Konalgalai Nesippom Poem by Shanthi Saravanan கோணல்களை நேசிப்போம் கவிதை - சாந்தி சரவணன்

கோணல்களை நேசிப்போம் கவிதை – சாந்தி சரவணன்




மாங்காய் புளிக்கும்
பாகற்காய் கசக்கும்
தேன் இனிக்கும்
மலர்கள் மணக்கும்
அதே போல்
மனிதரில்
சிலர் நிஜம் உரைப்பர்
சிலர் பொய் உரைப்பர்
சிலர் புறம் பேசுவர்
சிலர் நடிப்பர்
சிலர் நகைப்பர்
அவர்களின் கோணல்களை
நீ திருத்த முயலதே!
மாற்றங்கள் முதலில்
உன்னில் துவங்கு!
தனித்துவம்
உன்னில் மட்டுமே இல்லை
சகமனிதத்திலும்
உள்ளது என்பதை
உணர்!
கோணல்களை
ஏற்றுக் கொள்ள
கற்றுக் கொள்!
மறவாதே
உயர வித்தியாசம்
உள்ள விரல்களின்
கூட்டமைப்பு தான்
உன் கை!
மரங்களின் கோணல் கிளைகள்
தான் நமக்கு நிழல் தருகின்றன!
பலவகையான
கோணல் மனங்கள்
சூழத்தான் நாம் வாழ்கிறோம்!
பிம்பமாக
நமது கோணல் அவர்களின் பார்வையில்
அவர்களின் கோணல் நமது பார்வையில்!
ஆதலால்
கோணல் மனங்களை
நேசிப்போம்!
நேசம் வளர்போம்!

தொடர் 23: கோணல்கள் – எஸ்.ராமகிருஷ்ணன் (க்ரியா) | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 23: கோணல்கள் – எஸ்.ராமகிருஷ்ணன் (க்ரியா) | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

அறுபதுகளின் இறுதியில் அதுவரை எந்தப் பத்திரிக்கையிலும் பிரசுரிக்கப்படாத நால்வரின் பன்னிரெண்டு சிறுகதைகளைக் கொண்ட  கோணல்கள் வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்ற மூன்று கதைகளையுமே  ஒரு பரிசோதனை முயற்சியாக ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.   ஆயின் பின்னர் அவர் அதிகம் எழுதாததும், தொகுக்காததும் ஆச்சரியமளிக்கிறது.   கோணல்கள்…