ஆட்சியாளர்களின் அராஜகம் மக்களை அணிதிரட்டி முறியடிக்கப்படும்: மாணிக் சர்க்கார் Fascist Move Faced by Peoples Unity Interview With Manik Sarkar (மாணிக் சர்க்கார்) Ex. CM of Tripura. Tamil Translate by Sa. Veeramani

ஆட்சியாளர்களின் அராஜகம் மக்களை அணி திரட்டி முறியடிக்கப்படும்: மாணிக் சர்க்கார்



[பாஜக ஆட்சியாளர்களின் அராஜகம், மக்களை அணிதிரட்டி முறியடிக்கப்படும் என்று மாணிக் சர்க்கார் கூறினார். புதுதில்லி வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், திரிபுரா மாநில முன்னாள் முதல்வருமான மாணிக் சர்க்காரிடம் பீப்பிள்ஸ் டெமாக்ரசி செய்தியாளர் ஜி. மமதா நேர்காணல் கண்டார். அப்போது அவர் கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு மாணிக் சர்க்கார் அளித்த பதில்களும் வருமாறு.]

கேள்வி: செப்டம்பர் 8 அன்று திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் மற்றும் முன்னணி ஊழியர்களின் வீடுகளில் விரிவான அளவில் தாக்குதல்கள் நடைபெற்றது ஏன்? ஏன் இது நடந்தது? இதன் பின்னணி என்ன?

மாணிக் சர்க்கார்: என்னுடைய தன்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கதாலியா வட்டாரத்தில், வட்டார வளர்ச்சி அலுவலரைப் பெரும் திரளான மக்களுடன் சந்திப்பது என்ற போராட்டத்தை செப்டம்பர் 6 அன்று நடத்த இருந்தோம். இந்தத் தொகுதியின் மக்களின் பேராதரவு எனக்குக் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

திரிபுராவில் பாஜக ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின், நான் இந்தத் தொகுதிக்கு வருவதையும், மக்களைச் சந்திப்பதையும் தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். ஆரம்பத்தில் 3, 4 மாதங்களுக்குப் பின்னர் இவ்வாறு அவர்கள் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். மூன்று தடவைகள் நான் தடுத்து நிறுத்தப்பட்டேன். சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போதுகூட, பெரிய அளவில் பொதுக்கூட்டம் எதுவும் நடக்கவில்லை. அந்த அளவிற்கு ஆட்சியாளர்களின் பாசிச அராஜகத் தாக்குதல்கள் நம் நண்பர்கள், தோழர்களுக்கு எதிராக ஏவப்பட்டன. தெருமுனைகளிலோ, கிராமச் சந்தைகளிலோ கூட கூட்டங்கள் கூட்டிப் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு என் தொகுதிக்கு நான் செல்வது நீண்ட காலமாகத் தடுக்கப்பட்டது.

ஆனால் இந்தத்தடவை மக்கள் என்னை அழைத்திருந்தார்கள். செப்டம்பர் 6 அன்று எட்டு ஸ்தலப்பிரச்சனைகளின் அடிப்படையில் (இவை அனைத்தும் சாமானிய மக்களின் பொருளாதார நலன்கள் சம்பந்தப்பட்டதாகும்) பெரும்திரளாக வட்டார வளர்ச்சி அலுவலரைச் சந்தித்திடத் திட்டமிடப்பட்டது. எனவே உடனடியாக நான் இதனை ஏற்றுக்கொண்டேன்.

இந்தத் தடவையும் ஒரு காவல்துறை அதிகாரி அந்த இடத்திற்குச் செல்ல வேண்டாம் என என்னைக் கேட்டுக்கொண்டார். ஆயினும் அதனை நான் ஏற்கவில்லை. நான் என் தொகுதிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சென்றுகொண்டிருந்தேன்.

