அமீபா கவிதைகள்
கவிதை : சு. இளவரசி
கவிதை : தோல்வியின் வழிகாட்டுதல் – விக்னேஷ் மகாலிங்கம்
நெஞ்சாங்குழியில் கவிதை – கவிஞர் ம.செல்லமுத்து
என் என்றென்றும்
அவள் நெஞ்சாங்குழி நீங்காமல் ..
அழியாத சுவடுகளில்
தெரியாமல் அழிந்து போன என்
முதல் காதல் தான் ..!!
யாரோ அவள்
யாரோ நான்
அல்ல ?
காலத்தால்
அறிந்தும்,புரிந்தும்,பிரிந்து,
போன காதல் நெஞ்சாங்குழி ..!!
சிந்தித்த வயதில் காதலும் சிந்தை ஆனது!!
பல விந்தைகளாக பல நாட்கள் தொடரில்,,தொடராமல்
வாழ்க்கையில் பல மாறுதல்கள் காதலில் கயவன் ஆனதால்
அன்று
இருளிலும் கண் விழித்தது இன்று பகலில் கண் விழிக்க முடியாமல் ..!!ஏமாற்றப்படுவேன் என்று தெரியாமல்!!
பொய்யும் உண்மை என இன்று ஊமை ஆகினேன்!!
சாதிப்பதை அழித்து
சாக்கடையும் சாதி பார்த்தது
காதல் என்ற மாயையைக் காட்டி..!!
குச்சி உடம்பைக் கொண்டு உருவமில்லாமல் ஆக்கிவிட்டாள்
பாதகி பாதையை தேட..!!
உடும்பு உடம்பு கிறுக்கு பிடித்தது விபத்தில் அடையாளம் அறியாமல்
நல்லவர்களை சோதிப்பது தானே ஆண்டவன் விளையாட்டு ….!!
பலரை காலத்திலும் காதலிலும் கலங்கடித்து ..!! ம.செல்லாஹ்
அன்று
லட்சியமும் அலட்சியமானது!!
இன்று வாழ்க்கையே முடிவற்ற அரங்கமானது!!
அவசர தேடலில் காதலும் அன்று தேடப்பட்டது!!
சேதப்பட்ட பின்பு தான் தேதி பட்டது!!
மீண்டும் அவளை தேடாதே என் நெஞ்சாங்குழி
இரா.மதிராஜ் கவிதைகள்
குளிர்ச்சி
—————
உச்சி வெயிலில் சிறிது நேரம் கண்களுக்குக் குளிர்ச்சி
கூட்டமாய்ப் பறக்கும்
வெள்ளைக் கொக்குகள் !
வாழ்க்கை
—————–
365 நாட்களைச் சுமக்கும் தினசரி காலண்டர்
அசையாமல் இருக்கிறது
12 மாதங்களை மட்டுமே சுமக்கும் மாதக் காலண்டரோ
அங்கும், இங்கும் ஆடுகிறது.
சூழியல்
—————
வெற்றிலை, பாக்கின் மீது தவறில்லை
சுண்ணாம்பு காதல் மீதே தவறு,
அதனாலேயே ரத்தக் கறையாகிறது.
பட்ஜெட்
————–
விரல்கள் ஒவ்வொன்றாய் வெட்டி,
விஞ்ஞானக் கப்பல்
செய்யும் வேலைதான்
வாழ்க்கைக்கான பட்ஜெட்.
மோகினியாட்டம்
——————————
இருளைத் தின்று
கொஞ்சம் கொஞ்சமாக
நள்ளிரவில் உச்சம் வரும்
அந்த நிலா.
இரா. மதிராஜ்,
9788475722
சரவிபி ரோசிசந்திரா இசைப்பாடல்
நாள்தோறும் நான் வாழ
கண்ணா நீ காரணம்
அன்போடு நின்றாடும்
உன் நினைவு தோரணம்
நான் வாழ நீயின்றி வேறேது
காரணம்
புதிய தாகம் இதுவோ
காதல் பானம் பருக வருமோ!
நமது காதல் விளைய
இது புதுமையான களமோ!
நாள்தோறும் நான் வாழ
கண்ணா நீ காரணம்
அன்போடு நின்றாடும்
உன் நினைவு தோரணம்
காற்றுப் போலவே நெஞ்சம் சுழலுதே!
உன் கண்ணைக் கண்டதாலே..
பேதை என்னையே வாழ
வைத்ததே!
