Science is enormous - T. V. Venkateshwaran அறிவியல் மகத்தானது ! - த. வி. வெங்கடேஸ்வரன்

அறிவியல் மகத்தானது ! – த. வி. வெங்கடேஸ்வரன்




இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அமுதப் பெருவிழா – இந்திய அறிவியல் தொழில் நுட்பத் துறையின் சாதனைகள் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆவது அமுதப் பெருவிழாவை கொண்டாடி வரும் இந்த வேளையில், மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இம்மாதம் 22 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை, ஒரு வாரகாலம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மிகச்சிறப்பான ஒரு அறிவியல் திருவிழாவை நடத்துவதற்கு தயாராகி வருகிறோம். பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. சர். சி. வி. ராமன் தன்னுடைய புகழ்மிக்க ‘ராமன் விளைவு’ குறித்து 1928ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி உலகிற்கு அறிவித்த நாள். அவரின் இந்த கண்டுபிடிப்புக்கு 1930-ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நாளில் சிறப்பான நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அறிவியல் மகத்தானது என்ற கருத்தாக்கத்தின் கீழ் அறிவியல் தகவல் தொடர்பு பரப்புரை மற்றும் விரிவாக்கம் என்ற அடிப்படையில் இந்த திருவிழாவை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சாதனைகள் பெரும்பான்மையான மக்களை சென்றடையும் விதத்தில் கண்காட்சிகள் நடத்தப்படும். அறிவியல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த 25 ஆண்டுகளில் எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்பட உள்ளன என்பது குறித்த விவரங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறும். நவீன இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சாதனைகள், கண்டுபிடிப்புகள், புதுமைகள் குறித்த முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.

அறிவியல் இலக்கியம் சார்ந்த நிகழ்வுக்கும், பாடல், புத்தக வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவில் மற்றும் உள்ளூர் அளவில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இந்த ஒரு வார கால நிகழ்வு என்பது இந்தியாவில் உள்ள 75 இடங்களில் நடைபெற இருக்கிறது. இந்த கொண்டாடங்கள் ஒரு வாரம் மட்டுமல்லாது தொடர்ந்தும் நடைபெறும்.

அறிவியல் தொழில்நுட்பத்தை இந்திய மொழிகளில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தமிழ்நாட்டில் அறிவியல் பலகை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு பல்வேறு அறிவியல் பரப்புரைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது.

இந்திய மொழிகளில் பரவலான பிரிச்சாரத்தை கொண்டு செல்வதன் காரணமாக அறிவியல் தொழில்நுட்பம் குறித்த புரிதல்கள் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறோம். 75 என்ற இந்த முக்கியமான ஆண்டை நினைவு கூறும் விதத்தில் 75 இடங்கள், 75 அறிவியல் திரைப்படங்கள், 75 போஸ்டர்கள், 75 புத்தகங்கள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடைபெற உள்ளன

தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சிகளை, தமிழக அரசின், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஒருங்கிணைத்து நடத்துகிறது. இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு,பல்வேறு அமைப்புகள் கல்வி நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அறிவியல் பலகை அமைப்பும் இந்த முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு செயலாற்றி வருகிறது.

தமிழ்நாட்டில், சென்னை, திருச்சி,மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில்
இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன

இது குறித்த மேலும் தகவல்களை https://vigyanpujyate.in/ என்ற இணைய தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சி குறித்த வேறு எதேனும் தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் எனில் தொடர்புகொள்ளவும் திரு. பா.ஸ்ரீகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர், அறிவியல் பலகை.(9677297733).