நான் என் தொகுதிக்குள் நுழைந்தவுடனே, காவல்துறையினர் எங்களைத் தடுத்து நிறுத்தினர். பாஜக ஆட்கள் எங்களுக்கு எதிராக, குறிப்பாக என்னைக் குறிவைத்துக்கொண்டு, கோஷமிட்டுக்கொண்டே கறுப்புக் கொடிகளுடன் டயர்களைக் கொளுத்திக்கொண்டிருந்தனர். எனவே ஒரு காவல்துறை அதிகாரி என்னிடம் வந்து என்னைப் போக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஏதேனும் பிரச்சனை எழலாம் என்றார். முன்பும் இதேபோன்றுதான் அவர்கள் என்னிடம் கூறினார்கள். சாலைகளில் கோஷமிடுபவர்களை அப்புறப்படுத்திவிட்டு என்னைப் போக அனுமதிப்பதே உங்கள் வேலை. என்னைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் அங்கே இருக்கிறார்கள். எனவே என்னைப் போகவிடுங்கள் என்று கூறினேன். ஆயினும் காவல்துறையினர் எங்களுக்கு சாதகமாக இல்லை. அவர்கள் ஆட்சியாளர்களுக்கு உதவிடவே நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். எனவே என்னைப் போக அவர்கள் அனுமதிக்கவில்லை. இவ்வாறு 45 நிமிடங்கள் கழிந்தன. பின்னர் கோட்டாட்சியர் அங்கே வந்தார். என்னிடம் மேலும் தொடர்ந்து நீங்கள் செல்ல வேண்டாம் என்றும், சென்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் கூறினார். நான் அவரிடம் இந்தத் தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், நான் போவதற்கு எனக்கு உரிமை உண்டு. எனவே இந்த சூழ்நிலையில் அவர்களால் எங்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். பின்னர் சாலைகள் அனைத்தும் நாங்கள் போவதற்காக சரி செய்து தரப்பட்டன. இங்குமங்கும் மக்களின் கூச்சல் இருந்தது. இது இயற்கை. காவல்துறையினரும் எங்களைத் தடுக்க முயன்றனர். எங்கள் வாகனங்களைச் செல்வதற்கு அனுமதித்திடவில்லை. எனவே நாங்கள் நடந்தே சென்றோம்.

பஷ்பாகூர் (Bashpakur) என்னுமிடத்தில் பாஜகவினர் பேரணியாக வந்தவர்கள் மீது பட்டாசு வெடிகளைக் கொளுத்தி எறிந்தனர், கற்களையும் வீசினர். இவை அனைத்தையும் வீரத்துடன் எதிர்கொண்டு மக்கள் முன்னேறினார்கள். ஐந்து கிலோ மீட்டர் தூரம் சென்றபின் வாகனங்களையும் அனுமதித்தார்கள். நாங்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குப் போய்ச்சேர்ந்தோம். நல்ல கூட்டம். மக்கள் பெரும் திரளாகத் திரண்டிருந்தார்கள். அங்கே ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஓர் ஐந்து உறுப்பினர் கொண்ட தூதுக்குழுவினர் வட்டார வளர்ச்சி அலுவலரைச் சந்திக்க சென்றோம். பிறகு ஒரு சிறிய கூட்டம் 45 நிமிடங்கள் நடைபெற்றது.

Fascist Move Faced by Peoples Unity Interview With Manik Sarkar (மாணிக் சர்க்கார்) Ex. CM of Tripura. Tamil Translate by Sa. Veeramani ஆட்சியாளர்களின் அராஜகம் மக்களை அணிதிரட்டி முறியடிக்கப்படும்: மாணிக் சர்க்கார்

இவை அனைத்தும் பாஜக-வினரைக் கோபப்பட வைத்தது. இது அரசியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் நினைத்தார்கள். மக்கள் தங்கள் சாதி, இன வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கோரிக்கைகளுக்காக அணிதிரண்டார்கள். அவர்களின் கோரிக்கைகள் என்ன? மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் வேலைநாட்கள் உயர்த்தப்பட வேண்டும், ஊதியம் உயர்த்தப்பட வேண்டும், தற்போது காலத்தே ஊதியம் வழங்கப்படுவதில்லை. எனவே இவை அனைத்தும் முக்கியமான விஷயங்களாகும். இத்துடன் சாலைகள் சரி செய்யப்பட வேண்டும், பாசனத் திட்டங்கள் செயல்படாமல் இருக்கின்றன. அவற்றைச் செயல்பட வைத்திட வேண்டும். இதுபோன்று ஏராளமான விஷயங்கள். இந்த விஷயங்களின் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

