ”மனிதனை இருட்டில்…
நூல் அறிமுகம்: கலீல் ஜிப்ரானின் ”முறிந்த சிறகுகள்” (தமிழில் கவிஞர்.புவியரசு) – தி. தாஜ்தீன்

நூல் அறிமுகம்: கலீல் ஜிப்ரானின் ”முறிந்த சிறகுகள்” (தமிழில் கவிஞர்.புவியரசு) – தி. தாஜ்தீன்




இந்நூல் “broken Wings” எனும் நூலில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது. கதையாசிரியரின் வாழ்வில் நிகழ்ந்த முதல் காதலை கவிதையாக கூறியிருக்கும் கதையே இந்த முறிந்த சிறகுகள்.

காதலை சிறகடித்துக்கொண்டே இருக்கிறது. கவிக்கோவின் முன்னுரையோடு கலீல் ஜிப்ரானின் காதல் கதை காதலையும் காதலிக்க வைக்கும் புத்தகம்.

கலீல் ஜிப்ரான் ஒருமுறை தன் தந்தையின் நண்பரைக் காண வரும்போது அந்த நண்பரின் அழகான அறிவான மகள் செல்மா மீது கலீல் ஜிப்ரானுக்கு காதல் வருகிறது. சில நாட்களில் செல்மாக்கும் அவர்மீது காதல் பிறக்கிறது. இறுதியில் இவர்களின் உண்மை காதல் கைசேராமல் பல சூழ்ச்சியால் தடைபட்டு, செல்மா தன் தந்தைக்காக வேறொருவரை கட்டாய மனம் விரும்பாத திருமணம் செய்கிறாள்.

செல்மாவின் இல்லற வாழ்க்கை நரகவாழ்க்கை ஆனாலும், வேறு வழியில்லாமல் விருப்பம் இல்லாமல் வாழ்ந்து தன் ஆசைகளை தொலைக்கிறாள். மறுபுறம் செல்மாவின் நினைவுகளை தன் காதலை மறக்கமுடியாத ஜிப்ரானுக்கு உலகமே இருண்டது போல் தெரிகிறது. இருவேறு திசைகளில் காதல் பறவைகள் சோகத்தால் கண்ணீரில் தினம் தினம் சிறகடித்து திரிந்து நனைகிறது.

தன் மகள் செல்மா படும் துயரங்களை தாங்கிகொள்ளதா தந்தை மனதால் பலவீனப்பட்டு, உடலாலும் உடையப்பட்டு உயிர்விடும்போது செல்மாவை கலீல் ஜிப்ரானின் கையில் ஒப்படைத்துவிட்டு உயிர்பிரிவார். செல்மா இது நரக வாழ்க்கை என நினைத்து கலீலுடன் சேர வில்லை. கலீல் அவளிடம் கெஞ்சி கேட்கிறான் நாம் இருவரும் வேறெங்காவது சென்று வாழ்வோம் எனும்போது செல்மா உண்மையில் நேர்மையின் பேரழகு என்பதையே பிரதிபலித்துச் செல்கிறாள் அவனிடம் சேராமலே.

பிறகு செல்மாவிற்கு ஒரு குழந்தை பிறக்கும் அவள் தாய்மையை அடைந்துவிட்டாள் என்பதை உலகிற்கு சொல்வதற்காகவே பிறந்து இறந்துபோகும் குழந்தை அது. என்னை நரக வாழ்விலிருந்து விடுவிக்கவே பிறந்தாயோ என்னையும் உன்னோடு அழைத்துச் செல்லவே இறந்தாயோவென்று கதறுவாள், புலம்புவாள், அலறுவாள். தன் குழந்தையை கட்டிக்கொண்டு அவள் குரலும் ஓய்ந்துபோகும். தன் தந்தையும், குழந்தையும் இழந்து சோகத்தில் மூழ்கிடுவாள்.

தந்தையை புதைத்த அதே குழியில் இவர்களையும் புதைத்துவிட்டு வெட்டியான் மண்ணைக் குவிக்கையில் மூவரை மட்டுமல்ல என் இதயத்தையும் சேர்த்து புதைத்துவிட்டாயே என்று கதறி துடிக்கும் கலீல் ஜிப்ரான்.
செல்மா செல்மா என்றபடி கலீல் ஜிப்ரானின் காதல் அந்த கல்லறையை சுற்றி சுற்றியே கவிதை எழுதிக்கொண்டிருக்கிறது இந்த முறிந்த சிறகுகள்.

நூல் : முறிந்த சிறகுகள் 
ஆசிரியர் : கலீல் ஜிப்ரான்
தமிழில் : கவிஞர்.புவியரசு
விலை : ரூ.₹25/-
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

தி. தாஜ்தீன்
தி கிரசண்ட் மேல்நிலைப் பள்ளி
ஆவணியாபுரம்
ஆடுதுறை

Kahlil Gibran’s Have Mercy on Me, My Soul English Poetry in Tamil Translation by Thanges. Book day is Branch of Bharathi Puthakalayam

கலில் ஜிப்ரான் கவிதைகள் – மொழி பெயர்ப்பு தங்கேஸ்

முறிந்த சிறகுகளுக்குப் பிறகு கலில் ஜிப்ரான் என்னும் கவிஞானியை மொழி பெயர்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே என்ற நினைப்பில் மீண்டும் அவருடைய கவிதை ஒன்றை வாசிக்க எடுத்தேன். இந்த உலகில் கவிதை வாசிப்பை ஆனந்த அனுபவமாக மாற்றிவிடக்கூடிய மகா கவிஞர்களில் ஒருவர்…
Kahlil Gibran’s Dancer English Short Story in Tamil Translation by Thanges. Book day is Branch of Bharathi Puthakalayam

குறுங்கதை: நடனமாடுபவர் – கலில் ஜிப்ரான் (மொழிபெயர்ப்பு: தங்கேஸ்)

ஒரு முறை பிர்காஷா என்னும் இளவரசனின் அரசவைக்கு ஒரு நடனமாது தன் இசைக்குழுவினரோடு வந்து தன் கலையை இளவரசனுக்கு முன்பாக நிகழ்த்திக் காட்ட அனுமதி கேட்டாள். அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. யாழ் ,புல்லாங்குழல் மற்றும் சிதார் போன்ற இசைக்கருவிகள் இனிமையாக மீட்டப்பட…