Manitha Kulathin Pokkisham Poem By Nagoor Pichai மனிதகுலத்தின் பொக்கிஷம் கவிதை - நாகூர் பிச்சை

மனிதகுலத்தின் பொக்கிஷம் கவிதை – நாகூர் பிச்சை

மனிதன் மனிதனுக்காகவே கண்டுபிடித்தும்
கண்டுபிடித்துக் கொண்டும் இருக்கின்ற
விடயம்தான் அறிவியல்..

ஒன்று இருப்பதை கண்டு பிடிக்கிறான்
இல்லையேல் இருப்பதற்காக
கண்டுபிடிக்கிறான்..

விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அந்த வானையே
துளைத்து வாழத் துடித்தாலும்..

மனிதனின் வாழ்க்கையை மேன்மை
படுத்துவது கடந்தகால அனுபவங்களும்
அத்தாட்சிகளும் ஆசைகளும் எச்சரிக்கைகளும் தான்..

ஒரு பொருளின் ஆயுட்காலமும் உபயோகமும்
அதிகமாக இருக்க வேண்டும் என்று
சொன்னால்..

அதனுடைய விதிமுறைகளை படித்துவிட்டு
விதிமுறைகளின்படி அதனை
செயல்படுத்தப்படும் போது தான் நாம்
நினைத்தது சாத்தியமாகும்..

அதுபோலத்தான் மனிதகுலம் சிறப்பதற்கு
மனிதனுக்கு என்று வழிமுறைகள் நிச்சயம்
வேண்டும்.

ஆனால் அதனை வழிவகுப்பது மனிதனே
வகுத்துக் கொண்டால் சரியாக இருக்காது..

எப்படி ஒரு பொருளை உருவாக்கிய நிறுவனம்
அதன் விதிமுறைகளை பட்டியலிடுகிறதோ..

அதே போன்று தான் மனிதன் மனிதனுக்காகவே
எழுதப்பட்ட விதிமுறைகள் சற்று ஏதேனும் ஒரு
விடயத்தில் குறை உள்ளதாகவே காணப்படும்..

நாம் நிகழ் கால அனுபவங்களை பார்க்கலாம்
எழுதப்பட்ட சட்டங்கள் எத்தனை முறைகள்
திருத்தி அமைக்கப்படுகிறது..
இன்னும் எத்தனை சட்டங்கள் திருத்தி
அமைக்கப் படலாம்..

ஆக மனிதன் மனிதனுக்காக செய்யப்படும்
எந்த ஒரு சட்டதிட்டங்களும் முழுமை பெறாது
என்பதே நிதர்சனம்..

அப்படி என்றால் மனிதன் வாழ்வதற்காக
நடைமுறை சட்ட திட்டங்களை வழிவகுக்க
மனிதனைப் படைத்த ஒரு சக்தியால் மட்டுமே
இயலும் என்பது உண்மை..

அப்படிப்பட்ட சக்தி தான் இப்பிரபஞ்சத்தை
படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கின்றது..

அப்படிப்பட்ட சக்தியின் மூலமாகவே தான்
படைத்த மனிதகுலத்தை சிறப்பாக வழிநடத்த
முடியும்.

அப்படி மனிதகுலம் சிறப்பதற்காக மனிதனைப்
படைத்த சக்தியினால் இறக்கப்பட்டதே வேதம்..

அந்த வேதம் மனிதர்கள் மூலமாக
இயற்றப்பட்டிருந்தால் அது நிச்சயமாக
முழுமை பெற்றிருக்காது..

இப்படிப்பட்ட வேதம் நிச்சயமாக இறைவன்
புறத்திலிருந்து மட்டுமே இறக்கப்பட்டிருக்க
வேண்டும்..

அப்படிப்பட்ட வேதமானது ஆச்சரியம்
ஊட்டக்கூடிய அதிசயத்தக்க அத்தாட்சிகளை
உள்ளடக்கிய ஒரு மிகச் சிறந்த
அருட்கொடையாகத் தான் இருக்கின்றது..

எக்காலத்திலும் எவராலும் மாற்ற படாமலும்
மாற்றுவதற்கான அவசியம் இல்லாமலும்
இருப்பதால் அது ஒரு பொக்கிஷமாகவே தான்
மனித குலத்திற்கு இருக்க முடியும்..

அப்படிப்பட்ட வேதத்தின் மூலமாகத்தான்
மனிதன் தனது வாழ்வை சிறப்பாக
அமைத்துக்கொள்ள முடியும்..

இறைவனை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு
இயற்கை சக்தியும்
மனித சக்தியும் மட்டுமே இவ்வுலகில்..

ஆனால் இறைவனை ஏற்றுக்
கொண்டவர்களுக்கு அனைத்துமே ஒரே சக்தி
தான் அது இறை சக்தியே..

பகுத்தறிவு என்பது இறையை உணரவே..
அந்த இறைவன் இருப்பதற்கான அத்தாட்சிகள்
ஏராளம் வேதத்தில் உண்டு..