நேசம் கொள்ளைக் கொண்டதாலே…
உன்னைப் பார்க்கையில்
அன்னை பார்க்கிறேன்
உந்தன் ஜீவக்கண்ணில்
என்னைப் பார்க்கையில்
உன்னைப் பார்க்கிறேன்
உந்தன் மின்னல் கண்ணில்
அன்பைச் சொல்லியே என்னைச்
சேர்க்கிறேன்
இன்று உந்தன் வாழ்வில்
அன்பே! எண்ணம் கூடுமோ
இந்த மாய வாழ்வினில்….
அன்பே! நேசம் கூடுமோ
உந்தன் மோன வாழ்வினில்….
அன்னை நீ! தந்தை நீ!
விண்ணும் நீ! மண்ணும் நீ!
கீதை போலே உந்தன் பேரை
ஓதும் பேதை நான்….
நாள்தோறும் நான் வாழ
கண்ணா நீ காரணம்
அன்போடு நின்றாடும்
உன் நினைவு தோரணம்
கல்வி செல்வமும் அன்பு செல்வமும்
வாரித் தந்தவன் நீயே!
நாளும் என்னையே
வாழவைத்திடும்
பேசும் தெய்வம் நீயே!
என்னை வணங்கிடும்
என்னை ஏந்திடும்
மோனவல்லியே
வெள்ளை மனத்தில்
அன்பை மேவியே என்னை ஆளும் கோதையே
என் மன மேடையில்
நீ தான் ராதையே
என் நினைவில் வாழ்ந்திடும்
என் சுவாச பாதையே
என்னுயிர் நீ அல்லவா
இன்னும் நான் சொல்லவா
நீதான் மனைவி நீதான் காதலி
நீதான் என் வசந்தம்
நாள்தோறும் நான் வாழ
கண்ணா நீ காரணம்
அன்போடு நின்றாடும்
உன் நினைவு தோரணம்
– சரவிபி ரோசிசந்திரா
ம.செல்லமுத்துவின் கவிதைகள்
வாழ்க்கையே
*******************
முடிவில்லாத் தொடர்
இந்த வாழ்க்கை
பல உயிர்களின் பிறப்பிடமும் இறப்பிடமும் ஒன்றுதான் இவ்வுலகில்
வலிகள் நிறைந்த பாதையில் பலரும் வாழ்க்கை இழந்து மீதியில்
மீள முடியாத துயரத்தில்
துரத்துதே இந்த வாழ்க்கை ஒவ்வொருவருக்கும்
மாறுதல் ஆறுதல் தேடி
காணுதே பல கண்கள்
காலத்தில் கலங்கி
எதிர்கொண்டு வாழ்வதே வாழ்க்கை
ஆனால் பலரும் எதிர்கொண்டு இருப்பதே வாழ்க்கை என்றால்
துயரங்களைச் சுமையாக நினைக்காமல் துணையாக நினைத்து வாழ நினைவுகள்
செதுக்கப்பட்ட சிலை போல் பின்னாளில் பிரகாசிப்பாய் இவ்வுலகில்
பின்னாளில் மலரும் இந்த வாழ்க்கையின் அலங்கார ஓவியம்
ஒவ்வொருவரின் உழைப்பின் இதயத்தின் குறிப்பாக
வாழ்க்கையே ..
வறுமை மறுமையில் வழக்கு போட முடியுமா உன்னிடம் ?…
கடன் என்றாரே
**********************
விதவிதமான விந்தைகளில்
நாம் விதைப்பது பின்னாளில் நமக்கே பேராயுதமாய் ..!!
கடன்பட்டாரே கடமையில்
கண்ணீர் கானல் நீருடன், ,
பிறப்பிலும் கடன்
இறப்பிலும் கடன் ..!!
கடல் வற்றினாலும்
கடன் வற்றுவதில்லை..!!
கால் வயிற்றுக் கடன் தீர்க்கத்
தீண்டுது தீமைகள் தினம் தினம்,,
ஏழை என்னும் ஏமாளிகளின் முதுகில் முற்புதர் போல்..!!
பணம் தீண்டும் கையில் பிணம் தீண்டுதே நாட்டில்
நாவிற் கானா களம்
கடன் சுடுவிழி நீர்,,
கடன் பட்ட காலத்தில் களவு போகிறோம்
எதிலும், ,,,
ம.செல்லமுத்து
எம்.ஏ..பி.எட்..
நூத்தப்பூர் அஞ்சல்
பெரம்பலூர் மாவட்டம்
கானல் நீர் கவிதை – பேரா. எ. பாவலன்
அந்த உலகம்
அவ்வளவு அழகாக இருந்தது.