அவர்களின் மிரட்டல் காரணமாக நாம் வரமாட்டோம் என அவர்கள் நினைத்தார்கள். இந்த அளவிற்கு மக்கள் அணிதிரள்வார்கள் என்று அவர்கள் நினைக்கவில்லை. இவை அனைத்தையும் பார்த்த பின்னர் அவர்கள் சங்கடப்பட்டிருப்பார்கள் என நான் நினைக்கிறேன். இவற்றின் காரணமாகவே அவர்கள் இவ்வாறு அராஜக வேலைகளைத் தொடங்கினார்கள். குறிப்பாக அந்தக் குறிப்பிட்ட தினமான செப்டம்பர் 6 அன்று பெரிய அளவில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டார்கள். எனவே இது பிரதான காரணமாகும்.

இதனைத் தொடர்ந்து பாஜக-வினர் அகர்தலாவில் ஓர் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் அவர் செப்டம்பர் 8 அன்று கிளர்ச்சிகள் நடைபெறும் என அறிவித்தார். ஏன் கிளர்ச்சிகள்? நமக்குத் தெரியவில்லை. சில கைகலப்புகள் நடந்திருக்கலாம். அது இயற்கையே. இதனை வைத்துக்கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் மீது பொய்ப் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

எட்டாம் தேதியன்று நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்தில் மட்டுமல்ல மாநிலம் முழுதும் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடத்தினார்கள். அன்றைய தினம் அகர்தலாவில் நம் மாநிலக்குழு அலுவலகம், நம் மாவட்டக்குழு அலுவலகம், தேசர்கதா நாளிதழ் அலுவலகம், இதர அச்சு மற்றும் மின்னணு ஊடக அலுவலகங்கள் தாக்கப்பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன, அடித்து நொறுக்கப்பட்டன.

உண்மையில் “நாம் என்னதான் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், நம்மால் மக்களின் குரலை அடக்கி ஒடுக்கிவிட முடியாது” என்பதை அவர்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். ஏனெனில் மக்கள் எப்படியாவது வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. எனவே மக்கள், ஆட்சியாளர்களின் மிரட்டலுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டு, இவ்வாறு நாம் வெறுமனே எதுவும் செய்யாது சோம்பி இருந்தோமானால், நம் பசியைப் போக்கிக் கொள்ள முடியாது என அனுபவத்தில் உணர்ந்து, நாம் ஒன்றுபட வேண்டும், நாம் நம் வீடுகளில் முடங்கிக் கிடப்பதிலிருந்து வெளி வர வேண்டும், நமக்காகக் குரல் கொடுக்கும் ஒரே கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரிகள் அணியில் இணைந்து போராட வேண்டும் எனத் துணிந்தார்கள். நம்மைக் காப்பதற்கு இடதுசாரிகளைத் தவிர வேறெவரும் இல்லை. எனவே, நாம் அவர்களுடன் இணைந்துநின்று முன்னேறுவோம் என்று வந்துவிட்டார்கள். இதுதான் ஆட்சியாளர்களின் உண்மையான பயம். எனவேதான் இவ்வாறு அவர்கள் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டதற்கான காரணம் என்று நினைக்கிறேன். கடந்த நான்கைந்து மாதங்களாகவே நாம் நடத்தும் போராட்டங்களில் மக்களின் பங்கேற்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதை நாம் கவனித்து வருகிறோம்.

கேள்வி: மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள ஒரு கட்சிக்கு எதிராக எப்படி இந்த அளவிற்கு வெட்கக்கேடான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் மாநில அரசாங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும் உள்ள பங்கு என்ன?