Kuzhandhaimaiyai Nerunguvom Book By Vizhiyan Bookreview By K. Thamizhselvan நூல் அறிமுகம்: விழியனின் குழந்தைமையை நெருங்குவோம் (கொரோனா கால குழந்தை வளர்பு கட்டுரைகள்) - கு.செந்தமிழ் செல்வன்

நூல் அறிமுகம்: விழியனின் குழந்தைமையை நெருங்குவோம் (கொரோனா கால குழந்தை வளர்பு கட்டுரைகள்) – கு.செந்தமிழ் செல்வன்




நூல்: குழந்தைமையை நெருங்குவோம் (கொரோனா கால குழந்தை வளர்பு கட்டுரைகள்)
ஆசிரியர்: விழியன் 
வெளியீடு :  Books for Children
விலை: ரூ 45
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

“கொரோனா காலம்” தந்த தழும்புகளைத் தடவிப் பார்த்தும் விம்மிக் கொண்டும்தான் நாட்கள் நகர்கிறது

அதன் விளைவுகள் ஏராளம். பலரின் வாழ்க்கைகள் பின்னோக்கித் தள்ளியுள்ளது.. எதில் அதிகப் பின்னடைவு ?

வாழ்வாதரத்திலா, ? உடல் ஆரோக்கியத்திலா?, பொருளாதாரத்திலா, குழந்தைகளின் கல்வியிலா ?, கலாச்சாரத்திலா?

நிச்சயமாக ஈடு செய்ய இயலாத விளைவுகள் அனைத்திலும்தான்.

ஆனாலும்,, வளரும் குழந்தகளுக்கான இழப்பு பன்முகத்தன்மைக் கொண்டது. அதனை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை என்றே சொல்லலாம். கற்றதையும் மறந்த கல்விச்சூழல் ஒன்றே  நம்மைப் பதற வைக்கிறது..

குழந்தைகளின் இரண்டாண்டு வீடுகளில் முடக்கம் பெற்றோர்களுக்கு மிகப் பெறும் சவாலாக அமைந்தது. இது ஒரு சவாலாக ஏற்றவர்களுக்குத்தான் சவால்..

சவாலை ஏற்ற பெற்றோர்களை  உற்சாகமூட்டி ஓட வைக்கும் புத்தகம்தான் விழியனின் “குழந்தைமையை நெருங்குவோம்”

தனது சொந்த அனுபவத்தினை குழைத்து  ஒரு எழுத்தளராகவும் வரைந்துள்ளதால் இந்தப் புத்தகத்தில் உயிரும் இருக்கிறது. உன்னதமும் இருக்கிறது.

எவ்வளவு செலவானாலும் பீஸ் கட்டி பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டால் தனது கடமை முடிந்தது என கருதிய பெற்றோர்களுக்கு வீட்டிலேயே குழந்தைகளுடன் இருந்தது பல புதிய அனுபவங்களைத் தந்தது. குழந்தகளுடன் நெருங்கி உறவாடவும் உரையாடவும் வாய்ப்பளித்தது .

ஒரு நல்ல ஆசிரியராகவும் அவதாரம் எடுக்க வேண்டியதாயிற்று.. இது எப்போதும்    பெற்றோராக செய்ய வேண்டிய கடமைதான். ஆனாலும், கொரானா கால வீட்டடங்கு சூழல் அவர்களுக்கு தெளிவுபடுத்தியது. நிர்பந்தப்படுத்தியது.

“உங்கள் குழந்தை சரியில்லை என நினைத்தால் உங்களை சரி செய்ய  வேண்டியிருக்கிறது என்று பொருள்:” பெலூன்ஸ்கி.

அத்தகைய பெற்றோர்களுக்கான வழிகாட்டி புத்தகமாக  “ குழந்தமையை நெருங்குவோம்” வந்துள்ளது. கொரோனா முடிந்தாலும் தொடர்ந்தாலும் குழந்தை வளர்ப்புக்கான இந்தப் புரிதல்கள் அவசியம்.

