R.K.நாராயண் - மகாத்மாவுக்காக காத்திருத்தல் (Waiting for the Mahatma)

R.K.நாராயண் எழுதிய “மகாத்மாவுக்காக காத்திருத்தல் (Waiting for the Mahatma)” – நூலறிமுகம்

நூலைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் முன்பாக,நமது தேசத்தந்தை மகாத்மா அவர்கள் குறித்து,எனது புரிதல்,மதிப்பீடு எல்லோரோடும் ஒத்துப்போகக்கூடியது அல்ல.காரணம், குறிப்பிட்ட இரண்டு சமயத்தவர்களை ஒன்றாக வாழ,பழக, தனது வாழ்நாள் முழுமையும் பாடுபட்டார்.அதற்காக தன் இன்னுயிரையும் துறந்தார்.மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால், குறிப்பிட்ட மக்களை மட்டும்…
நூல் வெளியீட்டு விழா: ஜி.ராமகிருஷ்ணனின் ‘மகாத்மா மண்ணில் மத வெறி’ (இந்துவும், இந்துத்துவாவும் வேறு வேறு)

நூல் வெளியீட்டு விழா: ஜி.ராமகிருஷ்ணனின் ‘மகாத்மா மண்ணில் மத வெறி’ (இந்துவும், இந்துத்துவாவும் வேறு வேறு)




நூல் : மகாத்மா மண்ணில் மத வெறி
ஆசிரியர் : ஜி.ராமகிருஷ்ணன்
விலை : ரூ.₹125
வெளியீடு : நக்கீரன்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

இந்துவும், இந்துத்துவாவும் வேறு வேறு

மதுரை, ஜூலை 18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் எழுதிய, மகாத்மா மண்ணில் மத வெறி எனும் நூல் அறிமுக விழா மதுரையில் வடக்குமாசி வீதியில் உள்ள மணியம்மை மழலையர் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புரட்சிக்கவிஞர் மன்றம் சார்பில் நடை பெற்ற விழாவுக்கு மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் தலைமை வகித்தார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் ச.மாரியப்ப முரளி, உலகத்திருக்குறள் பேர வைத் தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன், திருவள்ளுவர் கழகப் பொருளாளர் ப.சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கவிஞர் இரா.ரவி வரவேற்புரையாற்றினார். பைந்தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் வீ.அதிவீரபாண்டியன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் நூல் அறிமுகவுரையாற்றிய தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை பேசினார். அவர் தமது உரையில், “மகாத்மா மண்ணில் மதவெறி” என்ற தலைப்பில் மதுக்கூர் இராமலிங்கம், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பேசினார், என்னைவிட கூடுதலாகப் பேசுவார் கள். தற்போது எனக்கும் அந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. உலகி லேயே பயங்கரமான ஆயுதம் நாக்கு தான் என்பார்கள். இன்றைக்கு அதையும் தாண்டி “கருத்தியல்” முக்கியப் பங்காற்றுகிறது. ஆளும் வர்க்கங்கள் மக்களை பிரிப்பது, இணைப்பது என்பதையே தொடர்ந்து செய்துவருகின்றன. மகாத்மா காந்தி இந்தியா அமைதி, வளத்துடன் இருக்க வேண்டுமென விரும்பினார். இயற்கையைப் பயன்படுத்தி அதனோடு இயைந்து வாழ வேண்டுமென்றார். காந்தியைப் பற்றி அறிந்து கொள்ள ஏராளமான புத்தகங்களை பலர் எழுதியுள்ளனர். விடுதலைப் போராட்டத்தில் பொதுவுடைமை வாதிகளின் பங்களிப்பு குறித்து தோழர் ஜி.இராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். பொதுவுடைமை வாதிகளின் பங்களிப்பை அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். குறிப்பாக, சார்பு நிலை எடுக்காமல், நடுநிலையோடு உண்மையைச் சொல்லியிருக்கிறார் தோழர் ஜி.ராமகிருஷ்ணன். நாட்டிற்கு இன்றைய தேவை கருத்தியல் ரீதியான பிரச்சாரம், வெவ்வேறு மதங்களைச் சேர்த்து ஒன்றிணைப்பது, அறிவியல் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்வது. உண்மையற்ற தன்மையை உண்மையைக் கொண்டு சந்திப்பது ஆகியவைதான். அந்தப் பணியை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டுமென்றார்.

