Essential requirements for internet classroom 77th Series by Suganthi Nadar. Book Day. The Davos Project and Education 4.o. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 77 - டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 77 – சுகந்தி நாடார்



டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்

The Davos Agenda என்பது உலகப் பொருளாதார மையத்தின் செயல்பாடு ஆகும். ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை 15 கொள்கைகளை உலக மக்களின் மேம்பாட்டுக்காக வகுத்து வைத்திருக்கும் நிலையில் உலகப் போருளாதார மையம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் அரசு, தொழில்நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் பொதுமக்களின் பிரதிநிதிகள் சேர்ந்து இப்பொருளாதார மையத்தில் கலந்து கொண்டு ஆண்டுதோறும் கூடி உலக மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக திட்டங்கள் தீட்டுவர். கடந்த 50 ஆண்டுகளாக இப்படிப்பட்டக் கூட்டம் நடந்து முடிந்து விட்டது. 2022 ஜனவரி 17 முதல் 21 வரை நடந்த இந்த மாநாட்டில், ரஷ்ய அதிபர், சீன அதிபர், சிங்கப்பூர் அதிபர், இந்தியப் பிரதமர், ரொவாண்டா அதிபர், இஸ்ரெல் அதிபர்.

ஜோர்டான் நாட்டு மன்னர், கானா நாட்டு அதிபர், பிரான்ஸ் அதிபர், அர்ஜென்டினா அதிபர் என்று பல நாட்டு அதிபர்கள் கலந்து கொண்டனர். தடுப்பூசி பற்றிய விவாதங்களும் சமுதாய தொழில்களுக்கு ஆதரவு கொடுத்தும், வளர்ச்சியை நோக்கிய உறபத்தியும், மிக முக்கியமானக் கருத்துக்களாக கருதப்பட்டது. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நீடித்து நிலைக்கக் கூடிய வளங்களையும் நாடுகளின் மீட்டெழுச்சித் திறனை ஊக்குவிக்கத் தகுந்த ஒரு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோளை இந்த இணைய சந்திப்பு நிகழந்தது. Klaus Schwab, உலகப் பொருளாதார மையத்தின் நிறுவனர் கூறுகிறார்.

செல்வத்தைச் சாராத, மக்களைச் சார்ந்த ஒரு முதலாளித்துவம் தேவை என்பதை இந்த ஐந்து நாள் கூட்டம் வலியுறுத்தியது. ஒரு நிறுவனம் பங்குச்சந்தை பங்குதாரர்களின் தேவையை மட்டும் பூர்த்தி செய்யாமல் அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்களின் நன்மைக்காகவும் எதிர்கால சந்ததியினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் படியாகவும் தங்கள் நிறுவனக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதை நேரடியாகவும், மறைமுகமாகவும், தரவுகளின் ஆதாரத்துடனும் இச்சங்கமம் வலியுறுத்துகிறது. அமெரிக்காவின் கருவூலச்செயலர் ஜெனட் எலன் அம்மா பேசுகையில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் பாரம்பரிய அளிப்புச் சங்கிலியை விட்டு நவீன அளிப்புச்சங்கிலி பற்றியக் கொள்கைகளை அமெரிக்க அரசு கொண்டுவந்துள்ளது என்றும், ஒரு சமுதாயத்தின் உட்கட்டமைப்புகளான தொழிலாளர்கள், இயற்கை சார்ந்த எரிசக்தி கட்டமைப்பு மனித வளத்தை மேம்படுத்தும் தானியக்கத் தொழில்நுட்பங்கள் அதற்கான ஆராய்ச்சி கல்விமுறை ஆகிய பல பரிணாமங்களில் அரசுக் கொள்கைகள் மாறி வருகிறது என்று கூறினார். இப்படியாக பலப் பரிணாமங்களைக் கொண்ட இத்தகைய ஒரு பொருளாதாராத்தைத்தான் நான்காம் தொழில்புரட்சியின் அடிப்படை ஆகும். இப்பொருளாதாரத்தை எதிர் நோக்கியே ஐநா சபையின் 15 கொள்கைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கியமாக அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மின்னியியல் சார்ந்த அடிப்படை அறிவுத் தேவைப்படுகின்றது என்பது கல்வியாளர்களான நமக்காகக் கூறப்படுவதாகும்.  இத்தகையப் பொருளாரத் தேவையை கணித்து 2016ல் நடந்த டாவோஸ் கல்வி 4.0ன் தேவை அறிவுறுத்தப்பட்டது. நான்காவது தொழில்புரட்சிக்கு ஏதுவாக இன்றைய கல்வியாளர்கள் தாங்கள் படிக்கும் விதங்களில், பொருண்மைகளில் சீரிய மாற்றம் தேவை என்பதை கல்வி 4.0 வலியுறுத்துகிறது.

