பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




ஒரு வேப்ப மரத்தின் சிரிப்பு
*******************************
இலை துளிர்காலம்
வசந்தகாலம்….
வனப்பில் துள்ளின
வேம்பின் இலைகள்
பசேலென….

அந்தச் சாலை ஓரத்தில்
கம்பீரமாக….
மழை வரும்போதுகூட
அறியாமையில்
அண்டிச்செல்லும் மனிதர்கள்!

கோடை வெயிலென்றால்
குடும்பமே நடத்துகின்றார்!

ஒரு இலை நிழலுக்கு
ஒரு மனிதனென
சுகமென புகழும்
புகழுரைகள்!

எறும்புகளின்
எகத்தாளங்கள்
கன்று காளைகளின்
அண்டல்கள்!

சும்மா கிடைத்து விடும்
சுகபோகமென்ற
சோம்பேறிகளின்
சொர்க்க புரியாகிறது
வேப்ப மர நிழல்!

ஓய்வை விரும்பி நின்றபோதும்
காமம் கொண்டு தழுவும்
காற்று;

காமக் காற்றின்
சுகம் உணரும்
சோம்பல் கூட்டம்!

உடலுக்கு நல்லதென
ஒய்யாரக் கூட்டம்;

கிளை அமர்ந்து
இல்லமாக்கும்
சின்னக் குருவிகள்!

இராக கீதமிசைத்து
எச்சமிட்டு
நாளை பறப்பதற்கான
ஆசுவாசம் கொள்ளும்
அடைக்கலம்!

சின்னக் குருவிகளின்
எச்சங்கள்
கனவுலகில் சஞ்சரிக்கும்
மரத்தடி மரண உறக்கக்காரர்களின்
திறந்த வாயில்…. !

உறக்கமற்ற சில
சோம்பேறிகளின்
காட்டுக் கூச்சல்….

எச்சமிட்ட சின்னக் குருவிகளை
வார்த்தைக் கற்கள் வீசி… விரட்டும் சோகம்!

முளைப்பதற்கு விதைபோடாதக் கூட்டம்;
உரிமை கொண்டாடி;
முளைப்பதற்கு விதைபோட்டக்
குருவியின் வாரிசுக்கு
அண்ட இடமின்றி
அடித்து விரட்டும் சோகம்!

உரிமைக்குக் குரல் கொடுக்கத் தெரியாத
சின்னக் குருவிகளின்
கூட்டம்!

யாரோ போட்ட விதையில்
சுகமாக குறட்டை விடும்
கூட்டம்;

சிரித்துக் கொள்வதைத் தவிர….
வேறென்ன செய்யும் மரம்?!

மண்ணானக் கற்பனை
***************************
கற்பனை என்ற
கடிவாளமற்றக் குதிரை
ஒவ்வொரு
மனிதனிடமும் உண்டு!

கற்பனைகளால்தான்
மனிதன் மேம்பட்டான்
என்பதனை விட,
கற்பனையில் மிதந்து
பறந்து, நீந்தி….
வாழ்க்கையை
கற்பனையிலேயே
கறைத்துக் கொண்டான்
மனிதன்!

ஒரு மனிதனின்
கற்பனைதான்
இன்று
உலகையே உலுக்கிக்
கொண்டிருக்கிறது!

பேய்க் கற்பனை!
ஏதோ…
நாட்டுக்கு நாடு
பெரியவன் சிறியவன்
என்ற
வீராப்பு…
வெட்டி வீராப்பு….

கடைசியில்
உழைப்பாளர் நிறைந்த
ஒரு
அழகியக் குட்டி நாட்டை
சுடுகாடாக்கிப் பார்த்ததுதான்
அந்த
ஒருவனின்
பேய்க் கற்பனை!

கற்பனையைப்பற்றி
கதைப்போமானால்
அது
கரையின்றி
கதைத்துக் கொண்டேயிருக்கலாம்!

எட்டாதக் கற்பனை
எவனுக்குத் தோன்றியதோ?

அந்தக்
கல்லையும் கரையவைத்த
கற்பனை
எவனுடையதோ?
மண்ணாய்ப்போக!

மலையை
மண்ணாக்கியக் கற்பனையை
நாளை
மன்னிக்காது
எங்கள்
மழலையர் உலகம்!

மலையை
வரலாறாக மட்டுமே…
ஏட்டுக் கல்வியில்
படித்தால்
சபிக்கவும் செய்யும்;

சாப விமோசனமே
இல்லை… இல்லை..
மலையை
மண்ணாக்கச் சொல்லி
கற்பனை செய்து
நிஜப்படுத்தியவனுக்கு!

