அடர் மழை (கவிதை) - இராஜேஷ் சங்கரப்பிள்ளை

அடர் மழை (கவிதை) – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

பல மனிதர்கள் பல வாசனைகள் ஒன்றுக்கொன்று திணறடிக்க... முகம் சுளிக்காமல் சுவைத்துக் கொண்டிருந்தேன் ... ஆம்.... சக பயணியாய். அமைதியான மனிதர்கள் . முழுக்க தெம்பற்ற தேகம் கை காட்டுகிறார். பேருந்தும் நிற்கிறது. திரும்பவும் கை காட்டி போ.... என்கிறார். அடுத்த…
Father -Poem | அப்பா - கவிதை

ச.சக்தி கவிதைகள்

வரைதல்  யானையையும் காட்டையும் ஒருசேர  வரைந்து பார்க்கிறேன் வரைவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகியே  நிற்கிறது காட்டையும் தன் தாயையும் ‌ இழந்த அந்த குட்டி யானை , நிறம் மரத்தடி நிழலில் படரும் வெயிலின் நிழலை வரைந்து வரைந்து அழிக்கிறேன் தொடர்ந்து கொண்டே…
ந க துறைவன் கவிதைகள் – மழை

ந க துறைவன் கவிதைகள் – மழை

      மழை மழைக்காக எப்பொழுதும் காத்திருக்கிறது பூமி மழைக்காக எப்பொழுதும் காத்திருக்கின்றன உயிரினங்கள் ஊர்வன, பறப்பன, நடப்பன மழைக்காக எப்பொழுதும் மகிழ்ச்சியாய் காத்திருக்கின்றன மரம் செடிகொடிகள் தாவரங்கள் மழைக்காக எப்பொழுதும் காத்திருக்கின்றன ஆறு குளம் குட்டை ஏரி வாய்க்கால்கள்,…
ayyanar edadi kavithaikal அய்யனார் ஈடாடி கவிதைகள்

அய்யனார் ஈடாடி கவிதைகள்

  1.நம்பிக்கை அதிகாலைச் சூரியன் உதயத்தின் மடியில் கசாப்புக்கடையில் முட்டி மோதுகிறது வெள்ளாட்டங்கெடாக்கள் கொடி நரம்புகள் அறுபட்டு கொதிக்கும் உதிரம் திரண்டோட தலை கீழாகத் தொங்கும் தாய் ஆட்டினைப் பார்த்து. பசிக்கும் வயிற்றில் பூவரசம் பூக்களை இலையோடு மெல்ல கடிக்கிறது தூக்குச்சட்டியோடு…
kavithai: innum sila thinangalil mazhai - s.rajkumar கவிதை: இன்னும் சில தினங்களில் மழை - ச. இராஜ்குமார்

கவிதை: இன்னும் சில தினங்களில் மழை – ச. இராஜ்குமார்

வீட்டின் முன் கரைந்து கொண்டிருந்த காகத்திற்கு கொஞ்சம் உணவு வைத்தேன் இன்னும் சில தினங்களில் மழை என்பதை உணர்ந்த காகம் உணவை விடுத்து சில குச்சிகளை மட்டும் எடுத்து கொண்டு கிளைக்கு திரும்பியது .. மரத்தில் புதிதாக கூட்டை கட்டிகொண்டிருந்த காகம்…
kavithai: padarum mazhai - kavignar s.sakthi கவிதை: படரும் மழை - கவிஞர் ச.சக்தி

கவிதை: படரும் மழை – கவிஞர் ச.சக்தி

நேற்று இரவு பொழிந்த மழையில் நனையாமல் இருக்கிறது குழந்தையின் கனவுகள் கூரையின் எரவானத்தின் கீழே மண் சுவரில் மழையை வரைந்து கொண்டிருக்கும் சிறுவனின் கையில் முளைக்க ஆரம்பிக்கிறது ஒரு துளி காணல் நீர் வீடெங்கும் நிரம்பி வழியும் குழந்தையின் சிரிப்பொலியில் மறைந்து…
மாரியம்மன் திருக்கல்யாணம் கவிதை — பேரா. முனைவர் எ. பாவலன்

மாரியம்மன் திருக்கல்யாணம் கவிதை — பேரா. முனைவர் எ. பாவலன்



மாரியம்மன் திருக்கல்யாணம்

                          

 எங்க ஊரு மாரியாத்தாளுக்கு

ஆடி மாச(ம்) மூணாவது செவ்வா

காப்புக் கட்டி கெடா வெட்டி

செவ்வாவோட செவ்வா

எட்டா நாளு கூவு ஊத்தி

தேரு ஈத்து திருவிழா

பண்ணுவது வழக்கம்!