ஜி.ராமகிருஷ்ணன்

இந்தியாவின் இறையாண்மை, மதச்சார் பின்மை, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை வேறுவிதமாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெறுகிறது.  இதற்கெதிராக அனைவரும் ஓரணியில் திரள்வது இன்றையத் தேவை. காந்தியின் மண்ணிலிருந்து மதவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டிய தருணம் இது என்று விழாவில் ஏற்புரை யாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். 75-ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடவுள்ள நிலையில் விடுதலைக்காக போராடிய தலைவர்களின் நோக்கம், அபிலாஷைகள் நிறைவேறியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அவர்களின் கனவு சிதைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் இறையாண்மை, மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம். பொருளாதார சுயச் சார்பு ஆகிய நான்கும் அழிக்கப்படுகிறது. ஒருவர் பிறப்பால் இந்துவாக, முஸ்லி மாக, கிறித்தவர்களாக இருக்கலாம். ஒருவர் ஒரு  மதத்தில் பிறந்துவிட்டார் என்பதற்காக அவர்களிடம் மத உணர்வை ஊட்டுகின்றனர். இந்த மத உணர்வு பலரை மத வெறியர்களாக மாற்றுகிறது. மதத்தின் பெயரால் நிகழும் எந்த வன்முறையையும் நாம் எதிர்க்க வேண்டும். இன்றைக்கு பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இந்து மதத்தில் பிறந்தவர்களை மதவெறியர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

இந்து என்பது ஒருவர் அந்த மதத்தில்  பிறந்ததைக் குறிக்கிறது. ஆனால், இந்துத் துவா என்பது ஒரு அரசியல் திட்டம். இந்துத்துவா மனுநீதி, சனாதனம், மதத்தின் அடிப்படையில் நாடு, ஒரே தேசம், ஒரே மொழி  ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்துவும்-இந்துத்துவாவும் வேறு வேறு. பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இன்றைக்கு இந்துத்துவாவை, சனாத னத்தை கட்டமைக்கின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பு யாருடையது? அவர்கள் என்ன செய்வார்கள்? எப்படிப்பட்டவர்கள் என்பதை 1982-ஆம் ஆண்டு  மண்டைக்காட்டில் நடை பெற்ற கலவரம் உணர்த்தியது. இதில் ஆறு கிறிஸ்தவர்கள் பலியானார்கள். அன்றைக்கு முதல்வராக இருந்த எம்ஜிஆர் நீதியரசர் வேணுகோபால் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார். அந்த ஆணையம் அளித்த அறிக்கை ஆர்எஸ்எஸ் செயல்பாட்டை அம்பலப்படுத்துகிறது.

ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்புகள் கூறுவது போல் “மனுவின்” அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாகியிருந்தால், மதத்தின் அடிப்படையில் நாடு கட்டமைக்கப்பட்டு, மதம் நாட்டை ஆட்சி செய்தால் இந்தியா இன்றைக்கு எப்படி மாறியிருக்கும் என்பதை நினைத்தாலே அச்சமாக உள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர், நாடு மதத்தின் அடிப்படையில் துண்டாடப்பட்டுவிடக் கூடாது என்பதை உணர்ந்து தான், சட்ட உருவாக்கத்தில் “மதச்சார்பின்மை, கூட்டாட்சி” ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியுள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான கோல்வால்கர், “இந்தியாவை மதம் தான் ஆள வேண்டும். அரசியல் இரண்டாவதாகத்தான்” இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

1992-ஆம் ஆண்டு மதுரையில் நடை பெற்ற ஆர்எஸ்எஸ்-விஎச்பி மாநாட்டில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கலந்துகொண்டு, மனுநீதியைத்தான் அரசியல் சட்டமாக்க வேண்டுமென பேசியிருக்கிறார். “கல்வி காவிமயமானால் அதில் என்ன  தவறு” என துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இந்தப் பொறுப்பிற்கு வருவதற்கு முன் பாஜக-வின் தலைவராக பேசினார். அது இன்றைக்கு நடை முறையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராக யாரை நியமிப்பது என்பதை முதல்வர் தான் முடிவு செய்வார், ஆளுநரின் ஒப்புதலுக்காக மட்டுமே கோப்பு அனுப்பப்படும். ஆனால், இப்போது துணைவேந்தர்கள் நியமனத்தை ஆளுநரே செய்கிறார். கல்வி நிலையங்கள் காவிமயமாகிறது. ஆர்எஸ்எஸ் சார்பாளர்கள் அரசின் உயர் பொறுப்புகளில் அமரவைக்கப்படுகின்றனர்.

