அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 13: பானை பிடித்த பாக்கியசாலிகள் (When was the Earthen Pot discovered in Tamil) | களிமண் பானை வரலாறு

அறிவியலாற்றுப்படை 13: பானை பிடித்த பாக்கியசாலிகள் – முனைவர் என்.மாதவன்

பானை பிடித்த பாக்கியசாலிகள் அறிவியலாற்றுப்படை பாகம் 13 - முனைவர் என்.மாதவன்.      ஒரு பழைய கதை. நீண்ட காலத்திற்கு முன்பு ஏழை  மனிதர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர் தனது வீட்டிற்குத் தண்ணீரை பக்கத்திலிருந்த ஆற்றிலிருந்து கொண்டுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு…
அறிவியலாற்றுப்படை 12: சக்கரத்தின் வரலாறு (The invention and history of the wheel in Tamil) - முனைவர் என்.மாதவன் | How did the wheel evolve?

அறிவியலாற்றுப்படை 12: சக்கரத்தின் வரலாறு – முனைவர் என்.மாதவன்

சக்கரத்தின் வரலாறு அறிவியலாற்றுப்படை பாகம் 12 - முனைவர் என்.மாதவன். முதலில் ஒரு கதை. கடற்கரையோரம் ஒன்றில் சிறுபலகை போன்ற ஒரு பொருள் கிடைக்கிறது. அங்கே உலவும் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் ஒரே நேரத்தில் அதனைக் கண்டடைகின்றனர். அதனைப் பார்த்தவுடன்…
அறிவியலாற்றுப்படை 11: ஆதிகால மனிதனின் கட்டிட பணிக்கு சுட்டகல் வேண்டுமா? சுடாத கல் வேண்டுமா? (Ancient Brick For Construction)

அறிவியலாற்றுப்படை 11: சுட்டகல் வேண்டுமா? சுடாத கல் வேண்டுமா? – முனைவர் என்.மாதவன்

சுட்டகல் வேண்டுமா? சுடாத கல் வேண்டுமா? அறிவியலாற்றுப்படை பாகம் 11 முதலில் பாபெல் கோபுரம் பற்றிய கதை. இது மிகவும் கற்பனை கலந்த சுவாரஸ்யமான கதை.. இதுவும் இது பாபிலோன் நகரோடு தொடர்புடையது. நாம் அடுத்து காணப்போகும் சுமேரிய நாகரீகத்தின் பின்பகுதியில்…
அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 10: நாகரீகங்களின் தொடக்கம் (Beginning of civilizations) - முனைவர் என்.மாதவன் | Human Civilizations

அறிவியலாற்றுப்படை 10: நாகரீகங்களின் தொடக்கம் – முனைவர் என்.மாதவன்

நாகரீகங்களின் தொடக்கம் (Beginning of civilizations) அறிவியலாற்றுப்படை பாகம் 10 காலையில் அனைத்து காளைகளும், பசுக்களும் மேய்ச்சலுக்குச் செல்கின்றன. மாலையில் மனிதர்கள் தங்கும் இருப்பிடத்திற்குப் பக்கத்திலுள்ள கொட்டடியை அடைகின்றன. நாளாக ஆக அவற்றின் அளவு குறைவது போலத் தென்படுகிறது. இதனிடையே பகல்…
தொடர் : 9 அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) - மனிதன் மட்டும்தான் மகத்தானவனா? (Is man alone great?) -Adam and Eve - https://bookday.in/

தொடர் : 9 அறிவியலாற்றுப்படை – மனிதன் மட்டும்தான் மகத்தானவனா?

தொடர் : 9 அறிவியலாற்றுப்படை - மனிதன் மட்டும்தான் மகத்தானவனா?   - முனைவர் என்.மாதவன் முதலில் ஒரு கதை. அதுவும் ஆடையோடு தொடர்புடைய கதை. நீண்ட நாட்களாகவே பலரும் அடிப்படைத் தேவையான உடையைப் புறக்கணிக்கிறீர்கள் என்று வாதம் செய்யத் தொடங்கிவிட்டனர்.…
அறிவியல் ஸ்கோப் (Ariviyal Scope)