  • நவீன உலகில் தொலைகாட்சி, மடி கணினி,  கைபேசி இவைகளை குழந்தைகள் தொடலாமா கூடாதா?  வீட்டடங்கில் குழந்தைகள் இவைகளைத் தொடாமல் எப்படி நகரும் நாட்கள்?. எப்படி நடைபெறும் ஆன் லைன் வகுப்புக்கள்? “தொலைக்காட்சி கார்ட்டூன்களுக்குள் சென்று நுழைந்து விட்டால் அது அவர்களை இழுத்துச் சாப்பிடும். அவ்வளவு திறமையான வஸ்துக்கள் உள்ளே இருக்கிறது”என்கிறார் விழியன். சரி, அதற்காகத் தொலைக்க்காட்சியை நிராகரித்துவிட முடியுமா? புதிய தொழில் நுட்பத்தை ஓரம் கட்டிவிட முடியுமா? இந்தக் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
  • கதை சொல்வது இயல்பாக நடைபெற்ற நாட்கள் உண்டு. ஏராளமான் கதைகள் செவி வழியாகத்தான் கடத்தப் பட்டு வந்துள்ளன. . “கதைகளைக் கேட்க இயல்பாகவே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. அந்த மகிழ்ச்சி கொடுக்கும் குரல் இயல்பாக நெருக்கமாகிறது. நமது வேகமான வாழ்க்கைச் சுழற்சியினை இலகுவாக்கும்.” “கதையின் குரலில்” இதனை கேட்கலாம்.
  • “குடும்ப சபை நடத்துவோம்” எனவும் அழைக்கிறார். திட்டமிடவும் விவரங்களுடன் யோசிக்கவும் இந்த குடும்ப சபை தனக்கு உதவியதை பதிவிடுகிறார், “குழந்தைகளும் பெற்றோர் மீது விமரிசனம் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும் ஒரு வகையில் ஜனநாயக நாட்டில் பிரஜைகளை உருவாக்கும் முயற்சி இவை” என்கிறார்
  • “மென் தருணங்கள் மலரச் செய்வோம்” என்ற கட்டுரையில் குழந்தைகளோடு சேர்ந்து ரசிக்கும் இன்ப சூழலைத் தேடுங்கள் என்கிறார். அதுதான் நம்மை குழந்தைகளிடம் நெருங்கி அழைத்துச் செல்லும். எந்தச் சூழலையும் மகிழ்ச்சியான தருணங்களாக மாற்றும்.

“இன்றைய அவசர உலகிற்கு அவசியம் தேவை மனிதத் தருணங்களே ;  என்ற ஹாலோ வெல் வார்த்தகைகள் நினைவு கூறத்தக்கது

  • நிறைய உரையாடவும் வேண்டும் பெரிய காதும் வேண்டும் என்பதும் முரண்பட்டவைகளா? உரையாடல் என்பது அடுத்தவர்களின் நிலையினை அறிந்து கொள்ள பயன்படுத்தும் அற்புதமான ஆயுதம். குழந்தகளைப் பேச வைத்து அவர்களது பார்வையில் உருவாகும் உலகை நாம் தரிசிக்க அவசியம் பொறுமையும் காதும் தேவை. நாம் சொல்வதை கேட்பார்கள் என்ற நிலையிருந்தால் பாலியல் சீண்டல்களைக்கூட பெற்றோர்களிடம் பகிர்வார்கள்.
  • 48 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை ஒரே அமர்வில் படித்து விடலாம். ஆனால், தேவை இந்த புத்தகம் முன் வைக்கும்  கருத்துகள்  மீது விவாதமும் தெளிவும். இதனை குடும்ப மாக வாசித்து விவாதிக்க வேண்டும். அதுவே குடும்ப சபையின் முதல் அமர்வாக இருக்கலாம்.
  • குழந்தைகளை முதலில் நெருங்குவோம். குழந்தமையைப் பற்றிய நமது புரிதல்களை சரி செய்து கொள்வோம்.ஒவ்வொரு பெற்றோர்களின் அனுபவங்களும் ஒரு புத்தகமே.
  • அதற்கான வழிமுறைகளையும் கைகொள்ளும் ஆயுதங்கள்தான் இந்தப் புத்தகம் விவாதிக்கிறது..
  • குழந்தைகளை நெருங்குவதே  குழந்தைமையை நெருங்க வழி.

