மலாலா கரும்பலைகை யுத்தம் - Thamizhbooks.com

ஆயிஷா இரா நடராசன் எழுதிய “மலாலா கரும்பலகை யுத்தம்” – நூலறிமுகம்

மலாலா கரும்பலகை யுத்தம் மலாலா என்ற பெண்ணை நான் எப்படி அறிமுகம் செய்வது. அவள் ஒரு மாணவி என்று அறிமுகம் செய்வதா? அல்லது கல்விக்காக போராடிய, அமைதிக்காக போராடிய ஒரு போராளி என்று அறிமுகம் செய்வதா? எனக்கு குழப்பமாக உள்ளது. ஆம்…
Malala Karumbalakai Yutham (மலாலா கரும்பலகை யுத்தம்) | Malala Yusuf Sai

ஆயிஷா இரா. நடராசனின் “மலாலா கரும்பலகை யுத்தம்” – நூல் அறிமுகம்

*"பெண் கல்வியைத் தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை"* *ஒரு மாணவி* *ஒரு ஆசிரியை* *ஒரு கரும்பலகை* *ஒரு எழுது கோள்* *உலகையே மாற்றும் சக்தி கொண்டது.* 12 வயது சிறுமியான மலாலா, குல் மக்காய் என்று தனது பெயரை மாற்றிக்…
மலாலா ஆயுத எழுத்து Malala Ayudha Ezhuthu Malala Yousafzai (மலாலா யூசப்சையி)

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “மலாலா ஆயுத எழுத்து” – இராஜதிலகம் பாலாஜி

      📖இந்நூலில் மொத்தம் 15 தலைப்புகளில் மலாலாவைக் குறித்த பல ஆச்சரியமூட்டும் தகவல்களை பகிர்ந்திருக்கிறார் ஆசிரியர். 📖முதல் கட்டுரையே அடுத்தடுத்து மலாலாவைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று நம்மை உந்தி தள்ளுகிறது. 📖தாலிபன்களுக்கு எதிராக குரல் கொடுத்து,…
நூல் அறிமுகம்: ஆயிஷா இரா.நடராசனின் மலாலா கரும்பலகை யுத்தம் – சங்கர் மனோகரன்

நூல் அறிமுகம்: ஆயிஷா இரா.நடராசனின் மலாலா கரும்பலகை யுத்தம் – சங்கர் மனோகரன்




நூல் : மலாலா கரும்பலகை யுத்தம்
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசனின்
விலை : ரூ.₹ 50/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

எனக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை என்று போராடி இன்று கல்வியில் முன்னிலை வகிப்பது பெண்கள் தான். மறுக்கப்பட்ட உரிமையின் தவிப்பு இவர்களின் இத்தகைய வெற்றியின் பின்புலம். அவ்வகையில் பெண்களின் கல்விக்காக போராடியவர்கள் பலர். இவர்களில் மலாலா என்ற பெயர் வெறும் பெயராகவே கடந்து விடாமல் அதன் பின் இருக்கும் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நானும் இதுவரை மலாலா என்றால் ஒரு பாகிஸ்தானிய பெண்களின் கல்விக்காக போராடிய பெண்; நோபல் பரிசு பெற்ற பெண் என்ற பொது அறிவு தகவல்களை மட்டுமே சுமந்து கொண்டு இருந்தேன். இந்நூலை படித்த பிறகு தான் இவரின் பெயரின் பின்னால் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான போராட்டங்களும் கல்விக்காக இயங்கும் பெண்ணின் தவிப்பும் தெரிந்தது.

ஆசிரியர் இங்கு மலாலாவின் கதையை மட்டும் சொல்லவில்லை. பெயரின் கூடவே கரும்பலகை யுத்தம் என்று சொல்லை சேர்த்துள்ளார். அவர் நடத்திய கல்விக்கான யுத்தத்தை பல்வேறு வரலாறுகளுக்கு இடையே இணைத்துக் கூறி வருகிறார். இவரின் போராட்டம் எப்படி தொடங்குகிறது, அந்த போராட்டத்திற்கு யார் காரணம், பாகிஸ்தான் எப்படி என்ற குறிப்புகளை தெளிவாக விளக்கியுள்ளார். அத்தனையும் படிக்கும் போது சிறு குழப்பம் வரலாம். ஆனால் தெளிவான விளக்கம் அமைந்துள்ளார்.

எனக்கு கல்வி வேண்டும் நான் படிக்க விரும்புகிறேன் என்ற மலாலாவின் குரல் கல்விக்காக இயங்கும் குழந்தையின் குரல் மட்டுமல்ல அது வரும் தலைமுறைக்காக குரல்.

ஒரு மாணவி, ஒரு ஆசிரியை, ஒரு கரும்பலகை, ஒரு எடுத்துக் கொள் உலகை மாற்றும் சக்தி கொண்டது.

என்பதற்கு உதாரணம் இவர். அனைவருக்கும் கல்விக் கொடுத்து படிக்க சொல்லும் நம் நாட்டில் கல்விக்காக உரிமை வேண்டி போராட்டம் நடத்தும் நிலையில் இருக்கும் இவர்களை எண்ணிப் பாருங்கள்‌.

– சங்கர் மனோகரன்
முகநூல் பதிவிலிருந்து….