பாப்பா கருவின் 1௦ வது வாரம் தாயின் கருக்காலத்தின் 10 வது வாரத்தில், ஒரு கரு தன்னை அடையாளம் காணக்கூடிய மனிதனாக மாறத் தொடங்குகிறது மற்றும் பிறக்கும் நேரத்தில் அவர்கள் கொண்டிருக்கும் அம்சங்களை அப்போதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொள்கிறது. 10…
பட்டுக்கோட்டையா? பாட்டுக்கோட்டையா? பாட்டுடைக் கவிஞன் பாரதிக்குப் பிறகு, தமிழ்க்கவிதையில், எளிமையும், இனிமையும், புதுமையும் புகுந்து நவீனக் கவிதை பிறந்தது. . தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டது. கவிதை புதிய பரிமாணத்தில், புதிய களங்களில்,தளங்களில் பயணித்தது. இவர்களை தமிழ் உலகம் பாரதி பரம்பரையினர் என்று பெருமைப் படுத்துகிறது. இந்தப் பரம்பரையில் வந்த பாரதிதாசனும், , பட்டுகோட்டை கல்யாணசுந்தரமும் பாராட்டப்பட வேண்டியவர்கள். துரோணரை நேரில் கண்டு பயிற்சி பெறாமலே அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வில்வித்தை படித்து ,தலை சிறந்தவனாய் விளங்கிய ஏகலைவன் போல,பாவேந்தர் பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானசீக குருவாக ஏற்று, பாரதிதாசனே வியந்து பாராட்டும் கவிஞராகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
‘பாட்டுக்கோட்டை’யான பட்டுக்கோட்டை..!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (பிறப்பு: ஏப்ரல் 13, 1930 -உதிர்வு: அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர்.. எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை ஆணித்தரமாக வலியுறுத்திப் பாடுவது இவருடைய சிறப்பு. இப்போது இவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.இந்த பூமிப்பந்தில் 29 ஆண்டுகளே வாழ்ந்தாலும், தான் எழுதிய பாடல்களால் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ‘பாட்டுக்கோட்டை’யாகவே அறியப்பட்டவர் பட்டுக்கோட்டையார். திரையுலகப் பாடல்களில் பட்டிருந்த கறைநீக்கி, மக்கள் நெஞ்சம் நிறைவுறவும், வியத்தகு செந்தமிழில் எளிமையாக அருமையான கருத்துக்களளும், முற்போக்குக் கருத்துக்களும் கொண்ட பாடல்கள் எழுதி குறுகிய காலத்தில் புகழ் அடைந்தவர் பட்டுக்கோட்டையார். கிட்டத்தட்ட 189 படங்களில் பாட்டு எழுதி பெருமை தேடிக்கொண்டவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
கவி பாடும் விவசாய குடும்பம்..!
தமிழ் நாட்டின் அன்றைய தஞ்சை மாவட்ட வளமான மண்ணில், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் குக்கிராமத்தில், 13.04.1930-ல் பிறந்தார்.– யின் இளைய மகனாகஇவரது தந்தையின் பெயர் அருணாச்சலனார்; ஈந்த அன்னையின் ப்பெயர் விசாலாட்சி, இந்த தம்பதியின் இளைய மகனாக பட்டுக்கோட்டை அவதரித்தார். அவர்களின் குடும்பம் ஓர் எளிய விவசாய குடும்பம். இவரது தந்தையும்கூட கவி பாடும் திறன் பெற்றவர். ‘முசுகுந்த நாட்டு வழி நடைக்கும்பி’ எனும் நூலையும் அவர் தந்தை இயற்றியிருக்கிறார். தந்தை கவிஞராக இருந்ததால், மகன்களான கணபதி சுந்தரமும், கல்யாண சுந்தரமும் கவிபாடும் திறனை இயல்பிலேயே இல்லத்திலேயே வளர்த்துக் கொண்டனர்..
அண்ணன் தந்த கல்வி..! பட்டுக்கோட்டையார் துவக்கக்கல்வியை அண்ணன் கணபதிசுந்தரத்தோடு உள்ளூர் சுந்தரம்பிள்ளை என்பவரின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். அத்துடன் அவரது பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. அவருக்குத் திண்ணைப் பள்ளிக்கூடம் செல்ல பிடிக்கவில்லை. இரண்டாம் வகுப்புக்குப் பிறகு கல்யாணசுந்தரம் பள்ளிக்கு போகவில்லை.தன் அண்ணனிடமே அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொண்டார். அவருக்கு வேதாம்பாள் என்ற சகோதரியும் இருந்தார்.
பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம், திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள்.
மக்கள் கவிஞனின் மகத்துவம்..! கல்யாணசுந்தரம் தனது 19 வது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் அனைத்தும் கிராமியப் மணம் கமழுபவை. பாடல்களில் உணர்ச்சிகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர் கல்யாணசுந்தரம். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைக் கனவுகளையும், ஆவேசத்தையும், அற்புத பாடல்களாக வடித்து, இசைத்தார். இவர் இயற்றிய கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டது. 1955ஆம் ஆண்டு “படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். உழைப்பாளி மக்களும், அறிவால் உழைக்கும் மக்களும் கூட தங்களுக்காக திரையுலகிலே குரல் கொடுத்து வாழ்வை மேம்படுத்த முன்னின்ற பாடலாசிரியரை இவரிடம் இருந்ததைக் கண்டனர்.
பட்டுக்கோட்டையின் இளமை..!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நல்ல குரல் வளம் மிக்கவர். அதனால் பாடுவதிலும் வல்லவர். .நாடகம் மற்றும் திரைப்படம் பார்ப்பதிலும் ஆர்வம் மிகுந்தவர். கற்பனை வளமும் இயற்கை ரசனையும் நிறைந்தவர் கல்யாணசுந்தரம். இந்த குணமே இவரை இயல்பாகவே கவிதை புனைய வைத்தது.. 1946 ஆம் ஆண்டு தனது 15வயதில் ஏற்பட்ட அனுபவத்தை அவரே கூறுகிறார்.
‘சங்கம் படைத்தான் காடு என்ற எங்கள் நிலவளம் நிறைந்த சிற்றூரைச் சேர்ந்த துறையான்குளம் என்ற ஏரி இருக்கிறது. அந்த ஏரிக்கரையில் நான் ஒரு நாள் வயல் பார்க்கச் சென்று திரும்பும் போது வேப்பமரநிழலில் அமர்ந்தேன். நல்ல நிழலோடு குளிர்ந்த தென்றலும் என்னை வந்து தழுவியது. நான் அப்போது எதிரிலிருக்கும் ஏரியையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். தண்ணீரலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள் “எம்மைப் பார், எம் அழகைப் பார்” என்று குலுங்கியது. அங்கே , ஓர் இளங்கெண்டை பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் கிடந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்தவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. அதுவரை மெளனமாக இருந்த நான் என்னையும் மறந்தவனாய்ப் பாடினேன்” என்றார். அதுதான் இந்தப் பாடல்
இவ்வாறு ஆரம்பித்த நான் வீடு வரும்வரை பாடிக்கொண்டு வந்தேன். அப்பாடலை பலரும் பலமுறை பாடச் சொல்லி மிகவும் இரசித்தார்கள் என்றார்.
இடதுசாரி இயக்கத்தின் இடையறா ஈர்ப்பாளி..! கல்யாணசுந்தரம் இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார். நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.
பட்டுக்கோட்டையின் பன்மமுக பரிமாணங்கள்..!
விவசாயி
மாடுமேய்ப்பவர்
மாட்டு வியாபாரி
மாம்பழ வியாபாரி
இட்லி வியாபாரி
முறுக்கு வியாபாரி
தேங்காய் வியாபாரி
கீற்று வியாபாரி
மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
உப்பளத் தொழிலாளி
மிஷின் டிரைவர்
தண்ணீர் வண்டிக்காரர்
அரசியல்வாதி
பாடகர்
நடிகர்
நடனக்காரர்
கவிஞர்
தன்மானம் மிக்க பட்டுக்கோட்டையார்..!
திரை உலகில் நுழைந்து பாட்டு எழுத என்று பட்டுக்கோட்டையார் சென்னைக்கு வந்தார். அங்கு ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் 10-ம் நெம்பர் வீட்டில் ஒரு அறையை 10 ரூபாய்க்கு வாடகைக்கு பிடித்தார். அது மிகவும் சிறிய அறை. அதில் அவரது நண்பர்கள் ஓவியர் கே.என். ராமச்சந்திரன், நடிகர் ஓ.ஏ.கே.தேவர் இருவரும் அங்கே தங்கி இருந்தனர். பட்டுக்கோட்டை துவக்க காலத்தில் பணத்துக்கு கஷ்டப்பட்டாலும் துணிச்சல்காரராகவும் தைரியசாலியாகவும் இருந்தார். சினிமா கம்பெனி ஒன்றுக்கு அவர் பாட்டெழுதி கொடுத்தார். பணம் வந்து சேரவில்லை. பணத்தை கேட்க பட அதிபரிடம் சென்றால்,. ‘பணம் இன்னிக்கு இல்லே! நாளைக்கு வந்து பாருங்கோ’ என்று எப்போதும் ஒரே பதிலைத் தந்தார். ஆனால் கல்யாணசுந்தரமோ பணம் இல்லாமல் நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். ‘நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்’ என்ற பட அதிபர் வீட்டிற்குள் போய்விட்டார்.உடனே கல்யாணசுந்தரம் சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும், பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, மேஜை மீது வைத்துவிட்டு சென்றுவிட்டார். கொஞ்ச நேரத்தில் படக்கம்பெனியைச் சேர்ந்த ஆள் பணத்துடன் அலறியடித்துக் கொண்டு கல்யாணசுந்தரத்திடம் வந்து பணத்தை கொடுத்தார். அப்படி என்னதான் அந்த சீட்டில் எழுதினார் பட்டுக்கோட்டை? இதோ ‘தாயால் வளர்ந்தேன்; தமிழால் அறிவு பெற்றேன்; நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்; நீ யார் என்னை நில் என்று சொல்ல?’இதைப் படித்துப் பார்த்த பட அதிபர் அசந்து போனார். பணம் வீடு தேடி பறந்து வந்தது.
மனித நேயம் மிக்க பட்டுக்கோட்டையார்..!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அற்புதமான கவியாற்றலில் மனதை பறிகொடுத்தவர் கவியரசு கண்ணதாசன். அதுபோலவே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கண்ணதாசனிடம் மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு புகழின் உச்சியில் இருந்து.ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் படங்களுக்கு பாடல் எழுதி வந்த பட்டுக்கோட்டையை, கண்ணதாசன் நேரில் சந்தித்து, ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டார்.அதற்கு அவர் மிகுந்த பற்றுதலோடு பாடல் எழுதித்தர இசைந்ததை கண்ணதாசன் ஒரு சமயம் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். மனித நேயமும், துணிச்சலும், தன்னம்பிக்கையும் உள்ள மாமனிதர் பட்டுக்கோட்டையார்.அந்த காலத்தில் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர் திரைப்பட கவிஞர்களை ஏளனமாகவும்,கேலியாகவும் விமர்சித்தார். கவிஞர் கண்ணதாசனும் அதற்குப் பலியானார். ஒரு விழாவில் பத்திரிகை ஆசிரியரை பட்டுக்கோட்டையார் சந்தித்தபோது, க்ண்ணதாசனைக் குறிப்பிட்டு, ”என்னடா கவிஞர்கள் என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்கு கவிதையைப் பற்றி என்னடா தெரியும்?” என்று கேட்டு உதைக்கப் போனார்.
எளிமையான பட்டுக்கோட்டை..!
“உங்க வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில எழுதணும்” -என்று ஒரு நிருபர், பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தரத்திடம் கேட்டாராம். பட்டுக்கோட்டையார் அந்த நிருபரை ராயப்பேட்டையிலிருந்த தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம் நடந்திருக்கிறார். பிறகு இருவரும் ரிக்ஷாவில் ஏறி மௌண்ட் ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்புறம் பஸ்ஸைப் பிடித்து கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் இறங்கி இருக்கின்றனர். கேட்டைக் கடந்து ஒரு டாக்ஸி பிடித்து வடபழநியில் தம் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்கினார்கள். கூடவே வந்த நிருபர், “கவிஞரே, வாழ்க்கை வரலாறு” என்று நினைவூட்டி இருக்கிறார்.உடனே பட்டுக்கோட்டையார், “முதலில் நடையாய் நடந்தேன், ரிக்ஷாவில் போனேன், பிறகு பஸ்ஸில் போக நேர்ந்தது. இப்போது டாக்ஸியில் போகிறேன். இதுதான் என் வாழ்க்கை. இதுல எங்கே இருக்குது வரலாறு?” என்று சிரித்துக்கொண்டே போய்விட்டாராம். இந்த எளிமைதான் பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம்.
வேடிக்கையும், விவேகமும் மிக்க கவிஞர்..!
ஒரு சமயம் சென்னையில் நகரப் பேருந்தில் கல்யாணசுந்தரம் தான்பயணம் செய்து கொண்டிருந்தபோது, வழியில் ஓர் இடத்தில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு அங்கே பழுது பார்க்கும் வேலை நடைபெற்றுக்கொண்டு இருந்தது. இதனை அறிவிக்க வாகனங்களுக்கு எச்சரிக்கையாக சிவப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே வந்த பட்டுக்கோட்டையார் தன் அருகிலே இருந்த நண்பரிடம், ‘எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்பட வேண்டுமோ, அங்கே எல்லாம் சிவப்பு கொடி பறந்துதான் அந்த பணிகள் நடக்க வேண்டும் போலும்’ என்றார்.
ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார் நாடகத்திற்கு சரியான வசூல் இல்லை.. எனவே எல்லோரும் தங்கள் குழுவினருடன் பசி, பட்டினியுமாக சென்னை திரும்ப பேருந்தில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தை தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்த பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது. அனைவரும் குதூகலமாக கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்கள்.
‘சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்துனா குன்னக்குடி போற வண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா!’
இந்த பாட்டு ஆரவல்லி படத்தில் வருகிறது..!
பட்டுக்கோட்டையார் சிறந்த தத்துவப் பாடல்கள் மட்டுமின்றி, நகைச்சுவை பாடல்களுலும் வல்லவர். ‘ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- சிலருக்கு ஆறறிவில் ஓரறிவு அவுட்டு – இருக்கும் ஐந்தறிவும் நிலைக்குமுன்னா அதுவுங்கூட டவுட்டு!’
பட்டுக்கோட்டை . ‘நான் வளர்த்த தங்கை’ என்ற படத்திலே போலி பக்தர்களை நையாண்டி செய்கிறார் .
இதோ அந்தப் பாடல் ‘பக்த ஜனங்கள் கவனமெல்லாம் தினமும் கிடைக்கும் சுண்டலிலே… ஹா… ஹா… பசியும், சுண்டல் ருசியும் போனால் பக்தியில்லை பஜனையில்லை’
சமுதாயப் பாடல்களை ஏராளமாக எழுதி இருக்கிறார். ‘வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை வயிறு பசிக்கிறவன் விடமாட்டான் வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்…
எழுதிப் படிச்சு அறியாதவன்தான் உழுது ஒளச்சு சோறு போடுறான். எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன் சோறு போடுறான் அவன் கூறு போடுறான்…’
‘சங்கிலித் தேவன்’ என்ற திரைப்படத்தில்
‘வீரத்தலைவன் நெப்போலியனும் வீடு கட்டும் தொழிலாளி! ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின் செருப்புத் தைக்கும் தொழிலாளி! விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு காரு ஓட்டும் தொழிலாளி! விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட சர்.சி.வி.ராமனும் தொழிலாளி
”பொறக்கும் போது – மனிதன் பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது – எல்லாம் இருக்கும் போது பிரிந்த குணம் இறக்கும் போது சேருது”
படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957
‘திருடாதே’ திரைப்படத்தில் குழந்தைகளுக்கு சொல்வது போல பெரியவர்களுகு பொதுவுடமை போதித்தல். ‘கொடுக்கிற காலம் நெருங்குவதால் – இனி எடுக்கிற அவசியம் இருக்காது. இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால் பதுக்கிற வேலையும் இருக்காது. ஒதுக்கிற லையும் இருக்காது. உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்கிற நோக்கம் வளராது மனம் என்னருமை காதலிக்கு வெண்ணிலவே ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
கருத்தாழமும் அறிவுக்கூர்மையும் சமூகசமத்துவம் பற்றிய வேட்கையும் விடுதலை உணர்வும் ஆத்மநேயத் துடிப்பும், இயற்கை மனிதர்கள் மீதான நேசிப்பும் என விரிவு கொண்டதாகவே பட்டுக்கோட்டையாரினது கவிதை வெளி இருந்தது. அவரது திறமைக்கும் ஆற்றலுக்கும் அவரின் ஆயுள் மிகக் குறுகியது.29 ஆண்டுகள் மட்டுமே..!ஆனால் அவர் விட்டுச் சென்றுள்ள தடம் ஆழமானது. 1959-ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கும், கௌரவாம்பாளுக்கும், குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) பட்டுக்கோட்டை அகால மரணம் அடைந்தார். 1959ஆம் ஆண்டு கல்யாணசுந்தரம் மறைந்த தினத்தில் கண்ணதாசன்
“வாழும் தமிழ்நாடும் வளர்தமிழும் கலைஞர்களும் வாழ்கின்ற காலம் வரை வாழ்ந்து வரும் நின்பெயரே!”
என்ற பாடலை எழுதி தங்களது நட்பை வெளிப்படுத்தினார். மக்கள் கவிஞர் என்ற பட்டம், பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன
பட்டுக்கோட்டை பற்றிய ஆவணப்படம்…!
