அமீபாவின் கவிதைகள்

அமீபாவின் கவிதைகள்




அன்பெலி
*************
வீட்டின் எல்லா மூலைகளிலும்
ஓடிக் கொண்டிருந்தது
ஒரு காலத்தில்

அதன் பிறகான காலத்தில்
ஏதேனும் ஒரு பகுதியில் மட்டுமே
பதுங்கத் தொடங்கி இருந்தது

இரவு நேரங்களில்
இருட்டைப் பூசிக்கொண்டு
குதியாட்டம் போட்டது.

சமீப காலமாக
சத்தம் இல்லாமல் போகவே
அதை உற்று நோக்குகையில்
காற்றில் அதன் சப்தம்
பெருநாற்றமாக ஓடிக்கொண்டிருந்தது

வீடெங்கும் ஓடி நிறைந்திருந்ததை இறந்த பின்பு கண்டெடுப்பது
பெரும் பாடாய்ப் போனது

ஒரு வழியாக
முகம் சுளிக்க மூச்சடக்கிக் கண்டெடுத்து
ஒவ்வாமையுடன்
வீதியில் வீசியாயிற்று

இருந்தும் இருக்க வாய்ப்புண்டு
வீட்டின் ஏதேனும் மூலையில்
அதன் குட்டிகள்.

மரணம்
***********
எத்தனை இழப்புகளை
ஏற்படுத்திவிட்டது
இந்த ஒரு மரணம்.
எனது கவனக் குறைவோ
என்ற குற்ற உணர்வு
குறுகுறுக்கின்றது.
என் நினைவுகள் எல்லாம்
நீர்த்துப் போய்விட்டன.
காலைப் பொழுதுகள்
அத்தனைக்
கலகலப்பானதாக இல்லை.
இரவு படுக்கை
ஏதோ ஒன்று குறைவதாய்
குற்றம் சாட்டுகிறது.
குறுகிய காலமே
என்னிடம் இருந்தாலும்
இறுக்கமாக்கி விட்டது
இந்த
ஆண்ட்ராய்டு போனின்
அகால மரணம்.

சுயரூபம்
************
கண்டதையும் படித்து
கண் கெட்டுப்போய்
கண்ணாடி மாட்டித் திரிவதாக
கவலை கொள்கிறாய்.

கண்டபடி நடித்து
புத்தி கெட்டுப்போய்
முகமூடி மாட்டித் திரிவதைப் பற்றி

கவனமில்லாமல்.

– அமீபா

Pangai Thamizhan Kavithaigal பாங்கைத்தமிழன் கவிதைகள்

பாங்கைத்தமிழன் கவிதைகள்




‘நோய்களுக்கு மருந்து நீ’
******************************
உலகின் ஒப்பற்ற தேசம்!
அகிலத்தின் அழகு தேசம்
மூத்த இனமும் மொழியும்
தோன்றிய முதன்மை தேசம்!

வற்றா நதிகளும்
வளமார் மண்ணும்
குன்றா வளமும்
குறைவிலா செல்வமும்
மாண்பமை மக்களும்
இயற்கையின் செல்ல தேசம்!
இந்திய தேசம்!

வார்த்தை ஜாலத்திற்காக
வர்ணனை செய்யவில்லை!
இந்த தேசத்தின்
பூர்வக் குடியின்…
இந்த தேசத்தை
சுவாசிக்கும் வார்த்தை
வடிவங்கள்!

இன்று….
முடங்கிக் கிடக்கும் தேசமாக
முட்டுக்கட்டை களைப்
போட்டது யார்?

சுய நலத்திற்காக
உழைக்கும் மக்களை
உடைத்தது யார்?

ஒன்றாகப் பிறந்து
ஒன்றாக உழைத்து
ஒன்றாக உண்டு
ஓர் உணவை உண்டு
ஓரிடத்தில் உறங்கி
ஒரே உறவுகளாய் வாழ்ந்தோமே…. !