எனக்கானவற்றை நானே
உருவாக்கிக் கொள்கிறேன்.
ஒருநாளும்
அந்த வாழ்க்கையை
நான் வெறுக்கவில்லை.
அச்சம்
பயம்
கிஞ்சித்த
அளவேனும் இல்லை.
எனக்கு வாழ பிடித்திருந்தது
நிறவேற்றுமை
சாதிப் பாகுபாடு
பெண்ணடிமை
வன்புணர்வு
வன்கொடுமை
தீட்டு
குடிநீரில் மலம் கலப்பது
இரட்டைக் குவளை
மலச்சட்டி தூக்கிச் சுமப்பது
சாணிப்பால்
சவுக்கடி
ஊர் சேரி என்று
எந்த கொடுமையும்
நடந்ததாக வரலாறு இல்லை.
கடவுளைப் பற்றிய
தேவை எழவில்லை
அதனால் மதச் சண்டை
அங்கு இல்லை.
குரோதமான
வன்மம் நிறைந்த
மனிதர்களை
அங்கு
நான் கண்டதே இல்லை.
பெண்கள்
அவர்கள் விரும்பியவரை
காதலித்தனர்.
அவர்கள் காதலுக்கு ஒருநாளும்
ஒருவரும் யாரும் தடையாக
இருந்தது இல்லை
குழந்தைகளை
குழந்தைகளாகவே
பார்க்கிறார்கள்.
மறந்தும் ஒரு நாளும்
பாலுணர்வுக்கு
துன்புறுத்தப்படவில்லை.
பாலின வேறுபாடும்
வயது வித்தியாசமின்றி
அனைவரும் அனைவரிடமும்
நட்புக் கொண்டிருந்தனர்.
யாரும்
ஒதுக்கப்பட்டவர்கள்
ஓரம் கட்டப்பட்டவர்கள்
ஒடுக்கப்பட்டவர்கள்
என்ற சொற்களை
அறிந்ததில்லை.
நாங்கள்
நினைத்த இடங்களுக்கு
சுதந்திரமாகச் சென்று வந்தோம்.
ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது
அன்பு பாராட்டி
ஆறத்தழுவிக் கொண்டோம்.
எதிர்காலம் குறித்த
எந்தக் கவலையும் இல்லை.
ஆனால்
எங்களுக்கான கடமை
இருப்பதை உணர்ந்தோம்.
நாங்கள்
ஒவ்வொரு நாளும்
விடியலுக்குப் பிறகு
உயிருடன் தான் இருக்கிறோம்
என்ற எந்த நிர்பந்தத்திற்கும்
ஆளாக்கப்படவில்லை.
நான்கு வர்ணங்களைப் பற்றி
நாங்கள் கேள்விப்பட்டதில்லை.
அதனால்… அதனால்…
பிரம்மா
விஷ்ணு
சிவன்
போன்ற கடவுளர்களும்
புத்தன்
இயேசு
நபி
போன்ற போராளிகளையும்
நாங்கள் அறிந்திருக்கவில்லை
நாங்கள்
விரும்பிய
கல்வியை
கற்றோம்
நாங்கள்
விரும்பிய
உணவை
உட்க்கொண்டோம்.
எங்கள்
கரங்களிலிருந்து
புத்தகங்கள்
களவாடப்படவில்லை.
எழுதுகோல்
சுதந்திரமாக
எங்கள்
கரங்களில்
தவழ்ந்து விளையாடியது.
உழைப்பு மீது
அத்தனை மதிப்பு
மிக்கவர்களாக இருந்தனர்.
உழைப்புக்கேற்ற
ஊதியம் கிடைத்தது.
எந்த சுரண்டலுக்கும்
உள்ளாக்கப்படவில்லை.
எங்களுக்குள்
எந்த வர்க்க பேதமும்
உண்டாகவில்லை.
என்
புல்லாங்குழலிருந்து
வரும் இசையைப் போலவே
எல்லா திசைகளிலும்
நீக்கமர கலந்திருந்தோம்.
மானுட தத்துவத்தின்
அடையாளமாகவே
மட்டும் இருந்தோம்.
சொல்லப்போனால்
போலி தேசபக்தர்களின்
பாரத மாதாவுக்கு ஜே!
என்கின்ற வெற்றுகோசம்
இல்லாமல் இருந்தது.
பேரா. எ. பாவலன்
[email protected]