மாணிக் சர்க்கார்: இது தொடர்பாக, நான் கூற விரும்புவது என்னவென்றால், சென்ற தேர்தலின் போது பாஜக மக்கள் முன் அளித்திட்ட பொருளாதார உறுதிமொழிகள் எதையும் அது நிறைவேற்றவில்லை என்பது தெளிவாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபின் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மக்கள் தங்களை விட்டுவிட மாட்டார்கள் என்பதையும் அவர்கள் நினைத்துப்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் இவ்வாறு அனைத்து நடவடிக்கைகளிலும் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

2018 மார்ச் 3 பிற்பகல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடனேயே இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது, தாக்குதல் தொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ஏனெனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் இடதுசாரிகளின் பிரதான சக்தியாக இருக்கிறது.

பாஜகவினரைப் பார்த்து மக்கள், “நீங்கள் அளித்த உறுதிமொழிகள் என்னாயிற்று?” என்று கேட்டால் என்ன செய்வது என்று நினைக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது தெளிவாகும். “ஒன்றியத்திலும் ஆட்சியிலிருக்கிறீர்கள், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கிறீர்கள். இவ்வாறு நீங்களே இரட்டை என்ஜின் காரை ஓட்டுவதாக வேறு கூறிக்கொண்டிருக்கிறீர்கள். அப்படியானால் எங்களுக்கு அளித்த உறுதிமொழிகள் என்னாயிற்று?” என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

எனவே இதனைத் தடுத்து நிறுத்த என்ன செய்வது என்று யோசித்தார்கள். மக்களின் குரலை அடக்க வேண்டுமானால் அவர்களுக்குத் தலைமை தாங்கும் தலைமையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், பின்னர் இடதுசாரிகளையும், பின்னர் இதர ஜனநாயக மற்றும் ஜனநாயகக் கட்சிகளையும் கூட ஒடுக்க வேண்டும் என்று நினைத்தார்கள். இதுதான் இத்தாக்குதலுக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று என நான் நினைக்கிறேன்.

நிர்வாகம், அரசாங்கத்தின் அரசியல் தலைமையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. அவர்கள் சொந்தமாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. நாம் ஆட்சி செய்தபோது பிரச்சனைகள் வந்தால் அவற்றை நிர்வாகத்தினர் நம்முன் கொண்டு வருவார்கள். நாம் நம் நிலைப்பாட்டை அவர்களிடம் கூறுவோம். விவாதங்கள் நடைபெற்றபின்னர் ஒரு முடிவுக்கு வருவோம். அத்தகைய நிலைமை இப்போது இல்லை. இப்போது ஒரு வழிப் பாதைதான். ஆகையால், இப்போது நிர்வாகம் அவர்களின் எடுபிடியாக மாறியிருக்கிறது. தலைமைச் செயலாளர் போன்ற நிலையில் இருக்கக்கூடிய ஒரு சில அதிகாரிகள் சுதந்திரமாக முடிவுகளை எடுத்தபோது அவர்களை ஆட்சியாளர்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள்.

திரிபுரா மாநிலக் காவல்துறையினர் உண்மையில் நல்ல பெயர் எடுத்திருந்தார்கள். அவர்கள் மாநிலத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக துணிவுடன் போராடியவர்கள். எனினும் இப்போது காவல்துறை முற்றிலுமாக முடமாக்கப்பட்டிருக்கிறது.

ஆட்சியாளர்களின் அராஜகம் மக்களை அணிதிரட்டி முறியடிக்கப்படும்: மாணிக் சர்க்கார் Fascist Move Faced by Peoples Unity Interview With Manik Sarkar (மாணிக் சர்க்கார்) Ex. CM of Tripura. Tamil Translate by Sa. Veeramani

கேள்வி: 2018 தேர்தலுக்குப்பின், பாஜக ஆட்சிக்கு வந்தபின், அவர்கள் ஆட்சியின் லட்சணம் என்ன? மக்கள் மீது அவர்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் என்ன?

