The story of the lying man (பொய் மனிதனின் கதை) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). Book Day is Branch of Bharathi Puthakalayam

பொய் மனிதனின் கதை – ஜா. மாதவராஜ்



அத்தியாயம் – 1

“நீ பொய்யன் என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு பொய் போதும். கடந்த காலத்தில் நீ செய்தவைகளை மக்கள் மறப்பதற்கும் எதிர்காலம் முழுவதையும் அந்த மக்கள் சந்தேகத்தோடு பார்ப்பதற்கும் பொய்கள் உதவுகின்றன.” – நிஷான் பன்வார்

எழுத்தாளர் சேட்டன் பகத் முதன்முறையாக ஏ.பி.பி செய்தி சேனலில், ‘7 RCR’ என்னும் அந்த தொடரை 2014ம் வருடம் ஜனவரி மாதம் முதல் நடத்தியதற்கு காரணங்களும், பின்னணியும் இருந்தது. இந்திய மத்திய வர்க்கத்தின் இளைய தலைமுறையால் நெருக்கமாக அறியப்பட்டவர் சேட்டன் பகத். 2010ம் ஆண்டு உலகின் மிக செல்வாக்கு பெற்ற நூறு பேரில் ஒருவராக அவரை டைம் பத்திரிகை அறிவித்திருந்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). Book Day is Branch of Bharathi Puthakalayam

2014 பாராளுமன்ற தேர்தலில் டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில். 7ம் நம்பர் வீட்டை அடையக் கூடிய முக்கிய அரசியல் தலைவர்களின் பிம்பங்களை காவியமாக்கும் தன்மையில் அந்த தொடரின் அத்தியாயங்கள் அமைந்திருந்தன. பரந்து விரிந்த இந்திய நிலப்பரப்பின் மீதும் மக்களின் மீதும் செல்வாக்கும், அதிகாரமும் செலுத்தக் கூடிய மனிதர் இவர்களில் ஒருவர் என்று ஆவலைத் தூண்டுவதுதான் அந்த நிகழ்ச்சியின் சாராம்சம்.

மொத்தம் பதினைந்து எபிசோட்களில், நரேந்திர மோடிக்கு ஆறு, ராகுல் காந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தலா இரண்டு, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, மாயாவதி, முலாயம்சிங் யாதவ், ஜெயலலிதா ஆகியோருக்கு தலா ஒன்று என முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தங்கள் உள்ளமும் அறிவும் கவர்ந்த எழுத்தாளரின் உள்ளக் கிடக்கையை வாசக பெருமக்கள் பார்த்தார்கள்.

ஒரு மனிதர் எல்லோரும் பார்க்கிற மாதிரி வெளிச்சத்துக்கோ, உயரத்துக்கோ அல்லது முன்னுக்கோ வருகிறபோது, அவர் மட்டும் வருவதில்லை. அவரது கடந்த காலமும் சேர்ந்தே வருகிறது. அதுவரைக்கும் அவரைப் பற்றி அறியாதவர்கள் அவரது கடந்த காலத்தை தெரிந்து கொள்ள முற்படுகிறார்கள். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான தடயங்கள் அங்குதான் இருக்கின்றன. அவ்வகையில் நரேந்திர மோடியின் கடந்த காலம் பலருக்கும் அறியப்படாமல் இருந்ததால் அல்லது அதிகமாக சொல்லப்பட வேண்டி இருந்ததால் அவருக்கு மட்டும் ஆறு எபிசோட்கள் என்றும் அந்த முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). Book Day is Branch of Bharathi Puthakalayamநரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்பவர் குஜராத்தில் இப்போதும் ஒரு டீக்கடை நடத்திக்கொண்டு இருப்பவராக வைத்துக் கொள்வோம். அசாமிலோ, தமிழ்நாட்டிலோ உள்ள டீக்கடைகளில் யாராவது அவரைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கப் போகிறார்களா? அவர் என்ன படித்தார், யசோதா பென்னோடு ஏன் சேர்ந்து வாழவில்லை என்றெல்லாம் யாராவது சிந்திக்கப் போகிறார்களா? அவரது கடந்த காலம், நிகழ்காலம் எல்லாமே அவருக்கும், அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்தவையாக இருக்கும். அவர்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்டவையாகவும் இருந்திருக்கும்.

‘அவரே இனி இந்தியாவின் பிரதமர்’ என பெரும் சத்தத்தோடு சங்கு ஊதப்பட்டது. எல்லோருக்கும் சம்பந்தப்பட்ட மனிதராகிவிட்டிருந்தார். அவரை கடுமையாக எதிர்த்தும், கடுமையாக ஆதரித்தும் எங்கும் பேசப்பட்டது. அவரது கொள்கைகள், பார்வைகள், சிந்தனைகள், தத்துவங்கள், அனுபவங்கள் எப்படிப்பட்டவை என ஆராயாமல், அவரது தனிப்பட்ட குண நலன்கள்கள், இயல்புகள், வாழ்க்கை குறித்த அலசலாக மாற்றி, அவரை நாயகனாக்கும் காரியங்கள் கார்ப்பரேட் மூளைகளில் இருந்து அரங்கேறிக் கொண்டு இருந்தன. அதில் ஒரு எபிசோட்தான் சேட்டன் பகத்தின் ’7 RAC’ தொடர். சைரன் பொருத்திய காரொன்று வாசல் திறக்க ஒரு ஒரு மாளிகை நோக்கி பயணிக்கும் காட்சியுடன் துவங்கியது.

அறிந்திராத பல தகவல்களால் மோடி வடிவமைக்கப்பட்டிருந்தார். “டீ விற்றவர் பிரதம வேட்பாளராக..” என்ற பின்னணிக்குரலில் மனதை கவ்வும் ஈர்ப்பு இருந்தது. மோடி பிறந்த வட நகர், அவர் பிறந்த வீடு, படித்த பள்ளி என தொடர்ந்த காட்சிகள் ஆழ்ந்து போக வைத்தன. மோடிக்கு நெருக்கமானவர்கள், மோடியை அறிந்தவர்களின் உரையாடல்கள் அரூபமான இசைச் சேர்க்கையோடு பார்வையாளர்களை தன்னிலை இழக்க வைத்தன.

அப்படித்தான் மோடியின் பள்ளி நண்பர் சுதிர் மிஸ்ரா போகிற போக்கில் அந்த தகவலைச் சொன்னார். தனது பதினான்காவது வயதில் பள்ளியில் நடந்த லீடருக்கான தேர்தலில் கலந்து கொள்ள மோடி ஆசைப்பட்டாராம். அவருக்கு ஏன் இந்த வேண்டாத ஆசை என பள்ளியில் பலரும் எடுத்துரைத்தார்களாம். நண்பர்களேக் கூட அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையாம். மோடி உறுதியோடு தேர்தலில் நின்றாராம். வெற்றி பெற்றாராம். இதைச் சொல்லி, மோடி மிகுந்த மன உறுதி கொண்டவர் என்றும், தான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.

