செ.புனிதஜோதியின் கவிதை

செ.புனிதஜோதியின் கவிதை




அருள்
********
துக்கம்
நெஞ்சடைக்கும் வேளையில்
உன்னை வந்துசேர
என்னை வந்து சேர்கிறாயா என்ன?

புரியாத புதிராய்
வலம் வந்துகொண்டிருக்கிறேன்…

உன் அஷ்டோத்திரத்தை
நாதொடுத்து மாலையாக்கி
சமர்பிக்கிறேன்…

பொதியை இறக்கிவிட்ட
கழுதை போல பெருமூச்சுவிட்டுக்கொள்கிறேன்
உன்சன்னதியில்…

உணர்வின் கொதிகலன்
அடிபிரதட்சணையைப் போல்
மெல்ல,மெல்ல முன்நோக்கி நகர்த்துகிறது..

உன் முன்நின்று
தீபாராதனை போல்
என் மனநிலையை ஆரத்தியாக்குகிறேன்..

கண்சிமிட்டி
உன்னிலிருந்து உருண்டுவிழுகிறது
மலர்..

உன் கருணையில்
நனையும்
மரமாய் மெய்மறந்து நிற்கின்றேன்

செ.புனிதஜோதி

Nazhuvi selgirathe Kanivumigu Karunai Poem By Vasanthdheepan நழுவிச் செல்கிறதே கனிவு மிகு கருணை கவிதை - வசந்ததீபன்

நழுவிச் செல்கிறதே கனிவு மிகு கருணை கவிதை – வசந்ததீபன்




(1)
துயரம் கசியும்
ஒதுக்கப்பட்ட ஆன்மாவின் ஓலம்
உனது இதயத்தை
எட்டவில்லையா ?
விண்மீனாய் ஜொலிக்கிறாய்
பார்வையால் கூட தீண்டமுடியாத
வெகு அப்பால்…
தளிர்கள் முகிழ்க்கும் வாசனை
வெளிகளை நிறைக்கிறது
ஓலைகளில்
யாரோ
இசைத்துக் கொண்டிருப்பதை
அதன் அசைவுகளில்
சொல்லுகிறது பனைக்கூட்டம்
உழுத காட்டின் ஊடாக
சுருண்டு கிடக்கிறது
சாரைப்பாம்பு ஒற்றையாக
நான்
எட்டு வைக்கிறேன்
கலங்கிய உள்ளம் சுமந்து
உன்னை நோக்கி.

(2)
மழை நீரில் அடித்துச் செல்லப்படும்
விதையாய் நான்
எந்நிலத்தில் நின்று தரிப்பேன் ?
திணைகளெல்லாம் திரிந்து
பாலையாகி விட்டதே!
வனமிழந்த பறவையாக
இரை தேடி அலைகிறேன்
நீர் ஆதாரங்கள் யாவும்
மனிதக் கூண்டுகளாகிவிட்டனவே !
தலைகீழ் மரத்தில் பறவைகள்
சிதறிப் பறக்கின்றன
தேங்கியிருக்கும் சொற்ப
குளத்து நீரில் தெரிகிறது
துரத்தும் கோடைக்குத் தப்ப
அவை போலவே நானும்

ஆனால் திசையறியாமல்
திகைக்கிறது பெண்ணே உன்னால்
என் நிகழ் காலம்.

தொழிலாளர்களுக்கு எந்தக் கருணையும் மீதமில்லை – டி.கே.ராஜலட்சுமி (கி.ரமேஷ்)

தொழிலாளர்களுக்கு எந்தக் கருணையும் மீதமில்லை – டி.கே.ராஜலட்சுமி (கி.ரமேஷ்)

  ஊரடங்கையும், கண்டனப் போராட்டங்கள் நடத்தத் தொழிலாளர்களை அணிதிரட்ட முடியாமல் இருக்கும் நிலையையும் சாதகமாகக் கொண்டு உற்பத்திக்கு மீட்டுயிர் கொடுத்தல், பொருளாதாரத்தை ஊக்குவித்தல் என்ற பெயரில் தொழிலாளர் சட்டங்களில் மிகப்பெரும் மாற்றங்களைப் பல மாநில அரசுகள் புகுத்துகின்றன. -டி.கே.ராஜலட்சுமி மார்ச் 24ஆம்…