Posted inPoetry
மனம் கவிதை – சாந்தி சரவணன்
மனமே
மனமே
மனித மனமே!
கரைந்து போகும்
பனிக்கட்டியாய்
கரையட்டும்
உன்
அகந்தை
ஆணவம்
கோபம்
பொறாமை
தூர் பார்வை
தீய எண்ணம்
புறம் பேசுதல்!
உருகித் தான்
பாரேன்
நீராக!
உடைந்து தான்
பாரேன்
பாறையின்
சிற்பமாக !
கரைந்து பார்!
உடைந்து பார்!
உருகிப் பார்!
உன்னையே
நீ நேசிப்பாய்!
சக மனிதர்களால்
நேசிக்கப்படுவாய்!