மாணிக் சர்க்கார்: எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். ஆனால் எதையுமே அவர்கள் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு, மத்திய தர ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக் குழு அமைக்கப்படும் என ஆசை வார்த்தைகளைக் கூறினார்கள். இளைஞர்களுக்கு வேலை அளிக்கப்படும் என்றார்கள். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்க்கும் அரசாங்க வேலை அளிக்கப்படும் என்றார்கள். கிராமப்புற இளைஞர்களுக்கும் 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்களாக மாற்றப்படும் என்று ஆசைவார்த்தைகளைக் கூறினார்கள். ஒவ்வோராண்டும் 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றார்கள். “இதையெல்லாம் எப்படிச் செய்வீர்கள்?” என்று நாம் கேட்டபோது, “ஒன்றிய அரசாங்கம் எங்கள் அரசாங்கம்” என்றும், “நாங்கள் இணைந்து இவற்றைச் செய்வோம்” என்றார்கள். ஆனால் எதையுமே செய்யவில்லை. இளைஞர்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார்கள். எவரேனும் ஆட்சியாளர்களைப் பார்த்து கேள்வி கேட்கத் துவங்கினால், அவர்களை அடக்கி ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாறு ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் பூஜ்ஜியமாக இருப்பதால் மக்கள் மிகவும் நொந்தநிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் நிலைமை மிக மோசமாக இருந்தது. நம் மாநிலம் மிகச்சிறிய மாநிலம். 40 லட்சம் மக்கள்தான். எனினும் இதில் சுமார் 80 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருந்தார்கள். 800க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். சிகிச்சையளிப்பதற்குத் தேவையான அளவிற்கு மருத்துவர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை, மருத்துவத்துறை ஊழியர்கள் இல்லை. எனவே ஏராளமான பிரச்சனைகள் தலைதூக்கின. பட்டினிச் சாவுகள் ஏற்பட்டன. வறுமையின் காரணமாக உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள். உயிர்வாழ்வதற்காக மக்கள் மீண்டும் புலம்பெயர்ந்து செல்லத் தொடங்கினார்கள். குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளில் மக்களின் நிலைமைகள் மிகவும் மோசமாக இருந்தன. நாம் ஆட்சி செய்த காலத்தில் அவர்களின் பகுதிகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தினோம். உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அப்பகுதி இளைஞர்களுக்கு வேலைகள் அளித்திட்டோம், கல்வி அளித்திட்டோம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு வசதிகளைச் செய்துகொடுத்தோம். ஆனால் இப்போது அனைத்தும் எதிர்மறையாக நடந்துகொண்டிருக்கின்றன.

மக்கள் இந்நிலைமையினை உணரத்தொடங்கிவிட்டனர். இனியும் சோம்பித்திரிந்தால் தீர்வு கிடைக்காது என முடிவு செய்தனர். நாம் இடதுசாரிகளுடன் இணைந்து முன்னேற வேண்டியது அவசியம் என முடிவு எடுத்துள்ளனர். இப்போது கடந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான மக்கள் நம் மக்கள் அணி அணியாக வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். இதுபோன்றதொரு நிலைமையை என் அரசியல் வாழ்க்கையில் இதற்குமுன் நான் பார்த்ததில்லை. கடந்த மூன்றாண்டுகளில் இடது முன்னணி அரசாங்கத்திற்கும், பாஜக அரசாங்கத்திற்கும் இடையேயான வித்தியாசத்தை மக்கள் நன்கு உணர்ந்துகொண்டுவிட்டனர். “நாம் தவறு செய்துவிட்டோம்” என்பதை மக்கள் நன்கு உணர்ந்துவிட்டனர். எனவேதான் அவர்கள் அணி அணியாக நம்முடன் சேர்ந்துகொண்டு வருகின்றனர். அதனால்தான் அரசாங்கமும் நம்மைப் பார்த்து அஞ்சுகிறது. அவர்களின் கடைசி ஆயுதமாக அவர்கள் நம்மீது அராஜன நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்கள்.

கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், இடது முன்னணியையும் தாக்குவதற்குத் தொடர்ந்து அவர்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், கட்சியும் வெகுஜன ஸ்தாபனங்களும் எப்படி அதனை கொண்டுவருகின்றன? மக்களின் பிரச்சனைகளை எப்படி எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறீர்கள்?