நான்காம் தொழிற்புரட்சிக்கு ஏற்றக் கருவிகளை உருவாக்குதல் மழலைக் கல்வி மூலம் சமுதாயத்தை வழிநடத்தும் தலைமுறையை உருவாக்குதல், இப்புதிய கல்விக் கொள்கைகளை ஏற்று நடத்தும் படியான அரசு தனியார் நிறுவன கொள்கைகள் ஒவ்வோரு தேச அளவிலும் சர்வதேச அளவிலும் கொண்டு வர வேண்டும் என்பதே கல்வி 4.0 செல்வத்தைச் சார்ந்த முதலாளித்துவம் என்ன நமக்குத் தெரியும் ஆனால் அது என்ன மக்களைச் சார்ந்த முதலாளித்துவம்? 

நாம் இப்போதே கருவிகளை உருவாக்கிக் கொண்டுதானே இருக்கின்றோம்? இன்னும் என்ன மாதிரியானக் கருவிகள் உருவாக்கபப்ட வேண்டும்?

ஏற்கனவே 2 வயது மூன்று வயதுக் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கொண்டுதான் இருக்கின்றனர்? இன்னும் என்ன மழலைக்கல்வி பற்றிய விவாதம் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். 

இவற்றை ஒவ்வோன்றாக ஆராய்ந்தால் நாம்கல்வி 4.0 என்பதன் கட்டமைப்பை ஆழமாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கல்வி 4.0 என்ற கல்வியின் வெளிப்பாடு

  • ஒவ்வோரு மாணவர்களுகளின் தனிப்பட்டத் தேவையை பூர்த்தி செய்யும் கல்விச்சூழல்,
  • கல்வி நிலையங்களை விட்டுத் தொலைவிலிருந்தும் ஒதுக்குப்புறமான இடங்களிலும் செயல்படக் கூடிய கல்வி
  • கல்விக் கற்றலுக்கான கருவிகள் தேவைக்கு அதிகபடியாக கிடைத்தல். தரவு விவரங்களை ஒவ்வோரு மாணவரும் தன் வசம் வைத்து இருத்தல் அடிப்படைத் திறன்களான பிரச்சனைகளைத் தீர்த்தல்
  • ஒரு செயல்பாட்டின் வழிமுறைகளும் செயல் திட்டம் சார்ந்த கல்விமுறை
  • திறன்சார் கல்வி
  • அறிவாற்றலைப் பலவழிகளில் கொடுக்கக் கூடிய வழிகள்
  • மாணவர்களுக்கு முன்பே தெரிந்திருக்கும் விவரங்களின் அடிப்படையில் பாடங்கள் நடத்தப்படாமல் அவர்களின் ஒரு மனிதனின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான பாடங்கள் நடத்தப்பட வேண்டும்
  • செயல்திறனை மேம்படுத்த உதவும் செயல்பாடுகள்
  • குழு அமைப்பில் செயல்படுதல்
  • தனி மனிதக் குறிக்கோளை எட்டும் பிரத்யேக வழி
  • செய்யும் வேலையில் 100% முனைப்பாடும் வெளிப்பாடும்
  • வாழ்க்கைக் கல்வி ர்செயல்திறனை அதிகரிக்கக் கூடிய செய்திகளைக் கொடுத்தல், பல்துறை அடிப்படை செயல் திறன்

ஆகிய அம்சங்களைத் தாங்கி இருக்க வேண்டும்

1. தனிமனிதனின் செயல் திறனை மேம்படுத்துதல்
2. செயல்திறனை மேம்படுத்த உதவும் செயல்பாடுகளை அடையும் வழிகளைக் கண்டு பிடித்தல்
3. குழுவாகச் செயல்படுதல்
4. தனி மனிதக் குறிக்கோளை எட்டும் பிரத்யேக வழிகளை அடையாளப்படுத்துதல்
5. செய்யும் வேலையில் 100% முனைப்பாடும் வெளிப்பாடும் கொண்டு வருதல்
6. வாழ்க்கை கல்வி
என்ற இந்த ஆறு வழிகளில் நாம் மாணவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

நம்முடைய இன்றையப் பாடத்திட்டங்கள் ஓரளவுஇந்தக் குறிக்கோள்களைக் எதிரொலித்தாலும், இன்னும் பல முக்கிய மாற்றங்களை நாம் கொண்டு வர வேண்டும். முக்கியமாக மனனம் செய்து தேர்வு எழுதும் கல்வி முறையை நாம் மாற்றியே ஆக வேண்டும்மாணவர்கள்

அது எப்படி ஏன் என்பதை அடுத்துப் பார்ப்போம்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 70(   கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 71(கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 72 (தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 73(கல்வி ஏழ்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74(என்ன மாதிரியான விழிப்புணர்வு?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 75(கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76(2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி) – சுகந்தி நாடார்