இதை கேள்விப்பட்டவுடன் பிரதம வேட்பாளராக மோடி எப்படி ஆனார், கூட்டணிக் கட்சியில் மற்றவர்கள் எதிர்த்தபோதும், அத்வானி போன்ற மூத்த தலைவர்களே ஆதரிக்காத போதும் எப்படி மோடி தன்னை முன்னிறுத்திக் கொண்டார் என்பதெல்லாம் உள்ளுக்குள் ஓடலாம். இங்கு சொல்ல வருவது அவ்வளவு முக்கியமான விஷயங்கள் இல்லை. மிக மிக சாதாரணமான, அல்லது அல்பமான ஒன்றுதான்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). Book Day is Branch of Bharathi Puthakalayam

தேர்தல் முடிந்து, நரேந்திர தாமோதர்தாஸ் மோடி நாட்டின் 14வது பிரதமராக பதவியேற்று ஒருவருடம் கழித்து நடந்த சம்பவம் இது. 2015ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினத்தில் ‘பிரதமர் தனது நாட்டின் குழந்தைகளோடு கலந்துரையாடுகிறார்’ என பெரும் விளம்பரங்களோடு நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. கருமமே கண்ணாய் அது குறித்து செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பையும், ஆர்வத்தையும் தூண்டின. தூர்தர்ஷனில் நேரடி ஓளிபரப்பு இருப்பது குறித்து பள்ளிகளுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அனைத்துக் குழந்தைகளையும் பார்க்க வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டன. மத்திய அரசின் மனித வளத்துறை வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி இருந்தது.

டெல்லியில் மானெக்சா ஆடிட்டோரியத்தில், ஆயிரக்கணக்கில் திரட்டப்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கலந்துரையாடல் காலை 10 மணி முதல் 11.15 வரை நடைபெற்றது. இந்தியப் பெருநகரங்களில் குறிப்பிட்ட மையங்களில் பெரிய திரைகளில் கவனிக்கவும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவும் உட்கார வைக்கப்பட்டு இருந்தார்கள் குழந்தைகள். எல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன..

நாடாளுமன்றத்திலோ, வெளியே நிருபர்களிடமோ எந்தக் கேள்விகளையும் எதிர்கொள்ளாத, அவைகளுக்கு பதிலளிக்காத பிரதமர் மோடி நாட்டின் இளம் தலைமுறை கேட்ட கேள்விகளுக்கு அன்று பதில் அளித்தார்.

“அரசியல் மிகக் கஷ்டமானதா? நீங்கள் எப்படி அதன் மன அழுத்தத்தை சமாளிக்கிறீர்கள்?” பள்ளி மாணவன் ஒருவனின் கேள்வி இது.

“அரசியல் ஒரு தொழில் அல்ல. சேவை என்று எடுத்துக் கொண்டால் அழுத்தமே வராது. தேசத்தின் மக்கள் அனைவரும் என் குடும்பம். அவர்களின் சந்தோஷம் என் சந்தோஷம். அவர்களின் வேதனை என் வேதனை.” அப்பழுக்கற்ற எல்லோருக்குமான மனிதராக தன்னை முன்னிறுத்திக் கொண்டார் மோடி.

“ஒரு புத்திசாலி மாணவன். ஒரு சோம்பேறி மாணவன். ஒரு சராசரி மாணவன். ஒரு டீச்சராக யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?” இன்னொரு மாணவன் கேள்வியை முன்வைத்தான்.

“எல்லா மாணவர்களும் டீச்சருக்கு சொந்தம். ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கிறது. நான் ஒரு ஆசிரியராக இருந்தால் பாகுபாடு காட்ட மாட்டேன்” என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய பாரம்பரியத்தையும் உயர்த்திப் பிடித்தார் மோடி. ஒவ்வொரு கேள்விக்கும், மிக நிதானமாக, சாந்த சொருபியாய், ஒரு ஞானியைப் போல பேசினார். நாட்டின் பிரதமராக இருப்பதால் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த கவனத்தோடு பேசுவதாகவும் அப்போது தெரிவித்தார்.

மேலும் கேட்கப்பட்ட ஒன்றாக “சிறு வயதில் எப்போதாவது நீங்கள் பிரதமராகும் கனவு கண்டதுண்டா? உலகம் முழுவதும் அறியமுடிந்த ஒருவராய் இருப்போம் என நினைத்ததுண்டா?” ஒரு மாணவனின் குரல் ஒலித்தது.

லேசாக சிரித்துக் கொண்டே “நான் நினைத்ததே இல்லை. பள்ளியில் லீடராகும் போட்டியில் கூட கலந்து கொண்டது இல்லை” என்றார் மோடி.

”நான் நினைத்ததே இல்லை.” என்பது வரைக்கும் உண்மை. இந்திரா காந்தியிடமோ, ராஜீவ் காந்தியிடமோ, ராகுல் காந்தியிடமோ இந்தக் கேள்வி கேட்டிருந்தால் வேறு பதிலை எதிர்பார்க்கலாம். 2001 அக்டோபர் 1ம் தேதி, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அழைத்து, “நீங்கள் குஜராத் முதலமைச்சராக பணியாற்ற வேண்டும் “ என்று சொல்லும் வரைக்கும் அப்படியொரு எண்ணம் மோடிக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அதற்காக பள்ளியில் லீடராகக் கூட ஆசைப்பட்டதில்லை என்று சொன்னதுதான் நெருட வைத்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). Book Day is Branch of Bharathi Puthakalayam

சேட்டன் பகத்தின் நிகழ்ச்சியில் மோடியின் நண்பர் சொன்னதற்கும், பள்ளிக் குழந்தைகளிடம் மோடி சொன்னதற்கும் உள்ள முரண்பாடு வெளிப்பட்ட இடமாக அந்த பதில் இருந்தது. ஒன்று, பிரதமர் நரேந்திர மோடி சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது அவரது பள்ளி நண்பர் சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். பள்ளி நண்பர் மிகச் சாதாரணமானவர். அவர் மோடி குறித்து பொய் சொல்லத் தேவையில்லை. பொய் சொல்லவும் முடியாது. மோடியைப் பற்றி அவருக்குத் தெரிந்தவர்களின் இயல்பான உரையாடல்களின் மூலம் ஒரு பிம்பத்தை கட்டி எழுப்பவே சேட்டன் பகத் போன்ற ஒரு எழுத்தாளர் முயன்றிருப்பார்.

ஆக, பொய் பேசியது மோடி என்பதை உணர முடியும். அது குறித்து பொதுவெளியிலும், இணையத்திலும் விவாதங்கள் எழுந்தன. ‘இது ஒரு பெரிய விஷயம் போல ஏன் பேச வேண்டும்’, ’ஒரு சாதாரண விஷயத்தை ஏன் கிளறுகிறீர்கள்”, ‘மோடியின் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்புத்தான் தெரிகிறது” என மோடியின் ஆதரவாளர்கள், திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

அவர்கள் எல்லாம் பெரிய மனுஷன்கள் போலவும், இதுகுறித்து பேசுகிறவர்கள் அல்பர்கள் போலவும் காட்டிவிட்டு கடந்து விட முனைந்தார்கள். நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இந்த நாட்டின் பிரதமர் என்பதையும், அவர் வகிக்கும் பதவிக்கும் பொறுப்புக்கும் இருக்க வேண்டிய தன்மை குறித்தும் அவர்கள் கவலைப்படவில்லை.

