அறிவை விரிவாக்கும் ஐஞ்சிறு காப்பியங்கள் arivai virivaakum ainchiru kappiyangal

அறிவை விரிவாக்கும் ஐஞ்சிறு காப்பியங்கள்


ராமாயணம் ,மகாபாரதம் இரண்டும் மீண்டும் மீண்டும் பலரால் உரைநடையாய் வெவ்வேறு வடிவில் எழுதப்படுகிறது. திரைக்கதை ஆகிறது. சிறார் இலக்கியமாகிறது. குழந்தை இலக்கியமாகிறது. மறுவாசிப்பு செய்யப்படுகிறது. அது சார்ந்து நாவல், சிறுகதை புனைவாகிறது.

அதினும் பலமடங்கு மேன்மையானதும் , தமிழுக்கு பெருமை சேர்ப்பதும், வாழ்விற்கு வழிகாட்டுவதுமான ஐம்பெரும் காப்பியங்களும், ஐஞ்சிறு காப்பியங்களும் நம்மால் பேசப்படுகிறதா ? மீண்டும் மீண்டும் எழுதப்படுகிறதா ? மறுவாசிப்பு செய்யப்படுகிறதா ? நாவல், சிறுகதை, சிறார் இலக்கியம் ,குழந்தை இலக்கியம், சித்திரக்கதை என விரிகிறதா ? இல்லையே ! இது என் நீண்டநாள் கேள்வி .

இப்போது நான்சி கோமகன் எளிய தமிழில் ,குழந்தைகளுக்கான நூலாக குண்டல கேசியையும் வளையாபதியையும் கொண்டுவந்துள்ளனர். பாராட்டத்தக்க முயற்சி . கதைச் சுருக்கமாகச் சொல்லப்பட்டு இருப்பினும் மூலநூலைத் தேடிப் படிக்கத்தூண்டும் விதமாக எழுதப்பட்டுள்ளது

சித்திரக்கதையாகவும் கொண்டு வர முயலலாம். ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என வரிசையாக முயற்சி செய்யலாம்.

எல்லோரும் வாங்கிப் படித்து தரும் ஆதரவே இம்முயற்சியை மேலும் முன்னெடுக்க உதவும்.

 

நூல்விமர்சனம் : சுபொஅ.

குழந்தைகளுக்கான கதை வடிவில்…

குண்டலகேசி [40 பக்கங்கள். விலை.ரூ.50]
வளையாபதி [40 பக்கங்கள். விலை .ரூ.50]
ஆசிரியர் : நான்சி கோமன்
வெளியீடு : அ.இளஞாயிறு ,நொய்யல் இலக்கிய மையம் ,
பாண்டியன் நகர் , திருப்பூர் – 641602 .
அலைபேசி :94437 61307.