இது பொய்யென்றால்
நீ சொன்னாலும்
நான் சொன்னாலும்
இந்த மண்ணின்
பூர்வக்குடிகள் இல்லை நாம்!

மதங்கள் நம்மை அண்டின
சாதிகள் நம்மை தொற்றின
நோய்கள்… நோய்கள்…!

நோய்களை விரட்டுவோம்
‘நோயற்ற வாழ்வுதானே
குறைவற்ற செல்வம்’
இந்த தேசத்திற்கு!

சொர்க்கத்தில்
இருக்கும்
என் பெற்றோர்
என்னிடம் பேசினர்!
கனவின் வழி!!

மீண்டும்
மண்ணுலகில் பிறப்பு
வேண்டுமெனில்
அருளுகின்றேனென
ஆண்டவன்
அனுமதித்துள்ளார் !

மகனே…..
பிறவியெடுத்து
வருவதற்கு…
பேராசைதான்!

இந்தியாவில்
சாதிகளின் பேயாட்டம்
மதம்பிடித்தோர் வெறியாட்டம்
ஏய்ப்போரின் வெறியாட்டம்
அரசியல் வாதிகளின்
கொள்ளைக்கூட்டம்
அழிந்திருந்தால்
சொல் மகனே….

உனக்கே
பிள்ளைகளாகப்
பிறக்கிறோமென்றனர்
என்னத்தச்சொல்ல?

*********************************
ஏமாற்றும்
வித்தைகள்
பல விதம்!

வீதி ஓரங்களில்
வித்தைக் காட்டுபவனின்
வித்தை
வயிற்றுப் பாட்டுக்கானது!

திரைக்காக…
நடிகர் மட்டுமல்ல
திரைப்படம் உருவாக
உழைக்கிறோம் என்போர்
அனைவரின் வித்தை
ஆசைக்கானது!

அலப்பறை செய்து
கொள்ளையே கொள்கை
என்னும்..
அரசியல் பேய்களின்
வித்தை….
அநாகரிகமானது!

மயிர் வளர்ப்பு
அம்மணத் திறப்பு
அங்க வஸ்திர அணிவிப்பு
அருவருப்பான
வேஷ கோஷம்
கூச்சல்… குடைச்சல்
எல்லாமும்
மனநோயின் வித்தை;
மக்களை மயக்கும்
மதிகெட்ட வித்தை!

வித்தைக் காட்டுபவரே
வித்தகனானான்!

விதை போட்டு
வியர்வைசிந்துவோன்
வேடிக்கைப் பொருளானான்!

விந்தை உலகமடா….
இல்லை… இல்லை….
வித்தை உலகமடா!

**************************************
மனிதன்
என்னென்னவோ வேடமிட்டு
பிழைப்பை நடத்திக்
கொண்டிருக்கிறான்!

உலகம் ஒரு நாடகமேடை
நாமெல்லாம் நடிகர்
என்ற
அறிஞனின்
ஆழமான சிந்தனை
எவ்வளவு நிதர்சனம்!

வயிற்றுப் பிழைப்பிற்காக
கடவுள் போன்று
வேடமிட்டு….
பிச்சையெடுக்கின்றார் சிலர்;
ஓ…..
கடவுள் இப்படித்தான் இருப்பாரோ?
வேடமிட்டவனுக்கு எப்படித் தெரியும்?

இந்த
உருவத்தை உருவாக்கியவனுக்குத்தான் தெரியும்!
கடவுளின் உருவம்.

கடவுள் உருவத்தில்
கையேந்தி வருபவருக்கு
ஏன் கற்பூரம் ஏற்றவில்லை?
கடவுள் உருவத்தை
கற்பனையில் உண்டாக்கியவர்!

அவர்களுக்கு
நன்றாகத் தெரியும்
கடவுளுக்கு உருவமில்லை என்பது!

