மானுட உன்னதம்
********************
ஆதி என்ற போது ஆடையின்றி நின்றவன்!
இவன்
பிறப்பை அரிது என்ற அவ்வையின் ஆதரவில்
முடிசூடிக் கொண்டவன்!
ஐந்து திணைகளில் திரிந்து
ஐயம் தெளிந்தவன் !
அண்டம் கடந்தும்
ஆளுமையை விதைக்கத் தெரிந்தவன்!
இவன் சூட்டிய பெயரோடு
திரிகின்றன யாவும் !
இவன் சூட மறுத்தாலோ உதிர்ந்து விழும் பூவும்!
சத்தங்களை எழுத்துக்குள்
அடைத்துக் காட்டியவன்!
எழுத்தோடு எண்ணையும் படைத்து நீட்டியவன்!
காலத்தை நெசவு செய்து
சீலை கொய்தவன்!
ககனமெங்கும் சுற்றி வரும்
லீலை செய்தவன்!
சிரிக்கவும் சிந்திக்கவும்
தெரிந்து இருந்தவன்!
மானுடம் சீர்படும் முறையாவும்
அறிந்திருந்தவன்!
ஓரறிவு ஈரறிவு என்னும்
தொடர்ச்சியின் முடிவு!
ஆறறிவு அடைந்ததே மானுடத்தின் வடிவு !
பேரண்ட பெருந்தவமே மானுடம் !
மானுடம் இல்லையேல் கானகம்!
– கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்.
98949 18250