நூல் அறிமுகம்: மனித மன அலைக்கழிப்பிலிருந்து தப்பிக்க – சுப்ரபாரதிமணியன்

நூல் அறிமுகம்: மனித மன அலைக்கழிப்பிலிருந்து தப்பிக்க – சுப்ரபாரதிமணியன்

மந்திர வாதமும்,  போலித்தனங்களும்.. உளவியல் பார்வை நியூ செஞ்சரியின் சிறு நூல் வரிசை முனைவர் தே ஞானசேகரன் எந்த சமூகத்திலும்  ஏதாவது பாதிப்பு வருகிறபோது மனிதன் தனக்கு மீறிய ஏதாவது சக்தியை நம்புகிறான். இந்திய சமூக சூழலில் மதங்களின் பங்கும்  பக்தியின் இடமும் புராணங்களின் அழுத்தங்களும் என்றைக்கும் இருந்து கொண்டிருக்கின்றன ..எனவே அவற்றில் சடங்குகளும் நம்பிக்கைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சாதாரண மக்கள் தங்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிற போது அவர்கள் சடங்கு சார்ந்தும் புராணங்கள் சார்ந்தும் தங்களுடைய வழிபாடுகளைக் கைக் கொள்கிறார்கள். அந்தவகையில் மந்திரவாதிகளும் இந்திய சமூகத்தில் ஒரு முக்கிய பங்காற்றுவதாக சாதாரண குடிமக்கள் நினைப்பது உண்டு. அதன் காரணமாக அந்த சடங்கினை கடைபிடித்தல் மற்றும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தங்கள் பிரச்சனையில் இருந்து தப்பித்து விட்டதாக எண்ணிக் கொள்ளுதல் போன்றவை சாதாரண மக்களுக்கு நிகழ்கின்றன. அந்தவகையில் சடங்குகளின் தொடர்ச்சியாக உள்ள மந்திர வாதமும் போலித்தனமும் பற்றிய ஒரு பகுத்தறிவுப்  பார்வையை  தே. ஞானசேகரனின் இந்த நூல் முன்வைக்கிறது. மந்திரம் என்பது இன்றைய நடைமுறையில் கண்கட்டி மாயாஜாலம் செய்வினை பில்லி சூனியம் ஏவல் வசியம் செய்தல் முதலியவற்றை குறிப்பதாகவும்  தெய்வம் தொடர்பான சடங்குகளில் பூசாரிகள் உச்சரிக்கின்ற மொழிச் சொற்களையும் விஷம் நீங்க மந்திரிக்கும் மந்திர சொற்களையும் சுட்டுவதாக உள்ளது. பழங்கால மக்கள் இயற்கையின் இயக்க விதிகளை புரிந்துகொள்ள முடியாத நிலையில் அவற்றைப் போல்  போல செய்வதில் வாயிலாக இயற்கையை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பினர் .இவ்வாறான போல செய்தல் அல்லது பாவனை செய்தலை  மானுடவியலாளர்கள் மந்திரம் என்று குறிப்பிடுவதாக ஆசிரியர் சரியாக குறிப்பிட்டிருக்கிறார் . மனம் என்பது ஒரு மாயை உண்டாகி அதனால் இயற்கையை உண்மையாகவே கட்டுப்படுத்துவதாக நம்புவது ஆகும் என்ற கருத்தினை இன்னொருபுறம் ஆசிரியர் முன்வைக்கிறார் ..இந்த மந்திரங்கள் சார்ந்த சடங்குகளில் பெண்கள் பெரும்பாலும்…