நாட்டை மதவாதம் என்ற இருள் சூழ்ந்துள்ளது. அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து மதச்சார்பின்மையைப் பாதுகாப்போம். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

நன்றி: தீக்கதிர்
ஜீலை 18, 2022 

நூல் அறிமுகம்: ஜி.ராமகிருஷ்ணனின் ’மகாத்மா மண்ணில் மதவெறி’ (நாம் யார் பக்கம்..?! – தேனி சுந்தர்

நூல் அறிமுகம்: ஜி.ராமகிருஷ்ணனின் ’மகாத்மா மண்ணில் மதவெறி’ (நாம் யார் பக்கம்..?! – தேனி சுந்தர்




தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் நக்கீரன் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்நூல்..

ஜனவரி,30 மகாத்மா காந்தி நினைவு நாள் என்று சாதாரணமாகச் சொல்லி விடலாம். ஆனால் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்.. இந்துத்வ கும்பலின் சதித் திட்டத்தின் படி கோட்சே என்கிற இந்து மத வெறியன் மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற தினம் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

கடந்த ஜனவரி 30 அன்று கோவையில் நடந்த நிகழ்வில் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.. மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பின் போது கோட்சே-வின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு வருகிறது. எங்கிருந்து எதிர்ப்பு வருகிறது என்பது தான் அங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.. நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்துப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகியோர் தான் தடுக்கின்றனர்.. காந்தியைக் கொன்றவன் கோட்சே என்பது இதுவரை யாரும் சொல்லாத தகவலா..? உலகம் அறியாத உண்மையா? நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ஒரு குற்றவாளியின் பெயரை ஏன் சொல்லக் கூடாது..? அந்த குற்றச்சாட்டின் பேரில் நாடு முழுக்க தடைவிதிக்கப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்பதை எத்தனை ஆவணங்களிலிருந்து அழிக்க முடியும்..? திருத்த முடியும்..??

சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்கிற அளவுக்கு மறுக்க முடியாத ஒரு உண்மையைப் பேசுவதற்குக் கூட அனுமதிக்காத ஒரு காவல் துறை அதிகாரி.. அதுவும் தமிழ்நாட்டில்.. அதுவும் தேசிய கட்சியின் தேசிய அளவிலான பொறுப்பில் இருக்கும் ஒருவரை தடுக்கும் அந்த தைரியம் தான் நமக்கு அச்சமூட்டும் ஆச்சர்யம்..! அது தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பலம்..! சூட்சமம்..!!

அந்த சம்பவம் தான் வகுப்புவாத அபாயம் குறித்த தொடரை எழுத வேண்டும் என்கிற உத்வேகத்தை தோழர் ஜி.ஆர். அவர்களுக்கு அளித்திருக்கிறது..

சுதந்திர போராட்டத்திற்கு முன்பும் பின்பும் இந்துத்வ சக்திகள் எப்படி செயல்பட்டனர். தமிழகம் மட்டுமின்றி கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இவர்கள் எவ்வாறு செயல்பட்டனர். மக்கள் மத்தியில் பிரிவினையை, மத வெறி உணர்வைத் தூண்டி எவ்வாறு மோதல்களை அரங்கேற்றுகின்றனர் என்பதையெல்லாம் சொல்லிச் செல்கிறார்..

இந்துத்வா என்பது வேறு, இந்து மதம் என்பது வேறு.. இந்துத்வா என்பது ஒரு அரசியல் செயல்திட்டம்.. இந்த அரசியல் செயல்திட்டத்தை அமலாக்க இந்து மத உணர்வை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர்.. இறை பக்தி உள்ளவர்கள் மதப் பற்று உள்ளவர்களாக மாற்றப்படுவதும் மதப் பற்று உள்ள அப்பாவிகள் மதவெறி ஊட்டப்பட்டு மதக் கலவரங்களில் அடியாட்களாக பயன்படுத்தப்படுவதும் அவர்களின் வகுப்புவாத தந்திரம் என்பதை விளக்குகிறார்..