கு.செந்தமிழ் செல்வன், மாநிலச் செயற்குழு தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

Kalasakkara Payanam ShortStory By Shanthi Saravanan காலச் சக்கர பயணம் சிறுகதை - சாந்தி சரவணன்

காலச் சக்கர பயணம் சிறுகதை – சாந்தி சரவணன்




உலகமே ஊரடங்கில் முடங்கிக் கிடக்கிறது. இருட்டி கிடக்கும் வானத்தில் மின்னல் அடிப்பது  போல் ஊரடங்கு விலக்கு  சில நேரங்களில் அளிக்கப்படுகிறது  பல நாட்களாக வெறிச்சோடிப் போய் இருந்த சாலைகள்  ஒரு மனிதனை  கண்டாலும் மகிழ்ச்சி  வெள்ளத்தில் தத்தளிக்கின்றன சாலைகள் மட்டுமல்ல இன்று நடைப்பயணம் மேற்கொண்ட எழிலிசை மன நிலையும் அவ்வாறே இருந்தது பல நாட்கள் கழித்து வெளி உலகத்திற்கு நடை பயிற்சிக்கு  வந்தவள் சாலையில் ஏதோ ஒன்று தன் நடைபாதையில் மின்னிய  வண்ணம் கிடந்தது. அதன் அருகே சென்று பார்த்தாள்.  ஆம் காலச் சக்கரம்  கருவி (Time travel machine) அவள் அந்த கருவியைப் பற்றி ஏற்கனவே புத்தகத்தில் படித்து இருக்கிறாள்.

இந்த காலத்தில் இப்படி ஒரு வாய்ப்பா இது ஏன் எனது கண்களில் பட்டது என வியந்த படி அக்கருவியை  தன் அறைக்குள் கொண்டு வந்து பத்திரமாக பூட்டி வைத்தாள்.  அதிசிய கண்டுபிடிப்பு இப்போது தன்னிடம்.  ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி. 

மாலை அலுவலகம் முடிந்து வந்தவுடன் அதனை எடுத்து ஆராய்ச்சி செய்து கொள்ளலாம் என முடிவு செய்து அவசரமாக அலுவலகத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டு கிளம்பினாள்.

அம்மா அம்மா டைம் ஆகுது.  டிப்பன் ரெடியா மா?   என கேட்ட வண்ணம் எழிலிசை பூஜை அறைக்குள் சென்று எல்லா சாமிகளுக்கும் ஒரு வணக்கம் வைத்து விட்டு ஹாலுக்கு வந்தாள். 

அப்பா இராமானுஜம் இந்து நாளிதழ் படித்து கொண்டு இருந்தார். ஓய்வு பெற்ற அறிவியல் ஆசிரியர்.  அவர்கள் குடியிருக்கும் திருப்பத்தூரில் அரசு பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றார்.  ஒரே மகள்.

அப்பா குட் மார்னிங்…. “

*குட் மார்னிங் எழில்கிளம்பிட்டியா மா... ஆபிஸ் வேலை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்குமா.……. “

*ஒகே பா... “

ஆன்லைன் வேலை செய்ய பழகி விட்டதால் சற்று கடினமாக உள்ளது.ஆனால் பழகி விடும்.. “

அம்மாஅம்மா.டைம் ஆகுது…. மா”

இதோ வந்துட்டேன் மா.…. என அம்மா சரஸ்வதி  ஒரு கையில் தோசை தட்டோடு மறு கையில் டிபன் பாக்ஸோடு வந்தார்.. “

அம்மா  தோசை வேண்டாமா.சாப்பாடு  மட்டும் தானே கட்ட  சொன்னேன் என செல்லமாக

என் செல்லம் இல்ல... இந்த இரண்டு வாய் வாங்கிட்டு போ... அம்மா ஊட்டி விடுகிறேன் என்றாள்.