பட்டுக்கோட்டையாரைப் பற்றி ஆவணப்படம் எடுத்திருக்கிறார், அம்பத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன். இதில் பட்டுக்கோட்டையாரின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது கவிதை உலகம், இடதுசாரி ஈடுபாடு, வறுமை, திரை அனுபவங்கள் அனைத்தும் அவருடன் நெருக்கமானவர்ளுடனான பேட்டிகளின் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டையாரின் மனைவி கௌரவாம்பாள், அவரது பால்ய நண்பர் சுப்ரமணியம், தியாகி மாயாண்டி பாரதி, எம்.எஸ்.விஸ்வநாதன், உள்பட கவிஞருக்கு நெருக்கமானவர்கள் அனைவரின் பேட்டிகளும் இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், கவிஞரின் முக்கியமான 12 திரைப்பாடல்களின் காட்சியும், அவரது அரி்ய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது ஆவணப் படத்தின் தரத்தை உயர்த்துகிறது.
“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா , கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா , எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா , விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா , சிலர்குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா “. இறப்புக்குப் பின்னர் பெருமைகள்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், சந்திரபாபு, டைரக்டர்கள் பீம்சிங், ஏ.பி.நாகராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.1981ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, கவிஞருக்கு பாவேந்தர் விருது வழங்கியது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும் மக்கள் கவிஞரின் நெருங்கிய நண்பருமான எம்.ஜி.ஆர். அவர்களிடமிருந்து கவிஞரின் மனைவி பாவேந்தர் விருதைப் பெற்றுக் கொண்டார். 1993ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிவித்தவாறு கவிஞரின் அனைத்துப் பாடல்களும் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.பட்டுக்கோட்டையில் மக்கள் கவிஞருக்கு மணிமண்டபம் அரசால் கட்டப்பட்டு 2000ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மக்கள் கவிஞரின் புகைப்படங்கள், அவரது கையெழுத்துப் பிரதிகள் அங்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது இன்று பட்டுக்கோட்டை போல மக்களுக்கான கருத்துக்களை விதைக்கும் பாடலாசிரியரைத் தேடவேண்டியுள்ளது.
முதல் இந்திய பெண் வேதியலாளர்.-அசிமா சட்டர்ஜி– அசீமா யார் ? அசிமா சாட்டர்ஜி இந்தியாவின் முதல் பெண் வேதி விஞ்ஞானி. (பிறப்பு:23 செப்டம்பர் 1917 – இறப்பு:22 நவம்பர் 2006) இவர் இந்திய கரிம வேதியியல் மற்றும் , பைட்டோமெடிசின் என்னும் தாவரமருந்து துறை ஆகிய துறைகளில் விற்பன்னர். அவரது மிகவும் குறிப்பிடத்தக்க சிறந்த பணிகள் என்பவை : வின்கா ஆல்கலாய்டுகள்(vinca alkaloids) பற்றிய ஆராய்ச்சி, கால்-கை வலிப்பு எதிர்ப்பு மருந்துகளின் வளர்ச்சி மற்றும் மலேரியா எதிர்ப்பு மருந்துகளின் வளர்ச்சி ஆகியவையாகும். இந்திய துணைக் கண்டத்திளல் இருக்கும் மருத்துவ தாவரங்கள் குறித்தும் அவர் எழுதியுள்ளார். இந்திய பல்கலைக்கழகத்தில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவர்
துவக்க கல்வி
அசிமா சாட்டர்ஜி, 1917ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 23ம் நாள் அன்று வங்காளத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்; அவரது தந்தை, மருத்துவர் இந்திர நாராயண் முகர்ஜி; அன்னையின் பெயர் , .கமலா தேவி. அந்த குடும்பத்தின் இரண்டு குழந்தைகளில் மூத்தவர் அசிமா சாட்டர்ஜி. கல்கத்தாவில் பிறந்த இவர் கல்வி பெற, ங்கு குடும்பத்தினரால் ஊக்குவிக்கப்பட்டார். அவரது தந்தை தாவரவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார், சாட்டர்ஜி தனது ஆர்வத்தில் பகிர்ந்து கொண்டார். அவர் 1936 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் வேதியியலில் ஆனர்ஸ் (honour s ) பட்டம் பெற்றார்
கல்வியில் மேம்பாடு
அசிமா சாட்டர்ஜி கல்கத்தா பல்கலைக்கழகத்தில், 1938ல், கரிம வேதியியலில் முதுகலை பட்டமும் மற்றும் 1944ல் முனைவர் பட்டமும்) பெற்றார். அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் இவர். அவரது முனைவர் ஆராய்ச்சி தாவர தயாரிப்புகளின் வேதியியல் மற்றும் செயற்கை கரிம வேதியியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. அவரது சிறப்பான குறிப்பிடத்தக்க பயிற்றுநர்களில் பிரபுல்லா சந்திர ராய் மற்றும் சத்யேந்திர நாத் போஸ் ஆகியோர் அடங்குவர். கூடுதலாக, விஸ்கான்சின், மாடிசன் மற்றும் கால்டெக் பல்கலைக்கழகத்தில் லாஸ்லே ஜெக்மீஸ்டருடன் (Caltech with László Zechmeister) ஆராய்ச்சி அனுபவம் பெற்றார்
அசீமாவின் ஆய்வு
சட்டர்ஜியின் ஆராய்ச்சியின் கவனம் இயற்கை தயாரிப்புகள் வேதியியலில்பக்கம் திரும்பியது விளைவு : மன உளைச்சல், மலேரியா எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபி என்னும் வேதிசிகிச்சை இந்த உலகுக்கு மருந்துகள் கிடைத்தன.அசீமா சட்டர்ஜி பல்வேறு ஆல்கலாய்டு சேர்மங்களை ஆய்வு செய்ய, தன் வாழ்நாளில் நாற்பது ஆண்டுகளை செலவிட்டார். இதனால் அவர் மார்சிலியா மினுட்டா என்ற தாவரத்தில் கால்-கை வலிப்பு எதிர்ப்பு மருந்தும் மற்றும் மலேரியாவை தடுக்கும் மருந்தை, ஆல்ஸ்டோனியா ஸ்காலரிஸ், ஸ்வெர்டியா சிராட்டா, பிக்ரோஹிசா குரோவா மற்றும் சீசல்பினியா கிறிஸ்டா (plants Alstonia scholaris, Swertia chirata, Picrorhiza kurroa and Caesalpinia crista) ஆகிய தாவரங்களிலும் கண்டுபிடித்தார். ஆனாலும் இந்த மருந்துகள் இப்போதுள்ள நிலைமைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளுடன் மருத்துவ ரீதியாக போட்டியிடுவதில்லை.. அவரது பணி ஆயுஷ் -56 என்ற கால்-கை வலிப்பு மருந்து மற்றும் பல மலேரியா எதிர்ப்பு/தடுக்கும் மருந்துகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
எழுத்தாளர் அசிமா சட்டர்ஜி
சாட்டர்ஜி சுமார் 400 கட்டுரைகளை எழுதினார், அவை தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன.
சாதனைகள்
அறிவியல் உலகுக்கு சட்டர்ஜியின் ஏராளமான பங்களிப்புகள்—பாமர மக்களுக்குப் புரியாதது ஆனால் உடல் நோவுகளுக்கு தேவையானது
ரவுல்ஃபியா கேன்சென்ஸில் ஆல்கலாய்டுகளின் (Rauwolfia canescens) வேதியியல் ஆய்வுகளைத் தொடங்கினார்.
கிட்டத்தட்ட அனைத்துவகை முக்கியமான இண்டோல் ஆல்கலாய்டுகளின் (indole alkaloids) )வேதியியலையும் ஆராய்ந்தார்.
அஜ்மாலிசின் மற்றும் சர்பாகினின் கட்டமைப்பு மற்றும் ஸ்டீரியோ கெமிஸ்ட்ரி (structure and stereochemistry of ajmalicine and sarpagine) )ஆகியவற்றை தெளிவுபடுத்துவதற்கான பங்களிப்புகள்.
சர்பாகினின் ஸ்டீரியோ-உள்ளவற்றில் முதலில் பரிந்துரைத்தது.
தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வகைப்படுத்தப்பட்ட கீசோஸ்கிசின், ரஸ்யா ஸ்ட்ரிக்டாவிலிருந்து (Rhazya stricta)இண்டோல் ஆல்கலாய்டுகளின் உயிரியக்கவியலில் ஒரு முக்கிய முன்னோடி.
பல சிக்கலான இண்டோல் குயினோலின் மற்றும் ஐசோக்வினோலின் ஆல்கலாய்டுகள் குறித்த செயற்கை ஆய்வுகளை மேற்கொண்டது.
ஆல்கலாய்டு தொகுப்பு தொடர்பாக பீட்டா-ஃபைனிலெத்தனோலாமைன்கள் தயாரிப்பதற்கான மேம்பட்ட நடைமுறைகள்.
லுவாங்கா ஸ்கேன்டன்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட லுவாங்கெட்டின் கட்டமைப்பை தெளிவுபடுத்தியது.
ப்ரெனிலேட்டட் கூமரின் மீது பல்வேறு லூயிஸ் அமிலங்களின் செயல்பாட்டைப் படித்து, பல சிக்கலான கூமரின் அமைப்புகளுக்கு எளிய செயற்கை வழிகளை வகுத்தார்.
ஆர்கானிக் சேர்மங்களில் முனையம் மற்றும் எக்சோசைக்ளிக் இரட்டை பிணைப்புகள் இரண்டையும் கண்டறிந்து இருப்பிடத்திற்கான கால இடைவெளியில் அமிலத்தைப் பயன்படுத்துவதை அறிமுகப்படுத்தியது
பணி
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் லேடி ப்ராபோர்ன்(the Lady Brabourne) கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு சேர்ந்தார், அங்கு வேதியியல்
துறையை நிறுவினார். 1954 ஆம் ஆண்டில், அசிமா சாட்டர்ஜி கல்கத்தா பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில், தூய வேதியியலில் பேராசிரியரின் மேம்பாடு பணியான ரீடர் என்ற பொறுப்பில் பணியாற்றினார்.
விருதுகளும் அங்கீகாரமும்
அசீமா சட்டர்ஜி , கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரேம்சந்த் ராய்சந்த் அறிஞராக இருந்தார்.
1962 முதல் 1982 வரை, அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் எல்லோரும் விரும்பத்தக்க பதவிகளில் ஒன்றான வேதியியல் பேராசிரியராக இருந்தார்.
1972 ஆம் ஆண்டில், இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட இயற்கை வேதியல் தயாரிப்பு பிரிவில் 1960 இல், புதுடெல்லியின் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் ஃபெலோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1961 ஆம் ஆண்டில், வேதியியல் அறிவியலில் சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருதைப் பெற்றார்,இந்த விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார்
1975 ஆம் ஆண்டில், அவர் மதிப்புமிக்க பத்ம பூஷண் விருது பெற்றார்
அவருக்கு டி. எஸ். (honis causa) பல பல்கலைக்கழகங்களின் பட்டம்.
பிப்ரவரி 1982 முதல் 1990 மே வரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்று பணிபுரிந்தார.
இந்திய ஜனாதிபதியால் இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் பொதுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் விஞ்ஞானி ஆனார்.
தயாரிப்பு வேதியியலில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியை தீவிரப்படுத்த சிறப்பு உதவி திட்டத்தின் கௌரவ ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்/
23 செப்டம்பர் 2017 அன்று, சாட்டர்ஜி பிறந்த 100 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தேடுபொறி கூகிள்(search engine Google) 24 மணி நேர கூகிள் டூடுலை நிறுத்தியது
கூகுளின் மரியாதை செய்விப்பு
கூகிள் டூடுல், செப்டம்பர் 23, 2017 அன்று, அசிமா சாட்டர்ஜியின் 100 வது பிறந்தநாளை ஒரு இந்திய நிறுவனத்திடமிருந்து அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெயரைக் கொண்டாடியது.
பெண் விஞ்ஞானிகள்..?
நண்பர்களே..உங்களில் யாராவது ஒரு 10 பெண் விஞ்ஞானிகளின் பெயர்களை சொல்லுங்களேன். ஹூஹூம். ஹூஹூம். சொல்லவே மாட்டோம். முடியாது என்பதே உண்மை.. நினைவுக்கு வரவில்லையா. அல்லது தெரியவே இல்லையா. தெரியாதும் என்பதும் உண்மையே. ஏனெனில் நமக்கெல்லாம் விஞ்ஞானி என்றதும் மனக்கண்ணில் வட்டமிடுவது நரைத்த தாடி மீசை வைத்த வெள்ளைக் கோட்டு போட்ட ஆண் விஞ்ஞானிகளே. இந்த மாதம் புத்தகம் பேசுது இதழில் வந்த முனைவர் இந்துமதியை நாம் யாராவது டக்கென்று விஞ்ஞானி என்று சொல்வோமா. சொல்லியிருக்கிறீர்களா? நாம் இன்னும் அவ்வளவு பக்குவபடவில்லை.
இந்திய பெண் விஞ்ஞானிகள்..!
நாம் பெருமைப்படத்தக்க இந்திய பெண் விஞ்ஞானிகள் யார் தெரியுமா?, டாகடர் ஆனந்த்பாய் ஜோஷி, முனைவர்கள் ஜானகி அம்மாள், கமலா சோகனி, அண்ணா மணி, அஷிமா சட்டர்ஜி, ராஜேஸ்வரி சட்டர்ஜி, தர்ஷன் ரங்கநாதன், மகாராணி சக்கரபார்த்தி, சாருசிதா சக்கர்பர்த்தி, மங்கள நர்லிகர் போன்றவர்கள் பெண் விஞ்ஞானிகள் இருக்கத்தான், இவர்களை நாம் கண்டுகொள்வதும் இல்லை.. நம் கண்களில்தான் தென்படுவதும் இல்லை.
கமலா சோகோனி ..
1800-1900 காலகட்டத்தில், பெண்கள் அதிகம் படிக்கவில்லை. உலகம் முழுவதும் இதே நிலைமைதான்.. ஆண்களில் கூட மேல்தட்டு மக்களே படித்தனர். 1900களில் இந்தியாவில் ஏராளமான மாற்றங்கள் பிரிட்டிஷ் அரசு மூலம் வந்தது. ஆனால் பெண்கள் படிக்கவில்லை. காந்தியும் கூட பெண்கல்விக்கு எதிரானவர்தான். இந்த நேரத்தில் மும்பையில் , 1912ல், பிறந்தவர் கமலா சோகனி. இந்தியாவில், முதன்முதல் அறிவியல் துறையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கிய முதல் பெண், எப்படிப்பட்ட உயரிய பட்டம் தெரியமா? மலைவாழ் மக்கள், ஏழைகள் உண்ணும் உணவுப் பொருட்களில் ,மூன்று வகையான பொருட்களில் ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்றவர். அதில் அவர்களுக்கு வேண்டிய சத்துகள் இருக்கின்றனவா என்ற சமூகவியல் நோக்கில் ஆய்வு செய்தவர் கமலா சோகோனி. கமலாதான் இவரது பெயர். சோகோனி இவரது இணையரின் பெயர்.
கனவு சிதறிய கமலா..
கமலாவின் பிறப்பு, இந்தியப்பெண்களின் இருண்ட காலமான1912ல். அவரது தந்தை நாராயணராவும், சகோதரர் மாதவராவும் சிறந்த வேதியலாளர்களாக இருந்ததால், கமலாவும் படிக்க நேர்ந்தது. அவரின் தந்தையும் சோதரர் மாதவராவும், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதல் நிலையில் படித்து தேரச்சி பெற்றவர்கள். எனவே கமலாவும் B.Sc ல் இயற்பியல்& வேதியலை சிறப்பாக மும்பையில் படித்து, பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராக வெளிவந்தார். எனவே தனக்கு மேற்படிப்பு, எளிதில் தந்தை படித்த பெங்களூரு அறிவியல் நிறுவனத்தில் இடம் கிடைத்துவிடும் என்ற இவரது கனவு உடைந்து, சிதறி, தவிடுபொடியானது.
இராமன் நிராகரித்த கமலா.. ஏன் என்னாச்சு கமலாவுக்கு. 1933ல், கமலா இரு அறிவியல் துறைகளிலும் இளம் அறிவியல் பட்டம் வாங்கியாச்சு. அப்போது 1930ல், சர்.சி.வி.ராமன் வண்ணப்பிரிகைகளின் காரணம் கண்டறிந்து, ஏன் வானும் கடலும. நீலநிறமாக இருக்கின்றன என்பதற்கான காரணம் அறிந்து, அதறகாக நோபல் பரிசு பெற்றவர். அவரது ராமன் அறிவியல் நிறுவனத்தில் மேற்படிப்புக்கு கமலா விண்ணப்பித்தார். இயற்பியல் விஞ்ஞானியான இராமனுடன் இணைந்து பணிபுரிய விரும்பினார். ஆனால் இராமனும் கூட பெண்கலவிக்கு எதிரானவர், பிற்போக்குவாதி. பட்டம் பெற்ற கமலாவை, தன் அலுவலகத்தில் பணி செய்ய அனுமதிக்கவில்லை.. ராமன், கமலாவிடம் என்ன சொன்னார் தெரியுமா? ” நீ பெண். இங்கு பணிபுரிய முடியாது. உன்னை வேலைக்கு சேரத்தால், இங்கிருக்கும் ஆம்பிளப்பசங்க , வேல பாக்க மாட்டாங்க. உன்னையே சுத்தி வருவாங்க. அதனால் இங்க வேலை கிடையாது ” என்றார். மெத்தப. படித்த மேதையான, இந்தியாவுக்கு தன் கண்டுபிடிப்பால் பெருமை தேடித்தந்த அறிஞரின் கருத்தும் கூட, பெண்ணை பாலியல் பொருளாக பார்த்ததுதான். பல்கலைக்கழகத்தில், கல்வியில் முதல் மாணவியாக இருந்த போதும் பெண் என்ற ஒரே காரணத்துக்காக, நோபல் பரிசாளர் இராமனால் நிராகரிக்கப்பட்டார் கமலா. கமலாவின் நெஞ்சத்தில் வாழ்நாளில் மறக்க முடியா ரணமும், தழும்பும் ஏற்பட்டன.