பிரதமரின் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படைத்தன்மையும், உண்மையும் இருக்க வேண்டும் என தேசத்தின் சாமானிய மக்கள் எதிர்பார்க்கவே செய்வார்கள். அந்த பிரக்ஞையற்றவர்களாய் அவர்கள் மோடிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.

மிகச் சிறிய விஷயத்தில் கூட இப்படி பொய் சொல்கிறவர், இந்த தேசத்தின் மிக முக்கிய காரியங்களிலும், பிரச்சினைகளிலும் எவ்வளவு பொய்களைச் சொல்வார் என்ற கேள்விகள் இயல்பாக எழத்தான் செய்யும்.

அந்த கேள்விக்கு ““நான் பிரதமராக நினைத்ததே இல்லை. ஆனால் பள்ளியில் லீடராகும் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன்” என்று புன்னகைத்துக் கொண்டே உண்மை பேசுவதில் என்ன குறைந்து விடப் போகிறார்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). Book Day is Branch of Bharathi Puthakalayam

பதவிக்கும், அதிகாரத்துக்கும் எப்போதும் ஆசைப்படாதவராய், மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காய் தன்னைத் தேடி வந்த பொறுப்புகளை ஏற்றுக் கொண்டவராய் காட்டிக் கொள்ள நரேந்திர மோடி நினைத்திருக்க வேண்டும்.

ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு உண்மையானவராய், நேர்மையானவராய் செயல்படுவதன் மூலமே தன்னை அவ்வாறு நிலைநாட்ட ஒருவர் முயற்சிக்க வேண்டும். வெறும் வாய் வார்த்தைகளாலேயே தன் பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கம்தான் உண்மையில் அல்பத்தனமானது. உண்மைக்கு மாறாக தன்னை பொதுவெளியில் நிலைநிறுத்த முயற்சிப்பது அருவருப்பானது,.

அதுவும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது தேசத்தின் உயர்ந்த பீடத்தில் இருந்து கொண்டு, அவரை அண்னாந்து பார்க்கும் குழந்தைகளிடமா அப்பட்டமாகப் பொய் சொல்வது?

”தரையில் ஊர்ந்து செல்லும் எறும்பொன்றை அவன் கைகளால் நசுக்கிக் கொன்றான். அதை அவன் பின்னால் இருந்து ஒரு குழந்தை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தது.’ என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒருதடவை பகிர்ந்த ஜென் கவிதையை நினைக்கும் போதெல்லாம் இனம்புரியாத ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு உணர்வை மோடியின் இந்தப் பொய் தந்தது.

2014ல் மோடியின் பிம்பத்தை ஊதிப் பெருக்கியவர்களில் ஒருவரான சேட்டன் பகத், 2021 மே மாதத்தில் என்.டி.டிவியில் ”மோடியின் பிம்பத்திற்கு இப்போது ஆக்ஸிஜன் நெருக்கடி வந்திருக்கிறது” என்று சொன்னார். மோடியின் தொடர்ந்த பொய்களும், புரட்டுகளும் தந்த அச்சம், அந்த எழுத்தாளரை அப்படி பேச வைத்திருக்க வேண்டும்.

PM Modi, at the End of His Tether, Is Intent on Wilful Destruction of Syncretism - Wire Article Translated in Tamil By Prof. T. Chandraguru

அரவணைத்துச் செல்லும் நாகரிகத்தை அழித்திட முயற்சிக்கும் மோடி வென்றிட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது… | பிரேம் சங்கர் ஜா



2021 ஆகஸ்ட் 24, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்றதொரு நீண்ட சுதந்திர தின உரையை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்தியிருப்பார் என்றால், அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட பாரதிய ஜனதா கட்சியின் 2024ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கான தொடக்கம் என்றே அதனைப் பார்த்திருப்பார்கள். ஆனால் தற்போதைய பதவிக் காலத்தின் பாதிவழியைக் கூட தாண்டியிராத நிலையில் அவ்வாறான நீண்ட உரையை மோடி தேர்ந்தெடுத்தது அவர் தன்னுடைய பொறுமையின் விளிம்பிற்குச் சென்றிருப்பதையே காட்டுகிறது. அதுமட்டுமல்லாது அதை அவர் உணர்ந்திருப்பதையும் காட்டுவதாக உள்ளது.

66இலிருந்து 24 ஆக…

தோல்வியடைந்து போன பொருளாதார வாக்குறுதிகள், தவறான பொருளாதார சீர்திருத்தங்கள், இடைவிடாத வகுப்புவாத துருவமுனைப்பு, மாற்றுக் கருத்துகளை நசுக்குவது, சுதந்திரத்திற்கான குடிமக்களின் அடிப்படை உரிமையை அழிப்பது ஆகியவற்றிற்கு மத்தியில் கடந்தஏழு ஆண்டுகளாக எவ்விதச் சோர்வுமின்றி தன்னைப் பற்றி சூப்பர்மேன் என்ற பிம்பத்தை உருவாக்கிடவே அவர் முயன்று வந்திருக்கிறார். ஆனால் இந்தியா டுடே வெளியிட்டுள்ள ‘தேசிய மனநிலை – 2021’ (மூட் ஆஃப் தி நேஷன் 2021) என்ற கருத்துக்கணிப்பு பிரதமராக அவரை ஏற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் அறுபத்திஆறு சதவிகிதத்திலிருந்து இருபத்திநான்கு சதவிகிதமாகக் குறைந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

C:\Users\Chandraguru\Pictures\August 14\E86p016UcAEaQxr.jpg

ஆகஸ்ட் பதினான்காம் நாளை ‘தேசப் பிரிவினையின் கொடூரங்களை நினைவுகூரும் தினம்’ என்று அனுசரிக்கும் முடிவை மோடி அறிவித்திருக்கும் செயல் அவர் எதையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதையே காட்டுகின்றது. உண்மையில் அவருடைய அந்த அறிவிப்பு ஆச்சரியம் அளிப்பதாகவே இருக்கிறது. லட்சக்கணக்கானவர்களின் படுகொலை மற்றும்  இடம்பெயர்வைத் தூண்டிய, நம் வாழ்நாளில் மறக்கவே முடியாதநிகழ்வாக இருந்திருக்க வேண்டிய தேசப்பிரிவினை குறித்த நினைவை என்னுடைய வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்த்திடாமல் தவிர்த்தே வந்திருக்கிறேன். மோடி இப்போது அதை ஏன் நம்மிடம் நினைவுபடுத்துகிறார்?

C:\Users\Chandraguru\Pictures\August 14\unnamed.jpg

‘பிரிவினை ஏற்படுத்திய வலியையும், வன்முறையையும் நாடு நினைவில் கொள்ள வேண்டும்’ என்று அரசாங்கத்தின் அறிவிப்பு கூறுகின்ற அதே வேளையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா மிகவும் வெளிப்படையாக ‘தேசப்பிரிவினை நமது அரசியலில் சிலரைத் திருப்திப்படுத்துவது மற்றும் எதிர்மறை அரசியலுக்கான சூழ்நிலைகள் (வாய்ப்புகள்) ஆதிக்கம் செலுத்துவதற்கான நிலைமையை மட்டுமே உருவாக்கியது’ என்கிறார்.