அந்த அன்பு கட்டளையை மீறி அவளால் செல்ல இயலவில்லை... “

சரி.. என  தோசையை  சாப்பிட.அம்மா தேங்காய் சட்னி சூப்பர்... “

இராமானுசர் உடனே  உங்க அம்மா எப்போதும் சூப்பர் தான்.…. என்று சொல்ல.

போதும் போதும் இரண்டு பேரும் சேர்ந்து கொண்டால் அவ்வளவு தான்.என்றார் வெட்கத்தோடே.. 

சரி சரி கிளம்பு.  பார்த்து பத்திரமாக போய் வா... என அப்பாவும் அம்மாவும் வாசல் வரை வந்து மகளை வழி அனுப்பி வைத்தனர்..

 அன்று முழுவதும் எனோ  அவளுக்கு  அலுவலகத்தில் நாட்டமே இல்லை கூகுள் சர்ச் முன்னே அமர்ந்து ராஜராஜசோழன் ஆட்சி ஆண்டு எந்த வருடம் தஞ்சை பெரியகோயில் கட்டிட அமைப்பு எப்போது தொடங்கியது என அனைத்து தகவல்களையும் குறிப்பு எடுத்துக்கொண்டு அலுவலகத்தில் அரை நாள் விடுப்பு சொல்லிவிட்டு வேகமாக தன் வீட்டை அடைந்தாள். 

கணினியில் எப்படி அந்த கால சக்கரத்தை பயன்படுத்துவது என முழுமையாக பார்த்து தெரிந்து கொண்டாள்.   

அவள் விரும்பிய வண்ணம் இராஜ இராஜ சோழன் காலத்திற்கு பயணிக்க  கருவியின் இயக்கத்தில் பதிவு செய்து பயணிக்க தொடங்கினாள்

ஏதும் அறியாமல் சுற்றி முற்றும் பார்த்தவள் திடீரென தஞ்சை பெரிய கோயிலின் வாசலில் அமர்ந்து இருப்பதை கண்டு மகிழ்ந்தார்

2021 ஜனத்தொகை  1020 ஆண்டுகள் பின்நோக்கி இருந்த ஜனத்தொகை ஒரு வேற்றிடத்தை  உணர முடிந்தது.  கருப்பு வெள்ளை புகைப்படத்தில்  பின்புலத்தில்  மட்டுமே கலர் என்பது போல இயற்கை வளங்கள் பச்சைபசலன  கண்னை  பறித்தது

அழகாபுரி  என்பது தஞ்சாவூரின் பெயர். சோழநாட்டின் தலைநகரமாக விளங்கிய ஊரே தஞ்சையாகும் .

தஞ்சைக் கோயில் கல்வெட்டில் இராஜராஜனின் மெய்க் கீர்த்தியை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருந்தன “திருமகள் போல பெருநிலச் செல்வியும் தனக்கே  யுரிமை புண்டமை…… 

 என மெய்கீர்த்தியோடு கோயில் கல்வெட்டு பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தன.”  

எழிலிசை கல்வெட்டு எழுத்துகளை சமீபத்தில் தான் கற்றுக் கொண்டாள்.  தமிழி எழுத்துகள் படிக்க துவங்கினாள்

தஞ்சை மாநகரின் பெரிய கோவிலைக் கட்டிய பெருமை முதலாம் ராஜராஜசோழன் தான்.   எழிலிசை  அங்கு செய்திகளை சேகரித்து கொண்ட வண்ணம் இருந்தாள்.

இக்கோவிலுக்கு மூன்று வாசல்கள் உருவாக்க திட்டம் வரையரைத்து கொண்டு இருந்தார்கள். 

