Tag: Moviereview
குறும்பட விமர்சனம்: இந்திரனின் ராணி – பாரதிசந்திரன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
தீராத பசியுடன் நிலைகொள்ள முடியாத வெறியுடன் ஓடித்தீரும் ஓட்டமிது. வசமான பாதையில், நீரோட்டங்கள் சுழன்று வெள்ளமெனப் புரண்டோடுகின்றன எல்லாவற்றையும் வாரிச் சுருட்டியபடி.
நெடிய வரலாற்றில், பதிவுகள் பதிவுகளாகவே இருந்து விடுவதில்லை, அவை திருப்பி வரலாற்றிற்கான பாதைகளை உருவாக்கி மலர்கின்றன.
அதைத்தான் இந்திரனின் ராணி குறும்படம் புராணப் பின்னணியுடன், நவீனகாலப் புனைவுகளை நிகராக்கி ஒரு புதுவிளையாட்டைப் பின்னிப் பிணைந்து விளையாட ஆரம்பத்திருக்கிறது.
மூன்று மணிநேரப் படத்திற்கான கதையை அரைமணி நேரத்திற்குள் அடைக்க முடிந்திருப்பது ஒரு பெரும் சாதனைதான். இரண்டு வெவ்வேறு தளங்களின் மையத்தைச் சுட்டும் ஒரு கோட்டின் நீள்பாதை அழகான திரைக்கதை மற்றும் காட்சிக் கோப்பு பிரமிக்க வைக்கிறது.
நெருடலற்ற புரிதலுக்கு உதவும் வசனங்கள். புராண வரலாற்றுப் பின்னணியையும், நிகழ்காலச் சித்திரிப்புக்களையும் கொஞ்சம் கூடச் சளிப்பில்லாமல் பார்ப்பவர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்றது.
குறும்படத்தின் வெளித்தோற்றம் ஒன்று, ஆனால், மறைத்துக் கூறப்பட்ட உள்தோற்றம் வேறொன்று. இதைப் பார்ப்பவர்களால் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் இக்குறும்படத்தின் மாபெரும் வெற்றி.
வெளித்தோற்றக் கதை:- போதிமர் ரௌடிக் கும்பலின் தலைவன். ஆனால், தொழிலில் நீதி தவறாதவன். இவனின் மகள் இந்திராணி. போதிமரிடம் வேலை பார்ப்பவர்களில் முக்கியமானவர்கள் இந்திரனும். கிருஷ்ணனும் மற்றும் பாரியும், விநாயகமும் போதிமரின் கொள்கைகளுக்கு மாறாகக் கிருஷ்ணன் பல வேலைகளைச் செய்கின்றான். மேலும் போதிமரின் மகள், இந்திரனை விரும்புகிறாள் என்று தெரிந்தும், தனக்குத் திருமணம் ஆகிக் குழந்தை இருந்தும் பெண்போய்க் கேட்கிறான். போதிமரோ கிருஷ்ணன் தவறு மேல் தவறு செய்தாலும் அவனைக் கண்டித்து அனுப்பி விடுகிறார்.
இந்திரனுக்கும் இந்திராணிக்கும் தமிiழ் முறைப்படித் திருமணம் நடக்கிறது. கிருஷ்ணன் போதிமரைக் கொன்று ரௌடிக் கும்பலின் மாபெரும் தலைவனாகிப் பணக்காரனாகின்றான். இந்திரனின் நண்பர்களில் பிடித்து மறைத்து வைத்துத் தனக்கு அடிமையாகி வேலை செய்யும்படி நிர்பந்திக்கின்றான். ஆனால் இந்திரன் சாமார்த்தியமாய்க் கிருஷ்ணனை மாட்டி விடுகின்றான். எப்படி இதைச் செய்தான் என்பது தான் அழகான முடிவு.
உள்தோற்றக் கதை:- நமது சமூகப் பின்னணியில் மதங்கள், பூர்வீகக் குடிகளோடு பெருகிப் பெரும் வீச்சைக் கொண்டிருக்கும் சமயத்தில், வேறொரு இடத்திலிருந்து வந்தவொன்று பழைமைக்குள் ஊடுருவி பழைமைகளை அழிப்பதும், தானே முன்னிலை பெற்றதும் வரலாறு.
அதே போல் தான் பூர்வகுடிகளான இம்மண்ணின் மைந்தர்கள். அவர்கள் நிலையான கொள்கை, கோட்பாடுகளுடன் வாழ்ந்தனர். அவர்களிடம் நீதியும் நேர்மையும் இருந்தன. ஆனால், இவர்களிடையே புகுந்து இவர்களுக்காக வேலை செய்வதாக நடித்து, நம்ப வைத்துத் தலைமையைக் கொன்று குவிக்கவும் செய்தவர்கள் தன்னை மேல்தட்டு எனக் கூறிக் கொண்டனர்.