இருண்ட மனதின் பார்வை

நட்டா தெரிவித்துள்ள கருத்து மோடியின் நோக்கத்தைவிளக்குவதைக் காட்டிலும் வேறுவிதமாகவே இருக்கிறது. பேச்சுவார்த்தையை கோழைத்தனம் என்றும், சமரசம்செய்து கொள்வதை சரணடைவது என்றும் கருதுகின்ற இருண்ட மனதின் பார்வையையே நட்டாவின் கருத்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையானவற்றை முழுமையாகத் தவிர்ப்பதில் மோடியின் உறுதிப்பாடு அடுத்த மூன்றாண்டுகளில் நம்மை எங்கு இட்டுச் செல்லப் போகிறது என்பது குறித்த எண்ணம் திகிலூட்டுவதாகவே இருக்கிறது. தேசப்பிரிவினையானது இந்திய சுதந்திரம் என்பதை வலிமிகுந்த நினைவுகளை – பயங்கரத்தை – மட்டுமே நம்மிடம் தூண்டிய நிகழ்வாக மாற்றியது. ஆனாலும் அது மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பலவீனத்தை உள்ளடக்கியதாக அல்லது மற்றவர்களைத் திருப்திப்படுத்தியதால் உருவானதாக இருக்கவில்லை. மாறாக அந்தக் காலகட்டத்தில் அரசமைப்பு குறித்த முன்அனுபவம் எதுவுமில்லாத காங்கிரஸ், முஸ்லீம் லீக் தலைவர்கள் முடிவெடுப்பதில் மிகமந்தமாகவே இருந்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் பழிபாவத்திற்கு அஞ்சாது தங்களைக் காட்டிலும் அதிகாரப் பசி அதிகம் கொண்டவர்கள் பலனை அளிக்கின்ற சமரசத்திற்கான வாய்ப்பைத் தங்கள் வசம் எடுத்துக் கொள்ளும் வரை தங்களுக்கிடையே சிறு சண்டைகளிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

வாஜ்பாய், மன்மோகன்சிங்

இதை நன்கு புரிந்து கொண்டிருந்த அடல் பிஹாரிவாஜ்பாய், டாக்டர் மன்மோகன் சிங் என்று இந்தியாவின் கடைசி இரண்டு பிரதமர்கள் ஒட்டுமொத்த துணைக்கண்டத்திற்கும் தேசப்பிரிவினை ஏற்படுத்திய சேதத்தைச் சரிசெய்வது என்ற நிலைமைக்கு மிகவும் நெருக்கமாக வந்து சேர்ந்தனர். ஆயினும் கடந்த ஏழு ஆண்டுகளில், அவர்கள் சாதித்த அனைத்தையும் இல்லை என்றாக்கி விடுவதில் இன்றைக்கு மோடி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தானில் இன்றைக்கு தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர். சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனான உறவு மிகவும் பலவீனமாக இருக்கின்றது. இந்த நிலைமையில் தேசப்பிரிவினை நம்மிடம் விட்டுச் சென்ற துண்டிக்கப்பட்ட இந்தியாவானது முன்பு எப்போதும் இருந்ததை விட மிகப் பெரிய ஆபத்திலே உள்ளது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

https://cdn.thewire.in/wp-content/uploads/2018/08/18152432/PTI.jpg

ஆக தேசப்பிரிவினையின் கொடூரங்களை நினைவுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றாலும், அது நம்மை அந்தக் கொடூரங்களுக்குள் மூழ்கடித்திட நாம் எவ்வாறு அனுமதித்தோம் என்பதை அறிந்து கொள்வதற்கும், மீண்டுமொரு முறை நாம் அவற்றுள் மூழ்கி விடாதிருப்பதற்கும் இப்போது நாம்  ‘தேசப்பிரிவினையின் கொடூரங்கள்’ குறித்து மறுபரிசீலனை செய்து கொள்வது அவசியம் என்றே நான் கருதுகிறேன்.

இந்திய முஸ்லீம்கள் தங்களுக்கென்று தனியாக ஓர் அரசை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர் என்பது பொதுவாக இருந்து வருகின்ற தவறான கருத்தாகும். முஸ்லீம்லீக்கின் அடிப்படை நோக்கம் பிரிவினை நோக்கியதாக இருக்கவில்லை. 1916ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட முஸ்லீம்லீக்கின் தலைவரான நாள் முதலாகவே ஜின்னாவின் குறிக்கோள் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான உத்தரவாதத்தைப் பெறும் வகையிலே தனியாக ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் அனைத்து சட்டமன்றங்களிலும் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதாகவே இருந்து  வந்தது. அதனாலேயே அவர் முஸ்லீம்லீக்கின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் காங்கிரஸ் உறுப்பினராகத் தொடர்ந்து இருந்து வந்தார். முஸ்லீம்லீக் துவக்கப்பட்டு இருபத்தி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1940 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட கட்சியின் லாகூர் தீர்மானம் (உலகளவில் அது ‘பிரிவினைத் தீர்மானம்’ என்றே கருதப்படுகிறது) ‘மிகப்பெரிய இந்திய கூட்டமைப்பிற்குள் தன்னாட்சி கொண்ட அல்லது பகுதியளவில் சுதந்திரமான முஸ்லீம் பெரும்பான்மை பகுதியை உருவாக்குவது’ என்று மட்டுமே இருந்தது. உண்மையில் அந்த தீர்மானம் ஜின்னாவின் விருப்பமாக மட்டும் இருக்கவில்லை. அது பஞ்சாப் (அப்போது தில்லியில் இருந்து கைபர் கணவாய் வரை) மற்றும் வங்காளம் என்று அப்போது நாட்டில் இருந்த இரண்டு பெரிய முஸ்லீம் பெரும்பான்மை மாகாணங்களின் விருப்பமாகவும் இருந்தது.

ஹயாத் கான், சுரவர்த்தி

பஞ்சாபில் அகாலிகள் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து யூனியனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வந்தது. சர் சிக்கந்தர் ஹயாத் கான் இறந்து போகும் வரை யூனியனிஸ்ட் கட்சி அவராலேயே வழிநடத்தப்பட்டு வந்தது. தேசப்பிரிவினையை அவர் கடுமையாக எதிர்த்து வந்தார். பஞ்சாப் மற்றும் யூனியனிஸ்ட் கட்சியில் பிளவை ஏற்படுத்தும் என்பதால் அவர் பிரிவினையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. முஸ்லீம்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த தொகுதிகளில் முஸ்லீம்லீக் கட்சி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தியிருந்த போதிலும், அந்த மாகாணத்தில் யூனியனிஸ்ட் கட்சிதான் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருந்து வந்தது.

