Posted inPoetry
உணர்வுகள் கவிதை – மீ.யூசுப் ஜாகிர்
சாலையில் கடந்து செல்லும்
போது வழி நெடுகிலும் பார்க்கும்
காட்சிகள் கூட மனதை
தொட்டுப்பார்த்து விடுகிறது..!!!
ஆசையாய் பிள்ளையை இடுப்பில்
சுமந்து உணவூட்டும் தாயின் முகத்தில்
இருக்கும் பாசமும்,பரிவும் தாய்மையை
உணரச்செய்கிறது..!!!
கோபத்தோடு வீட்டுக்காரரை ஏசும்
அம்மாவின் முகத்தில் இருக்கும் கோபம்
பார்ப்பவரின் விழிகளுக்குள்ளும் பரவச்செய்கிறது..!!!
நண்பன் வாங்கிப்பருகும்
குளிர்பான உறிஞ்சியில் சிறிதும்
தயக்கமின்றி வாய் வைத்துப் பருகும்
சக நண்பன் நட்பைத் தூவுகிறான்..!!!
பேருந்து நிறுத்தம் ஒன்றின் அருகே முண்டியடித்துத் பேருந்தில் ஏறும் பயணிகள்
பதற்றத்தைத் தொற்றவைத்து விடுகிறார்கள்..!!!
இப்படியாக ஒவ்வொருவரையும் கடந்து செல்கையில் சில உணர்வுகளையும்
கடந்து வருகிறேன்..!!!