முனைவர் என்.மாதவன் எழுதிய “அறிவியல் ஸ்கோப்” நூல் அறிமுகம்

முனைவர் என்.மாதவன் அவர்கள் எழுதிய அறிவியல் ஸ்கோப் என்ற அறிவியல் நூல் சுமார் 25க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குறித்துப் பேசுகிறது. மறுமலர்ச்சி காலத்திய கலிலியோ முதல் மரபியலியன் தந்தை என அறியப்பட்ட கிரிகர் ஜோகன் மெண்டல் வரை அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய…
நூல் அறிமுகம்: என்.மாதவனின் புவியைச் சுற்றும் பூசணி (காய்கறிகளின் வரலாறு) – பானுரேகா

நூல் அறிமுகம்: என்.மாதவனின் புவியைச் சுற்றும் பூசணி (காய்கறிகளின் வரலாறு) – பானுரேகா




நூல் : புவியைச் சுற்றும் பூசணி (காய்கறிகளின் வரலாறு)
ஆசிரியர் : என்.மாதவன்
விலை : ரூ.₹120
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

ஆசிரியரைப்பற்றி.. தமிழ்நாடு அறிவியல் இயக்க செயல்பாட்டாளர். துளிர் மாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். மொழிபெயர்ப்பாளர்… பள்ளி நூலகத்தில் (கிருஷ்ணகுமார் அவர்கள் எழுதியது) ஆசிரியரின் மொழிபெயர்ப்பு நூலைப் படித்திருக்கிறேன்.

நூலைப் பற்றி …
எந்த ஒரு பாடக் கருத்தையும் ஒரு பாடலாகவோ, ஒரு கதையாகவோ அல்லது ஒரு‌ நாடகமாகவோ மாற்றி மாணவர்களிடம் கொண்டு செல்லும்போது புரிதலும், நீண்ட நாள் நினைவில் நிற்கவும் செய்யும் ..அந்த வகையில் காய்கறிகளின் வரலாறு ,அதன் சத்துகள், ஆகியவற்றைத்
தன் கற்பனையில் ஒரு அருமையான புனைவாக மாற்றி அமைத்திருக்கிறார் ஆசிரியர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளுக்கு இடையே ஒரு தகராறு ஏற்படுகிறது. இதன் மூலம் பூசணியும், உருளைக்கிழங்கும் தங்கள் வரலாற்றைத் தெரிந்துகொள்ள காய்கறி நடராஜன் உதவுகிறார்.

காய்கறிகள் பிறந்த நாடுகளைப் பட்டியலிட்டுத் தந்து அவற்றின் வாழ்க்கையை அறிமுகப்படுத்தி, ஒரு பயணத் திட்டத்தையும் வகுத்து கொடுக்கிறார் மானுடவியல் பேராசிரியர் கண்ணன்.

பிறகென்ன.. விமானத்தில் தனி சீட்டு போடச்சொல்லி பூசணியும், உருளையும் இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியே தென் சீனா ,ஈரான் (கேரட்), எகிப்து(வெண்டைக்காய்), ஆப்பிரிக்கா (பச்சைப்பட்டாணி) , தென் அமெரிக்கா (தக்காளி), ஐரோப்பா (பீட்ரூட் ,கோஸ்) போன்ற நாடுகளில் வலம் வந்து தன் இனத்தாரைக் கண்டு பேசி வந்த தகவல்களை நமக்குத் தருகின்றன.

காய்கறிகளின் உரையாடல் சுவையோடு தகவல்களை நமக்குத் தருகிறது.

உதாரணத்திற்கு சங்க இலக்கியத்தில் வழுதுணங்கா என்று வழங்கப்படும் #சொலனும் _மெலொங்கெனா என அறிவியல் பெயர் கொண்டது. பல வடிவங்களில், பல வண்ணங்களில், பல நாடுகளில் கிடைக்கும். ஆங்கிலத்தில் நாம் ஒரு பெயர் வைத்திருக்கிறோம் .பல நாடுகளில் எக்பிளாண்ட் என்று சொல்கிறார்களாம். அறிவியல் பெயர வச்சு கண்டுபிடிச்சிட்டீங்க இல்ல !திராவிட மொழிகள் அனைத்திலும் சங்க இலக்கியப் பெயரை ஒட்டித்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். சுண்டைக்காய் உடன்பிறப்பாம் இவங்களுக்கு… இந்தியாவில் பிறந்த காயை ஜப்பான்ல போய் பாக்குறாங்க உருளையும் பூசணியும்..