வங்காளத்திலும் தேசப்பிரிவினைக்கு கூடுதலான எதிர்ப்பு இருந்து வந்தது. அங்கே பிரதம அமைச்சராக இருந்த ஹெச்.எஸ்.சுரவர்த்தி முஸ்லிம்லீக்கின் உறுதியான தலைவர். முஸ்லீம்களால் ஆளப்படும் பகுதிகளில்பஞ்சாப், வங்காளம் ஆகியவை முக்கிய பகுதிகளாக இருக்கின்ற வகையில் உருவாக்கப்படும்  இந்திய கூட்டமைப்பு என்ற ஜின்னாவின் பார்வையையே சுரவர்த்தியும் கொண்டிருந்தார்.

C:\Users\Chandraguru\Pictures\August 14\Suhrawardy.jpg

மவுண்ட்பேட்டன் பிரபு 1947 ஏப்ரலில் வெளியிட்ட இடைக்காலப் பிரிவினைத் திட்டம் பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டு பகுதிகளையும் பிரிப்பதாக இருந்தது. அந்த திட்டத்தைக் கடுமையாக எதிர்த்த சுரவர்த்தி சுதந்திரமான ஐக்கிய வங்காளம் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். தில்லியில் ஏப்ரல் 27 அன்று ஆற்றிய பரபரப்பான உரையில் ‘பிளவுபடாமல் ஒன்றாக இருந்தால் வங்காளம் எப்படி இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மிகச் சிறந்ததொரு நாடாகஇருக்கும் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் மற்றும் மிகவும் வளமானவர்களால் இந்திய மக்களுக்கு உயர்ந்தவாழ்க்கைத் தரத்தை வழங்க முடியும். அதன் மூலம்  பெரும்பான்மையான மக்கள் தங்கள் அந்தஸ்தில் முழுமையாக உயர முடியும்…’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது உரையில் இருந்த ‘இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் மற்றும் மிகவும் வளமானவர்கள்’ என்ற சொற்றொடர்குறிப்பிடத்தக்கதொரு சொற்றொடராகவே அமைந்திருந்தது. அந்தச் சொற்றொடர் சுரவர்த்தி வாய்தவறிச் சொன்னதாக இல்லாவிடில், வங்காளம் தனி அரசாக உருவாக்கப்படுவதை அவர் முன்மொழியவில்லை என்றே பொருள்படும். அதுவரையிலும் வரையறுக்கப்படாததாக இருந்த இந்திய கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் ஐக்கிய வங்காளத்தையே அவர் விரும்பினார். அவரது முன்மொழிவிற்கு எதிராக காங்கிரஸிலிருந்து எந்தவிதக் கலகக் குரலும் எழவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

வங்காளத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சரத் சந்திர போஸ், கிரண் சங்கர் ராய்  போன்ற பலரும் சுரவர்த்தியின் முன்மொழிவு ஆதரிக்கப்படுவதற்கான தகுதியுடன் இருப்பதாகவே உணர்ந்தனர். வங்காள ஆளுநராக இருந்த சர் ஃப்ரெட்ரிக் பர்ரோஸ் இந்தியாவின் மூன்று ஆட்சிப் பகுதிகளில் ஒன்றாக வங்காளத்தை தனித்த தன்னாட்சிப் பகுதியாக உருவாக்குவதை முன்மொழியத் தொடங்கிய பின்னரே காங்கிரஸ் அதை எதிர்த்தது.  அப்படியானால் எது அடுத்தடுத்து நடந்த படுகொலைகளைத் தூண்டியது? ‘பாகிஸ்தான்’ உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முஸ்லீம்லீக் தொடங்கிய தீவிரப்படுத்தப்பட்ட ‘நேரடி நடவடிக்கை’ அதாவது இனசுத்திகரிப்பு பிரச்சாரம் என்பதே அந்தக் கேள்விக்கான உடனடியான பதிலாக இருக்கும். அந்த நடவடிக்கைக்கான கருவியாக 1931ஆம் ஆண்டில் முஸ்லீம்லீக்கின் இளைஞர் பிரிவாக ஆரம்பிக்கப்பட்ட முஸ்லீம்லீக் தேசிய காவலர்படை என்ற அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த அமைப்பிற்கு 1946ஆம் ஆண்டு லாகூரில் நடந்த லீக் ‘கமிட்டி ஆஃப் ஆக்சன்’ கூட்டத்தில் வேறுவிதமான கொலைகார நோக்கத்துடன் புத்துயிர் தரப்பட்டது.

C:\Users\Chandraguru\Pictures\August 14\p-5.jpg

கல்கத்தா ஹிந்துக்கள் 1946 ஆகஸ்ட் 16இல் திட்டமிட்டு கொல்லப்படத் தொடங்கிய போது அந்த முஸ்லீம் காவலர் படையில் இருபத்தியிரண்டாயிரம் உறுப்பினர்கள் இருந்தனர். வன்முறைத் தாக்குதலால் கோபமடைந்த ஹிந்துக்கள் பதிலடி கொடுத்ததன் மூலம் தீவிரவாதிகளின் நோக்கத்தை கல்கத்தாவில் ‘நேரடி நடவடிக்கை’ நிறைவேற்றித் தந்தது. நான்காயிரத்திற்கும் அதிகமான உயிர்கள் பலியான போது ஓராண்டு கழித்து என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்தில் ஹிந்துக்களும், முஸ்லீம்களும் நகரின் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லத் தொடங்கினர்.    அடுத்து வந்த மாதங்களில் ‘நேரடி நடவடிக்கை’ வடமேற்கு எல்லை மாகாணம், பஞ்சாப் என்று அடுத்தடுத்து பரவியது. அது ராவல்பிண்டியில் சீக்கியர்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்ட படுகொலையில் முடிந்தது. டிசம்பர் மாதத்திற்குள் அந்த வன்முறை ஹிந்து மற்றும்சீக்கிய வர்த்தகர்கள், வடமேற்கு எல்லை மாகாணம்மற்றும் வடக்கு பஞ்சாபில் இருந்த நில உரிமையாளர்களை கிழக்கு பஞ்சாப், தில்லி, காஷ்மீரின் முசாபராபாத்திற்கு தப்பி ஓட வேண்டிய  கட்டாயத்திற்குள்ளாக்கியது. ‘நேரடி நடவடிக்கை’ 1946 அக்டோபரில் வங்காளத்தில் உள்ள நவகாளிக்கும், டிசம்பர் மாதத்தில் பஞ்சாபின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

கலவரங்களின் விளைவாக காவல்துறை மற்றும் கீழ்மட்ட அதிகாரிகளிடம் ஏற்பட்ட வகுப்புவாத சிந்தனையால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உருவானது. அதனைத்தொடர்ந்து 1947 மார்ச் மாதத்தில் சர் சிக்கந்தர் ஹயாத்தின் மகனான கிஸ்ர் ஹயாத் கான் தலைமையில் இருந்த யூனியனிஸ்ட்-அகாலி-காங்கிரஸ் கூட்டணி அரசு பதவிவிலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சில வாரங்களுக்குள்ளாகவே ‘நாட்டின் பிற பகுதிகளுக்கும் வகுப்புவாத விஷம் பரவி சமூகக் கட்டமைப்பைத் துண்டாடுவதைத் தடுப்பதற்காக மட்டுமே பிரிவினையை ஏற்றுக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டு காங்கிரஸ் இந்தியப் பிரிவினையை தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டபோது, தன்னுடைய நோக்கத்தில் ‘நேரடி நடவடிக்கை’ வெற்றியைக் கண்டது.