சத்தியாகிரகம்.. செய்த முதல் பெண்..
இருப்பினும் கமலா நம்பிக்கை இழக்கவில்லை. தினந்தோறும் காலையில் இந்திய அறிவியல் நிறுவனத்துக்கு வருவார். வந்து இராமனின் அறை முன்னர் காலை முதல் மாலை வரை அமர்ந்து, வாய் பேசாமல் போராட்டம் நடத்துவார். இப்படியே கிட்டத்தட்ட 10நாட்கள் இந்த சத்யாகிரகம் தொடரந்த்து. இராமன் கோபம் அதிகரித்து அவமானமும் அடைந்தார். பின்னர் இராமன், கமலாவை சில கட்டுப்பாடுகளுடன் பணிபுரிய எடுத்துக் கொண்டார். 1.கமலா வெளியிலிருந்துதான் படிக்க வரவேண்டும். (Not a regular student) 2.கமலாவால் ராமன் அறிவியல் நிறுவனத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது. 3. அவரின் இருப்பால் எந்த ஆணுக்கும் சிறு தொந்தரவு கூட வரக் கூடாது.. 4. ஒரு வருடம் மட்டுமே தாற்காலிக படிப்பு. கமலா அவமானத்தால் கூனிக்குறுகி வேதனைப்பட்டார் கமலா வேறு வழியின்றி, கல்வியை முன்னிட்டு பேசாமல் படிக்க சேரந்தார். இராமன் பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும் எவ்வளவு குறுகிய மனம் உள்ளவர் என்பது தெரிகிறதா? இந்த மனவேதனை கமலாவுக்கு நெஞ்சில் சாகும் வரை உறுத்திக் கொண்டே இருந்த்து.
கல்வியில் கரைகண்ட கமலா
கமலா அறிவியல் நிறுவனத்தில் ஓராண்டு சிறப்பாக படித்து, ராமனிடம் நல்ல பெயர் எடுத்தார். அவரின் படிப்பிலும் செயல்பாடுகளிலும் இராமன் திருப்தி அடைந்தார். அதன் பின்னர், கமலாவை, regular மாணவராக, ஆராய்ச்சி செய்ய சேர்த்துக்கொண்டார். அது மட்டுமா? அதன் பின்னர், இராமன் பெண்களைப் படிக்க, ஆராய்ச்சி செய்ய சேர்த்துக்கொண்டார் இது எப்படி இருக்கு? கமலா ஒற்றையாளானாலும்,அவரின் சத்யாகிரக போராட்டத்தால், அவரது மன உறுதியால், அவருக்கு மட்டுமல்ல, பெண் இனத்துக்கே நியாயம் கிடைக்க விதை போடப்பட்டது. இது எவ்வளவு பெரிய. மௌன புரட்சி.பெண் என்பவள்.. கலவித் தளத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு தளத்திலும் தனித்துவிடப்பட்டு, நசுக்கப்படுகிறாள்.
பழங்குடிகளுக்கான ஆராய்ச்சி..
பெங்களூரு அறிவியல் நிறுவனத்தில் கமலா ஸ்ரீனிவாசையாவின் கீழ் உயிரிவேதியியலில் பணிபுரிந்தார். அவர் கமலாவிடம் அன்பு காட்டி, ஏராளமான வல்லுநர்களின் எழுத்துகளையும் படைப்புகளையும் படிக்குபடி ஏற்பாடு செய்தார். 1936ல், பருப்புகளிலுள்ள புரதம் பற்றி ஆராய்ச்சி செய்தார். கமலா இந்தியாவில், சதத்துக்குறைவால் வாடும் மக்களுக்காகப் பால், பருப்பு, மொச்சைகளிலுள்ள புரதம் பற்றி ஆராய்ந்தார். இதனை மும்பை பல்கலைக்கழகத்தில், M.Sc பட்டத்திற்குச் சமர்ப்பித்தார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று முனைவர் பட்டத்திற்குப் படித்தார்.
நோபல் பரிசாளர். வழிகாட்டியாய்.
நோபல் பரிசாளர் ஹாப்சனிடமும் பணிபுரிந்து 1939ல் முனைவர் பட்டத்துடன் இந்தியா திரும்பினார்.. புதுதில்லி Lady Hardinge College, ல் உயிரி வேதியியல் துறைத்தலைவராக பணிபுரிந்தார்.. 1947ல், M.V.சோகோனி என்பவரை திருமணம் முடித்து மும்பைவாசி ஆனார். முதல் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்தின் ஆலோசனையின் பேரில் மலைவாழ் மக்களின் பதின்ம வயது குழந்தைகள் & கருவுற்ற பெண்களின் உணவில் ஆராய்ச்சி செய்து அவர்களின் உடல்நலம் முன்னேறியதால், குடியரசு தலைவர் பரிசு வாங்கினார். தனது 86ம் வயதில், 1998ல் கமலா சோகோனி இவ்வுலக வாழ்வை மறந்தார்.
நோபல்..பரிசு உலகில் தலைசிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது. ஆல்ஃபிரெட் நோபலின் 1895ம் ஆண்டு உயில் நிறுவப்பட்டு நோபல் அறக்கட்டளையால் 1901 லிருந்து அறிவியலில் நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது.. 1901லிருந்து 2017 வரை 923 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 49 பெண்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். பெறுவதற்கு அரிதான நோபல் பரிசை . மேரி குயூரி மட்டும் இருமுறை பெற்றுள்ளார் என்றால் அவரின் திறமை மற்றும் அறிவின் பரிணாமம் பற்றி எண்ண வேண்டும். இந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை
நோபல்குடும்பம் உலகின்ஆகஉயரியகெளரமாககருதப்படும்நோபல்பரிசைஒருமுறைவெல்வதேஅரிது.ஆனால்மேரியின்குடும்பம்ஒட்டுமொத்தமும்நோபல்பரிசுகளைஅள்ளிச்சென்றுள்ளது. என்றால், அதுகுயூரியின்குடும்பம்மட்டுமே. அவரின்இல்லத்தில்மேரிகுயூரி, கணவர்பியூரிகுயூரி, மகள்ஐரீன்மற்றும்பிரெடரிக்ஜோலியட்எனஒட்டுமொத்தகுடும்பம் 4 நோபல்பரிசைசுமந்துசென்றார்கள்என்றால்ஆச்சரியம்தான். நமக்கு .வியப்பில்விழிகள்விரிகின்றன. விழிபிதுங்குகிறது.
சாதனைப்பெண் நூற்றாண்டு வரலாற்றில் முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றவர் மேரி கியூரி. அதுவும் இயற்பியல் மற்றும் வேதியல் என இரண்டு வெவ்வேறு துறைகளில்,
அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் ஒரு பெண். என்பதே அந்தச் சாதனைக்கு தனிச்சிறப்பும் பெருமையும் சேர்க்கிறது. ஏனெனில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாத அந்த கால கட்டத்தில் கலை, அறிவியல் போன்ற துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட காலத்தில், அறிவியல் ஆண்களின் தனிச்சொத்து என்று இறுமாப்புடன் இருந்த காலத்தில் அந்த மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது. வாய்ப்பு வழங்கப்பட்டால் ஆண்களுக்கு நிகராக சாதிப்போம் அல்லது ஆண்களையும் மிஞ்சுவோம் என்று ஒவ்வொரு பெண்ணையும் நிமிரச் செய்தவர்தான் அறிவியல் மேதை மேரி கியூரி. சிறுவயது முதலே பெண்களை அடக்கி வைக்கும் பொதுப் புத்திக்கு எதிராக யோசிப்பவராக இருந்தார்
ஏழைமரியா.. போலந்துநாட்டில் 1867 , நவம்பர் 7 ம்நாள்வார்சாவில், “மரியாஸ்க்லடவ்ஸ்கா“(Maria Skłodowska )என்னும்பெயருடையமேரிகியூரிஓர்ஏழ்மையானகுடும்பத்தில்பிறந்தார். இவரதுதந்தைவ்லேடிஸ்லாவாஓர்ஆசிரியர்மற்றும்கடவுள்மறுப்பாளர். அன்னைபிரோநிஸ்லாவா . இவரும்பிரபலமானஆசிரியர். மேரிகியூரியின்அன்னைஓர்உறைவிடப்பள்ளியைநடத்திவந்தார். மேரிபிறந்தபின்னர், அந்தவேலையைஅன்னைவிட்டுவிட்டார்.
போராட்டகுடும்பம். போலந்தின்சுதந்திரத்திற்கானபோராட்டங்களில்மரியாவின்குடும்பம்பரம்பரைபரம்பரையாகஈடுபட்டதனால்மரியாமற்றும்அவரதுமூத்தசகோதரசகோதரிகள்தங்கள்வாழ்க்கையைவாழமிகவும்அல்லல்பட்டனர். பட்டினிகிடந்தனர்; வாழ்க்கைக்கானபோராட்டம்வெல்லமுடியாமல்இருந்தது… அம்மாவுக்குகாசநோய்இருந்ததால்பிள்ளைகளைதொட்டுதூக்கவேமாட்டார்.மேரிகியூரிக்கு 12 வயதுஆனபோது, அவரைஅன்னையைகாசநோயின்கொடியகரங்கள்கொண்டுபோயின. உயிர்துறந்தார். அன்னையின்இறப்பால்மேரியின்இளவயதுவீட்டுவாழக்கையை, இவர்துறக்கநேரிட்டது. உறைவிடப் பள்ளியில் இருந்தே படித்தார். சிறுவயதில் மேரிக்கு அற்புதமான நினைவுத்திறனும் அறிவுத்திறனும் இருந்தது.
வாழ்க்கை தந்த பிரான்ஸ் இப்படியே தமக்கைக்காகவும், எதிர்கால தனது படிப்புக்காகவும், மேரி இரண்டு வருடங்கள் பணி புரிந்து பணம் சேர்த்தார். பின்னர் அங்கேயே போலிஷ் மாணவர்களுக்கு நடத்தப்படும் , ஒரு சட்டத்திற்கு புறம்பான ஒரு சுதந்திர பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கேயே, அறிவியல் உரைகளைக் கேட்டார். ஆய்வக செயல்முறைகளையும் செய்து பார்த்தார். போலிஷ் கலாச்சாரம் கற்றுக்கொள்வதும், ஆய்வக அறிவியலையும். செய்வது. இரண்டுமே ரஷ்ய அதிகாரிகளுக்கு பிடிக்காது. எனவே யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே இவற்றை மேரி செய்தார். பறக்கும் பள்ளிக்கூடங்களில் சத்தமே இல்லாமல் படித்தார் மேரி. பின்னர் 1891, நவம்பர் மாதம், 24ம் வயதில் பிரான்ஸ் நோக்கி மேற்படிப்புக்கு போனார். அங்கேயும் இவரது வறுமை துரத்தியது. பசியோடும்,பட்டினியோடும். வறுமையோடும் போராடிக் கொண்டே ஆய்வுகள் செய்தார். அவர் படித்த பல்கலைக்கழகம் மிகவும் மதிப்பு பெற்ற பல்கலைக்கழகம். அங்கே வேதியல், இயற்பியல், மற்றும் கணிதம் இவைகளை பிரென்சு மொழியிலேயே போதித்தனர். மேரியின் திறமையால், அவர் வெகு விரைவில் பிரென்சு
பனியிலும் பசியிலும் படிப்பு
பாரிசில் கொஞ்ச காலம் தமக்கை மற்றும் அவரின் கணவருடன் இருந்தார். பின்னர் மேரி, தனியாக வீடு எடுத்து தங்கினார். ஐரோப்பாவில் எப்போதும் குளிர்காலம் பனிப்பொழிவு வாட்டி வதைத்து விடும். வறுமை மிகுந்த மேரிக்கு குளிர்காலமும் கொடுமை இழைத்தது. . சூடாக்கப்படாத அறை அவரின் எலும்புக்குள் குளிரை ஈட்டியாய் பாய்ச்சியது.உடல் விறைத்தது. சில நேரங்களில் அவர் மயங்கியும் விழுந்தார். பசியினாலும் கூட. அங்கே காலையில் படித்து மாலைகளில் பயிற்சி வகுப்பு எடுத்தார்.அத்துணை வேதனை, கஷ்டம், ஏழ்மையிலும்,1893 கோடையில், தனது 26 ம் வயதில், அந்த பல்கலையில் மேரி முதல் மாணவராக வந்து சாதனை படைத்தார். அவரின் கிரீடத்தில் இன்னொரு வெற்றிச் சிறகு குடிஏறியது. அவருக்கு கல்வியின் மேல் உள்ள காதல் அவரை மேலும் படிக்க தூண்டியது. 1894ல் வேதியல் மேற்பட்ட படிப்பை முடித்தார். ஆனால் வீட்டு நினைவு வாட்டியது. போலந்துக்கு விடுப்பு எடுத்து செல்லும் போதெல்லாம் வேலை தேடினார். போலந்து நாடு மேரிக்கு படிப்பும் தரவில்லை. பணியும் தரவில்லை.
நோபல்வந்ததுஇருவருக்கும் இன்னொரு விஞ்ஞானி பெக்கொரல் யுரேனிய உப்பில் இருந்து கதிர்வீச்சு வருவதை உலகுக்கு சொன்னார்.. முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்கு யுரேனியத்தின் கதிர்கள் எதிலிருந்து வருகின்றன என்று மேரி ஆய்வு செய்தார்.அவருக்கு உதவ தன்னுடைய பிற ஆராய்ச்சிகளை பியரி ஒதுக்கினார். அணுக்கருவில் இருந்தே கதிரியக்கம் வருகிறது என்று சொல்லி உலகைவியப்பில் ஆழ்த்தினார். இந்த மூவருக்கும்தான் 1903ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்த
போலந்தில்மேரிசிலை மேரியின் கணவர் பியரி.பின்னர் ஒரு விபத்தில் இறந்து போனார். அதன்பின் மேரி தனியே ஆய்வில் ஈடுபட்டு ரேடியத்தை பிரித்து காண்பித்தார் அதற்கும் வேதியியலில் 1911ல் நோபல் பரிசு கிடைத்தது. நோபல் பரிசு பணத்தில் ஏழைப்பிள்ளைகள் பயன்பெறுமாறு ஆய்வகம் கட்டிக்கொள்ள அப்படியே கொடுத்தார் மேரி. கணவரின் பேராசிரியர் பொறுப்பை மேரி பிரான்ஸ் பலகலைக்கழகத்தில் ஏற்றுக்கொண்டார்.. பிரான்சில் பேராசியர் பதவி பெற்ற முதல் பெண் மேரி கியூரி. பிறகு மேரி கியூரிக்கு படிக்க, பணிபுரிய இடம் தரமாட்டேன் என்று சொன்ன போலந்து பல்கலைக் கழகம், மேரி கியூரியின் சிலையை கல்லூரியில் நிறுவியது. இப்படி நிறுவப்பட்ட முதல் சிலை மேரியுடையதுதான். ரேடியத்துக்கு பலர் காப்புரிமை பெறச்சொன்ன போதும், அதனை மறுத்து எளிய மக்களின் வாழ்க்கையை காப்பாற்றும் மருந்தில் நான் பொருளீட்ட விருப்பமில்லை என்று தெளிவாக சொன்னார் மேரி.
மேரிக்கு இரண்டு பெண்கள். இளைய பெண் ஈவா கியூரி ஒரு பத்திரிகையாளர்.102 வயது வரை வாழ்ந்து இறந்தார். மூத்த பெண் ஐரீன் ( 1897 -1956) அம்மாவைப் போலவே பெரும் விஞ்ஞானியாக இருந்தார்.
கண்டுபிடிப்பே பாதிப்பான துயரம் கதிரியக்கத்தின் ஆபத்தான சூழலில் மேரியும் ஐரீனும் பணியாற்றினர்.அம்மாவை பாதித்த கதிரியக்கம் ஐரீனையும் பாதித்தது. ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மேரிகியூரி இறந்தார். அம்மா இறந்ததற்கு அடுத்த வருடத்தில் ஐரீன் ஜோலியட்-கியூரி தனது கணவர் பிரெடரிக் ஜோலியட்-கியூரியோடு இணைந்து 1935ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றார்.
இன்றுவரை ஒரு குடும்பத்திலிருந்து மிகக்கூடுதலான நோபல் பரிசுகளை வென்ற பெருமை மேரி கியூரியின் குடும்பத்துக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இவரது மகள்கள் ஹெலன் மற்றும் பியரியும் ஆகியோரும்கூடப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள். ஐரீன் ஜோலியட்-கியூரி: மறைந்த நாள்- 1956. மார்ச் 17
இளம் வயதில் தனது அம்மாவின் விஞ்ஞானி நண்பர்களோடு பழகும் வாய்ப்புகளைப் பெற்ற ஐரீன் அறிவைத் தேடுவதில் ஆர்வமிக்கவராக இருந்தார். மதத்தின் பிடியில் இருந்த உயர் கல்விநிலையங்களில் நுழைந்து டாக்டர் பட்டமும் பெற்ற பிறகு தனது பெற்றோர் கண்டுபிடித்த போலோனியம் எனும் தனிமத்தைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்தார். நோபல் பரிசும் பெற்றார்.