மாணிக் சர்க்கார்: இது மிகவும் கடினமான யுத்தம்தான். ஏனெனில் அவர்கள் நம் அமைப்பாளர்கள் மீது, தலைவர்கள் மீது, குறிப்பாக இளைஞர்கள் மீது குறிவைத்து பாசிச முறைகளில் தாக்குதல் தொடுத்து வருகிறார்கள். இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு நாமும் நம் செயல்முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. ஆரம்பத்தில் சிரமங்கள் இருந்தன. நம் பிரதான கடமை. சாமானிய மக்களுடன் மீண்டும் தொடர்புகளைப் புதுப்பித்துக்கொள்வதேயாகும். அவர்கள் வீடுகளுக்குச் சென்றோம். அவர்களுடன் பேசினோம். அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினோம்.

கட்சி ஸ்தாபன நடவடிக்கைகளும் சிரமமாகவே இருந்தன. நம் அலுவலகங்களை இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறார்கள். எண்ணற்ற தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இவையனைத்தும் எண்ணற்ற பிரச்சனைகளை உருவாக்கி இருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி மக்களுடன் நாம் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அகில இந்திய அறைகூவல்கள் அனைத்தையும் மாநிலத்தில் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம். இந்தவிதத்தில் நாம் மக்கள் மத்தியில் மக்களிடமிருந்து ஓர் ஆக்கபூர்வமான அணுகுமுறையைப் பெற்றிருக்கிறோம். அதன்காரணமாகவே ஆட்சியாளர்கள் செப்டம்பர் 8 அன்று நம்மீது தாக்குதல் தொடுத்தார்கள். இதனைத் தனித்துப் பார்க்கக்கூடாது. இவை அனைத்தையும் மனதில்கொண்டே இதனை நாம் பார்க்க வேண்டும்.

(நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி)
(தமிழில்: ச.வீரமணி)

Political Clash Between BJP And CPIM Oriented Interview With Manik Sarkar, Former CM of Tripura. Tamil Translated by Sa. Veeramani

எங்கள் பிரதான ஆயுதம், எங்கள் சித்தாந்தம், எங்கள் நேர்மை மற்றும் மக்களுக்கு நாங்கள் உண்மையாகவும் உறுதியாகவும் இருப்பதாகும்.



தி இந்து நாளிதழ் செய்தியாளருக்கு, மாணிக் சர்க்கார் பேட்டி

[பாஜக-வினர் திரிபுராவில் செப்டம்பர் 7, 8 தேதிகளில் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். பின்னர் அவர், தி இந்து நாளிதழ் செய்தியாளருக்குத் தனியே அளித்திட்ட நேர்காணல் வருமாறு:]

கேள்வி: தற்போது திரிபுராவில் அரசியல் நிலைமை கொதிநிலையில் இருக்கிறதே, இதற்கான காரணம் என்ன?

மாணிக் சர்க்கார்: இதற்கான காரணம், 2018 சட்டமன்றத் தேர்தலின்போது பாஜக மக்களுக்கு அளித்திட்ட வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றத் தவறி இருப்பதுதான். இதனால் நகர்ப்புற, கிராமப்புற மக்கள், பெண்கள், இளைஞர்கள், உண்மையில் மாநிலத்தின் அனைத்துப்பகுதி மக்களும், கோபத்துடன் இருக்கிறார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கருதுகிறார்கள். அதேசமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சும்மா இருந்திடவில்லை. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள், உணவு, சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் போன்ற பிரச்சனைகளை எழுப்பி இயக்கங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். இவ்வியக்கங்களில் மக்கள் பங்கேற்பு என்பது படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால்தான் ஆத்திரம் அடைந்துள்ள ஆட்சியாளர்கள் எங்கள் அலுவலகங்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறார்கள்.

செப்டம்பர் 6 அன்று நான் என் தொகுதியான தன்பூர் சென்று அங்கே மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சிப் போராட்டத்தில் பங்கேற்க முடியாது தடுக்க முயற்சித்தார்கள். இது ஒன்றும் அவர்களுடைய முதல் முயற்சி கிடையாது. நான் கடந்த 25 ஆண்டுகளாக பிரதிநிதித்துவப்படுத்திவரும் என் தொகுதிக்கு நான் செல்ல முயற்சிக்கும் ஒவ்வொரு தடவையும் அவர்கள் இதனை மேற்கொண்டார்கள்.