சிற்பங்கள் சிலிர்க்க வைக்கும் வண்ணம் அமைய வேண்டும் என இராஜ இராஜ சோழன் கட்டளையிட்டு கொண்டு இருந்தார். 

செய்திகளில் வரலாற்று ஆவணங்களில் பார்க்கும் அரசனை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி செயலற்று நிற்கிறாள் எழிலிசை. மேலும் அவர் கட்டளை பிரபித்து கொண்டே இருந்தார். 

108 வித நாட்டியக் கலை உள்ளது  என குறிப்புள்ளது. அவற்றை எல்லாம் செதுக்க வேண்டும் என சிற்பிகளுக்கு அமைச்சர்கள் வாயிலாக கட்டளை இடப்பட்டது

கோபுரத்தின் மேல் தங்கத் தகடுகளைப் போர்த்தி கட்டமைக்கவும் உத்தரவு பிறபித்தான் சிற்ப கலை மட்டுமே அன்றி ஒவியம் கலையிலும் சிறந்து விளங்க வேண்டும் என கட்டளைகள் பரந்த வண்ணம் இருந்தது.

திட்டமிடலில் சிறந்து விளங்கினான் இராஜ இராஜ சோழன். வருமானத்தில் கோவிலுக்கு செலவு போக எஞ்சிய பணத்தில் ஒரு பகுதி கல்விக்காகவும், ஒரு பகுதி மருத்துவத்திற்காகவும்  கட்டளைகள் இயற்றப்பட்டது. 

எழிலிசை  இந்த திட்டம் நமது திட்டம் தானா? இன்று ஆஸ்திரேலியாவை பார்த்து நாம் இந்த திட்டத்தை கண்டு வியக்கிறோம். ஆனால் 1012 ஆண்டுகளுக்கு முன்பே இராஜ இராஜ சோழன் கடைப்பிடித்த  அரசு திட்டம்.   வருங்கால அமைச்சர்கள் தான் அதை மாற்றி இருட்டு அடைப்பு செய்து உள்ளனர் என புரிந்து கொண்டாள் எழிலிசை.

அதுமட்டுமின்றி தனது சமயத்தை தான் அனைவரும் பின்பற்ற வேண்டும் என அவன் கட்டாயப் படுத்தவில்லை.  எல்லா மதத்தினரயும் நேசிக்கும் குணம் கொண்டு இருந்தான்

ஆச்சரியம் தரும் கூடிய செய்தி என்னவென்றால் மழைநீர் சேகரிப்பு திட்டம் அன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தன. 

கோவில் கட்டும் பணியாளருக்கு நீர் மோர் கொடுத்து  கொண்டு இருந்தனர் பெண்கள். 

கல் சக்கரம், அலங்கார கல் ஜன்னல் போன்றவை 1011ஆண்டுக்கு முன்பே  தமிழனின் திறமைகளை உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது

இராஜ இராஜ சோழன் என்ன ஒரு ஆளுமை. இந்த மாபெரும் ஆளுமையின் வழிகாட்டலில் தானே இன்றும் தஞ்சை கோயில் பிரமாண்டமாக நம் கண் முன்னே நிற்கிறது என நினைத்தபடி தஞ்சை கோயிலின் கட்டிட பணிகளை பார்த்த வண்ணம் இருக்க, அவளின் கைபேசி அடிக்க கால சக்கரத்தின் மேல் விழுந்தது.  அதன் காலம்  இன்றைய தேதியில்   பதிவு செய்ய அவள் அவளின் வீட்டில் இருந்தாள்.  

அம்மாவின் கதவு தட்டும் சத்தம், “எழிலிசை…… என்னம்மா செய்ய…. வெளியே  வா.….. காபி சாப்பிட, ”  என அழைத்து கொண்டு இருந்தாள். 

எழிலிசை கால சக்கர இயந்திரத்தை பத்திரமாக உள்ளே வைத்து விட்டு நாளை மீண்டும் பயணத்தை துவங்கலாம் என காபி அருந்த வெளியே வந்தாள்.