வயிற்றுப் பசிக்காக
கடவுள் வேடமிட்டு
கையேந்தி வந்தாலும்
பிச்சைப் பாத்திரம்
நிரம்புவதில்லை….

பிச்சைப் போடுபவனுக்கும் தெரியும்!
பிச்சையெடுப்பவன்
கடவுள் இல்லையென்பது!

பிச்சையெடுப்பவன்தான்
நம்புகின்றான்…..
பாவம்;கடவுளை!

Jananesan's Poems. ஜனநேசனின் கவிதைகள்

ஜனநேசனின் கவிதைகள்




மீசை முளைத்த அத்தைகள்
********************************* 
உலகமறியா வயதில்
அப்பாவை இழந்த.
என்னைப் பேணி
அப்பாவின் குறை, நிறை
குணங்களைப் புகட்டி
வளர்த்த அத்தைமார்
மீசை முளையா
சித்தப்பா, பெரியப்பாமார் !
குறை களைந்து
நிறைகளால் என்னை
நிலைப்பித்த. சிற்பிகள் !

ஞானம்
**********
எதிரிலிருப்பவரோடு பேசுகையில்
மூக்குத்தண்டிலிருந்து நழுவும்
முகக்கவசத்தை சரி. செய்யும் போதெல்லாம்
சள்ளையாய் உணரும் மனம்
தலைமுறைகளாய் முந்தானையை
இலாவகமாய் சரிசெய்யும்
தாய்குலத்தின் துயர் எண்ணும்!
சிறுதொந்தியோடு குனிய நிமிர
அல்லலுறும் மனம்
பத்துமாதம் எனைச் சுமந்து
அன்றாடத்தைக் கடந்த
தாயை நினைத்து கசியும்!
தன்துயரிலிருந்தே உலகுதுயர்
காணும் ஞானமும்
காலம் கடந்தே வருகிறது…!

Mask Poem By Puthiya Madhavi. புதியமாதவியின் முகக்கவசம் கவிதை

முகக்கவசம் கவிதை – புதியமாதவி




அவள் பூமிக்கானவள் இல்லை.
இந்த மண்ணில் காலூன்ற முடியாமல்
அந்தரத்தில் அவள்
தொங்கிக்கொண்டிருப்பதற்கு
இதுவும் ஒரு காரணம்.
அவள் வேற்றுக்கிரஹவாசி.
பூமியை ரசிப்பதற்குப் புறப்பட்டு
வந்துவிட்ட பயணி அல்ல அவள் .
திருவிழாவில் தொலைந்துப்போன சிறுமியைப்போல
பால்வீதியில் தொலைந்துப்போனவள்.
இருத்தலுக்காக அவள்
உங்கள் மொழியில் எழுதினாலும்
அதில் இருப்பதெல்லாம்
பூமி அறியாத வாசனை.
அவளைப் புரிந்து கொள்வதில்
உங்கள் தடுமாற்றங்கள் நியாயமானவை.
அகதியான அவள்
குடியுரிமைப் பெறுவதற்காக
உங்களுடன் படுத்து பிரசவித்தப் புதல்வர்கள்
அவள் முலைப்பால் அருந்திய தேசம்
அவள் கருவறை வாசலுக்கு
கம்சர்களைக் காவலுக்கு வைக்கிறது.
மூப்பறியாதவளுக்கு மரணம் உண்டா ?
நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு
யாரிடமும் பதிலில்லை.
அவளை உயிருடன் எரிக்கவோ
புதைக்கவோ
பிரபஞ்சவிதிகள் திருத்தப்படுகின்றன.
எரி நட்சத்திரங்களின் கருகியவாசனை
மூச்சுத்திணறும் சூரியமண்டலம்
முகக்கவசத்துடன் நீங்கள்.