கேள்வி: 2018க்குப்பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறதே, இதனைச் சரிக்கட்டிவிட்டீர்களா?

மாணிக் சர்க்கார்: ஆட்சியாளர்கள் எங்கள்மீது ஏவிடும் தாக்குதல்களை வீரத்துடன் எதிர்கொண்டு, தொடர்ந்து நாங்கள் மக்களைச் சந்தித்து வருகிறோம், அவர்களுடைய பிரச்சனைகளைக் கேட்டு வருகிறோம், அவற்றுக்குத் தீர்வு காண நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இவற்றின்காரணமாக 2018இல் எங்களைக் கைவிட்டு, வழிதவறிச்சென்ற மக்கள் எல்லாம், மீண்டும் எங்கள் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் செய்திட்ட தவறை அவர்கள் உணர்ந்துவிட்டார்கள். உண்மையில் அவர்களில் பலர் தாங்கள் பாஜக பக்கம் சாய்ந்ததற்காக இப்போது எங்களிடம் மன்னிப்பு கோரி வந்து கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே இடதுசாரி எதிர்ப்பு மனோபாவத்தில் இருந்தவர்கள்கூட, இப்போது எங்கள் பக்கம் வந்து சேர்ந்திருக்கிறார்கள். பாஜக-விற்கு மாற்று இடதுசாரி அரசியல்கட்சிகளைத் தவிர வேறெவராலும் கொடுக்கமுடியாது என்பதை இப்போது அவர்கள் உணரத்தொடங்கி இருக்கிறார்கள்.

Political Clash Between BJP And CPIM Oriented Interview With Manik Sarkar, Former CM of Tripura. Tamil Translated by Sa. Veeramani

கேள்வி: திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வங்காளிகள் பெரும்பான்மைவாதத்தைத் தூக்கிப்பிடிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதே, 2018இல் உங்கள்கட்சி தோல்விக்கான முக்கியமான காரணங்களில் அதுவும் ஒன்றாக இருந்ததே. இது சம்பந்தமாக, கட்சி சரிசெய்திடும் நடவடிக்கை எதையாவது எடுத்திருக்கிறதா?

மாணிக் சர்க்கார்: இவ்வாறு கூறுவது முற்றிலும் தவறாகும். மாநிலத்தில் பழங்குடியினர் ஆதரவு இல்லாமல் முதற்கண் இங்கே ஆட்சியை எங்களால் அமைத்திருக்க முடியாது. திரிபுராவில் ஆரம்பத்திலிருந்தே, காங்கிரஸ் உட்பட அனைத்து முதலாளிய அரசியல் கட்சிகளும் வங்காளிகளையும் பழங்குடியினரையும் சேரவிடாமல் தனிமைப்படுத்தவே முயற்சித்தன. எங்கள் அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனை இவர்களிடையே இருந்த இடைவெளியை நிரப்பியதாகும். பழங்குடியினரில் ஒருசிலர் இடதுசாரிகளுடன் இல்லை என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் முன்பிருந்த மன்னர் சமஸ்தானத்தின் குடும்பத்துடன் தொடர்பு வைத்திருப்பவர்கள். அவர்கள் எப்போதும் காங்கிரசுடன்தான் இருந்தார்கள். இப்போது பிரத்யுத் மாணியுகா (Prfadyut Maniyka) தலைமையின்கீழ் உள்ள பிரிவினர் டிப்ரா (TIPRA) என்னும் புதிய கட்சியை அமைத்திருக்கிறார்கள். அவரே காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர். அவருடைய தந்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று முறை இருந்திருக்கிறார். அவருடைய தாயார் காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் அமைச்சராக இருந்திருக்கிறார்.

மேலும் இப்போதும், பாஜக பழங்குடியினரில் ஒரு சிறுபிரிவினரை அவர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியும், இடதுசாரி எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டும் தங்கள் பக்கம் இழுத்திருக்கிறது. மக்கள் குழப்பத்திலிருக்கும்போது அவர்களை மீளவும் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல, அது ஒரு தொடர் போராட்டமாகும்.