இந்துத்வா, வகுப்புவாத சிந்தனைகளின் வளர்ச்சி கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே ஆபத்து ஆகும். இந்த ஆபத்து இன்று உருவானதில்லை.. இந்தியாவை இந்து ராஷ்டிரமாக உருவாக்க வேண்டும்.. நால்வருண அமைப்பையும் சாதிய பாகுபாடுகளையும் பெண்களை சக மனுஷியாக மதிக்காமல் இழிவுபடுத்தும் அம்சங்களை உள்ளடக்கிய மனுநீதி தான் நாட்டின் சட்டமாக இருக்க வேண்டும் என்று கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக சொல்லி வருபவர்கள்.. அதை நடைமுறைப்படுத்த அதிகாரம் வேண்டும். அதற்காகவே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.. அதைத் தான் கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொண்டும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறார் தோழர் ஜி.ஆர்.

இந்துத்வா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல. இஸ்லாமிய, கிறித்தவ மத அடிப்படைவாத அமைப்புகளும் ஆபத்தானவை தான் என்று சுட்டிக்காட்டுகிறார்.. சிறுமி என்றும் பாராமல் சுட்டுத் தள்ளப்பட்ட சிறுமி மலாலாவை எடுத்துக் காட்டி சொல்கிறார்.. சூரியன் தான் மையம், பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றன என்கிற உண்மையைச் சொன்னதற்காக கலிலியோவை வீட்டுச் சிறையில் வைத்த, புருனோவை நெருப்பிட்டுக் கொன்ற கிறித்தவ அடிப்படைவாத சம்பவங்களை எடுத்துக் காட்டி சொல்கிறார்..

மதம் வேறு அரசியல் வேறு என்று இருக்க வேண்டும்.. மதம் வேறு அரசு வேறு என்று இருக்க வேண்டும்.. இரண்டும் கலந்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணங்கள் தான் இவை..

ஆர்.எஸ் எஸ். கும்பலின் முன்னோடிகள் சாவர்க்கர், ஹெட்கேவர், முஞ்சே கோல்வால்கர்.. இவர்களின் முன்னோடிகள் ஹிட்லரும் முசோலினியும் தான்..

இனவெறி, மதவெறி தலை தூக்கினால், பரவினால் உலகம் என்னவாகும் என்பதற்கு இவர்களே சாட்சி.. உலகின் பல கோடி மக்களை தங்களின் வெறியால் பலிகொண்ட பாசிச, நாசிச சக்திகளின் வழித் தோன்றல்கள் நம் தேசத்தை என்ன செய்வார்கள்..? என்ன செய்யப் போகிறார்கள் என்ற அச்சம் இந்த நூலை வாசித்த ஒவ்வொருவருக்கும் எழும்..

அதே நேரத்தில் அன்றைய பாசிச சக்திகளுக்கு எதிராக கலை இலக்கிய பண்பாட்டு இயக்கங்கள் எவ்வாறு போராடினார்கள் என்கிற உதாரணங்களை எல்லாம் கூறி நீங்கள் யார் பக்கம் என்று கேட்டு கடைசி அத்தியாயத்தைத் தொடங்குகிறார்..

மதவெறிக்கு மாற்று மத நல்லிணக்கம்.. வெறுப்புக்கு மாற்று அன்பு.. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கே எதிராக ஒரு அபாயம் தலை தூக்கும் போது ஜனநாயகத்தை, சோசலிசத்தை, மதச்சார்பற்ற குடியரசு என்கிற அதன் மாண்பைக் காக்கிற கடமை இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு..

இந்து மத வெறி கொண்ட ஆட்சி என்பதால் இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும் என்று கூட பலர் நினைக்கலாம்.. தொழிலாளர் சட்டங்கள், வேளாண் சட்டங்கள், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வு, புதிய கல்விக் கொள்கை என விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து வித மக்களுக்கும் எதிராகத் தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதையும் பல்வேறு உதாரணங்களுடன் சொல்லி இருக்கிறார்..

வேறு யாருக்காக தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது என்ற கேள்வி எழுவது இயல்பு தான். அதானி, அம்பானி போன்ற பெரும் கார்பரேட்டுகளின் நலன் ஒன்றையே பிரதானமாக கொண்டு செயல்படுகிறது. கொரனா பெருந்தொற்று காலத்தில் கூட மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் விதமாக ஒன்றும் செய்யாமல் பெரு முதலாளிகளுக்குச் சாதகமாகவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.. விளைவாக உலகப் பணக் காரர்கள் வரிசையில் பிரதமரின் கூட்டாளிகள் வேகவேகமாக முன்னேறி வருகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்..

இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்கிற பன்முக கலாச்சாரத்தைப் பாதுகாக்கிற, மக்கள் மத்தியில் ஒற்றுமையை, அறிவியல் மனப்பான்மையை உருவாக்குகிற பக்கமா? இல்லை அதற்கு எதிர்ப் பக்கமா? எந்தப் பக்கத்தில் நிற்கப் போகிறோம் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்..

இன்றைய சூழலில் மிக மிக அவசியம் வாசிக்க வேண்டிய நூலாக, நக்கீரன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது மகாத்மா மண்ணில் மதவெறி..!
– தேனி சுந்தர்

நூல் : மகாத்மா மண்ணில் மதவெறி
ஆசிரியர் : ஜி.ராமகிருஷ்ணன்
விலை : ரூ: ₹125
வெளியீடு : நக்கீரன்

தொடர்புக்கு : 044 – 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com

நூல் வெளியீடு : மகாத்மா மண்ணில் மதவெறி – ஜி‌.ராமகிருஷ்ணன்

நூல் வெளியீடு : மகாத்மா மண்ணில் மதவெறி – ஜி‌.ராமகிருஷ்ணன்





மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி‌. ராமகிருஷ்ணன் எழுதி நக்கீரன் பதிப்பகம் பதிப்பித்துள்ள ‘மகாத்மா மண்ணில் மதவெறி‘ நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று (ஜூலை 1) தி.நகரில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நூலை வெளியிட தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பெற்றுக் கொண்டார். உடன் ஜி.ராமகிருஷ்ணன், நக்கீரன் கோபால், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், வாலிபர் சங்க நிர்வாகிகள் எம்.ஆர்.சுரேஷ், ஜானகி ஆகியோர் உடன் உள்ளனர்.

நூல் : மகாத்மா மண்ணில் மதவெறி

ஆசிரியர் : ஜி‌.ராமகிருஷ்ணன்
விலை : ரூ. 125.
வெளியீடு : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com

நன்றி : தீக்கதிர்

Dr. அம்பேத்கர் தலித்துகளுக்கான தலைவரா….? கட்டுரை – கவிஞர் ச.சக்தி

Dr. அம்பேத்கர் தலித்துகளுக்கான தலைவரா….? கட்டுரை – கவிஞர் ச.சக்தி




அம்பேத்கர் தலித் அல்லாதவராக மட்டும் பிறந்திருந்தால் கார்ல் மார்க்ஸ்க்கு இணையாக இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு இருப்பார். மனசாட்சியற்ற இந்திய சமூகத்தில் தலித்தாக பிறந்த ஒரே காரணத்தினாலே இன்றும் தீண்டப்படாத தலைவராக நீடிக்கிறார். உயிர்களை கொல்லும் போது மட்டுமல்ல, உன்னதமான மனிதர்களை வரலாறு வஞ்சிக்கும் போதும் என் இருதயத்திலிருந்து ரத்தம் வழிகிறது!” என கண்களில் வழிந்த விழிநீரை துடைத்து கொண்டே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார் முன்னாள் சுப்ரிம் கோர்ட் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்.

வரலாறை வன்மம் இல்லாமல் மனசாட்சியோடு வாசித்த 100 வயதை நெருங்கும் கிழட்டு வாசகனின் ‘நீதி மொழிகள்’ சமூகத்தின் பொட்டில் அறைகின்றன.

நீங்கள்.. பாடசாலையில் கோணிப் பையில் தனியாக அமர வைக்கப்பட்டிருக்கிறீர்களா? ஆடு மாடுகள் குடிக்கும் குளத்தில் தாகத்திற்காக தண்ணீர் குடித்த போது துரத்தியடிக்கப் பட்டிருக்கிறீர்களா? ரோட்டோர வீட்டில் மழைக்கு ஒதுங்கியதற்காய் உதைத்து தள்ளப்பட்டிருக்கிறீர்களா? என்றைக்காவது அரைகுறையாய் முடி வெட்டிய தலையோடு விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறீர்களா? தலித் என்பதற்காகவே நீங்கள் பயணம் செய்த‌ வண்டிகள் கவிழ்க்கப்பட்டு இருக்கின்றனவா? அமெரிக்காவில் டாக்டர் பட்டம் வாங்கி வந்து ஆபிஸர் ஆன‌ பிறகும் உங்களுடைய‌ வேலையாளே உங்கள் மீது தீண்டாமை பாய்ச்சி இருக்கிறானா? மலத்தை வாயில் திணிக்கப்பட்ட மக்களுக்காக நீதிக் கேட்டு ‘துராத்மா’க்களால் ஒரு முறையாவது நீங்கள் அவமதிக்கப்பட்டு இருக்கிறீர்களா..? ”இல்லை” என்றால் நிச்சயமாக, உங்களுக்கு அம்பேத்கரின் அருமை தெரியாது!

