முட்டாள் கண்ணாடி  கவிதை – க. புனிதன்

முட்டாள் கண்ணாடி  கவிதை – க. புனிதன்



முட்டாள் கண்ணாடி  
கண்ணாடி பார்த்து தன் உருவத்தை கொத்தும்
சேவல் போலவும்
தன் வாலை பிடிக்க
சுற்றி சுற்றி வரும்
பூனையை போல்
கண்ணாடி பெட்டியை
கடல் என்று எண்ணிக் கொள்ளும்
வண்ண மீன்கள் போல்
நல்ல குருவிடமே
சீடனின் முழுமையான
முட்டாள்தனம் வெளிப்படுகிறது
               க. புனிதன்