“I believe that Science has great beauty. A scientist in his laboratory is not a mere technician; he is also a child confronting natural phenomena that impress him as though they were fairy tales.”—Marie Curie
Marie Curie quotes We must believe that we are gifted for something and that this thing must be attained.” “Nothing in life is to be feared; it is only to be understood.” “I am one of those who think like Nobel, that humanity will draw more good than evil from new discoveries.”
Sklodowska (Skłodowska) என்பது சந்திரனின் தொலைவில் அமைந்துள்ள ஒரு பெரிய சந்திர பள்ளமாகும். மேரி கியூரிக்கு பெருமை சேர்க்க இப்பெயர் இடப்பட்டுள்ளது.
கண்களைத் தூக்கம் தாலாட்ட, இமைகள் ஒத்திக் கொள்வதுபோல் மூடுகின்றன. கண்கள் லேசாக மெல்ல மெல்ல செருகுகின்றன. மெல்ல, மெல்ல உறக்கம் உங்களின் மூளையின் கட்டுப்பாட்டில்,, கண்களையும், உடலையும் தழுவுகிறது. அப்புறம் என்ன நடக்கிறது உங்களுக்கு என்று கொஞ்சம்சொல்லுங்களேன்..! ம்.ம். ஹூகூம். உங்களால் முடியாது. அப்புறம் என்ன, நீங்கள் தூங்கியே போய்விட்டீர்கள். அவ்வளவுதான்..! அப்புறம் எங்கே சொல்ல..? உடலுக்கும், உங்கள் மனதிற்கும் நடந்தது என்ன என்று யாருக்குமேதெரியாதே..! அதுதான்உண்மை..! மூளை மட்டுமே, அப்போது படுவேகமாகவேலை செய்கிறது .உடலின் அனைத்து செயல்களையும், மூச்சுவிடுதல் உட்பட மெதுவாக கட்டுப் படுத்தபடுகிறது. மூளையின் அலைகளை பதிவு செய்தஆராய்ச்சிமூலமே உடல், மனம் மற்று மூளையின் செயல்பாடுகளை ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர்.
உறக்க.. நிலைகள்..!
உறக்கம் உங்களை ஆரத்தழுவியதும், தூக்கம் முக்கியமாக
1. துரிதகண்சலன உறக்கம் ( Rapid Eye Movement-REM) மற்றும்
2. கண் சலனமற்றஉறக்கம் / கண் உருளாநிலைத்தூக்கம் (Non-Rapid Eye Movement-NonREM)
என இரண்டு நிலைகளில் நிகழ்வுகள் நடக்கின்றன..பாலூட்டிகளிலும், பறவைகளிலும் கூட, இந்தஇரண்டு நிலைத் தூக்கம்உண்டு. ஆனால் அவற்றின் காலக்கெடுதான் குறைவு.! தூக்கம் உங்களுக்குள் நுழைந்தவுடன், NonREM நிலை 90 நிமிடங்களும், REM தூக்கம் 8-10 நிமிடங்களும் இருக்கும். ஆனால், இரவின் நேரம், நீள நீள, இரண்டும் உல்டா செய்துவிடும். ஆமாம். நடு இரவு மற்றும் அதிகாலை சமயங்களில், REM தூக்கம் 90 நிமிடங்களாகவும், NonREM தூக்கம் 10 நிமிடங்கள் என்றும் மாறிவிடும்.மேலும் REM தூக்கத்தின் பின்னேதான் NonREM தூக்கம் வரும்..! இது எப்படி? அதனால்தான், பின்னிரவில்/அதிகாலையில் யாராவது, உங்களை எழுப்பினால் சீக்கிரம் விழிப்பு ஏற்படாததன் காரணம்.ஓர் இரவில், 5-6 முறை இந்த NonREM -REM சுழற்சி தூக்கம் மாறி மாறி வரும். நித்திரையின் மூலம், உங்களின்நினைவுகளை ஒருங்கிணைக்கவும், அறிவின் ஆற்றலை அதிகரிக்கவும், உடலின் சிதைந்த செல்கள்/திசுக்களை சரிசெய்யவும் பெரிதும் துணை புரிகிறது. மூளை தன்னை மீள் ஆற்றல் செய்தும் கொள்கிறது.
ஒரு.. ராத்திரி.. நேரம்..!
ஒரு நாள் இரவில், நாம் ஒரே மாதிரி உறங்குவதில்லையாம். நமக்கு விதம் விதமான தூக்கம் வருகிறதாம். 5 வகை உறக்கம். இவை ஒரு ராத்திரியில், 4-5 முறை மாறி, மாறி ஷிப்ட் போட்டு வருகிறதா? உறங்கத்துவங்கியதும், உடலும், மனமும், உறக்கத்துக்கும், விழிப்புக்கும் இடைப்பட்ட இரண்டும்கெட்டான் கிறக்கமானநிலைக்கு ஆட்படுகிறது. இது தாண்டியதும், மூளையும், உடலும், நித்திரையின் 5 . நிலைகளுக்குச் செல்லுகிறது. ஒவ்வொரு நிலையும், அவரவர் வயதுக்குத் தகுந்தபடி, அதன் நேரம் வேறுபடும். ஒவ்வொரு நிலையும், மனம், மூளை மற்றும் உடலுக்கு அத்தியாவசிய தேவையானதும்கூட.! அதன்போது, மூளையின் அலைகளும் வேறுபடும். மூளை அலையைக் கொண்டு, உடலின் செயல்பாடுகளை அறிவியலார் கணக்கிடுகின்றனர். நமது உறக்க-விழிப்பு சுழற்சி/சக்கரம்சர்க்காடியன் (Circadian)
தாளலயம்தான், நாம் எவ்வளவுநேரம் உறங்கவேண்டும் என்பதை நிர்ணயிப்பவர்..!
தூக்கத்தின்..முதல்..நிலை..!
நாம், வாழ்நாளின் மூன்றின் ஒரு பகுதி, உறக்கத்தில் உணர்விழந்த நிலை, வெளிச் சூழலை மறந்த நிலைதான்., இயக்குதசைகள் செயல்படாத நிலை என்ற நிலைகளுக்கு தள்ளப்படுகிறோம். முதல் நிலையின்போது, தூக்கத்தின் துவக்கநிலையில், ஒருசிலநிமிடங்களில், பாதி தூக்கம், பாதி விழிப்புஎன்கிறகிறக்கமான மயக்க நிலைக்கு போகிறோம். அப்போதுஉடல் அசைவின்றி ஓய்வெடுக்க ஆரம்பிக்கிறது. புறச் சூழலில் என்ன நடக்கிறது என்று தெரியாது.வெளி உலகத்துடனான தொடர்புஅறுபடும். அந்தமுதல் நிலையின்போது, மூளை தன் ஆல்பா அலைகளிலிருந்து, தீட்டா அலைக்கு தாவுகிறது. உடல்தசைகளின் செயல்பாடு மிக மிக மெதுவாகிறது. ஆனால் லேசாக தொட்டாலும் விழித்து கொள்வோம்.. இந்நிலையில், உங்களை, ஏண்டா, செல்லம் லதா, செல்லை எங்கேடா வைத்தாய்? என்று மெதுவாக கேட்டாலும், டபக்கென எழுந்து உட்கார்ந்து விடுவீர்கள். மேலும், சிலருக்கு, உறக்கம் தழுவுவதால், அப்போது, நித்திரை தடைபடுவதை எண்ணி கோபம் கொப்புளிக்கும். இதுவே நித்திரை நிலை எனப்படுகிறது. சிலருக்கு, இந்நிலையில்தான்
அறிதுயில்நிலைமாயக்காட்சிகள் (Hypnogogic hallucinations) ஏற்படும்.
இரண்டாம்..நிலைத்..தூக்கம்..!
நித்திரை தொடங்கிய 10 நிமிடங்களில், நாம் முழுமையான உறக்கத்தின் தழுவலின் வயப்படுகிறோம். இது தூக்கத்தின் இரண்டாம் நிலையாகும். இதில் கண் அசைவு நின்று போகும்.இதுதான் உண்மையான உறக்கத்தின் முதல் நிலை. இது 15 -20 நிமிடங்கள் நீடிக்கும்.இப்போது, நமது கண் உருளாது. சுய நினைவை இழந்து விடுவோம்; அயர்ந்து உறங்குவோம். அச்சமயத்தில். உடல் வெப்பநிலை குறைகிறது. நமது சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு கொஞ்சம் குறைந்து, சீராகிறது. இரத்த அழுத்தம் 20 -30 % மும், இதயத்துடிப்பு 10 -20 % மும் குறைகிறது என ஆராய்ச்சி முடிவுகள்தெரிவிக்கின்றன. உடலின் வளர்சிதைமாற்ற செயல்பாடும் 10 % குறைகிறது. இவையெல்லாம் நடப்பது ஆற்றல் சேமிப்புக்காகவே..!. மூளை மெதுவான அலைகளையே அனுப்புகிறது. நமது தூக்கத்தின் பெரும்பகுதி (45 -55 %) இந்த நிலையில்தான் உள்ளது.
நித்திரையின்… மூன்றாம்.. நிலை..!
தூக்கத்தின் மூன்றாம் நிலையில், வெகுவாக ஆழ்ந்து உறங்கிவிடுவோம். மூளை டெல்ட்டா அலைகளை தொடர்ந்து அனுப்பும்.இப்போது உங்களை எழுப்புவது கடினம். அப்படியே, விழித்தாலும், நீங்கள் நினைத்தபடி, உடனே சகஜ நிலைக்கு வந்துவிட முடியாது. உடல் மூளையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும், அது விடுபட நீண்ட நேரம் ஆகும். இதனைத்தான், நாம் தூங்கி முழிச்சதும், ஒண்ணுமே புரியல..குழப்பமா இருந்ததுஎன்கிறோம். உடல் வெளியுலக நிலையை உணர பல நிமிடங்கள் ஆகும்..
நான்காம்..நிலைத்.. தூக்கம்..!.
நித்திரையின் நான்காம் நிலையிலும், மூளை மிக, மிக மெதுவாக, டெல்ட்டா அலைகளையே அனுப்பும். இதிலும் ஆழ்ந்த உறக்கம்தான். மூன்றாம் நிலைக்கும், நான்காம் நிலைக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. ஆனால் இந்த நிலைத்தூக்கம் சுமார், 30 நிமிடங்கள்நீடிக்கும். இந்த நிலையின் முடிவில்தான், படுக்கையில் சிறுநீர் கழிப்பது, தூக்கத்தில் நடப்பது, பேசுவது, பயந்து அலறுவதுஎன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இந்த நிலை குறைவாக இருந்தால்தான், மறுநாள் தூக்கம் போதாதது போன்ற உணர்வு ஏற்படும். காலையில் புத்துணர்ச்சியுடன் எழ நித்திரையின் நான்காம் நிலை மிகவும் அவசியம்.
கனவுத்..தூக்கம்..!
உறக்கத்தின் 5 ம் நிலையே, துரித கண்சலன உறக்கம். இந்த நிலை, உறக்கம் வந்து 90 நிமிடங்களுக்குப் பின்னரே வருகிறது.இந்ததூக்கத்தின் போதுதான், கனவு உண்டாகிறது.மூளையின் செயல்பாடு துரிதகதியில் இருக்கும்உங்களின் சுவாசம் அதிகரிக்கிறது, ஒழுங்காகவும் இல்லை. இதயத்துடிப்பும், இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.இயக்கு தசைகள் செயலற்றுப் போய் இருக்கின்றன. கனவு நிகழும்போது, உங்களின்கை, கால், தலைஎனஎந்த உறுப்பும் அசையாது. பக்கவாதம் வந்ததுபோல, தாற்காலிகமாக, மரத்துப்போய் இருக்கும். இப்படிப்பட்ட அசையா நிலை உங்களின் பாதுகாப்பு வேண்டித்தான்..!. இல்லையெனில், கனவில் பார்ப்பவரோடு எழுந்து ஓடலாம்/சண்டைஇடலாம்/வெட்டலாம். கனவுக்கு ஏற்றபடிநீங்கள் செயல்படுவதை தடுத்து, உங்களை சுயவதையிலிருந்து காக்கவே . அசையாநிலை..! இந்த நிலையில் விழிப்பு வந்தால்தான், உங்களால் அசைய முடியாது. இதனைத்தான், பேய் அமுக்கிவிட்டது, என்னால் எழுந்திருக்க முடியவில்லை என ரீல் விடும் நபர்கள் இருக்கின்றனர். ஆனால், கண் மட்டும் இமைக்குள் வேகமாய் உருளும். அதான்பா.. நீங்கள் தூக்கத்தில், கனவில் உங்களின் பிரிய நடிகை வேண்டியர்களுடன், ஆடிப் பாடுகிறீர்கள்/விரும்பும் மெல்பர்ன் நகரைப்பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறீர்கள்..! கண் உருளல், கனவை, மாயக்கட்சிகளைகண் ஸ்கேன் செய்து பார்ப்பதைக் குறிக்கிறது..! பெரியவர்களின் 20 % உறக்கம், REM தூக்கம்தான்.
விடிகாலையின்.. நீண்ட..கனவு..!
கனவு நிலை துவக்கத்தில் குறைவாகவே இருக்கும். பின்னர், மீண்டும் கண் சலனமற்ற உறக்கத்துக்கு தாவும். ஆனால், உறக்கம் வந்தபின், எப்போதும், முதல் நிலைக்குப் போகாது. கனவு நிலை முடிந்ததும், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை, மீண்டும் கனவு நிலை என உறக்க சக்கரம் ஓர் இரவில், 4 -6 முறை சுற்றி, சுற்றி வரும். தூங்கியவுடன் வரும் கனவு நிலையின் நேரம் குறைவாகவும், அடுத்தடுத்து வரும்கனவு நிலையின் நேரம், கொஞ்சம் கொஞ்சமாக நீண்டு கொண்டே வரும். அதிகாலை/விடிகாலையில் வரும் கனவுத்தூக்கத்தின் நேரம் அதிகமாகவும், ஆழ்ந்த நித்திரையின் கால அளவு குறைவாகவும் இருக்கும்.
கனவுத்தூக்கம், மூளையின் வளர்ச்சிக்கு பெரிது உதவுகிறது. தாயின் கருவறைக்குள் உள்ள கருவின் தூக்கத்தில் 75 % கனவுத்தூக்கமே..!பிறந்த குழந்தை 60 % வேகக் கண் சலன நித்திரை செய்கிறது.நமது ஒருநாளின் அனுபவங்களை நீண்டகால நினைவாக மாற்றவே, அது கனவாகிறது என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். .
கனவின்.. பலன்..!
கனவில், கற்பனை, கருத்து, உணர்வுகள், தீர்வுகள் உருவாகின்றன. கனவு என்பது சுவையானதாகவும், புதிராகவும் கூட இருக்கிறது. கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் கனவு, கடவுள் அனுப்பிய செய்தி என நம்பினர். அது மட்டுமல்ல..! கனவின் பலன் சொல்லவும், அரசவைகளில், ராஜகுரு இருந்தார். கனவைக் கொண்டே, போர்க்களத்துக்கும் சென்றனர். கனவு சில சமயம், கலைஞர்களின் கற்பனை ஊற்றாகவும், சிலருக்கு பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாகவும் இருக்கிறது.
கனவுகள்..பலவிதம்..!
நீங்கள் விழித்து 5 நிமிடத்திற்குள் 50 % கனவு மறந்துவிடுகிறது.10 நிமிடத்திற்குள் 90 % கனவு நினைவுப் பதிப்பிலிருந்து ஓடிவிடுகிறது. பிறந்தபின், பார்வை இழந்தவர்கள் காணும் கனவு நம்மைப் போலவே இருக்கும். பிறக்கும்போதே, பார்வையைப் பறிகொடுத்தவர்களும் கனவு காண்கின்றனர். அவர்களின் கனவில், வாசனை, ஒலி, தொடு உணர்வு போன்றவையே இருக்கும். நாம் தினமும் கனவு காண்கிறோம். எனக்கு கனவே வராதுப்பா.. என்பதெல்லாம். இப்படிக் கூறுபவர்கள் நிறைய பேர் உண்டு. இதெல்லாம் ஒருடுமீல்தான்..! தாங்கள் இரவில் கண்ட கனவை மறந்துவிடுகிறீர்கள்.. அவ்வளவே..! நாம் கனவில் பார்க்கும் முகங்கள் எல்லாம், நம் வாழ்வில் சந்தித்தவர்களே..! நாம் பார்க்காத முகம்/பார்க்காத இடம்/பார்க்காத நிகழ்வு கனவில் எட்டிப் பார்க்காது. ஒரு நாளில், கண் விழித்ததிலிருந்து, படுக்கப் போகும்வரை, திறந்திருக்கும் கண் திரையில், லட்சக்கணக்கான/கோடிக்கணக்கான பார்வைகள் பதிவுகள் நிகழ்கின்றன. மூளை அனைத்தையும் தன்னில் பதிய வைக்கிறது. இரவு தூக்கத்தின் போதுதான், அவற்றை மீள்பார்வை செய்து, வேண்டாததை நீக்கிவிட்டு, வேண்டியதை நீள் நினைவுப் பெட்டகத்தில் பூட்டி பாதுகாப்பாய் வைக்கிறது. மக்களில் 12 % பேர் மட்டுமே, வண்ணக் கனவு காண்கின்றனர். மற்றவர்கள் பார்ப்பது கருப்புவெள்ளைப் படமே..!
தாலாட்டும்..மெலடோனின்..!