Nambikkai ShortStory By Shanthi Saravanan. நம்பிக்கை குறுங்கதை - சாந்தி சரவணன்

நம்பிக்கை குறுங்கதை – சாந்தி சரவணன்




அண்ணாநகர் கோல்டன் ஜூப்ளி, பால்கனியில் மாஸ்க்கோடு ஒரு கையில் காபி மற்றோரு கையில் ‌அன்றைய நாளிதழ் பார்த்துக்கொண்டு இருந்தாள் நித்யா.

நாளிதழின் எந்த பக்கம் திருப்பினாலும் கொரானா செய்திகள் தான் நிரம்பியிருந்தது. நாளிதழ் ஒரு கண்ணும், வெறிச்சோடி போயிருந்த அடுக்கங்களின் வழித்தடத்தை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள். அந்த மயான அமைதியை இனிய ‌மழலையரின் உரையாடல் அவளின் கவனத்தை ஈர்த்தது.

“டேய் சாய் என்னடா செய்ற”, என்று யாழிசை W பிளாக் இரண்டாம் மாடி பால்கனி கம்பிகளின் மேல் நின்றுக்கொண்டு மாம்பழத்தை சுவைத்துக் கொண்டே கேட்க.

“நானும் ‌தம்பியும் கார் விளையாட்டு விளையாடுகிறோம்” என்றான் சாய், ‌ Y பிளாக் பால்கனி கம்பிகளின் மேல் நின்றபடி.

“என்ன காருட?”

“ஹாட்வில்ஸ்” -.

“காட்டு”, என‌ ஆர்வமாக ஜன்னலின் வழியாக கண்களை விரித்து பார்த்தாள் யாழிசை.

சாய் ஒரு கையில் பால்கனி கம்பியை பிடித்துக்கொண்டு ஒரு கையால் ரெட் கலர் காரை கம்பியின் வழியே வெளியே நீட்டி. “தெரியுதா… ரெட் கலர்” என்றான்

பக்கத்தில் அவன் தம்பி ராமுவும் என்னது “ஆரஞ்சுகலர் கார்” என‌ கத்தினான்.

நல்லாயிருக்கு டா

ஸ்கூலுக்கு காரில் போலாமா

ஓ போகலாமே!

ஆனால் இப்போதான் ஸ்கூலே இல்லையே!

சரி கொரோனா லாக் டவுன் போயிடும். அப்போ நம்ம போலாம்

கொரோனா எப்போ போகும்

“சிக்கிரமா போயிடும். காய்ச்சல் வந்த ஒன் வீக்ல போதுயில்ல அது மாதிரி”

“அப்படியா!”

“ஆமாம். அப்போ போலாம், . சரியா.”

“சரிடா”

“ஜன்னல்களில் மழலைகளை சிறை வைத்துவிட்ட இந்த சமூகத்தை என்னவென்று சொல்வது.

ஒய்யாமல் கொரோனா அச்சத்தை விதைத்து கொண்டேயிருக்கும் ஊடகங்கள், நாளிதழ்களை விட நம்பிக்கையுட்டும் இந்த மழலையரின் உரையாடல் ‌கேட்பதே நலம் ‌என நாளிதழை மடித்து வைத்துவிட்டு மழலையின் மொழியை ரசிக்க துவங்கினாள் நித்யா.

சிறுகதை: லாக்டவுன் பண்டிகை – பிரியா ஜெயகாந்த்

சிறுகதை: லாக்டவுன் பண்டிகை – பிரியா ஜெயகாந்த்

இன்று புதன் கிழமை என்பதால் ராமு வழக்கம் போல் மார்க்கெட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார். ராமுவிற்கு அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கியில் வேலை. சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு பின் வீட்டில் இருந்தே பணிபுரிகிறார். வயது…