புத்தக மதிப்புரை: கனவுச் சுமைதாங்கும் விளிம்புநிலை மனிதர்கள் (தேனி சீருடையானின் “நாகராணியின் முற்றம்” நாவல் குறித்து) – அ. உமர் பாரூக்

புத்தக மதிப்புரை: கனவுச் சுமைதாங்கும் விளிம்புநிலை மனிதர்கள் (தேனி சீருடையானின் “நாகராணியின் முற்றம்” நாவல் குறித்து) – அ. உமர் பாரூக்

  ”கடை” , ”நிறங்களின் உலகம்”, “சிறகுகள் முறிவதில்லை” நாவல்களின் மூலம் இலக்கிய உலகில் ஏற்கனவே விளிம்புநிலை மனிதர்களின் கதைகளையும், பார்வையற்றோரின் உலகையும் பதிவு செய்து கவனம் ஈர்த்த தேனி சீருடையானின் நான்காவது நாவல்  "நாகராணியின் முற்றம்”.                 பொதுவாக நாவல்களில் நாயகன் ஒருவனைப் பற்றிய விவரணைகளே அதிகமாகவும், முழுமைப் படுத்தப்பட்ட தன்மையோடும் இருக்கும். இப்படி இருப்பதைத்தான் நவீன இலக்கியவாதிகள் சிறுகதைத்தன்மை என்றும், குறுநாவல் என்றும் குறிப்பிடுகிறார்கள். தமிழில் குறிப்பிடத்தக்க நாவல்கள் மட்டும்தான் கதையின் பல மாந்தர்களின் தனித்தன்மையையும், முழுமையையும் வெளிப்படுத்துகின்றன. அப்படிப் பல பாத்திரங்கள் முழுமை பெற்ற படைப்பாக ”நாகராணியின் முற்றம்” உயிர்ப்போடு அமைந்திருக்கிறது.                 பல சுவாரசியமான பாத்திரங்களாக…