Posted inPoetry
மரணித்த வாழ்த்துகள் கவிதை – சிவகுமார்
என் நண்பர்களுக்கு என் மீதுதான்
எத்தனைப் பிரியம்.
நூற்றுக்கணக்கான விருப்பக் குறிகளையும்
பிறந்தநாள் வாழ்த்துகளையும்
முகநூலில் பகிர்ந்தமைக்கு நன்றி.
ஒரு வலைத்தள நண்பனின்
வாழ்த்து என்னிடம் கேட்டது
“மச்சி ட்ரீட் எப்போ”
உங்களில் யாரேனும் ஒரு முறையாவது
என்னைத் தொடர்பு கொண்டிருந்தால்
என் அன்னை சொல்லியிருப்பாள்
நான் எப்போது இறந்தேன் என்று!