கேள்வி: பாஜகவை மட்டுமல்ல, இப்போது நீங்கள் திரிணாமுல் கட்சியையும் எதிர்கொள்ள வேண்டிய சவாலைப் பெற்றிருக்கிறீர்கள். இவ்விரு சவால்களையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

மாணிக் சர்க்கார்: எங்களைச் சுற்றி திரிணாமுல் காங்கிரஸ் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஊடகங்கள் இவ்வாறு விஷயங்களை திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக மிகைப்படுத்திக் கூறிக் கொண்டிருக்கின்றன.

மேற்கு வங்கமும் திரிபுராவும் எல்லைகளைப் பிரித்துக்கொள்ளலாம். ஆனால் நாங்கள் அப்படியல்ல.

Political Clash Between BJP And CPIM Oriented Interview With Manik Sarkar, Former CM of Tripura. Tamil Translated by Sa. Veeramani

கேள்வி: 2021 மே மாதத்தில் மேற்கு வங்கத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த பின்னர், திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜக-விற்கும் இடையிலான இருதுருவ போட்டியில் இடது முன்னணி சிக்கிக்கொண்டதாக உங்கள் கட்சித் தரப்பில் கூறப்பட்டதே. அதே போன்ற நிலை திரிபுராவிலும் திரும்பக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லையா?

மாணிக் சர்க்கார்: மீண்டும் நான் கூறவிரும்புவது, மேற்கு வங்க நிலைமைக்கும், திரிபுரா நிலைமைக்கும் இடையே முற்றிலும் வித்தியாசங்கள் உண்டு. மேற்கு வங்க வெற்றி அப்படியே திரிபுராவிற்கும் மாற்றிவிட முடியாது. மேற்கு வங்கத்திலும்கூட, அவர்கள் எப்போதும் பிரச்சார மனநிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களால் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையாவது அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்களா? அவர்கள் அவர்களுடைய மாநிலத்தில் வேலை செய்யட்டும், நாங்கள் எங்கள் வேலைகளை இங்கே செய்வதைத் தொடர்வோம்.

கேள்வி: பாஜக அரசாங்கத்தின் கடந்த 42 மாத ஆட்சிக்காலத்தில் 21 ஊழியர்கள் கொல்லப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுகிறது. சமீபத்தில், இரண்டு நாட்கள் தொடர்ந்து இடதுசாரிகளுக்கு எதிராக மிகவும் விரிவான அளவில் வன்முறை வெறியாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதைப் பார்த்தோம். இதேபோன்ற நிலைமை சில ஆண்டுகளுக்கு முன் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டபோது, உங்கள் ஊழியர்களில் பலர் உங்களைக் கைவிட்டுவிட்டு, பாஜக-வில் சேர்ந்ததைப் பார்த்தோம். அவ்வாறு திரிபுராவில் ஊழியர்கள் செல்லாது வித்தியாசமாக இருப்பதற்குக் காரணம் என்ன?

மாணிக் சர்க்கார்: எங்கள் பிரதான ஆயுதம், எங்கள் சித்தாந்தம், எங்கள் நேர்மை மற்றும் மக்களுக்கு நாங்கள் உண்மையாகவும் உறுதியாகவும் இருப்பதாகும். இவற்றின் அடிப்படையில்தான் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம், தொடர்ந்து செயல்படுவோம். மக்கள் தவறுகள் இழைத்திருக்கலாம். ஒவ்வொரு தடவையும் அவர்கள் சரியான முடிவினை எடுக்க முடியாது இருந்திருக்கலாம். நாங்களும் எங்களுடைய தவறுகளிலிருந்தும், இழப்புகளிலிருந்தும் கற்றுக்கொண்டிருக்கிறோம். எங்கள் பிரதான கடமை, மக்களை நம்பாமலிருப்பதும் இல்லை அவர்களை மதிக்காமல் இருப்பதும் இல்லை என்பதாகும். (Our main task is not to disbelieve and disrespect people.)

நன்றி: தி இந்து, ஆங்கிலம், 15.09.2021

தமிழில்: ச.வீரமணி