சூதும் வாதும் செய்து பெரும் செல்வாக்கைப் பிடித்தவர்கள். நாட்டின் மைய முதுகெலும்பை ஒடித்து எறிய நினைத்தார்கள். அவர்களின் சூழ்ச்சியால், அடிபணிய வேண்டிய சூழ்நிலையில் பூர்வீகக் குடிகள் இருந்தார்கள்.
மதம், சாதி, நாடு. வேற்றினம் எனும் குறியீடுகள் தொன்மக் கதையான இந்திரனின் கதையோடு ஒத்து ஒப்புமையாக்கப்பட்டுள்ளன. அயோத்திதாச பண்டிதரின் இந்திரனின் கதை குறித்த ஆராய்ச்சிகளும் வெளிப்படுத்துதலும் இக்கதைக்கான அடித்தளமான ஒன்றாகத் திகழ்கிறது.
இந்திரன் மாபெரும் கடவுளாக மதிக்கப்பட்ட தமிழக மண்ணில் இன்று அக்கடவுளுக்குக் கோயிலே இல்லை. அக்கடவுளை வணங்கிப் பல நாட்கள் திருவிழா நடத்திய இம்மண்ணில் இந்திரனின் சிலைகளோ கோயில்களில் இல்லை. இதற்குப் பின்புலத்தில் நடந்தவைகள் தான்...
திரை விமர்சனம்: திட்டம் இரண்டு – இரா. இரமணன்
Admin -
திட்டம் இரண்டு (PLAN B) ஜூலை 2021இல் சோனி லைவில் வெளியான தமிழ் திரைப்படம்.
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன்...
திரை விமர்சனம்: குட் லக் சகி – இரா இரமணன்
Admin -
‘இறுதி சுற்று’’டங்கல்’ ‘பாக் மில்கா பாக்’ சாய்நா நெய்வால்’ ‘கனா’’ஜீவா’ போன்ற விளையாட்டை மையமாகக் கொண்ட பட வரிசையில் இது துப்பாக்கி சுடும் போட்டியை மையமாகக் கொண்டது.
2019ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு கொரோனாவால் இரண்டு...
திரைவிமர்சனம்: ‘ஒன் கட் டூ கட்’ (one cut two cut) – இரா. இரமணன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
பிப்ரவரி மூன்றாம் தேதி வெளிவந்திருக்கும் கன்னட திரைப்படம் ‘ஒன் கட் டூ கட்’. சமூகப் பிரச்சனைகளை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கின்றனர்....
திரைவிமர்சனம்: கடைசிவிவசாயி பேசும் பண்பாட்டு அரசியல் – பாவெல்பாரதி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
கதைக்கரு:
ஊரில் இடி விழுந்து மரம் ஒன்று பட்டுப்போக, அதனைக் கெட்ட சகுனமாகக் கருதி, நீண்டநாளாகக் கும்பிடாமல் கிடக்கும் ஊர் தெய்வத்தைக்...
திரை விமர்சனம்: பிஜூகுமார் தாமோதரனின் வெயில்மரங்கள் – இரா. இரமணன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
2020 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித் திரைப்படம். பிஜூகுமார் தாமோதரன் எழுதி இயக்கியுள்ளார். 112 நாடுகளிலிருந்து 3964 திரைப்படங்கள்...
திரை விமர்சனம்: ரேவந்த் கொருகொண்டாவின் நாட்யம் – இரா இரமணன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
பாரம்பரியமும் நவீனமும் கலந்த கலைப் படைப்பு
‘நாட்யம்’ அக்டோபர் 2021இல் வெளிவந்துள்ள தெலுங்கு திரைப்படம். சந்தியா ராஜு எனும் நாட்டியக் கலைஞர்...
Stay in touch:
Newsletter
Don't miss
Poetry
மணிமாறன் கவிதை
பல்லக்கில் அமர்ந்து
அர்ச்சனை காட்டி
தட்சணை வாங்குவதில்
கவனமாய் இருக்கிறார் குருக்கள்
சிலையைத் தொட
உரிமை மறுக்கப்பட்டவர்
ஆங்காரமாய்
சாமி வந்து...
Poetry
பாங்கைத் தமிழன் கவிதைகள்
கசப்புச் சுவைகள்.
*************************
(1)
நவீன உடைகள்
அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன
வறுமை
...
Book Review
நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்
நூல் : புத்தக தேவதையின் கதை
ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ்
தமிழில்:...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – தங்கேஸ்
தற்போது தோழர் தேனி சீருடையான் அவர்களின் ‘’ ஒற்றை வாசம் நாவல்...