Poem by Duraivasantharasan துரைவசந்தராசன் கவிதை

துரைவசந்தராசனின் கவிதை



‍அதோ
விசில்சத்தம் கேட்கிறது.
“காலங்காத்தால வந்துட்டான்.
வேலையே ஆகலை.
குப்பையெங்கே சேர்றது?”
முகக்கவசம் அணிந்தபடி
ஒவ்வொரு வீட்டிலிருந்தும்
குப்பைகள் நீண்டன
ஆறடிக்கு அப்பாலிருந்தும் மூக்கை மூடியும்!
வாங்கிய குப்பைகளைத் தரம்பிரித்துப்
பக்கவாட்டுப் பைக்குள் கொட்டிக்கொண்டிருந்தது
கிளவுஸ் போட்ட கைகள்.
குப்பை பக்கெட்களைக் குளிக்கவைத்து
எச்சரிக்கையாக
வெயிலில் காயவைத்தன வீடுகள்!
இன்னும் ஆ….று…வீடுகள் ….. பாக்கி.
பசிவயிற்றைக்கிள்ளியது ஜோசப்புக்கு…
கிளவுசைக் கழற்றி சைக்கிளில் மாட்டியவன்
அள்ளியள்ளித் தின்றான்
பழையதை ஊறுகாயோடு!
பின்னங்கால் பிடறிபட
ஓடிக்கொண்டிருக்கிறது
கொராணா.
மிதிக்கத் தொடங்கினான் குப்பைவண்டியை.
இன்னும் பாக்கி ஆறே வீடுகள்தாம்.
மீண்டும்….
விசில்சத்தம் கேட்கிறது.

சிறுகதை Short Story: முகக்கவசம் Mask - கவின்ராஜ் கிருஷ்ணமூர்த்தி Kavin Krishnanmoorthy - Book Day Literature Website is Branch of Bharathi Puthakalayam Publication.

சிறுகதை: முகக்கவசம் – கவின்ராஜ் கிருஷ்ணமூர்த்தி

நான் வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருக்கையில் சட்டென்று அவரைப் பார்த்த போது எனக்கு மிகவும் சங்கடமாகவும் பயமாகவும் இருந்தது. இது இரண்டாவது முறை, நான் அவரிடம் மாட்டிக் கொள்வது. எதற்கெல்லாம் பயம் கொள்வது என்ற வரையறையே இல்லாது போயும் போயும் இந்த பக்கத்து…
முககவசமே முதல் தடுப்பூசி? – தி இந்து நாளிதழ் கட்டுரை (தமிழில் இரா.இரமணன்)

முககவசமே முதல் தடுப்பூசி? – தி இந்து நாளிதழ் கட்டுரை (தமிழில் இரா.இரமணன்)

யூனிவேர்சல் மாஸ்க்கிங் (universal masking) என்றழைக்கப்படும்  அனைவரும் முககவசம் அணிவதன் பலன்கள் குறித்து ஆய்வாளர்கள் சில கருதுகோள்களை முன்வைக்கின்றனர். இதன்படி அனைவரும் முககவசம் அணிவதனால் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன; (துணியாலான முககவசங்கள் 65%இலிருந்து 85% வரை வைரஸ் கிருமிகளை தடுக்க…
எல்லோரும் ஏன் முகக்கவசம் அணிய வேண்டும் – டி.ஜேகப் ஜான்

எல்லோரும் ஏன் முகக்கவசம் அணிய வேண்டும் – டி.ஜேகப் ஜான்

முழுமுடக்கம் மற்றும் அனைவரும் முகக்கவசம் பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமே பெருந்தொற்றினைக் குறைக்க முடியும்  - டி.ஜேகப் ஜான் பெருந்தொற்றினை வீழ்த்துவது காலத்தின் தேவை . இயல்பாகப் பெருந்தொற்று என்பது ஆலயமணி வடிவில் இருக்கும். தொடக்கத்தில் மேல்நோக்கிய சறுக்கு போலவும் (முதல்…