அன்றைக்கு தொட்டால் தீட்டு, பட்டால் தீட்டு என பழித்துரைக்கப்பட்ட அம்பேத்கர் தான் இன்று உலகமே உச்சி முகரும் இந்திய அரசிலமைப்பு சட்டத்தை தீட்டு தீட்டுவென தீட்டியவர். அந்த தீண்ட தகாதவனின் வியர்வை சிந்திய‌ அரசியலமைப்பு சட்டத்தை தீண்டாமல் இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் என எந்த அதிகார மையத்தாலும் ஒரு நொடிக் கூட செயல்பட முடியாது. அடுத்த வல்லரசு ‘இந்தியா’ தான் என பீற்றி திரியும் சூரப்புலிகளுக்கு,’இந்தியாவின் பொருளாதாரத்தை தீமானிக்கும் ‘ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா’ யாருடைய உழைப்பால் உருவானதென எப்படி தெரியும்? தேசிய கொடி உருவாக்கத்தின் போது மூவண்ண கொடிக்கு மத்தியில் நயவஞ்சகமாக யோசித்த காந்தி, காங்கிரசின் சின்னமான ‘ராட்டையையும்’,சவார்க்கர் இந்துக்களின் அடையாளமான ‘ஓம்’ முத்திரையும் தான் போட வேண்டும் என அடம்பிடித்த போது ‘அனைவரும் சமம்’ என பறைச்சாற்றும் ‘அசோக சக்கரத்தை’ தான் போட வேண்டும் என வலியுறுத்திய அம்பேத்கரை, இன்றைக்கு தேசிய கொடியை சட்டையில் குத்தி கொண்டு திரியும் ‘ஜெய்ஹிந்த்’களுக்கு எப்படி தெரியும்? வேண்டுமானால் ‘அவனின்றி அணுவும் அசையாது’ என்ற சொல்லாடல் பொய்யாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் ‘அம்பேத்கர் இன்றி அணுவும் அசையாது’என்பதே பேருண்மை!

அரசியல்,பொருளாதாரம், சமூகம், சட்டம், வணிகம், வரலாறு, தத்துவம், கல்வி, மொழியியல், இதழியல், சமயம் என அனைத்து துறைகளிலும் கற்றறிந்த ஒரே மேதை இந்தியாவிலே அம்பேத்கர் மட்டுமே. ஆனால் அவரை பற்றி உப்பு சப்பில்லாமல் அரைப்பக்கத்திலே கடந்து போகிறது நமது பாடத்திட்டம்.’வர்க்க பேதத்திற்கு எதிராக அறிவாயுதம் ஏந்திய மார்க்ஸ், லெனினினுக்கு அடுத்து லண்டன் மியூஸிய நூலகத்தை முழுமையாக கரைத்து குடித்தவர் பிறவி இழிவான சாதிய வர்க்கத்திற்கு எதிராக போராடிய‌ அம்பேத்கர் மட்டுமே. ஆனால் அவர் எழுதிய பல கட்டுரை தொகுதிகளை மறைத்து வைத்து இன்னமும் பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கிறது இந்தியா.”ஏறத்தாழ 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழே. ஆதலால் இந்தியை விட தமிழுக்கே இந்தியாவின் தேசிய மொழியாகும் எல்லா அருகதையும் இருக்கிறது”என எந்த பச்சை தமிழனும் பேசாததை, உரத்த குரலில் பாராளுமன்றத்தில் வெடித்த‌ அம்பேத்கரின் சிலைக்கு செருப்பு மாலை போடாத கிராமங்களே தமிழகத்தில் இல்லை.”நாய்களை விடவும், பன்றி விடவும் கேவலமாக எம்மக்களை நடத்தும் இந்து மதத்தையும், இந்த நாட்டையும் எப்படி எங்களின் சொந்த மதமாகவும், சொந்த நாடாகவும் கருத முடியும்?”என காந்திக்கு எதிராக வீசப்பட்ட அம்பேத்கரின் முதல் கேள்விக்கு இதுவரை எந்த மகாத்மாவும் பதிலும் சொல்லவே இல்லை. தீண்டாமையை, சாதியை ஒழிக்க முற்பட‌வில்லை. இந்திய திருநாடு என ஜால்ரா அடிப்பதையும் நிறுத்தவில்லை!