https://cdn.thewire.in/wp-content/uploads/2021/08/24191552/Calcutta_1946_riot.jpeg

தோற்றவர் தூண்டிவிட்ட வன்முறை

அடுத்த பன்னிரண்டு மாதங்களில் இந்தியாவைக் கிழித்தெறிந்த வகுப்புவாத வன்முறைகள் தொடங்கியதற்கு முஸ்லீம்லீக்கே காரணம் என்பதற்குப் போதுமானநியாயங்கள் உள்ள போதிலும் மிகச்சாதாரண முஸ்லீம்கள் மீது அத்தகைய குற்றத்தைச் சுமத்துவதற்கான நியாயம் எதுவுமில்லை. இந்திய முஸ்லீம்கள் காங்கிரஸிற்கு கொடுத்து வந்த பாரம்பரிய ஆதரவை முறியடிப்பதாகவே அந்த ‘நேரடி நடவடிக்கை’யின் வெளிப்படையான நோக்கம் இருந்தது. அதற்காக பேராசை, காமம் என்றுஅடிப்படை மனித இயல்பில் இருந்த இரண்டு எண்ணங்களை லீக்கில் இருந்த தீவிரவாதிகள் நன்கு அறிந்தே தூண்டிவிட்டனர்.

பஞ்சாபில் நடந்ததைப் போன்று ஹிந்துக்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட படுகொலையை வங்காளத்தில் நவகாளி என்ற ஒரே மாவட்டம் மட்டும் அனுபவித்தது. தேர்தலில் தோற்றுப் போன சட்டமன்ற உறுப்பினரான கோலம்சர்வார் ஹுசைனியால் வங்காளத்தில் அந்த வன்முறை தொடங்கி வைக்கப்பட்டது, ஹுசைனியின் பக்தி மிகுந்தகுடும்பம் அந்தப் பகுதியிலிருந்த ஹிந்துக்கள், முஸ்லீம்கள் இருவரும் சேர்ந்து வழிபட்டு வந்த கோவிலுக்குத் தலைமை தாங்கி வந்தது. ஹுசைனி 1946 ஜனவரியில் நடைபெற்ற தேர்தலில் லீக் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். மக்கள் மீதான தனது பிடிப்பை மீட்டெடுப்பதற்காக தீவிரவாதத்தில் அவர் லீக் வேட்பாளரைத் தோற்கடிக்க முடிவு செய்தார். எனவே கல்கத்தாவில் ‘நேரடி நடவடிக்கை தினத்தில்’ நடைபெற்ற முஸ்லீம்களின் மரணத்திற்குப் பழிவாங்க வேண்டும் என்று அவர் கூக்குரல் எழுப்பினார். பெரும்பாலும் ஹிந்துக்களுக்குச் சொந்தமான நிலம், கடைகள் மற்றும் பெண்களைக் கையகப்படுத்திக் கொள்ளும் பேராசை மற்றும் காமத்தையே உண்மையில் அந்த வன்முறையின் போது அவர் தூண்டி விட்டார்.  பஞ்சாபிலும் அதுபோன்ற பேராசையே தேசப்பிரிவினையால் தூண்டி விடப்பட்ட வன்முறைக்கான முக்கியத் தூண்டுதலாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக அமைதியாக இணைந்து வாழ்ந்து வந்த அண்டை வீட்டாரின் துரோகத்தால் சீக்கியர்களிடம் ஏற்பட்ட கோபத்தின் விளைவாகவே அங்கே வன்முறை அதிகரித்தது.  அதற்கு பிரிட்டிஷ் அரசாங்கமே பெரும்பாலும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.  பிரிவினை என்பதுதவிர்க்க முடியாத ஒன்று என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் லண்டனில் ரகசியமாக எடுக்கப்பட்ட முடிவால் அவர்கள் ரவி ஆற்றின் எல்லையைச் சீரமைத்ததே அதற்கான காரணமாக இருந்தது.

பஞ்சாப் ஆளுநரின் கடிதம்

எல்லையைச் சீரமைக்கும் அந்த முடிவு பஞ்சாப் ஆளுநர் சர் இவான் ஜென்கின்ஸுக்கு தெரிவிக்கப்பட்ட போது அவர் வேதனை நிரம்பிய கடிதம் ஒன்றை வைஸ்ராய்க்கு எழுதினார். வைஸ்ராயின் மனதை மாற்ற தான் லண்டனுக்கு வருவதற்கும், எல்லையை செனாப் வழியாக மாற்றியமைப்பதற்கும் அவர் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். அகாலிகள் தாங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்க விரும்புவதாக தெளிவுபடுத்தியிருந்த நிலையில் எல்லையை ரவி ஆற்றுடன் சேர்த்து வைப்பது பஞ்சாப் சீக்கியர்களில் ஐம்பது சதவிகிதத்தினரை பாகிஸ்தானிற்குள் இருக்க வைப்பதாகி விடும் என்றும் அவர் தன்னுடைய கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.

C:\Users\Chandraguru\Pictures\August 14\Ravi river.jpg

‘அந்த முடிவு பணம் எதுவுமின்றி தங்களுடைய நிலங்களை விட்டு வெளியேறுகின்ற லட்சக்கணக்கான சீக்கியர்களை கிழக்கு பஞ்சாபிற்கு அகதிகளாக இடம் பெயர வைத்து விடும். ஒரு நூற்றாண்டுக்கும் குறையாமல் தங்களுடைய சாம்ராஜ்யத்தை தில்லியில் இருந்து கைபர் கணவாய் வரைவைத்திருந்த தற்காப்பு கலை அறிந்த இனமான சீக்கியர்கள் இந்த முடிவிற்கு எதிராக கிளர்ச்சியில் இறங்குவார்கள். அதன் விளைவாக உருவாகும் வன்முறை நிச்சயம் புதிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்’ என்றும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

செனாப் மீது எல்லையை வைப்பது தொன்னூறு சதவிகித சீக்கியர்களை இந்தியாவிற்குள்ளேயே இருக்க வைத்து அவர்கள் இடம் பெயர்வதைக் கணிசமாகக் குறைத்து விடும். மேலும் அதனால் ஏற்படுகின்ற இடையூறுகளைக் கட்டுப்படுத்த காவல்துறை, ராணுவத்திற்கு வாய்ப்பும் கிடைக்கும். ஆனாலும் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு காமன்வெல்த் உறவுகள் அலுவலகத்தால் வழிநடத்தப்பட்ட அட்லியின் அரசு பஞ்சாப் முழுமையாக பாகிஸ்தானிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பியது, எனவே முடிந்தவரை சிறிய அளவில் இந்தியாவிற்கு விட்டுக் கொடுப்பது என்பதில் அது உறுதியாக இருந்தது, ரவி ஆற்றையொட்டியே பிரிவினை எல்லை அமைய வேண்டும் என்பதிலும் அந்த அரசு உறுதியுடன் இருந்தது.