தூக்கத்தை தூண்டுவது மெலடோனின்(Melatonin) என்ற ஹார்மோன்தான். இதனை, பிட்யூட்டரி சுரப்பியின் அடியில் பட்டாணி சைசில்உள்ள பீனியல்சுரப்பி (Pineal Gland) மெலடோனைஇரவில்தான், இருட்டில்தான்சுரக்கிறது. இது கொஞ்சம் வெளிச்சம் இருந்தாலும் சுரப்பை குறைத்துவிடும். எனவே, தூங்கும்போது வெளிச்சம் வேண்டாம். மேலும் இதுவும் உடலின் வெப்பத்தை குறைத்து, தூக்கத்தை தூண்டுகிறது.இது உலகின் எல்லா உயிரிகளிடமும் உள்ளது. சர்க்காடியன்சக்கரத்தைஇயக்க உதவுவதும் இதுவே..! உறக்கத்தின் போதுதான் உடலின், வளர்ச்சி ஹார்மோனும், தைராய்டு ஹார்மோனும்சுரக்கிறது. அட்ரினோகார்டிகோ ட்ரோபின் (Adrenocoticotrophin) சுரந்தால் உடனே விழித்து விடுவோம். இன்சுலின் அதிகம் சுரந்தாலும், தூக்கம் குறையும். ஈஸ்ட்ரோஜனும்கனவுத் தூக்கத்துக்கு உதவுகிறது. மூளை நல்ல முடிவுகளை எடுக்கவும், மனச் சிதைவை தடுக்கவும், மன அழுத்தம் குறைக்கவும் கனவு உதவுகிறதாம். மனச் சிதைவு அதிகம் உள்ளவர்களுக்கு கனவு வராதாம்.
சூழலும்.. உறக்கமும்..! நல்ல தூக்கம் தூங்க, நாம் விரும்பியசூழல் வேண்டுமென்று நினைக்கிறோம். உண்மையா? இது தொடர்பாய் ஒரு கதை. இரண்டு மீனவப் பெண்கள் கருவாடு விற்கப் போகிறார்கள். விற்றுவிட்டுத் திரும்பும்போது, மழை பிடித்துக் கொண்டது. வழியில் ஒரு பூக்கடையில், தஞ்சம் அடைகிறார்கள். மழை நிற்கவில்லை. இருவரும் அங்கேயே தங்கிவிடலாம் என முடிவு எடுக்கின்றனர். தூக்கம் வந்தாச்சு. ஆனாலும் இருவராலும் தூங்க முடியவில்லை. ஒரு பெண் “.என்னடி கண்ணம்மா, இந்த பூவு இப்படி நாத்தமடிக்குது. தூக்கம் வரமாட்டேங்குதே.” “அதான்கா நானும் பாத்தேன்..என்ன செய்ய?.” நீண்ட நேரம் உறக்கம் கொள்ளாமல் தவித்தனர். முடிவாக, “அக்கா நாம தூங்க ஒரு யோசனை சொல்றேன். பேசாம, நம்ம கருவாட்டுத் துணிய நனைச்சி மூஞ்சிக்கு அருகில் வச்சிக்கிட்டு தூங்குவோம்”என்ற கண்ணம்மா, அதனை செய்தவுடன், இருவரும் சடுதியில்தூங்கிப்போனார்கள். நித்திரை பழக்கத்தைப் பொறுத்ததும் கூட.
நிம்மதியான நித்திரைக்கு, சூழல், வாசனை, பழகிய இடம் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் இதைவிட, ஆச்சரியமான இன்னொரு பக்கமும் உள்ளதே..! வெளிச்சம் இருந்தால் எனக்கு தூக்கமே வராது, சத்தம் இருந்தால் உறக்கம் கொள்ளாதுஎன்று சொல்லும் ரகமா நீங்கள்? இதெல்லாம் ஒரு பேச்சுக்குத்தான் நண்பா..! தூக்கம் உங்களை முழுதுமாகதன் வசப்படுத்தி தூக்கத்தின் முழுதழுவலில் அல்லது இருந்தால்,இரண்டு நாள் உறக்கம் கெட்டிருந்தால், சூழலாவது, இடமாவது, நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் தன்னை மறந்து சாமியாடத் துவங்கி விடுவீர்கள். நாள் முழுதும் அலைந்து திரிந்து விட்டு, பின்பேருந்தின் செம கூட்டத்தில், நடுஇரவில் ஏறி, இடமின்றி நின்றுகொண்டே, நீங்கள் பயணித்தாலும்கூட, கம்பியில் தொங்கிக்கொண்டே, தூங்குவதில்லையா..!
அட ..இதெல்லாம் சகஜமப்பா..!
தங்கவும், உறங்கவும் இடமின்றி, பிளாட்பாரத்தில் குடித்தனம் நடத்துபவர்கள் உறங்குவதில்லையா? புகைவண்டி நிலையம், பேருந்து நிலையம், வாகனப் போக்குவரத்து உள்ள இடங்களில் வாழும் மனிதர்கள் தூங்குவதில்லையா? தூக்கம் நீங்கதரலைன்னாஅதுவே உங்களை கவ்விப் பிடிக்கிறது. நீங்கள் தராததை எடுத்துக் கொள்கிறது. தூக்கம், அது கெட்டிக்கார பிள்ளை மட்டுமல்ல, பிடிவாதக்கார பிள்ளையும் கூட.! அது சரி. தூக்கம் வர, மெத்து மெத்தென்ற பஞ்சு மெத்தை, அருமையான பாய், இனிமையான இசை, நல்ல நறுமணம், அமைதியான இடம், இதெல்லாம் நமது பழக்க வாசனைதான். ஆனால் இருவரது பழக்கப்பட்ட இடம் கட்டாந்தரை என்றால், அங்கே அவர் நிம்மதியாய் உறங்க முடியுமே..! கருங்கல் ஜல்லி ஏற்றிய சடக், சடக் எனகுதித்துச் செல்லும் லாரியில், கொளுத்தும் வெயிலில், ஜல்லியின் மேல் படுத்து தூங்கி பயணம் செய்யும் இளைஞாகளும், பெண்களும், சிறுவர்களும், சத்தம் நிறைந்த இடத்தில்தானே நித்திரை கொள்ள முடியும். கடற்கரை மீனவர்களுக்கு, கடலின் அலையோசைதான் தாலாட்டு..
1) குழந்தைகளுக்கு நிறைய தூக்கம் வேண்டும்.. மூளையும், உடலும் நன்கு வளர்ந்து, நன்கு செயல்பட..!. பிறந்த சிசுவுக்கு..வேண்டிய உறக்கம்: 18 மணி நேரம்.. அது ஒரு நாளில் 9 மணி நேரத்தை கனவுக் குளியலில் மூழ்கி முத்தெடுக்கிறது
2) 1 -12 மாதம் வரை,14 -18 மணி நேர நித்திரை.
3) 1 -3 வயது வரை–12 -15 மணி நேர துயில்.
4) 3-5 வயது பாலகர்களுக்குத் தேவை:11 -13 மணி தூக்கம்.
5) 5 – 12 வயதில், 9 -11 மணி உறக்கம் வேண்டும்.
6) பெரியவர்களானதும்,9 -10 மணி நேர தூக்கம்.
7) முதியோர்களுக்கு,.7 -8 மணி நித்திரை.
8) கருவுற்ற பெண்கள்,,8 மணி நேரத்துக்கு மேல் உறங்க வேண்டும்.
மற்ற விலங்கினங்கள் ஒரு நாளில் உறங்கும் நேரம்:
பழுப்பு வௌவால் …19 .9 மணி
ஆர்மடில்லோ…………18 மணி
மலைப்பாம்பு…………..18 மணி
ஆந்தை மந்தி…………..17 மணி
புலி…………………………..16 மணி
அணில்……………………..15 மணி
சிங்கம்……………………….13 .5 மணி
பூனை……………………..12 மணி
முயல்……………………..11 .4 மணி
வாத்து……………………..10 .8 மணி
நாய்………………………….10 .4 மணி
டால்பின்…………………..10 .4 மணி
சிம்பன்சி…………………..9 .7 மணி
மனிதன்……………………8 மணி
பன்றி………………………..7 .8 மணி
கப்பி மீன்…………………7 மணி‘ .
சீல்……………………………6 .2 மணி
ஆடு…………………………..5 .3 மணி
பசு………………………………3 .9 மணி
யானை……………………….3 .6 மணி
குதிரை………………………. 2 .9 மணி
ஒட்டகச் சிவிங்கி ………..1 .9 மணி
மோனோலிசா & லியானார்டோ
ஒரு சுவையான தகவல்: மோனோலிசாவைவரைந்த லியானார்டோ டாவின்சி..இடையிடையேகுட்டித்தூக்கம் போடுபவர். நான்கு மணி நேரத்துக்குஒரு தடவை 15 நிமிடம் மட்டுமே தூங்குவாராம்.
பிரான்சின் அதிபர் நெப்போலியன் குதிரையில் போகும்போதுகூட உறங்குவாராம். அவரது நித்திரை 4 மணி நேரம் மட்டுமே..!
எடிசன் தூக்கம் என்பது நேரத்தை வீணடிப்பது என்ற கருத்து கொண்டவர்..!
ஆனால் தூக்கம் கேட்டால், பலவித நோய்கள் நம் மேல் பாயும்.படத்தைப் பாருங்கள்..!
உலகில் மார்ச் 19 ம் நாளை உலக தூக்க நாளாக கொண்டாடுகின்றனர்.
மரியம் மிர்சகானி என்ற பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இவர்தான் கணிதத்தில், நோபல் பரிசுக்கு இணையான பீல்ட்ஸ் மெடல் (Fields Medal) என்ற உயர்ந்த விருதைப் பெற்றவர். இவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். ஈரானில் பெண்கள் படித்து பெரிய பொறுப்புக்கு வருவது என்பது மிக மிக அரிது. அறிவியலின் மகாராணி என அழைக்கப்படும் கணிதத்தில், ஓர் இரானியப் பெண் விற்பன்னராக இருக்கிறார் ; கணிதத்தின் மிக உயர்ந்த விருதான பீல்ட்ஸ் மெடலையும் பெற்றார். கணிததுறைக்கு நோபல் பரிசு கொடுப்பது கிடையாது. இந்த பீல்ட்ஸ் மெடல் நோபலுக்கு இணையானது. மரியம் மிர்சகானி ஓர் ஈரானிய கணிதவியலாளர் மற்றும் அமெரிக்காவின், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக கணிதப் பேராசிரியர். அவரது ஆராய்ச்சி என்பது கணிதத்தில் சிக்கலான தலைப்புகளில் முக்கியமானவை. அவை :டீச்முல்லர் கோட்பாடு (Teichmuller theory), ஹைப்பர்போலிக் வடிவியல் (Hyperbolic Geometry), எர்கோடிக் கோட்பாடு (Ergodic Theory) மற்றும் சிம்ப்லெக்டிக் வடிவியல்(Symplectic Geometry) ஆகியவை.
பீல்ட்ஸ் மெடல் பெற்ற மரியம்
கணிதத் துறையில் புதுமையான கண்டுபிடிப்புகளை நோக்கி அவரது ஆய்வுகளை நடத்தியதால்,அந்த ஆராய்ச்சியின் காரணமாக, 2005ல்,மரியம் பாப்புலர் அறிவியலின் நான்காவது புத்திசாலிகள் 10 என்ற மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார். இதில் முதல் 1௦ இளையவர்களுள் ஒருவராக பெருமைப் படுத்தப்பட்டார். 2014, ஆகஸ்ட் 13அன்று பீல்ட்ஸ் மெடல் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப் பட்டார். இந்த மெடலைப் பெற்ற முதல் பெண்ணும், முதல் ஈரானியரும் மரியம்தான்.
இவர் 2௦17, ஜூலை 14, மார்பகப் புற்று நோயால் தனது 37 வயதில் மரணித்தார்.
இளமைக் கல்வியும்.. பதக்கங்களும்
மரியம் மிர்சகானி 1977,மே 3 ம் நாள், ஈரானின் தெஹ்ரானில் பிறந்தார். குழந்தையாக இருந்த போதே, அவரின் திறமைகளைப் பார்த்த அவரது பெற்றோர் , அவரின் விதிவிலக்கான திறமைகளை வளர்ப்பதற்காக தேசிய அமைப்பின் தெஹ்ரான் ஃபர்சனேகன் பள்ளியில் சேர்த்தனர். உயர்நிலைப் பள்ளியில் இளைய மற்றும் பெரிய மாணவர்களுக்கு நடத்தப்படும், ஈரானிய தேசிய ஒலிம்பியாட் போட்டியில் கணிதத்திற்கான தங்கப் பதக்கத்தை வென்றார், இதனால் அவர் தேசிய கல்லூரியில் படிப்பதற்கான நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியதில்லை என்ற சிறப்பு சலுகை அவருக்குக் கிடைத்தது. 1994 ஆம் ஆண்டில், ஹாங்காங்கில் நடந்த சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் ஈரானிய பெண் என்ற பெருமையை மிர்சாகானி பெற்றார், 42 புள்ளிகளில் 41 புள்ளிகளைப் பெற்றார். அடுத்த ஆண்டு, டொராண்டோவில், நிறைய மதிப்பெண் பெற்ற மற்றும் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் ஈரானியரானார். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில், அவர் நண்பர், சக மற்றும் ஒலிம்பியாட் வெள்ளிப் பதக்கம் வென்ற ரோயா பெஹெஷ்டி ஜவரே ஆகியோருடன் இணைந்து 1999 இல் வெளியிடப்பட்ட தொடக்க எண் கோட்பாடு, சவாலான சிக்கல்கள் என்ற புத்தகத்தில் இருவரும் இணைந்து எழுதினர். ஈரானிய தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற முதல் பெண்கள் மிர்சகானி மற்றும் ஜவரே மற்றும் 1995 இல் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.
மரணவாயிலிருந்து தப்பிய மிர்சகானி ..
மார்ச் 17, 1998 அன்று, திறமையான மாணவர்கள் மற்றும் முன்னாள் ஒலிம்பியாட் போட்டியாளர்களைக் கொண்ட ஒரு மாநாட்டில் கலந்து கொண்டனர், பிறகு மிர்சகானி, ஜவரே மற்றும் பிற பங்கேற்பாளர்கள் தெஹ்ரானுக்கு செல்லும் வழியில் அஹ்வாஸில் ஒரு பேருந்தில் ஏறினர். பஸ் ஒரு குன்றிலிருந்து விழுந்து, பெரிய விபத்தில் சிக்கியது; ஏழு பயணிகள் கொல்லப்பட்டனர்.அனைவரும் ஷெரீப் பல்கலைக்கழக மாணவர்கள்.. இந்த சம்பவம் ஈரானில் ஒரு .தேசிய சோகமாக கருதப்படுகிறது ் உயிர் தப்பிய சிலரில் மிர்சகானி மற்றும் ஜவரே இருவர்.
உயர்கல்வி
மிர்சகானி 1999 ஆம் ஆண்டில், ஷெரீப் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். ஷூரின் தேற்றத்திற்கான ஒரு எளிய ஆதாரத்தை உருவாக்கும் பணிக்காக மிர்சகானி அமெரிக்க கணித சங்கத்திலிருந்து மேற்படிப்புக்காக அங்கீகாரம் பெற்றார். பின் அவர் பட்டதாரி வேலைக்காக அமெரிக்காவிற்குச் சென்றார், 2004 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார், அங்கு அவர் பீல்ட்ஸ் பதக்கம் வென்ற கர்டிஸ் டி. மக்முல்லனின் மேற்பார்வையில் பணிபுரிந்தார். ஹார்வர்டில் அவர் “வேறுபாடு மற்றும் உறுதியும் இடைவிடா கேள்வியும் கொண்டவர் ” என்று கூறப்படுகிறது. அவர் தனது வகுப்பு குறிப்புகளை பாரசீக மொழியில் எடுத்துக்கொண்டார்.
பணியும் திறமையும்
மிர்சகானி கிளே (Clay)கணித நிறுவனத்தல் 2004ல் ஆராய்ச்சி உறுப்பினராகவும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். பின் 2009 ல், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார்.. அப்போது அவர் அங்கு ஹைபர்போலிக் ஜியோமெட்ரி, டோபாலஜி மற்றும் டைனமிக்ஸ் துறைகளில் ஒரு தலைவராகவும் இருந்தார். (இறக்கும் வரை அங்கேயே பணிபுரிந்தார்..) ரைமான் மேற்பரப்புகளின் மாடுலி இடைவெளிகளின் (moduli spaces of Riemann surfaces)கோட்பாடு(அல்ஜீப்ரா வடிவியல் மற்றும் ஐசோமெரிசம்) தொடர்பானது என்ற கணித கண்டுபிடிப்புக்கு மிர்சகானி பல பங்களிப்புகளை செய்தார். மிர்சகானியின் ஆரம்பகால பணிகள், ஹைபர்போலிக் ரைமான் பரப்புகளில் எளிய மூடிய புவி இயற்பியல்களை எண்ணும் சிக்கலைத் தீர்த்தது, சிக்கலான மாடுலி ஸ்பேஸில் தொகுதி கணக்கீடுகளுக்கு ஒரு உறவைக் கண்டறிந்தன. ஜியோடெசிக்ஸ் என்பது “நேர் கோடு” என்ற கருத்தை “வளைந்த இடங்களுக்கு” இயல்பாகப் பொதுமைப்படுத்துவதாகும். முறைப்படி,
ஆர்வத்தில் துறை மாற்றம்
,ஸ்டான்போர்ட் பலகலைக் கழகத்தில் பணியாற்றும்போது, மிர்சகானியின் ஆர்வம் கொஞ்சம் மாறியது. வடிவியல் மற்றும் சமச்சீர் ஆகியவற்றில் மிர்சகானி இன்னும் அதிக கவனம் செலுத்தினார். ஆனால் டீச் முல்லர் இயக்கவியலில் மேம்பட்ட வடிவியல் உத்திகள் தொடர்பான கோட்பாடுகளில் கவனம் செலுத்தி, அதிலேயே தனது ஆராய்ச்சியை செய்தார். மாடுலி கோட்பாட்டுக்கு துவக்க பங்களிப்புகளைச் செய்தார்.
