வேட்டுவம் நூறு மௌனன் யாத்ரிகா Vettuvam Nooru Mounan Yatrika

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “வேட்டுவம் நூறு” – வீரமணி

    நவீன இலக்கியத்தின் கால்தடங்களை அதிகம் அறிந்திராத ஒரு அடர்வனத்துள் நுழைந்து தன் கூர்மையான ரசனையாலும் துல்லியமான மொழியாலும் வேட்டையாடி விருந்து வைக்கிறார் கவிஞர் மௌனன் யாத்ரிகா பசியோடிருக்கும் வாசகனுக்கு நூறு சுவையில் நூறு கவிதைகளில் வயிறுமுட்ட பரிமாறுகிறார் தமிழ்க்கவிதைகளின் சொர்க்கவாசலை மீண்டும் திறந்துவிட்டு புதிய அத்தியாயத்தை வேட்டை அம்பால் எழுதியிருக்கிறது வேட்டுவம் நூறு தொல்குடியின் அன்னையான வேட்டைக்காட்டிடம் குடித்த தாய்ப்பாலை நூறு மேகங்களால் பொழிந்து நன்றிகளால் நனைக்கிறது ராமனின் பாதத்திற்கு காத்துக்கிடந்த அகலிகையைப்போல் ஆண்டாண்டு காலங்களாக சமைந்துகிடந்த வேட்டைக்காட்டின் நீண்ட மௌனம், மௌனனால் மொழிபெயர்க்கப்பட்டு் உயிர் கொடுக்கப்படிருக்கிறது எந்த கவிதைக்கு தெளிவான அறுதியிட்ட…