தக்காளியும் உருளைக்கிழங்கும் கூட இவங்க குடும்பத்தை சேர்ந்தவங்க தான். ஆச்சரியமான தகவல் தானே! அது இல்லாம இதுல புரதம், நார்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் B சத்துகளும் நிறைந்து இருக்குதாம். கத்தரிக்காய் பற்றிய ஒரு கட்டுரையே எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது அல்லவா? இதே போலத்தான்
#எளிமையின் சின்னம் முருங்கை,
#பந்தலிலே பாவக்காய்,
#வள்ளலாய் வாழும் வாழை
#உயிர்ச்சத்து B யின் கருவூலம்(முள்ளங்கி)
#காயமில்லா காயம் எது?(வெங்காயம்)
#மலைச்சரிவுகளில் மலர்வோர்(பூண்டு)
#கேரட் வாக்கா? கேட் வாக்கா?
#வெண்டையுண்டு வாழ்வோம்!
#காயா? பழமா? ( தேங்காயைப் பற்றி இல்லை..பட்டாணியைப் பற்றி!)
#வாயுவா அது மெய்யடா
#விஷக்கனிகளா? விஷயம் உள்ள கனிகளா?
#கொடியாய்ப் படரும் இனிப்பு வேர்
#குடையுடை வேந்தரோ? என்று ஒவ்வொரு கட்டுரைத் தலைப்பும் படிக்கத் தூண்டுபவையாகவே உள்ளன.

ஒவ்வொரு காய்கறிகளின் வரலாறும் சுவாரசியம்.

பயணத்தின் இடையே வரும் கதாபாத்திரங்கள்..
இரவி சொக்கலிங்கம், ஷாஜகான், விஜய் ஷங்கர் ,மதுக்கூர் ராமலிங்கம் , வினோபா கார்த்தி,ஹேமப்பிரபா, வந்தனா வெங்கடேஸ்வரன்விஞ்ஞானிகள் தினகரன், சுகுமாரன் என அறிமுகமானவர்களுக்கு மகிழ்ச்சி.

சீனாவில் இருக்கும் பெய்ஜிங் விமான நிலையம், கசகஸ்தான் தலைநகர் நூர் சுல்தான் விமான நிலையம், உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் விமான நிலையம், ஈரான் நாட்டின் டெஹ்ரான் விமான நிலையம், ஜோர்டான் தலைநகர் அம்மான் விமான நிலையம் என ஒவ்வொரு நாட்டின் விமான நிலையங்களின் பெயர்களையும் கொடுத்து அறிவியலோடு வரலாறும் வலம் வருகிறது.

காய்கறிகளோட உரையாடல்களில் நகைச்சுவை சுவை தூக்கலாகவே இருப்பதால் இந்த காலக் குழந்தைகள் விரும்பி படிப்பார்கள்.

பூசணி,உருளையோடு உலகச் சுற்றுலா செல்ல வாசியுங்கள்.

– பானுரேகா

நூல் அறிமுகம்: என்.மாதவனின் ”13 லிருந்து 19 வரை” – தி.தாஜ் தீன்

நூல் அறிமுகம்: என்.மாதவனின் ”13 லிருந்து 19 வரை” – தி.தாஜ் தீன்




நூல் : 13 லிருந்து 19 வரை
ஆசிரியர் : என்.மாதவன்
விலை : ரூ.₹ 60/- 
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இன்றைய காலகட்டத்தில் பதின் பருவத்தினரைக் (Teenager) நாம் கையாள்வது ஒரு பெரும் சவாலாக சிக்கல் நிறைந்த task ஆகவே இருக்கிறது. பதின் பருவக் குழந்தைகளையோ, பெற்றோர்களையோ அல்லது ஆசிரியர்களையோ சாடாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தூண்டும் கருத்துகள் உள்ள புத்தகம்.

பெரும்பாலும் பதின்ம வயது (13 – 19 வரை) என்பது ஒருவித குழப்பமான பருவம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

நாம் எல்லோருமே இதனைக் கடந்து வந்திருந்தாலும் கூட நாம் அப்பருவத்தில் இருந்தது எல்லாம் பெரும்பாலும் மறந்தே விடுகிறது, மறக்காமல் இருந்தாலும் அதனை வெளிகாட்டுவதில்லை.

பதின்ம வயதில் ஏற்படும் உடல் மாற்றம் சார்ந்த குழப்பங்கள். பெரும்பாலும் தம்மைப் பலரும் கவனிக்க வேண்டும், பாராட்ட வேண்டும், தன் அழகை தானே ரசிக்க தூண்டும் எண்ணம், எதிர் பாலின ஈர்ப்பு, தன்னை சார்ந்த குழுவினரின் தூண்டல்கள். பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்பு, ஒப்பீட்டு பேச்சுகள் இதுபோல ஏராளமான சவால்களைச் சமாளித்து வரும் அவர்களது உணர்வுகளை உணர்ச்சிப் பூர்வமாக அல்லாமல் அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொள்ள முயற்சிப்பதே பலனளிக்கும்.