– பாங்கைத் தமிழன்

Ilai Shortstory by Sudha. சுதாவின் இலை சிறுகதை

இலை சிறுகதை – சுதா




கரிசல்காட்டு பூமி அது விளைச்சல் ஏகபோகமாக நடக்கிற நேரம்… வயல் முழுசும் பச்சை வண்ணம் அடிச்சது போல அழகு முத்தம்மாளும் இன்னும் சில முதுமையும் களை எடுத்துக்கிட்டு இருந்தாங்க.

முத்தம்மாளுக்கும் வயசு 74 இருக்கும். எத்தனை வயசானாலும் அவளால உழைக்கிறத மட்டும் மறக்க முடியல. காடுகரைநு திரிஞ்சு நாலு காசு சேர்த்தால்தான் தன் மகன் வந்து போவான். அவனுக்கு கொடுக்கிறது காகம் இல்லாட்டியும் இவளோட கடைசி காலத்துக்காக தான் உச்சிவெய்யில்னு பாக்காம வேலை செய்கிறா. ஆனா இதெல்லாம் பையனுக்கு புரியாது. வருத்தம் நிறைய இருந்தாலும் முத்தம்மா ஒரு நாளும் அதை வெளிக் காட்டுனதில்ல.

உச்சி வெயில் மண்டையை பிளக்க முத்தம்மாளும் உடன் களை எடுத்த பிறவிகளும் இளைப்பாறும் தோணுச்சு கொண்டுவந்த நெல்லங் கஞ்சிய வரப்பு மேட்டில உட்கார்ந்து வயிறார குடிச்சிட்டு எல்லாக் கிழவிகளும் தன் முந்தானையை விரித்து படுத்துட்டாங்க முத்தம்மாளும் தா.

அரை மணி நேரம் கழிந்திருக்கும் மொத்தமாக இடது பாதம் முழுக்க எப்படி இந்த வலி வந்துச்சுன்னா யோசிச்சுக்கிட்டே இங்குட்டும் அங்குட்டும் திரும்பி திரும்பி படுத்தா ஆனால் வலி கொறையல. எழுந்து நடக்கவும் முடியல.ஒரு வழியா முத்தம்மாளோட கூட்டாளிங்க சேர்ந்து வீட்டில் கொண்டு வந்து விட்டாங்க. சரி கொஞ்ச நேரம் கண்ணசந்தா சரியா போகும்னு முத்தம்மாளும் நினைச்சு தூங்கிட்டா.

கண்ணு முழிச்சதும் கொள்ளைக்கு போக நினைத்து அவளுக்கு உடம்பு ஒத்துழைக்கல. கண்ணீர்விட்டு கதறி அழுதாள். முத்தமாவ பாக்கவே பாவமா இருந்துச்சு அக்கம்பக்கத்துல இருக்கிறவங்கதா அனுரிச்சாங்க.தன் மகன் வந்து பார்ப்பானும் நினைச்ச முத்தம் ஆளுக்கு ஏமாற்றம்தான் கண்ணப்பன் நா முத்தம்மாளோட பையன். வந்துட்டு இருந்த கொஞ்ச நஞ்ச காசை எடுத்துக்கொண்டு மருத்துவச்சி கூட்டிட்டு வரேன்னு போனவன் போனவன் தான் வரவே இல்லை…
அக்கம்பக்கத்துல இருக்கிறவங்களுக்கு போனா போகுதுன்னு சோறு போடுவாங்க. ஒத்தக்கால்ல நகர்ந்து நகர்ந்து கொள்ளைக்கு போயிட்டு வருவா அதுதான் அவளோட வேலை.

முத்தம்மாளோட இந்த நிலைமை ஊர்க்காரங்க ரொம்பவே கஷ்டப்பட்டுத்துச்சு. கண்ணப்பன் கிட்ட சொல்லியும் எந்த பலனுமில்லை ஊர்க்காரங்க சொல்லி சொல்லி ஓஞ்சுட்டாங்க.

அன்னைக்கு காத்தால எப்பவும் போல பக்கத்துல சாப்பாடு வாங்கி சாப்பிட்டுட்டு, புங்க மரத்துக்கு அடியில் படுத்திருந்தா.அவ மனசு பின்னோக்கிப் போச்சு. அவ பையன வளத்த அழக நெனச்சு நெனச்சு பார்த்துகிட்டா. அவ கண்ணுல தண்ணி போல தண்ணி, தலகாணிய ஈரம் ஆகிடுச்சு. அப்பதான் கவனிச்சாஅந்த புங்க மரத்து மேல ஒரு பழுத்த ஒன்னு இருந்துச்சு. தன் வாழ்க்கையும் இப்படித்தான் ஆயிடுச்சு உபயோகமில்லாமல் என நினைத்து தன்னைத்தானே நொந்துக்கிட்டா.அவன் நெனச்ச நிமிஷம் அந்த பழுத்த இலை அவ மேல விழுகும் அவளோட உயிரும் உதிரமும் சரியா போச்சு