 

மாரியாத்தா தா(ன்)

எங்க ஊரு கட்டிக் காப்பாத்தறவ

அதனால பிறாத்தன காரங்களா(ம்)

தலா ஒரு பொறுப்பு ஏத்துக்குவாங்க

 

அப்படித்தா(ன்)

எங்க பக்கத்து வூட்டுலகீறவரு

எட்டு நாளைக்கு

கெரகம் சிங்காரிக்கிர வேலையும்

அதுக்கு பூவு பூஜை எல்லா

செலவையும் ஏத்துக்கினாரு.

 

எட்டா நாளு

கூவு ஊத்துருது முன்னால

வயனியன் பம்பவுடுக்க காரங்களும்,

எல்லா(ம்) சாமிகளையும்

வர்ணிச்சி ஆத்தா மேல் இட்டுக்கட்டி

பாடுவா(னு)ங்க.

 

அப்பதா(ன்) எங்கீருக்கிற

சாமியும் ஓடியாரு(ம்)

நான் சேத்து காளி செல்லிடா…

நான் கன்னிமாடா…

நான் நாகாத்தம்மாடா…

நான் ஊத்துக்கோட்டைகாரிடானு…

சொல்லுங்க.

 

எல்லார்கிட்டடையும்

கூவூத்த சம்மதமா ஆத்தான்னு

வயனியனும்

பூசாரி பெரியண்ணனும் கேப்பாங்க.

 

எல்லோரு(ம்)

எனக்கு மனப்பூர்வ சம்மதடா

எனக்கு முழு திருப்திடா

எனக்கு பண்ண இந்த திருக்கல்யாணத்துல

சம்மதம்……  சம்மதம்….. முழுசம்மதடா…

ஊத்துடா

இந்த ஊர் மக்களுக்கு கூவன்னுங்க….

கடைசியா அவுங்கவுங்க

வாய்க்கு வந்த வார்த்தையே

சட்டு புட்டுன்னு சொல்லிட்டு

போய்டுங்க!

 

அப்பதா(ன்) பார்வதி அக்கா

அவுங்க வூட்டுக்காரருக்கு

சோறு போட்டுக்குனு

இருக்கும்போது

வயனிய பம்ப உடுக்க

மைக்ல ஊர் முழுவதும் கேக்குனும்னு

ஸ்பீக்கர் பாக்ஸ் சத்தத்தில்

அடிச்சுக்குனே இருந்தா(ன்).

 

பார்வதி அக்கா

சோறு போடும் போது தலையைச்

சோங்கி… சோங்கி ஆடிக்கினே

சோறு போட்டுச்சு.

 

என்னாடி ஆச்சின்னாரு

அவங்க வூட்டுக்காரு

ம்ம்ம்….. ம்ம்ம்………ம்ம்ம்…….

(உறுமல் சத்தம்)

 

உடுக்கை அடிக்குறாங்களே!

தெரியலையா(டா)னுச்சு

 

அவுங்க வூட்டுக்காருக்கு

வந்துச்சு கோவம்

உட்டாரு ஒன்னு

அப்படியே ஒதுங்கிச்சி சாமி(!)

 

அவர் சாப்பிட்டு வெளியே போனாரு

 

சத்தம் போட்டுக்குனே

அங்கிருந்து ஆடிக்கினே வந்துச்சு

அய்யய்யோ…..

மாரியாத்தா வரா…..

வழிவுடுங்கோன்னு ஒதுங்கிட்டாங்க.

 

எனக்கு கொஞ்சம் கூட

சம்பந்தம் இல்லை டா….

என்னைய யாருனா கேட்டீங்களான்னுச்சு(?)

கூவூத்தன பிறகு மாரியாத்தா!

