மு.முபாரக் கவிதை

மு.முபாரக் கவிதை

முட்டாள் பைத்தியம் திமிர் பிடித்தவன் சுயநலவாதி தற்பெருமைக்காரன் சோம்பேறி கடன்காரன் கோபக்காரனென எத்தனையோ வார்த்தைகள் இந்த உலகத்தில் புழங்கிக்கொண்டிருக்கிறதென்பது இதுவரை  தெரியவில்லை... அன்பான வார்த்தைகளைத் தவிர வேறெந்த வார்த்தைகளும் பேசத்தெரியாத அம்மாவிற்கு!
ச.சக்தி : கவிதை sa.sakthi : kavithai

ச.சக்தி: கவிதை


நினைவு மழை…!!!
மழையில்
நனையும் பொழுதெல்லாம் நினைவுகளில் முளைக்கிறது
சிறு வயதில்
நனையாதே யென்று
கையை பிடித்து
உள்ளே அழைத்து
தன் மாராப்பு துணியால் ‌
தலை துவட்டி விட்ட
அம்மாவின் பழைய
நினைவின் துளிகள்.