Posted inBook Review
நூல் அறிமுகம்: எழுத்தாளர் ராசி அழகப்பனின் “மேடை நாடகங்கள்” – சுப்ரபாரதிமணியன்
மேடை நாடகங்கள் : ராசி அழகப்பன்… சுப்ரபாரதிமணியன் “ பள்ளி மாணவர்களுக்கு 5 நிமிட மேடை நாடகங்கள்” என்பது புத்தகத்தின் முழுத்தலைப்பாகும். இன்றையக்கல்வித்துறை பலவகை நெருக்கடிகளால் நிறைந்திருக்கிறது, ஆசிரியர்களுக்க்கும் இருக்கும் வேலைப்பளுவும் மன அழுத்தங்களும் அதிகம். முன்பெல்லாம் பள்ளிகளில் நடக்கும் விழாக்களில் நாடகங்கள் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். ஆசிரியர்கள் உருவாக்கும் நாடகங்களில் தனித்தன்மையும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் செய்தி சொல்ல பல விசயங்கள் இருக்கும்.பல சமயங்களில் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து நாடகங்களை உருக்குவர். இப்போதைய கல்விச்சூழலில் அது போல் மேடை நாடகங்கள் அவ்வளவாய் உருவாவதில்லை. புத்தகங்கள், பத்திரிக்கைகளில் வெளிவந்த மேடை நாடகங்களைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.. அவ்வகையில் மேடை நாடகங்கள் : ராசி அழகப்பன்அவர்களின் இந்நூல் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடியது. எளிமையான மொழியிலும் எளிமையான அரங்க அமைப்பிலும்…