2014 ஆம் ஆண்டில், அலெக்ஸ் எஸ்கினுடனும், அமீர் முகமதியின் உள்ளீடுகளுடனும், மிர்சகானி இணைந்து செயல்பட்டு, அவை சிக்கலான ஜியோடெசிக்ஸ் மற்றும் மாடுலி இடத்தில் அவை மூடப்படுவது ஒழுங்கற்ற அல்லது பின்னடைவைக் காட்டிலும் வியக்கத்தக்க வகையில் வழக்கமானவை என்பதை மிர்சகானி நிரூபித்தார். சிக்கலான புவி இயற்பியலின் மூடல்கள்என்பவை பல்லுறுப்புக்கோவைகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட இயற்கணித பொருள்கள், எனவே அவை சில கடினமான பண்புகளைக் கொண்டுள்ளன.. இதனை சர்வதேச கணித யூனியன் தனது செய்திக்குறிப்பில், “ஒரே மாதிரியான இடைவெளிகளில் உள்ள கடினத்தன்மை மாடுலி இடத்தின் ஒத்திசைவற்ற உலகில் எதிரொலிப்பதைக் கண்டறிவது வியக்க வைக்கிறது.”என்று மிர்சகானியின் திறமை பற்றி பெருமிதம் கொண்டனர்.
சாதனையும் விருதும்,
கணிதத்தில் செய்த சாதனைகளுக்காக மரியம் மிர்சகானிக்கு 2014,ஆகஸ்ட் 13ம் நாள் சியோலில் நிகழ்ந்த சர்வதேச கணிதவியலாளர் மாநாட்டில் , கணித்தின் மிக உயர்ந்த விருதான பீல்ட்ஸ் மெடல் கொடுக்கப்பட்டது. கணித பாடமான ரீமான் பரப்புகளில் இவர் பணியாற்றியதால் இந்த விருது இவருக்கு கிடைத்தது. இது பற்றி அங்கு ஜோர்டான் ஏலன்பெர்க் என்ற விஞ்ஞானி மிர்சகானியின் அரிய ஆராய்ச்சி பற்றி பார்வையாளர்களுக்கு விளக்கினர். அதே ஆண்டில் இரானின் குடியரசுத்தலைவர் ஹசன் ரூஹானி, மிர்சகானிக்கு பாராட்டு தெரிவித்தார்.
தனி வாழ்க்கை
மிர்சகானி, 2008 ல் செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த தத்துவார்த்த கணினி விஞ்ஞானி மற்றும் பயன்பாட்டு கணிதவியலாளர் ஜான் வொண்ட்ரூக்கை மணந்தார்.அவர் தற்போது ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக உள்ளார்.அவர்களுக்கு அனாஹிதா என்ற மகள் உள்ளார். [44] கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் மிர்சாகானி வசித்து வந்தார்.
அழகியல் நோக்கில்
மிர்சகானி தன்னை ஒரு “மென்மையான ” கணிதவியலாளர் என்று வர்ணித்து, “கணிதத்தின் அழகைக் காண நீங்கள் கொஞ்சம் ஆற்றலையும் முயற்சியையும் செலவிட வேண்டும்” என்று கூறினார். சிக்கல்களைத் தீர்க்க, மிர்சகானி காகிதத் தாள்களில் டூடுல்களை வரைந்து, வரைபடங்களைச் சுற்றி கணித சூத்திரங்களை எழுதுவார். அவரது மகள் தனது தாயின் படைப்பை “ஓவியம்” என்று அழகியலாகக் கூறினார் . மேலும் மிர்சகானி கூறியது என்னிடம் எந்த குறிப்பிட்ட செய்முறையும் இல்லை [புதிய சான்றுகளை உருவாக்குவதற்கு … இது ஒரு காட்டில் தொலைந்து போவது மற்றும் சில புதிய தந்திரங்களைக் கொண்டு வர நீங்கள் சேகரிக்கக்கூடிய அனைத்து அறிவையும் பயன்படுத்த முயற்சிப்பது போன்றது, மற்றும் சில அதிர்ஷ்டங்களுடன், நீங்கள் கணிதத்தில் ஒரு வழி கண்டுபிடிக்கலாம்.
மரணிப்பு
மிர்சகானிக்கு மார்பக புற்றுநோய் இருப்பது 2013 இல் கண்டறியப்பட்டது. அவருக்கு வந்தது கொஞ்சம் தீவிரமான புற்றுநோய் . 2016 ஆம் ஆண்டில், புற்றுநோய் அவரது எலும்புகள் மற்றும் கல்லீரலில் பரவியது. ஆனால் அவரது மருத்துவ செலவினைப் பார்க்க அவர்களின் வருமானம் போதவில்லை. அமெரிக்காவில் மருத்த்துவம் பார்க்க காப்பீட்டு வசதி வேண்டும். அது இல்லாததால், மிர்சகானி,இலவச மருத்துவ மனையைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துகொண்டார். புற்றுநோயால் பேராசிரியர் பதவியும் பறிபோனது. பின்னர் மக்களிடம் பொருளாதார உதவி வு கேட்டுப் பெற்று சிகிச்சை எடுத்துக் கொண்டார். அமெரிக்காவில் அவருக்கு ஆறுதல் கூறவோ, உதவி செய்யவோ, அங்கு ஓர் உயிர் கூட இல்லை என்பது மிகவும் வேதனையானது. அவர் 14 ஜூலை 2017 அன்று தனது 40 வயதில் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டில் உள்ள ஸ்டான்போர்ட் மருத்துவமனையில் இறந்தார்]
மிர்சகானியின் பெருமை
ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி மற்றும் பிற அதிகாரிகள் இரங்கல் தெரிவித்து, மிர்சகானியின் அறிவியல் சாதனைகளைப் பாராட்டினர். ரூஹானி தனது செய்தியில், “ஈரானின் பெயரை உலக அறிவியல் மன்றங்களில் எதிரொலிக்கச் செய்த இந்த படைப்பு விஞ்ஞானி மற்றும் எளிமையான பெண்ணின் முன்னோடியில்லாத புத்திசாலித்தனம், ஈரானிய பெண்கள் மற்றும் இளைஞர்களின் மகத்தான விருப்பத்தை எட்டுவதற்கான பாதையில் காண்பிப்பதில் ஒரு திருப்புமுனையாகும்” பெருமையின் சிகரங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச அரங்கங்களில். குறிப்பிட்டார்.
மிர்சகானி மரணத்துக்குப்பின் மாற்றம்
அவரது மரணத்தின் பின்னர், பல ஈரானிய செய்தித்தாள்கள், ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியுடன் சேர்ந்து, தடைகளை உடைத்து, மிர்சகானியின் தலைமுடியை அவிழ்த்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டன, இது பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் பரவலாகக் குறிப்பிடப்பட்டது. மிர்சகானியின் மரணம் ஈரானுக்குள் கலப்பு-தேசிய பெற்றோரின் குழந்தைகளுக்கான திருமண குடியுரிமை தொடர்பான விவாதங்களை புதுப்பித்துள்ளது; மிர்சகானியின் மரணத்தின் பின்னணியில், 60 ஈரானிய எம்.பி.க்கள், மிர்சகானியின் வசதிகளை எளிதாக்கும் பொருட்டு, வெளிநாட்டினருடன் திருமணம் செய்த ஈரானிய தாய்மார்களின் குழந்தைகளுக்கு ஈரானிய தேசியத்தை வழங்க அனுமதிக்கும் ஒரு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இறப்புக்குப்பின் மரியாதை
ஈரானிய கணித சங்கத்தில் பெண்கள் குழு மேற்கொண்ட விவாதத்தினால், சர்வதேச அறிவியல் கவுன்சில் மரியம் மிர்சகானியின் பிறந்த நாளான மே 3ம்நாளை ஈரான் கணித தினமாக அறிவிக்க ஒப்புக்கொண்டுள்ளது.இது மரியம் மிர்சகானி நினைவாக வழங்கும் மரியாதை. அவரது வாழ்க்கை மற்றும் சாதனைகளை மரியாதை செய்யும் விதமாக மிர்சகானியின் பெயரை பல்வேறு நிறுவனங்களும் எடுத்து பயன்படுத்தியுள்ளன .2017ல், ஃபர்சனேகன் உயர்நிலைப்பள்ளி, அவர்களின் ஆம்பி தியேட்டர் மற்றும் நூலகத்திற்கு மிர்சகானி என பெயரிட்டுள்ளது. மிர்சகானி இளங்கலைப் பட்டம் படித்த ஷெரீப் தொழில்நுட்பக்கழக கணிதக் கல்லூரி நூலகத்திற்கு மிர்சகானியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.. இஸ்ஃபஹானில் உள்ள கணித சபை, மேயருடன் இணைந்து, நகரத்தில் ஒரு மாநாட்டு மண்டபத்திற்கு மிர்சகானியின் பெயரை வைத்துள்ளது.
2018ல் உயர் தெளிவுத்திறன் கொண்ட பூமி கண்காணிப்பு இமேஜிங் மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான சேட்டலோஜிக், மரியம் மிர்சகானியின் நினைவாக அவரின் பெயரிடப்பட்ட மைக்ரோ செயற்கைக்கோளை ஏவியது.
ஓவொரு ஆண்டும் கணித துறையில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு மரியம் மிர்சகானி என்ற பெயரில் 4 பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக பிரேக் த்ரூ அரக்கட்டனை 2௦19ல் அறிவித்தது .மேலும் முனைவர் படிப்பு க்கான ஆரம்பகால கணிதவியலாளர்களுக்கு 50,000 டாலர்கள் அறிவித்தது
பிப்ரவரி 2020 இல், STEM இல் சர்வதேச பெண்கள் மற்றும் பெண்கள் தினத்தன்று, உலகை வடிவமைத்த இறந்த அல்லது உயிருடன் இருக்கும் ஏழு பெண் விஞ்ஞானிகளில் ஒருவராக மிர்சகானி ஐ.நா. பெண்களால் கௌரவிக்கப்பட்டார்.
2020 ஆம் ஆண்டில், ஜார்ஜ் சிசிக்சரி, சீக்ரெட்ஸ் ஆஃப் தி சர்பேஸ்: தி கணித விஷன் ஆஃப் மரியம் மிர்சாகானி என்ற ஆவணப்படத்தில் நடித்தார்.
நூல் : புது றெக்கை ஆசிரியர் : சக. முத்துக்கண்ணன் விலை : ரூ. ₹40/- வெளியீடு : புக் ஃபார் சில்ட்ரன் தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/ விற்பனை : 24332924 புத்தகம் வாங்க :www.thamizhbooks.com [email protected]
இன்று காலை முத்துக்கண்ணனின் புது றெக்கையை புரட்டி படித்தாகி விட்டது.. அற்புதமான புத்தகம்
குழந்தைகளின் உணர்வுகளை..
அகத்தை அழகாக பதிவு பண்ணி இருக்கிறார்.. அற்புதமான உரையாடல்கள் உள்ளே நிகழ்ந்துள்ளன.
அவற்றை படிக்கும் போது நாம் அவர்களின் கூடவே இருப்பதாகவே உணர்கிறோம்..
மொசை தரையில் வழுக்கும் கால்களாய் வார்த்தைகள் வழுக்கி கொண்டே வேகமாக நம்மையும் இழுத்துச் செல்கின்றன….
கதைகள் ஒவ்வொன்றும் கிளாசிக்..
சமீபத்தில் இப்படி குழந்தைகளுக்கான கதைகளை படிக்கவே இல்லை.. வரவும் இல்லை ..
வேறு ஏதேனும் எழுதியிருப்பார்களா? என்று தெரியாது ..
ஆனால் முத்துக்கண்ணன்..அருமையாக எழுதி அற்புதமாக புத்தகம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது..
கிளிகள் கதை படுஜோர்..
என்ன அழகாக இருக்கிறது ,.
ஆலம்பரம் கதை அதைவிட கிளாசிக் முடிவு ஒரு கேள்வியோடு
அது என்ன கேள்வியாக இருக்கலாம்?
குழந்தைகளிடம் உரையாட
கதை சொல்ல இப்படிப்பட்ட அற்புதமான கதைகள் கிடைப்பது அரிதிலும் அரிது.
நெசமாவே கற்பனை
மிகுந்த கதை
புது றெக்கை .
அப்பா அம்மாவுக்கு இறக்கை முளைத்தால் எப்படி இருக்கும்? பிள்ளைக்கு எப்படி இருக்கும் சூப்பர்..
ஞாயிற்றுக்கிழமை பென்சில் பேச்சு வெளி இடம்.. சுகன்யா.. அட்டகாசம் போங்க..
அதைவிட பிறந்தநாள் கதை..
தாத்தா பாட்டியின் ஓட்டம்
முத்து கண்ணன் இந்த கற்பனையை நான் உளமாற மெச்சுகிறேன்..
ரொம்ப சந்தோஷமா இருக்கு
இத படிக்கும் போது குழந்தைகளுடன் பேசுவதற்கு ..
இந்த கதைகள் மிகவும் பயன் படும்..
அதைவிட அற்புதமாக தோழர் மாடசாமி உடைய சின்ன அணிந்துரையும்,.
குழந்தைகளுக்காக எழுதும் இரத்தினவிஜயனுடைய.. சின்ன ஊடாடலும் ..
இதில் மேலும் மேலும் பெருமைப்படுத்தி மெருகூட்டுகின்றன ..
ஆசிரியர்கள் தங்கள் 3,4&5ம் வகுப்பு குழந்தைகளுக்கு இந்த கதையை வாசித்து உரையாடலாம்..
இதே போல வேறு கதைகளை அவர்களை எழுத சொல்லியும் கேட்கலாம்.
1500 ஆண்டுகளுக்கு முன் கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்தவர்
இன்றைக்கு சுமார் 15௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு துறவி மற்றும் விஞ்ஞானியைப் பற்றிய பதிவு இது. அவரது செயல்பாடுகள், அந்தக் காலத்திலேய மிகவும் ஆச்சரியமாக உள்ளன. அவரின் பெயர் வெனரபிள் பேட் (the Venerable Bede). ஆனால் பொதுவாக அவரை பேட் என்றே அழைக்கப்படுகிறார். அவர் ஒரு துறவி. இங்கிலாந்தின் திருச்சபையின் ஆரம்பகால வரலாற்றாசிரியர், மத போதகர், ஆங்கில அறிஞர், பாடகர், கவிஞர், மொழியியலாளர் ,மொழிபெயர்ப்பாளர் மற்றும் இறையியலாளர். அம்மாடி போதுமா ஒருவரின் திறமையும் செயல்பாடும். பேட் ஒரு பல்துறை வித்தகர். பேட் விஞ்ஞான, வரலாற்று மற்றும் இறையியல் படைப்புகளை எழுதினார். 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அது மட்டுமல்ல, இசை மற்றும் அளவீடுகள் முதல் வேதாகம வர்ணனைகள் வரை அவரது எழுத்துக்களின் வரம்பை பிரதிபலிக்கின்றன. அதைவிட இன்றைக்கு நாம் பயன்படுத்தும் கி.மு. மற்றும் கி.பி தொடங்கிய தேதிகள், அவற்றின் அவதானிப்பு, அத்துடன் ஈஸ்டர் தினத்துக்கான தேதிகள் உட்பட அவர்தான் நிர்ணயித்தார்.. இதற்காக பேட் வானவியலைப் பயன்படுத்திகொண்டார். பேட் “ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்” என்றும் அழைக்கப்படுகிறார்.
பேட் பற்றிய சிறு குறிப்பு
பேட் ஆணாதிக்க இலக்கியங்களையும், பிளினி தி எல்டர், விர்ஜில், லுக்ரெடியஸ், ஓவிட், ஹோரேஸ் மற்றும் பிற கிளாசிக்கல் எழுத்தாளர்களையும் அறிந்திருந்தார். அவருக்கு கிரேக்க மொழியும் தெரிந்திருந்தது. லத்தீனில் பேடேயின் வேத பூர்வ வர்ணனைகள் உருவகமான விளக்க முறையைப் பயன்படுத்தின; அவர் எழுதிய வரலாற்றில், அற்புதங்கள் பற்றிய விவரங்களும் இருந்தன. இது நவீன வரலாற்றாசிரியர்களுக்கு அவரது வரலாற்றில் உள்ள பொருட்களைப் பற்றிய விமர்சன அணுகுமுறையுடன் முரண்பட்டதாகத் தெரிகிறது. ஆரம்பகால இடைக்கால அறிஞர்களின் உலகப் பார்வையில் இத்தகைய கருத்துக்கள் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன என்பதை நவீன ஆய்வுகள் காட்டுகின்றன. பேட் இப்போது முக்கியமாக ஒரு வரலாற்றாசிரியராகப் பார்க்கப்பட்டாலும், அவரது கால இலக்கணம், காலவரிசை மற்றும் விவிலிய ஆய்வுகள் குறித்த அவரது படைப்புகள், அவரது வரலாறு மற்றும் வாழ்க்கை வரலாற்றுப் படைப்புகளைப் போலவே முக்கியமானவை. கரோலிங்கியன் மறுமலர்ச்சிக்கு, வரலாறு சாராத படைப்புகள் பெரிதும் பங்களித்தன. இந்த படைப்பில் அவரது படைப்புரிமை சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அவர் ஒரு தவத்தை எழுதிய பெருமைக்குரியவர். பேட் இறக்கும் தருவாயில், இறப்பு படுக்கையில் கூட கவிதை எழுதி சமர்ப்பித்தவர்.