இந்த பதின் பருவத்தில் உள்ளவர்களை அவர்களது கேள்விகளுக்கான பதில்களை சரியான அணுகுமுறையில் அவர்களை அறியச் செய்தல் மட்டுமே அவர்களை சிறந்த மனிதானாக மாற்ற இயலும் வழி.

குடும்பம், கல்வி நிலையங்கள், சமூகம் ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது. ஆனால் அவர்களை நேர்கோட்டில் வளர்த்தெடுக்க வேண்டிய இம்மூன்று முனையும் தவறுகள் செய்வோரைத் திருத்துவதை விட தண்டிப்பது எளிது என்ற காரணத்தால் எப்போதும் அதனையே செய்கிறோம். ஏதேனும் தவறு செய்தால் திட்டுவது, அடிப்பது, மிரட்டுவது, சக வயதில் உள்ளவரை வைத்து Compare செய்வது. இது அனைத்தும் எதிர் விளைவுகளையே ஏற்படுத்துகிறது.

13லிருந்து 19வரை உள்ள இளைஞர்களை முறையாக வளர்த்து எடுக்காவிட்டால் அவர்கள் வழி தவறிப் போகும் அபாயமே அதிகம். அதே போன்று சினிமா மற்றும் ஊடகங்களின் தாக்கம் மற்றும் ஆதிக்கம் இப்பருவத்தினரிடம் மேலோங்கியே இருக்கும். ஆகவே திரைப்படங்களும், சின்னத்திரை நிகழ்ச்சிகளும், முறையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த வயதை வைத்து தான் அவர்களை கேடான வழியில் செல்ல தூண்டும் விதமாக பெரும்பாலும் படங்கள் இடம் பெறுகின்றன.

மேலும் ஆசிரியர் மாதவன் குறிப்பிடுவது பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு எளிமையாக வாழுவது மிகப்பெரிய ஆளுமை என்ற கருத்தை அவர்களிடையே விதைக்க வேண்டும் என்கிறார். கற்றலின் முறைகளை தெளிவு படுத்த வேண்டியது ஆசிரியப் பெருமக்களின் கடமை என சுட்டி காட்டியுள்ளார்.

மாணவர்களின் கற்றலில் எதை நினைவில் வைத்திருக்க வேண்டும்,எதைக் கற்று மறக்க வேண்டும்,எதைக் கற்கவே கூடாது என்பன போன்ற விசயங்களில் தெளிவான சிந்தனையை ஏற்படுத்துவது ஆசிரியர்களின் கைகளில் உள்ளது என்பதை நினைவு படுத்துகிறார்.

இளைஞர்களை முறையான விதத்தில் வளர்த்தெடுப்பதில் குடும்பம், பள்ளி, சமூகம் இந்த மூன்றின் பங்களிப்பே முக்கியம். இளையோருக்கு சரியான வழிகாட்டுதலை அளிப்பதன் மூலம் அவர்களை நன்றாகவும், நல்லவர்களாகவும் வாழப் பயிற்றுவிக்க வேண்டும்.

இறுதியாக ஆசிரியர் கூற வருவது Teenager வயது உடையவர்களை கையாளும் வழி தெரியாமல் திணறும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாய் இந்நூல் உள்ளது.

தி.தாஜ் தீன்
தி கிரசண்ட் மேல்நிலைப் பள்ளி
ஆவணியாபுரம்,ஆடுதுறை

நூல் அறிமுகம்: என்.மாதவனின் *”குழந்தைமையைக் கொண்டாடுவோம்”* – பெரியசாமி வரதராஜ்

நூல் அறிமுகம்: என்.மாதவனின் *”குழந்தைமையைக் கொண்டாடுவோம்”* – பெரியசாமி வரதராஜ்

** குழந்தைகளின் பல்வேறு  உளவியலைப் பற்றி விளக்கும் பத்துக் கட்டுரைகள் உள்ளன. பத்தும் எளிய மொழியில் மிக இயல்பாக, அனைவரின் மனதை கவரும் வீதம் உள்ளது ** குழந்தை வளர்ப்பு ஒரு கலை இதில் ஒருவரின் அனுபவம் அடுத்தவருக்குப் பொருந்தாது அதேபோல்…