ஆளுநர் ஜென்கின்ஸின் எச்சரிக்கை மிகவும் தீர்க்கதரிசனமானது. 1947ஆம் ஆண்டில் பிரிக்கப்படாத பஞ்சாபில் மக்கள்தொகையில் பதினெட்டு சதவிகிதம் இருந்த சீக்கியர்களிடம் முப்பது சதவிகித நிலம் இருந்தது. மொத்தநில வருவாயில் ஐம்பது சதவிகித வருவாயை செலுத்துபவர்களாக சீக்கியர்களே இருந்தனர். 1857ஆம் ஆண்டு தில்லியை மீண்டும் கைப்பற்ற உதவியதன் மூலம் சீக்கியர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றியிருந்தனர். 1914 மற்றும் 1940இல் ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டனுக்காகப் போராடுவதற்கு தங்கள் குடும்பத்தினரை அவர்கள் அனுப்பி வைத்தனர். ஆக பிரிவினைத் திட்டம் குறித்து அறிய வந்த வேளையில் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து அவர்களிடமிருந்த உணர்வை எவராலும் உணர்ந்து கொள்ள முடியும்.

C:\Users\Chandraguru\Pictures\August 14\3610.jpg

அகாலிகள் ஜின்னாவைக் கொலை செய்வதற்கான சதித்திட்டத்தைத் தீட்டினார்கள். காவல்துறையினரால் அந்த திட்டம் விரைவாகக் கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது. மாஸ்டர் தாரா சிங், கியானி கர்தார் சிங்மற்றும் பிற அகாலி தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அது கிட்டத்தட்ட அனைவரும் விவசாயிகளாக இருந்த சீக்கியர்களுக்கான தலைவர்களை இல்லாமல் செய்ததுடன் அவர்களை ஆத்திரமடையவும் வைத்தது.அங்கிருந்து தாங்கள் வெளியேறுவதை அல்லது இறப்பதை தங்களுடைய முஸ்லீம் அண்டைவீட்டார் எதிர்பார்த்தது மட்டுமல்லாது, தங்களுடைய நிலத்தை அவர்களுக்கிடையே ரகசியமாக பங்கு போட்டுக் கொள்வதாகச் செய்திகள் அவர்களுக்கு எட்டிய போது சீக்கியர்களின் கோபம் அனைத்து எல்லைகளையும் தாண்டி கொலைச் செயல் தொடங்கியது.

விருப்பமின்றி நடந்த வெளியேற்றம்

இரண்டு அடுத்தடுத்த அரசாங்கங்கள் பஞ்சாபில் வன்முறையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒட்டுமொத்த மக்கள் இடமாற்றத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வது என்று எடுத்த முடிவால் சீக்கியர்கள் மட்டுமல்லாது கிழக்குபஞ்சாபில் இருந்த கணிசமான முஸ்லீம் மக்களும் தங்கள் சொத்துகளை இழக்க நேர்ந்தது. அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் விருப்பத்திற்கு மாறாகவே அங்கிருந்து வெளியேறினர். எடுத்துக்காட்டாக 1980 மற்றும்1990களில் பாகிஸ்தானின் புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவரான துஃபைல் நியாசியின் குடும்பத்தினர் அமிர்தசரஸில் உள்ள ஹர்மந்திர் சாஹிப்பில் தலைமுறை தலைமுறையாக கீர்த்தனைப் பாடகர்களாக இருந்து வந்தனர். அங்கிருந்து வெளியேறிச் செல்வதற்கு அவர்களுக்குவிருப்பமில்லை. ஆனால் அப்போது நடைபெற்ற ஒட்டுமொத்த மக்கள் இடமாற்றம் சீக்கியர்கள் அல்லது ஹிந்துக்களாக மாறி அங்கே இருந்து கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி எதுவுமில்லாமல் செய்துவிட்டது. அவர்கள் அவ்வாறு மாறுவதற்குத் தயாராக இல்லை என்பதால் அங்கிருந்து அவர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அவர்கள் மட்டுமே அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. முஸ்லீம் ராஜபுத்திரர்களின் ஏராளமான மசூதிகள், மதரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய புலமைமிக்க பாரம்பரியத்துடன் அதிக அளவிலான மக்கள்தொகை கொண்டதாக கர்னால் பகுதி இருந்து வந்தது. மசூதியைப் போலத் தோற்றமளிக்கும் ஒரு சில இடிபாடுகள் மட்டுமே இன்று அங்கே எஞ்சியிருக்கின்றன.  மசூதிகளுக்கான நோக்கம் கிட்டத்தட்ட முற்றிலும் மறந்து போய்விட்ட நிலையில் அவை குறித்த மங்கலான நினைவு யாரிடமும் காணப்படவில்லை.

பாகிஸ்தான் சுதந்திர தினத்தை ‘பிரிவினையின் கொடூரங்கள்’ தினமாக நினைவுகூரும் எண்ணத்திலிருந்து பின்வாங்குகின்ற அதே நேரத்தில் ஒருபோதும் நாம் கடந்தகாலத் தவறுகளை மீண்டும் செய்து விடக் கூடாது.  மூன்றாயிரம் ஆண்டுகாலமாக ஏற்கனவே இங்கே இருந்தவர்கள் மற்றும் புதிதாக வந்தவர்களின் கருத்துகள், நம்பிக்கைகளுக்கு இடையிலான சகவாழ்வை உருவாக்கி வைத்திருக்கும் இந்தியாவில் இருக்கின்ற மதங்களின் தனித்துவமான சகிப்புத்தன்மையை, ஒத்திசைவான இணைவை வேண்டுமென்றே அழிப்பதை ஒருபோதும் நாம் அனுமதித்து விடக் கூடாது, எவ்விதத்திலும் நாம் அதில் பங்கேற்று விடக் கூடாது என்பதற்காக பிரிவினையின் கொடூரங்களை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.  ஏற்கனவே சேதப்படுத்தப்பட்டுள்ள அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நாகரிகத்தை முழுமையாக அழித்திடும் முயற்சிகளை மோடி ஒருபோதும் கைவிடப்போவதில்லை. அவர் வெற்றி பெறுவதற்கு ஒருபோதும் நாம் அனுமதித்து விடக் கூடாது.

https://thewire.in/politics/pm-modi-at-the-end-of-his-tether-is-naturally-intent-on-wilful-destruction-of-syncretism

நன்றி : தி வயர் இணைய இதழ் 2021 ஆகஸ்ட் 24

தமிழில் : தா. சந்திரகுரு

75th Independence Day in a very difficult situation Peoples Democracy Article Translated in Tamil By Sa. Veeramani. Book Day

மிகவும் இக்கட்டான நிலையில் 75வது சுதந்திர தினம்



இந்தியா, தன்னுடைய 74ஆவது சுதந்திர தினத்தை முடித்து, 2022இல் 75ஆவது சுதந்திர தினத்தில் அடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் உண்மையில் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது.