ஈஸ்ட்டர் & நேரம் கணிக்க வானவியலைப் பயன்படுத்தியவர்
நேரத்தை கணக்கிடுவதில் பிரபஞ்சத்தின் பாரம்பரிய, பண்டைய மற்றும் இடைக்கால கருத்தின் படி, பேட் கணித்துள்ளார். கோளவடிவ பூமி மாறிவரும் பகல் நீளத்தை எவ்வாறு பாதித்தது என்றும், சூரியன் மற்றும் சந்திரனின் பருவகால இயக்கம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதற்கான விளக்கம் உட்பட அவரது எழுத்துக்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதற்கான அறிமுகம் அதில் இருந்தது. மாலை அந்தி நேரத்தில் அமாவாசையின் மாறும் தோற்றம் பற்றியும் பேசுகிறார். பேட் சந்திரனால் அலைகளில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பதிவு செய்கிறார். தினமும் இரண்டு முறை அலைகளின் ஏற்ற இறக்க நேரம் சந்திரனுடன் தொடர்புடையது என்பதையும், வசந்த கால சந்திர மாத சுழற்சியும், மற்றும் நேர்த்தியான அலைகளின் அளவும் சந்திரனின் நிலையுடன் தொடர்புடையது என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். அதே கடற்கரையில் அலைகளின் நேரங்கள் வேறுபடுகின்றன என்பதையும், மற்ற இடங்களில் அதிக அலை இருக்கும்போது நீர் அசைவுகள் ஒரே இடத்தில் குறைந்த அலைகளை ஏற்படுத்துகின்றன என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். பேட் தனது புத்தகத்தின் கவனம் கணக்கீடாக இருந்ததால், ஈஸ்டர் தேதியைக் கணக்கிடுவதற்கும், பாஸ்கல் – பௌர்ணமி தேதியிலிருந்து ராசி மண்டலத்தின் வழியாக சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தைக் கணக்கிடுவதற்கும், காலெண்டர் தொடர்பான பல கணக்கீடுகளுக்கும் பேட் அறிவுறுத்தல்களை வழங்கினார். . ஆங்கிலோ-சாக்சன் காலண்டரின் மாதங்களைப் பற்றி அவர் சிலஅவசியத் தகவல்களைத் தருகிறார்.
சமகால நாள் குறிப்பை சரி செய்தல் பேட் கி.மு மற்றும் கி.பி.யின் ஈஸ்டருக்கான சரியான தேதியைக் கணக்கிடும் நோக்கத்திற்காக, அவர் வானியல் பற்றிய அறிவைப் பயன்படுத்தினார். சோசிஜெனீஸின் ஜூலியன் காலெண்டரில் ஒரு குறைபாடு காரணமாக, 21 மார்ச் பாரம்பரிய தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வந்ததாக குறிப்பிட்டிருந்து. வசந்த கால உத்தராயணம் (வசந்த கால சமகால நாள்-மார்ச் 21 )ஒரு கட்டத்திற்கு நழுவியிருப்பதை அவர் கண்டறிந்தார். இருப்பினும், ஒரு லீப் ஆண்டுகளின் எண்ணிக்கையில் தேவையான சரிசெய்தல் தொடர்பாக அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒன்பது நூற்றாண்டுகள் கழித்த்துதான் பேட்டின் இந்த செயல்பாடு சரிசெய்யப்பட்டது. பூமி ஒரு கோளம் என்று பேட் கருதினார். சந்திரனின் நகர்வை அலைகள் தொடர்பான பைத்தாஸின் ஆலோசனையை அவர் பாதுகாத்தார். மேலும் அதிக அலை என்பது ஓர் உள்ளூர் விளைவு மற்றும் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் ஏற்படாது என்ற செலூகஸின் கருத்தை பின்பற்றினார்.
பிறப்பு &வளர்ப்பு
பேட்டின் பிறப்பு கி.பி 672/673 ஆக இருக்கலாம் என அவரே பிற்காலத்தில் அவரே தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். 673 ஆம் ஆண்டில் தான் பிறந்ததாகவும், வேர்மவுத் மடத்தின் நிலங்களில் இருப்பதாகவும் பேடே கூறினார். அவரின் ஏழாவது வயதில், அவரது குடும்பத்தினரால் வியர்மவுத்தின் மடாதிபதி பெனடிக்ட் பிஸ்காப்பிடம்.பேட் கல்வி கற்பிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டார். பேட், தனது பத்தொன்பது வயதில் தேவாலயத்தில் ஒரு டீக்கனாகவும், முப்பது வயதில் அவர் ஒரு பாதிரியாராகவும் நியமிக்கப்பட்டார். அவர் தனது
சமூகத்தில் சுறுசுறுப்பாக இருந்தபோது, பேட் படிப்பு, எழுதுதல் மற்றும் அவருக்கு பிடித்த செயல்பாடுகளை கற்பித்தல் ஆகியவற்றைக் கண்டார். அவர் பைபிள் மற்றும் லத்தீன் மொழியைப் படித்தார். அவர் லத்தீன் மொழியைக் கற்றுக்கொண்டார்,. ஏனென்றால் அப்போது அதுதான் மடத்தின் நூலகத்தில் உள்ள பைபிளின் மொழி மற்றும் பிற புத்தகங்களில் உள்ளதும் கூட. .அவரது போதனைகள் மிகவும் அடிப்படையானது. மேலும் அவரது கருத்துக்கள் மிகவும் வழக்கமானவை (எந்த வகையிலும் முற்போக்கானவை அல்ல).
ஸ்காட் டெக்ரிகோரியோ எழுதிய புனித பேடேயின் எழுத்துக்களில் புதுமை மற்றும் பாரம்பரியம் உள்ளது என்றார். எனவே அவரை புத்தக பரிந்துரை யில் “பேட் ஆங்கில வரலாற்றின் தந்தை” என்று கூறி பெருமைப்படுத்தி அழைக்கப்படுகிறார்.
உயிர்ப் போராட்ட வாழ்க்கை
பேட் தன் சிறுவயதில் ஜாரோவில் மடாலயத்தில், அபோட் சியோல்ஃப்ரித் உடன் இருந்தார். அங்கே இருவரும் கி.பி 686ம் ஆண்டில் தாக்கிய உயிர்க்கொல்லி நோயான பிளேக் நோயிலிருந்து அதிருஷ்டவசமாகத் தப்பினர், பிளேக் நோய் ஊரெங்கும் வெடித்தது அங்குள்ள பெரும்பான்மையான மக்களை உயிர்ப்பலி வாங்கியது. . ஏறக்குறைய கி.பி 710ம் ஆண்டில் எழுதப்பட்ட தகவல் என்னவென்றால்,: ” சியோல்ஃப்ரித்தின் வாழ்க்கை”என்ற புத்தகத்தில் ” அந்த ஊரில் பிளேக் நோயிலிருந்து தப்பிபிழைத்தது எஞ்சியிருந்தது இரண்டே இரண்டு துறவிகள் மட்டுமே. ஒருவர் சியோல்ஃப்ரித், மற்றவர் ஒரு சிறுவன், அதுதான் பேட் அநாமதேய எழுத்தாளரின் கூற்றுப்படி சியோல்ஃப்ரித் கற்பித்தார். மற்றவர்கள் பயிற்சி பெறும் வரை இருவரும் வழிபாட்டின் முழு சேவையையும் செய்ய முடிந்தது. ” என்று தெரிவிக்கிறது. அந்த சிறுவன் கிட்டத்தட்ட நிச்சயமாக பேடே,தான். பின்னர் அவன் பயிற்சி எடுக்கும்போது, அவனுக்கு 14 வயதாக இருந்திருக்கும்
குறைந்த வயதில் பாதிரியாராக
பேடேவுக்கு சுமார் 17 வயதாக இருந்தபோது, அயோனா அபேயின் மடாதிபதியான அடோம்னான், மாங்க்வேர்மவுத் மற்றும் ஜாரோவைப் பார்வையிட்டார். இந்த விஜயத்தின் போது பேட் மடாதிபதியை சந்தித்து, ஈஸ்டர் டேட்டிங் சர்ச்சையில் அடேமோன் பேடேவின் ஆர்வத்தைத் தூண்டினார். இது கி.பி 69ம் ஆண்டு, , பேடேவின்19 வயதில் பேட் பிஷப்பாக இருந்த அவரது மறைமாவட்ட பிஷப் ஜான் ஒரு டீக்கனாக நியமிக்கப்பட்டார். ஹெக்சாம். ஒரு டீக்கனின் நியமனத்திற்கான நியமன வயது 25; பேடேவின் ஆரம்பகால நியமனம் என்பது அவரது திறன்கள் விதிவிலக்கானதாகஇருந்ததால் அவரிறிற்கு முக்கியம் தரப்பட்டது. அதனால் குறைந்தபட்ச வயதுத் தேவை என்பதும் புறக்கணிக்கப்பட்டது. பேட் தனது 3௦ வயதில் (கி.பி 702), அவர் ஒரு பாதிரியார் ஆனார், இதனை பிஷப் ஜான் நிகழ்த்தினார்.
எழுத்தாளர் மற்றும் அறிஞர்
பேட், மாங்க்வேர்மவுத்-ஜாரோவின் சகோதரி நார்த்ம்ப்ரியன் மடாலயங்களில் உறுப்பினராக இருந்தார். அவர் ஜாரோவில் இருந்த அதன் பெரிய நூலகத்துடன் அதிக நேரம் செலவிட்டார். இருவரும் டர்ஹாம் (இப்போது டைன் மற்றும் வேர்) என்ற ஆங்கில கவுண்டியில் வாழ்ந்தனர். அவர் ஓர் அற்புதமான எழுத்தாளர் மற்றும் அறிஞராக பலராலும் நன்கு அறியப்பட்டவர். ” ஆங்கில மக்களின் பிரசங்க வரலாறு” என்ற புத்தகம் அவருக்கு “ஆங்கில வரலாற்றின் தந்தை” என்ற பட்டத்தை தந்தது. .பேட் தனது வாழ்நாளில், பல அறிவியல், வரலாறு மற்றும் இறையியல் படைப்புகளை எழுதினார். இவையாவும், பல இங்கிலாந்து மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிற மடங்களால் நகலெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.
படைப்பு
பேட்டின் குறிப்பாக மிகவும் பிரபலமான ஒரு படைப்பு இருந்தது. ஆங்கிலோ-சாக்சன் வரலாற்றில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் முக்கியமான ஆதாரங்களில் ஒன்று பேடேவின் ஆங்கில தேசத்தின் பிரசங்க வரலாறு. பேட் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஜாரோவில் கழித்தார், இங்குதான் அவர் தனது தன் வரலாற்றை எழுதினார். பிரசங்க வரலாறு ஐந்து புத்தகங்கள் மற்றும் லத்தீன் மொழியில் எழுதப்பட்ட சுமார் 400 பக்கங்களால் ஆனது. இது சீசரின் காலம் முதல் அது நிறைவடைந்த தேதி வரை (731) இங்கிலாந்து வரலாற்றின் 800 ஆண்டுகால நீண்ட நெடிய வரலாற்றைக் விரிவாகக் கொண்டுள்ளது. அதன் கடைசி அத்தியாயம் பேடே பற்றியது.
பெனடிக்ட் பிஸ்காப் உதவியால் உயர்வு
பேடேவின் வேலையை சாத்தியமாக்கிய ஒருவர் பெனடிக்ட் பிஸ்காப் என்ற அறிவியலாளர் ஆவார். அவர் வேர்மவுத் மற்றும் ஜாரோ மடங்களை நிறுவினார். மிக முக்கியமாக அவர் பேடேவின் பெரும்பாலான தகவல்களைப் பெற்ற நூலகத்தை உருவாக்கினார். கி.பி 689ம் ஆண்டில் பெனடிக்ட் பிஸ்காப் இறக்கும் போது, பேட் ரோம் மற்றும் தெற்கு பகுதிக்கு நான்கு பயணங்களை முடித்து, ஒவ்வொரு முறையும் பெரிய புத்தகங்களை திரும்பவும் கொண்டுவந்தார். அந்த மடாலயத்தின் நான்காவது மடாதிபதியான சியோல்ஃப்ரிட் இல்லையென்றால் பேடேவின் பணி இன்னும் சாத்தியாமாகி இருக்காது. பெனடிக்ட் பிஸ்காப் விட்டுச் சென்ற நூலகத்தின் அளவை, பேட் இரட்டிப்பாக்கினார். பேட், யார்க்(York) மற்றும் லிண்டிஸ்பார்னை தாண்டி வேறு எங்கும் அதிக தூரம் பயணம் செய்யவில்லை. தொலைதூர இடங்களில் அவர் எப்போதும் நூலகங்களைப் பார்வையிட்டதாக எந்த பதிவும் இல்லை. பேட் தனது ஆதாரங்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:
“கடவுளின் உதவியுடன், கிறிஸ்துவின் ஊழியரும், ஆசீர்வதிக்கப்பட்ட அப்போஸ்தலர்களான பேதுரு மற்றும் பவுலின் வேர்மவுத் மற்றும் ஜாரோவின் மடத்தின் பாதிரியாருமான நான், பிரிட்டனில் உள்ள திருச்சபையின் வரலாறு மற்றும் ஆங்கில சர்ச்சின் வரலாறு பற்றிய தகவல்களை சேகரித்தேன். குறிப்பாக, பண்டைய எழுத்துக்களிலிருந்தும், நம் முன்னோர்களின் மரபுகளிலிருந்தும், எனது சொந்த அறிவுகளிலிருந்தும் அவற்றைக் கண்டறிய முடிந்தது. அவற்றையே நான் பதிவு செய்தேன்” என்று தெரிவிக்கிறார்.
காலண்டர் தேதிகளை கணக்கிடும் அறிவியல் தந்தவர் பேட்
பேட் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மடத்தில் கழித்தபோது, பேட் பிரிட்டிஷ் தீவுகளில் உள்ள பல தங்குமிடங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் மடங்களுக்குச் சென்றார். யார்க்கின் பேராயர் மற்றும் நார்த்ம்ப்ரியாவின் மன்னர் சியோல்வல்ப் ஆகியோரையும் பார்வையிட்டார். பேட் எழுத்தாளர், ஆசிரியர் , மற்றும் அறிஞர் என நன்கு அறியப்பட்டவர், மற்றும் அவரது மிகப் பிரபலமான படைப்பான ஆங்கில மக்களின் பிரசங்க வரலாறு, அவருக்கு “ஆங்கில வரலாற்றின் தந்தை” என்ற பட்டத்தைப் பெற்றது. அவரது “எக்குமெனிகல்” எழுத்துக்கள் விரிவானவை மற்றும் பல விவிலிய வர்ணனைகள் மற்றும் பிற இறையியல் படைப்புகள் ஆகியவை . பேடேவின் மற்றொரு முக்கியமான ஆய்வு பகுதி, கம்ப்யூட்டஸின் கல்வி ஒழுக்கம். அதுவே அவரது சமகாலத்தவர்களுக்கு காலண்டர் தேதிகளை கணக்கிடும் அறிவியல் வரலாறு என்று பலராலும் அறியப்படுகிறது.
ஈஸ்டர் தேதி நிர்ணயிப்பு
பேட் கணக்கிட முயற்சித்த மிக முக்கியமான தேதிகளில் ஒன்று ஈஸ்டர் தேதி. இது அவரை சர்ச்சையில் சிக்க வைத்தது. கிறிஸ்துவின் பிறப்பிலிருந்து முன்னோக்கி தேதிகள் குறிப்பிடுவதை பிரபலப்படுத்த அவர் உதவினார், இது ஒரு அப்போதைய நடைமுறை ஆகும். பின்னர் அது இடைக்கால ஐரோப்பாவில் பொதுவானதாக மாறியது. ஆரம்பகால இடைக்காலத்தின் மிகச் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களில் ஒருவரான பேட், கி.பின் 604 ம் ஆண்டில் முதலாம் கிரிகோரி மரணம் மற்றும் கி.பி 800ம் ஆண்டு ல் சார்லமேனின் முடிசூட்டுதல் ஆகியவற்றுக்கு இடையேயான காலத்திற்கு பழங்காலத்தின் மிக முக்கியமான அறிஞராக பல வரலாற்றாசிரியர்களால் “பேட்” கருதப்படுகிறார். பேட்டின் சிறப்பு பல காலங்களில் கொண்டாட்டப்பட்டது. அவரின் பெருமை உலகம் உள்ள அளவும் நீடிக்கிறது.
மொழியியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்
பன்னிரெண்டாம் போப் லியோ, பேட்டை திருச்சபையின் மருத்துவராக அறிவித்தார். இந்த பெயரை அடைய கிரேட் பிரிட்டனின் ஒரே பூர்வீகம் அவர்; திருச்சபையின் டாக்டரான கேன்டர்பரியின் ஆன்செல்ம் முதலில் இத்தாலியைச் சேர்ந்தவர். பேட் ஒரு திறமையான மொழியியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராக இருந்தார், மேலும் அவரது பணி ஆரம்பகால சர்ச் பிதாக்களின் லத்தீன் மற்றும் கிரேக்க எழுத்துக்களை அவரது சக ஆங்கிலோ-சாக்சன்களுக்கு மிகவும் அணுகக்கூடியதாக மாற்றியது, இது ஆங்கில கிறிஸ்தவத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. பேடேவின் மடத்திற்கு யூசிபியஸ், ஓரோசியஸ் மற்றும் பலரின் படைப்புகள் அடங்கிய ஒரு சுவையான நூலகத்தை அணுக முடிந்தது.