”இந்தியாவில் காலந்தோறும் மகாத்மாக்கள் வந்தார்கள். மகாத்மாக்கள் மறைந்தார்கள். ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்”என லண்டன் வட்டமேஜை மாநாட்டில் மகாத்மாக்களை அம்பேத்கர் வறுத்தெடுத்த‌ போது, மிஸ். ஸ்லேடுடன் கடலை போட்டுக்கொண்டிருந்த காந்தி ‘மகாத்மா’வானார். ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் துடித்த அம்பேத்கருக்கு ‘துரோகி, ஆங்கிலேயனின் கைக்கூலி, மகர் நாய்’ என்ற பட்டங்களை பம்பாயில் வழங்கி, உருவ பொம்மையையும் கொளுத்தியது காந்தியின் ஹரிஜன சேவா சங்கம். ஒரு கட்டத்தில் தேசிய அரசியலில் அம்பேத்கரின் வளர்ச்சியை தாங்க முடியாமல் அம்பேத்கர் ‘தலித்தே’ இல்லை என தலித்துகளின் வாயாலே சொல்ல வைத்தது காந்தியின் காங்கிரஸ்.’அப்படியென்றால் எங்களை ஹரிஜன சேவா சங்கத்தில் சேர்த்து கொள்ளுங்கள்’என ஹரிஜன மக்கள் கேட்ட போது,’ நாங்கள் ஹரிஜன மக்களுக்காக போராடுவோம். அவர்களை உறுப்பினர்களாக எல்லாம் சேர்த்து கொள்ள மாட்டோம்’என உடனே பல்டியடித்தார் தேசபிதா. இது தான் உண்மையிலே சத்திய சோதனை! கலங்கமற்ற கடவுளாக வலம் வரும் காந்தியின் முகத்திரையை கிழிக்க வேண்டும். இல்லையென்றால் ஆயிரமாயிர ஆண்டுகளாக தொடரும் தலித்துகளின் புலம்பல், பழங்குடிகளின் விசும்பல், காஷ்மீரிகளின் ஓயாத செந்நீர், வடகிழக்கு பெண்களின் வற்றாத கண்ணீர், தெலங்கானாவில் நொறுக்கப்படும் எலும்புகள் ஈழத்தில் அறுக்கப்படும் தாலிகள் எல்லாம் என்றென்றும் ஜன்பத் மகாத்மாக்களால் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு கொண்டே இருக்கும்.

‘கார்ல் மார்க்ஸை வர்க்கத் தலைவர்’ என்றும் ‘அம்பேத்கரை சாதீய தலைவர்’ என குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முயல்பவன் உலகிலே பெரிய முட்டாள். ஏனென்றால் சாதிய தலைவர் என்றால் அவர் சாதிக்காக மட்டுமே அறிவாளை தூக்கி கொண்டு போராடுபவர். ஆனால் அம்பேத்கர் அவர் பிறந்த‌ ‘மகர்’ சாதிக்காகவோ அல்லது மராட்டியருக்காவோ மட்டும் போராடாமல் இந்தியா மற்றும் உலகம் முழுக்க பரந்து வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட‌ சாதியால் ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காக அறிவாயுதம் ஏந்தினார். தந்தை பெரியார் தலைவர் என்றழைத்த ஒரே புரட்சியாளரான அம்பேத்கரை ‘சாதீய தலைவர்’ என சொல்வதும் சாவான பாவமாகும்., அம்பேத்கர் தலித் லீடர் என சொல்லும் காவி கோஷ்டிகளின் முகத்தில் நாளைய வரலாறு காறி உமிழப் போகும் வார்த்தை… ”போடா ஃபூல்!”

கவிஞர் ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,