 

கூடியிருந்த இளவட்ட எல்லா(ம்)

பார்வதி அக்கா

உங்க வீட்டுக்காரு

குடிச்சிட்டு வராருனுடாங்க.

 

சட்டுனு அதுவும்

ஊர்ல மழை வர வைக்க மாட்டே(ன்)

ஊரக் கட்டிக் காப்பாத்த மாட்டே(ன்)

மூணு தலைச்ச புள்ளைகள

காவு வாங்குவேன்னு

சொல்லிட்டு மலயேறிடிச்சி.

 

எங்க ஆயா…

அதெ எங்க

அப்பா பெத்த கிழுவி.

அங்க இங்க போவாதன்னும்

ஏன்னு கேட்டா?

நான் தலைச்ச புள்ளைன்னும்.

 

ஆனாலும்….

ஒவ்வொரு ஆடிமாசமும்

ஊர்ல மாரியம்மனுக்கு

காப்பு கட்டி கூழ் ஊற்றும் போது….

 

சொரணை கெட்ட தனமாக

வருவது பார்வதி அக்காவா?

இல்ல….

மாரியாத்தாவா?

அப்படின்னு எங்களால

இன்னிக்கு வரைக்கும் சொல்ல முடியல!!

                                 

                                              – பேரா. முனைவர் எ. பாவலன்

 

Mazhai Poem By Suryanila சூர்யநிலாவின் மழை கவிதை

மழை கவிதை – சூர்யநிலா




இந்த நதிகளுத்தான் எத்தனை கோபம்
பெய்த மழையெல்லாம் தன் மீதே
பொழிவதாக.
அது
ஆவேசத்தில் உருண்டு, மிரண்டு
பெரும் பாறைகளில் மோதிக் கொண்டு
உடைந்துப் போகிறது.
மழை,
நதிகளுக்காக பெய்வதில்லை.
சாக்கடைகளில் விழவும்
அவதானிப்பதில்லை.
அது எல்லோருக்குமாக பெய்கிறது.
நிலங்களை தழுவிப் பயிராகிறது.
மரங்களை புணர்ந்து கனியாகிறது
மானிடத்தில் நுழைந்து உயிர் நீராகிறது.
மழை,
தூய்மையானது
மண்ணில் விழுந்துதான்
அது அழுக்காகிப் போகிறது
மழை,
எல்லோருக்குமானது
அதை அவரவர் சுயத்தில்
மாற்றிக் கொண்டு
வைகிறார்கள்..
நொய்கிறார்கள்..
கொண்டாடுகிறார்கள்..
மழை,
எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் பொழியத் தொடங்குகிறது.
மழைக்கு,
எல்லாம் ஒன்றுதான்

Mandradugirom Mazhaiye Poem by Lingarasu Sadaiyan லிங்கராசு சடையனின்மன்றாடுகிறோம் மழையே கவிதை

மன்றாடுகிறோம் மழையே கவிதை – லிங்கராசு சடையன்




நீ சுண்டி விடும்போது கண்ணீர்த் துளி
தூவும் போது மழைத்துளி
பாய்ந்து வரும் போது நீர் வீழ்ச்சி
பதுங்கித் தாக்கும் போது புயல்
கால்வாயில் போகையில் நீ ஓடைத் தண்ணீர்
கரை கொண்டு ஓடுகையில் ஆற்று நீர்
கடலில் மட்டும் கரிக்கும் உப்புநீர்
‘உப்பிட்ட வரை நினைக்கச்
சொல்லும் உனது விஸ்வரூபம்
எங்களின் உயிரிலும் வாழ்விலும்
நீ ( ர்) இல்லாமல் எதுவும் இல்லை
சில நேரம் பலரைக் காயவிட்டும்
உன் அருமையை உணர வைப்பாய்
அணைகளில் இருந்து கொண்டு
அரசியலுக்கும் துணை போவாய்
நீ எப்படியாகிலும் இருந்து கொள்
நாங்கள் உன்னை ‘ மழைநீர் உயிர்
நீர்’ என்று சாசனம் செய்து
வைத்திருக்கிறோம்
நீ மழையாய்க் கொட்டி எங்கள்உயிரை எடுத்து விடாதே
மன்றாடுகிறோம்….