பேடேயின் வாழ்க்கை பிரசங்க வரலாற்றின் கடைசி அத்தியாயம்
பேடேயின் வாழ்க்கையைப் பற்றி ஏறக்குறைய அறியப்பட்ட அனைத்தும் இங்கிலாந்தில் உள்ள தேவாலயத்தின் வரலாறான அவரது ஆங்கில மக்களின் பிரசங்க வரலாற்றின் கடைசி அத்தியாயத்தில் உள்ளன. இது சுமார் கி.பி 731ம் ஆண்டில் நிறைவடைந்தது, மேலும் பேட் அப்போது தனது 59ம் வயதில் இருந்தார், இது அவரது கி.பி 672 அல்லது 673 இல் பிறந்த தேதியிலிருந்து கணக்கிடப்பட்டது
ஒரு சிறிய தகவல் ஆதாரம்
ஜாரோவில் உள்ள மடாலயம் பின்னர் கட்டப்பட்ட இடத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள மோன்க்டனில் அவர் பிறந்தார் என்ற பாரம்பரியமும் உள்ளது. பேட் தனது தோற்றம் பற்றி எவ்விடத்திலும் எதுவும் கூறவில்லை, ஆனால் உன்னத வம்சாவளியைச் சேர்ந்த மனிதர்களுடனான அவரது தொடர்புகள் அவரது சொந்த குடும்பம் நல்வாழ்வைக் கொண்டிருந்தன என்பதைக் காட்டுகின்றன. அவர்களில் ஒருவர் பேடே. பேடேவின் படைப்புகளில் ஒன்றான குத்பெர்ட்டின் வாழ்க்கையின் சில கையெழுத்துப் பிரதிகளில், குத்பெர்ட்டின் சொந்த பாதிரியார் பேட் என்று பெயரிடப்பட்டார்; இந்த பூசாரி லிபர் விட்டேயில் பட்டியலிடப்பட்டுள்ள மற்ற பெயர்.
ஏழு வயதில், பேடே தனது குடும்பத்தினரால் பெனடிக்ட் பிஸ்காப் மற்றும் பின்னர் சியோல்ப்ரித் ஆகியோரால் கல்வி கற்க மாங்க்வேர்மவுத்தின் மடத்திற்கு அனுப்பப்பட்டார்.இங்கிலாந்தில் உள்ள ஜெர்மானிய மக்களிடையே இந்த நடைமுறை பொதுவானதாக குழந்தைப் பருவத்தில் மடாலயத்துக்கு அனுப்புவது என்பதும் வழக்கத்தில் இருந்தது. ஜாரோவில் உள்ள மாங்க்வேர்மவுத்தின் சகோதரி மடாலயம் கி.பி 682 ஆம் ஆண்டில் சியோல்ப்ரித் என்பவரால் நிறுவப்பட்டது, மேலும் பேட் அந்த ஆண்டு சியோல்ஃப்ரித்துடன் ஜாரோவுக்கு சென்றார். தேவாலயத்திற்கான அர்ப்பணிப்புகள் இன்றுவரை பிழைத்து வருகிறது; இது ஏப்ரல் 23, 685ம் ஆண்டு தேதியிட்டதும் கூட. பேட் தனது அன்றாட வாழ்க்கையில் மோசமான பணிகளுக்கு உதவ வேண்டியிருக்கும் என்பதால், அசல் தேவாலயத்தை கட்டியெழுப்ப அவர் உதவியது சாத்தியமாகும்.
படைப்புகள்
பேட் கி.பி 701ம் ஆண்டில் தனது முதல் படைப்புகளான டி ஆர்டே மெட்ரிகா மற்றும் டி ஸ்கேமடிபஸ் எட் டிராபிஸ் ஆகியவற்றை எழுதினார்; இரண்டும் வகுப்பறையில் பயன்படுத்தும் நோக்கத்தைக் கொண்டவை. அவர் தனது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து எழுதினார் ,எழுதினார், எழுதிக்கொண்டே இருந்தார். சாகும் தருவாயிலும் கூட எழுதிக்கொண்டே உயிர் துறந்தார். இறுதியில் 60 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி முடித்தார், அவற்றில் பெரும்பாலானவை தப்பிப் பிழைத்தன. அவரது வெளியீடு அனைத்தையும் எளிதில் தேதியிட முடியாது; மேலும் பேட் சில ஆண்டுகளில் சில நூல்களில் பணியாற்றியிருக்கலாம். அவரது கடைசி எஞ்சிய படைப்பு கி.பி 734ம் ஆண்டு எழுதப்பட்ட முன்னாள் மாணவரான யார்க்கின் எக்பெர்ட்டுக்கு எழுதிய கடிதம்தான் எஞ்சியது .
கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் கிரேக்க மற்றும் லத்தீன் கையெழுத்துப் பிரதியான அப்போஸ்தலர்களின் செயல்களை பேட் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது, இப்போது அது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள போட்லியன் நூலகத்தில் உள்ளது; இது கோடெக்ஸ் லாடியனஸ் என்று அழைக்கப்படுகிறது. ஜாரோவில் நகலெடுக்கப்பட்ட சில லத்தீன் பைபிள்களிலும் பேட் எழுதினர். அவற்றில் ஒன்று, கோடெக்ஸ் அமியாட்டினஸ், இப்போது புளோரன்ஸ் நகரில் உள்ள லாரன்டியன் நூலகத்தால் அது நடத்தப்படுகிறது. பேட் பலே கில்லாடி. அவரே ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் இருந்தார்; அவர் இசையையும் ரசித்தார்; ஒரு பாடகராகவும்இருந்தார். தனது சொந்த மொழியில் கவிதை வாசிப்பவராகவும் சாதனை செய்தார்.
பேச்சில் சிக்கல்/ திக்குவாய் பேட்
அவருக்கு பேசும்போது பேச்சில் சிக்கல் மற்றும் பிரச்சினை இருந்தது. பேட்டுக்கு சரளமாக பேச வராது. , ஆனால் இது செயிண்ட் குத்பெர்ட்டின் அவரது வசன வாழ்க்கையின் அறிமுகத்தில் ஒரு சொற்றொடரைப் பொறுத்தது. இந்த சொற்றொடரின் மொழிபெயர்ப்புகள் வேறுபடுகின்றன, மேலும் பேட் பேச்சு சிக்கலில் இருந்து குணமடைந்துவிட்டார்; துறவியின் படைப்புகளால் அவர் ஈர்க்கப்பட்டார்.க்ளூசெஸ்டர் கதீட்ரலில் உள்ள ஒரு கண்ணாடி டம்ளரில் , பேட் ஒரு எழுத்தாளருக்கு ஆணையிடுவதை போல சித்தரிப்பு உள்ளது.
உலக வயதை கணக்கிட;
கி.பி 708 ஆம் ஆண்டில், ஹெக்ஸாமில் உள்ள சில துறவிகள், பேட் தனது டி டெம்போரிபஸ் என்ற படைப்பில் மதங்களுக்கு எதிரான கொள்கையைச் செய்ததாக குற்றம் சாட்டினர். அந்த நேரத்தில் உலக வரலாற்றின் நிலையான இறையியல் பார்வை உலகின் ஆறு யுகங்கள் என்று அழைக்கப்பட்டது; பேட் தனது புத்தகத்தில், செவில்லேவின் ஐசிடோரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதை விட, உலகின் வயதை கணக்கிட்டார். பின்னர் , உலகத்தை உருவாகிய பின் 3,952 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்து பிறந்தார் என்ற முடிவுக்கு வந்தார்; ஆனால் அது இறையியலாளர்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 5,000 க்கும் மேற்பட்டஆண்டுகள் அல்ல என்றார் .
விவிலிய நூல் உருவாக்கம்
கி.பி 733 ஆம் ஆண்டில், பேட் அப்போது யார்க்கின் பிஷப்பாக இருந்த எக்பெர்ட்டைப் பார்க்க அங்கு சென்றார். 735 ஆம் ஆண்டில் சீக் ஆஃப் யார்க் ஒரு பேராயராக உயர்த்தப்பட்டார், மேலும் பேட் மற்றும் எக்பெர்ட், தனது வருகையின் போது பேட் உயர்வதற்கான முன்மொழிவைப் பற்றி விவாதித்திருக்கலாம். கி.பி 734 இல் மீண்டும் எக்பெர்ட்டைப் பார்வையிட போனார். ஆனால் அப்போது அவரால் பயணத்தை மேற்கொள்ள முடியாவில்லை. உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது.. அவர் அப்போதும் கூட லிண்டிஸ்பார்னின் மடத்திற்குச் சென்று, சில சமயங்களில் விக்டெட் என்ற துறவியின் அறியப்படாத மடத்தை பார்வையிட்டார்.அந்த விஜயம் அந்த துறவிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் தீவுகள் முழுவதும் மற்றவர்களுடன் அவர் பரவலாக தொடர்பு கொண்டதன் காரணமாகவும், பல கடிதங்களில் பேட் தனது நிருபர்களைச் சந்தித்ததாகக் குறிப்பதால், பேட் வேறு சில இடங்களுக்கும் சென்றார். நேரம் அல்லது இருப்பிடங்களைப் பற்றி மேலும் எதுவும் யூகிக்க முடியாது. எவ்வாறாயினும், அவர் ரோமிற்கு விஜயம் செய்யவில்லை என்பது அப்போது உறுதியானது. ஏனெனில் அவர் தனது ஹிஸ்டோரியா எக்லெசியாஸ்டிகாவின் சுயசரிதை அத்தியாயத்தில் அது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. ரோமில் அவருக்கான ஆவணங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் அவருக்கு உதவிய பேடேயின் நிருபர் நோத்ஹெல்ம், பேடேவுக்கு விஜயம் செய்ததாக அறியப்படுகிறது. நோத்ஹெல்மின் ரோம் வருகைக்குப் பிறகும் கூட அவர்களால் தேதியைத் தீர்மானிக்க முடியாது. மற்ற மடங்களுக்கு ஒரு சில வருகைகளைத் தவிர, அவரது வாழ்க்கை ஒரு சுற்று பிரார்த்தனையிலும், துறவற ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதிலும், புனித நூல்களைப் படிப்பதிலும் கழிந்தது. அவர் தனது காலத்திலேயே மிகவும் கற்றறிந்த மனிதராகக் கருதப்பட்டு சிறந்த விவிலிய மற்றும் வரலாற்று புத்தகங்களை எழுதினார்.
இறப்பு
பேட் கி.பி 735ம் ஆண்டு மே மாதம் 26,ம் நாள் , ஒரு வியாழக்கிழமை, ஒரு விருந்தின்போது தனது உயிரை இயற்கையுடன் கலந்தார். “பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாகட்டும்” என்று பாடி, பேடேயின் சீடரான ஜாரோ குத்பெர்ட்டில் அடக்கம் செய்யப்பட்டார். குட்வினுக்கு ஒரு கடிதம் எழுதினார், பேடேவின் கடைசி நாட்கள் மற்றும் அவரது மரணம் ஆகியவற்றை விவரித்தார். குத்பெர்ட்டின் கூற்றுப்படி, ஒரு ஈஸ்டர் திருநாள் முன்பு, “மூச்சுத் திணறல் தாக்குதல்களால் ஆனால் கிட்டத்தட்ட வலி இல்லாமல்” பேட் நோய்வாய்ப்பட்டார். செவ்வாயன்று, பேட் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவரது சுவாசம் மோசமாகி, அவரது கால்கள் வீங்கியிருந்தன.
இறக்கும்போதும் கவிதை எழுதிய பேட் .
பேட் ஒரு எழுத்தாளரிடம் தொடர்ந்து ஆணையிட்டார். இருப்பினும்,கூட அவர் இரவில் விழித்திருந்து ஜெபத்தில் கழித்த போதிலும், மறுநாள் அவர் மீண்டும் ஆணையிட்டார். மூன்று மணிக்கு, குத்பெர்ட்டின் கூற்றுப்படி, அவர் தன்னுடைய ஒரு பெட்டியை மடத்தின் பூசாரிகளிடையே கொண்டு வந்து விநியோகிக்கும்படி கேட்டார், அவரின் “சில பொக்கிஷங்கள்”: “சில மிளகு, நாப்கின்கள், மற்றும் சில தூபங்கள் அங்கு வந்தன. “. அன்று இரவு அவர் வில்பெர்ட் என்ற சிறுவனுக்கு எழுத்தாளருக்கு இறுதி தண்டனையும் விதித்தார்.. குத்பெர்ட்டின் கணக்குப்படி நள்ளிரவுக்கு முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ பேட் இறந்தாரா என்பது முற்றிலும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், பேடேயின் நேரத்தைக் கணக்கிடுவதன் மூலம், பழைய நாளிலிருந்து புதிய இடத்திற்குச் செல்வது நள்ளிரவில் அல்ல, சூரிய அஸ்தமனத்தில் நிகழ்ந்தது,. ஆகவே, மே மாதம் 25ம் நாள் புதன்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் அவரது பெட்டி கொண்டு வரப்பட்டபோது, இறுதி ஆணையின் நேரத்தில், மே 26 அன்று அந்த மதச்சார்பற்ற அர்த்தத்தில் ஏற்கனவே என கருதப்படலாம், இருப்பினும் 25 மே சாதாரண அர்த்தத்தில். குத்பெர்ட்டின் கடிதம் மூல , பேட் தனது மரணக் கட்டிலில் “பேடேயின் மரண பாடல்” என்று அழைக்கப்படும் ஐந்து வரிக் கவிதைகளையும் தொடர்பு படுத்துகிறது. இது மிகவும் பரவலாக நகலெடுக்கப்பட்ட பழைய ஆங்கிலக் கவிதை மற்றும் 45 கையெழுத்துப் பிரதிகளில்உருவாகிறது. , ஆனால் பேடேவுக்கான அதன் பண்பு உறுதியாகத் தெரியவில்லை-எல்லா கையெழுத்துப் பிரதிகளும் பேடேவை ஆசிரியராகப் பெயரிடுவதில்லை, மேலும் அவை பிற்காலத்தில் இல்லாதவை அல்ல.
கல்லறைக் கொள்ளை
பேடேவின் எச்சங்கள்/பொருட்கள் 11 ஆம் நூற்றாண்டில் டர்ஹாம் கதீட்ரலுக்கு மாற்றப்பட்டன. அவரது கல்லறை கி.பி 1541ம் ஆண்டில் கொள்ளையடிக்கப்பட்டது, ஆனால் அதன் உள்ளடக்கங்கள் கதீட்ரலில் உள்ள கலிலீ தேவாலயத்தில் மீண்டும் இணைக்கப்பட்டன.
விந்தை மனிதர்
பேட் எழுத்துக்களில் இன்னொரு விந்தை என்னவென்றால், ஏழு கத்தோலிக்க நிருபங்களின் வர்ணனை என்ற அவரது படைப்புகளில், அவர் திருமணமானவர் என்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் எழுதுகிறார். பொதுப் பார்வையில் எழுதப்பட்ட அதில் கேள்விக்குரிய பகுதி மட்டுமே உள்ளது. பேட் கூறுகிறார்: “என் மனைவியின் காரணமாக நான் அடிக்கடி ஜெபம் செய்ய இயலாது என்பதால், பிரார்த்தனைகள் ஒருங்கிணைந்த கடமையால் தடைபடுகின்றன.” மற்றொரு பத்தியில், லூக்கா பற்றிய வர்ணனையில், மனைவியையும் குறிப்பிடுகிறார்: “முன்பு நான் ஆசை உணர்ச்சியில் மனைவியைக் கொண்டிருந்தேன், இப்போது நான் அவளை கெளரவமான பரிசுத்தமாக்கலிலும் கிறிஸ்துவின் உண்மையான அன்பிலும் வைத்திருக்கிறேன்.” வரலாற்றாசிரியர் பெனடிக்டா வார்ட் இந்த பத்திகளை பேட் ஒரு சொல்லாட்சிக் கருவியைப் பயன்படுத்துகிறார் என்று வாதிடுகிறார்
வேறு வரலாற்று படைப்புகள் . பேட் மரணிப்பு
ஈ டெம்போரிபஸ், அல்லது ஆன் டைம், கி.பி 703 இல் எழுதப்பட்டது, ஈஸ்டர் கம்ப்யூட்டஸின் கொள்கைகளுக்கு ஒரு அறிமுகத்தை வழங்குகிறது.இது செவில்லின் சொற்பிறப்பியல் ஐசிடோரின் சில பகுதிகளை அடிப்படையாகக் கொண்டது, மேலும் யூரோபியஸிடமிருந்து பெறப்பட்ட உலகின் காலவரிசைகளையும் உள்ளடக்கியது, ஜெரோம் பைபிளின் மொழிபெயர்ப்பை அடிப்படையாகயும் கொண்டது.
கி.பி 723 ம் ஆண்டில் இடைக்காலம் முழுவதும் செல்வாக்கு செலுத்திய ஆன் தி ரெக்கனிங் ஆஃப் டைம் என்பதில் பேட் ஒரு நீண்ட படைப்பை எழுதினார். கம்ப்யூட்டஸின் குறிப்பிட்ட அம்சங்களைப் பற்றி விவாதிக்கும் பல மரணிப்பு குறுகிய கடிதங்களையும் இறையியல், கட்டுரைகளையும் எழுதினார்.
பேட் 735 இல் இறந்தார். அவர் ஜாரோவில் அடக்கம் செய்யப்பட்டார்,.கி.பி 836 ஆம் ஆண்டில் பேட் ‘வணக்கத்திற்குரியவர்’ என்று சர்ச் அறிவித்தது. அவர் 899 இல் ஒரு புனிதராகவும், சர்ச்சின் டாக்டராகவும் அறிவிக்க்ப்படுகிறார். அந்தப் பட்டத்தை வகித்த ஒரே ஆங்கிலேயர் பேட் மட்டுமே,
பெடேஸ் வேர்ல்ட் என்பது வடக்கு இங்கிலாந்தின் ஜாரோவில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும், இது அவரது வாழ்க்கை மற்றும் பணியை விவரிக்கிறது. இது ஒரு புனரமைக்கப்பட்ட ஆங்கிலோ-சாக்சன் பண்ணை மற்றும் நாணயங்கள், மட்பாண்டங்கள் மற்றும் அந்தக் காலத்திலிருந்த படிந்த கண்ணாடி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.