இரா. மதிராஜ் கவிதைகள்

இரா. மதிராஜ் கவிதைகள்

தாறுமாறான சிந்தனை ஓட்டத்தையும் சிறிது ஒழுங்கு படுத்துகிறது அந்த கருப்புத் தார்ச் சாலையின் வெள்ளைக் கோடுகள்.... * அமிலங்களால் நீல லிட்மஸ் தாள்களை சிவப்பாக்க தான் முடிகிறது... ஆனால் உன் பார்வையால் ஒரு ஜென்மத்தையே எரிக்க முடிகிறது... * "புறத் தூய்மை…
Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ மாதம்… இரா. மதிராஜின் ஹைக்கூ

இன்னும் ஏழையின் கரங்களில் ஆணி அடித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் தீர்ப்புகளால்...   சிலுவையின் நிழலில் சிறிது இளைப்பாறியிருக்கும் வெயிலுக்குக் கொஞ்சம் எறும்புகள்   கண்ணாடியைக் கொத்தும் பறவையைப் பார்த்ததும் புரிகிறது அதற்கும் வலிக்கும் அலகுக்கும் வலிக்கு மென்று..   கண்டம்…
இரா. மதிராஜ் கவிதைகள்

இரா. மதிராஜ் கவிதைகள்

        செடி வைக்கப்பட்டு நீர் ஊற்றிய உடனே விருந்துக்கு அழைப்பு பறவைகள் வருகை அவள் அப்படியொன்றும் பேரழகியல்ல, அவன் ஏறிட்டுப் பார்க்காதவரை.... கவிதைப் பொங்கல் வெறும் நீர் சிறிது நேரத்தில் ஆனது தித்திக்கும் பாயாசமாய் நிலவின் மடியில்…
r.mathiraj kavithaikal இரா. மதிராஜ் கவிதைகள் 

இரா. மதிராஜ் கவிதைகள் 

1 இந்த பூக்கள் மட்டும் எப்படி ? நல்லது, கெட்டதுக்கு என இரு வாசனையை கொடுக்க முடிகிறது ? 2 அந்த வளர்பிறையைச் சுற்றி வரையப் பட்டிருக்கும் மேகக் கூட்டங்கள் நிலாவுக்கான பின்புலத்தை ஏதோ ஒரு வகையில் அழுத்தமாகத் தான் காட்டுகிறது,…
கவிதை: மெல்லிய சத்தம் - இரா. மதிராஜ் kavithai: melliya saththam - R.mathiraj

கவிதை: மெல்லிய சத்தம் – இரா. மதிராஜ்

நாய்குட்டிகள் எல்லாம் தாயை நம்பியே பிறந்திருந்தாலும், குழந்தைகளை நம்பியே வாழ்கின்றன. நான்கு பேருக்கு முன்னால் கோபப்படும் முகத்தை ஏனோ காலைக் கண்ணாடி காட்டவில்லை. அலைப்பேசியின் அழைப்புகள் இணைக்கப் படும் முன்பே இதயம் எதையாவது சொல்லி விடுகிறது.
mathiraj kavithai மதிராஜ் கவிதை

மதிராஜ் கவிதை

ஒரு மரத்தை வளர்ப்பதால்.... ஒரு கோடை முடிந்து பூத்துக் காய்க்கும் போது இந்த வேப்ப முத்துக்களை பொறுக்கி அந்த மூதாட்டியால் தன் வாழ்க்கையை கடத்த முடியும் வடை சுட நேரிடுகையில் அந்த பூவரசு இலைகள் உள்ளங்கையில் உபயோகப்படுத்தப்படலாம் வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க…
இரா.மதிராஜ் கவிதைகள்

இரா.மதிராஜ் கவிதைகள்




குளிர்ச்சி
—————
உச்சி வெயிலில் சிறிது நேரம் கண்களுக்குக் குளிர்ச்சி
கூட்டமாய்ப் பறக்கும்
வெள்ளைக் கொக்குகள் !

வாழ்க்கை
—————–
365 நாட்களைச் சுமக்கும் தினசரி காலண்டர்

அசையாமல் இருக்கிறது
12 மாதங்களை மட்டுமே சுமக்கும் மாதக் காலண்டரோ
அங்கும், இங்கும் ஆடுகிறது.

சூழியல்
—————
வெற்றிலை, பாக்கின் மீது தவறில்லை
சுண்ணாம்பு காதல் மீதே தவறு,
அதனாலேயே ரத்தக் கறையாகிறது.

பட்ஜெட்
————–
விரல்கள் ஒவ்வொன்றாய் வெட்டி,
விஞ்ஞானக் கப்பல்
செய்யும் வேலைதான்
வாழ்க்கைக்கான பட்ஜெட்.

மோகினியாட்டம்
——————————
இருளைத் தின்று
கொஞ்சம் கொஞ்சமாக
நள்ளிரவில் உச்சம் வரும்
அந்த நிலா.

இரா. மதிராஜ்,
9788475722

இரா. மதிராஜ் கவிதை

இரா. மதிராஜ் கவிதை




உன்னுடன் பேசிய
ஒரு சில நிமிடங்களே
இன்னும் உயிருடன்
இருக்கின்றன

கண்கள் எழுதிய
கவிதைக் கண்ணீரை
வாசிப்போர் யாரோ ?

வினையே ஆடவர்க்குயிர்
அது காதலாய்
இருந்தாலும்.

தனக்கு எவ்வளவு
வேலையிருத்தாலும்
மற்றவர்களுக்கு
உதவி செய்யும்
உள்ளங்களால்
மட்டுமே
பூமி சுழலுகிறது.

பாக்கு மட்டைகளுக்கான
விளம்பரம் இப்போது
பாலித்தீன் பைகளில்.

நான் எங்கே இருந்தாலும்
இதயம் எப்போதும்
உன்னிடம் மட்டுமே.

விலையுர்ந்த மகிழுந்தில்
சோகப் பாடல்களே
கேட்கின்றன

பரபரப்பான சாலை
ஓரங்களில்
முட்செடி
வேடமிட்டு
ஒளிந்திருக்கும்
இலந்தை.

– இரா. மதிராஜ்

காங்கேயம்
திருப்பூர் மாவட்டம்
அலைப்பேசி
9788475722.