நம்முடைய குடியரசு அரசமைப்புச்சட்டத்தை உருவாக்குவதற்காகவும், நம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிப்பதற்காகவும் நாம் சுதந்திரப்போராட்டக் காலத்தில் உயர்த்திப்பிடித்த உன்னதமான குறிக்கோள்கள், கடந்த பல பத்தாண்டுகளில் அரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

குறிப்பாக, ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டணி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபின், ஒரு குணாம்சரீதியான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 2014க்குப் பின்னர், சுதந்திரப் போராட்டத்தின் உன்னதக் குறிக்கோள்களாக இருந்த, ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் நாட்டின் இறையாண்மை ஆகிய அனைத்துக்கும் மிகவும் சக்திவாய்ந்த அச்சுறுத்தலாக விளங்கக்கூடியவிதத்தில் இந்துத்துவா மதவெறியும், நவீன தாராளமய முதலாளித்துவக் கொள்கையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் இப்போதிருக்கும் அமைப்பில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கையகப்படுத்தியும், அவற்றின் அதிகாரங்களை அரித்து வீழ்த்தியும், தங்களுடைய ‘இந்து ராஷ்ட்ரம்’ என்னும் இலக்கை நோக்கி, கொண்டுசெல்வதற்கு ஏற்றவிதத்தில் கையகப்படுத்திடும் நீண்ட பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, நரேந்திர மோடியின் சுதந்திர தின உரைகளை ஆராய்ந்தோமானால், அவர்கள் கற்பனை செய்துள்ள “புதிய இந்தியா”வின் உருவறைகள் என்னவென்று புரிந்துகொள்ள முடியும்.

2018 ஆகஸ்ட் 15 அன்று நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில், 2022வாக்கில் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சமயத்தில் “புதிய இந்தியா” உருவாக்கப்படுவதைப் பற்றி பேசியிருந்தார். இவர்களின் புதிய இந்தியா என்பதன் பொருளை பின்னர் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்க்கத் தொடங்கிவிட்டார்கள். 2019இல் பத்து நாட்கள் கழித்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 5 அன்று ரத்து செய்யப்பட்ட பின், மோடி ஆற்றிய சுதந்திர தின உரையின்போது, “ஒரே நாடு, ஒரே அரசமைப்புச்சட்டம்” என்பதை நிறைவேற்றிவிட்டோம் என்று பெருமையுடன் அறிவித்தார். சர்தார் பட்டேல் கண்ட கனவு “ஒரே பாரதம், ஸ்ரேஸ்தா பாரதம்” அடைந்துவிட்டோம் என்றார். இது கிட்டத்தட்ட ஆர்எஸ்எஸ்-இன் அகண்ட பாரதம் போன்ற கோஷத்தை ஒத்திருக்கிறது.

இதே ஆண்டு டிசம்பரில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாட்டில் முதன்முதலாக குடிமக்கள், தங்கள் மதத்தை அளவுகோலாகக் கொண்டு வரையறுக்கப்பட்டார்கள். இது மதச்சார்பற்ற அரசின் குடிமக்கள் என்னும் கருத்தாக்கத்திற்கு எதிரானதாகும்.

Indian Flag Independence Day - Free photo on Pixabay

அடுத்த ஆண்டு, 2020இல், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில், ஆகஸ்ட் 5 அன்று, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவின்போது, பிரதமர், ஆர்எஸ்எஸ் தலைவரின் முன்னிலையில், இன்றைய தினமே சுதந்திர தினம் என்று அறிவித்தார். அதன்பின்னர் பத்து நாட்கள் கழித்து அவர் ஆற்றிய சுதந்திரதின உரையின்போது, அவர், “வெகுகாலமாக இருந்து வந்த ராம ஜன்ம பூமி பிரச்சனையில் “அமைதியான முறை”யில் உச்சத்தை அடைந்துவிட்டோம்,” என்று கூறினார். இவர்கள் கூறும் “அமைதியான முறை”யிலான உச்சத்திற்குப் பின்னே, 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். ஆனால், மோடியைப் பொறுத்தவரை, கோவில் என்பது அவர்களுக்கு வேறு ஏதோ ஒன்றைக் குறிப்பாகத் தெரிவிக்கிறது. “ஒவ்வொரு இந்தியனும் வளர்ச்சிக்கான மகத்தான யாகத்தில் ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்.” இவ்வாறு கோவில் என்பது இவர்களின் தேசிய வளர்ச்சிக்கான ஓர் அடையாளமாகும். ஒவ்வொரு இந்தியனும் அதற்காகத் தியாகம் செய்திட வேண்டும் என்பது இவர்கள் கூற்று.

இவ்வாறாக இவர்களின் புதிய இந்தியா கடந்த இரண்டு ஆண்டுகளில் – அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, நாடாளுமன்றத்திற்கான புதிய சென்ட்ரல் விஸ்டா கட்டுவது மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஒழித்துக்கட்டியது ஆகியவற்றின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவை அனைத்தும் மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களை வக்கிரத்தனமான முறையில் குறிக்கின்றன.

“புதிய இந்தியா” என்பது இந்துத்துவா எதேச்சாதிகாரம் மற்றும் கார்ப்பரேட்டுகளின் நவீன தாராளமயம் ஆகியவை இணைந்த நச்சுக் கலவையாகும். மோடி, “புதிய இந்தியா”வுக்கு இலக்கை நிர்ணயித்து அறிவித்த கடந்த மூன்றாண்டுகளில், கார்ப்பரேட்டுகளின் மீதான வரிகள் கடுமையாக வெட்டப்பட்டிருக்கின்றன, பெரும் கார்ப்பரேட்டுகளின் பல லட்சம் கோடி ரூபாய் கடன்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன, பெரிய அளவில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. வேளாண் வர்த்தகம் மற்றும் சந்தைகளில் கார்ப்பரேட்டுகள் நுழைவதற்கு வழிவகைகள் செய்து தரும் விதத்தில் நாடாளுமன்றத்தை முடக்கி மூன்று வேளாண் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மிகவும் அசிங்கமானமுறையில் சமத்துவமின்மையுடன் புதிய இந்தியா உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2021இல் வெளியாகியுள்ள கிரெடிட் சுஸ்ஸே வெல்த் ரிப்போர்ட் (Credit Suisse Wealth Report of 2021)-இன்படி, நாட்டிலுள்ள உயர் ஒரு சதவீதத்தினரின் செல்வத்தின் பங்கு, 2020 இறுதிவாக்கில் 40.5 சதவீதத்தை எட்டிவிடும். ஃபோர்ப்ஸ் (Forbes) வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையானது, 2020இல் 102 பில்லியனர்களாக இருந்தவர்களின் எண்ணிக்கை 2021இல் 140ஆக உயரும் என்று மதிப்பிட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வறுமை மிகவும் கொடூரமானமுறையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கக்கூடிய நிலையில்தான் இது நடந்திருக்கிறது.

2020இல் பிரதமர் சுதந்திரதின உரை நிகழ்த்தியபோது, “சுயசார்பு பாரதம்” (“Aatmanarbhar Bharat”) என்னும் முழக்கத்தை அளித்தார். அதாவது, “புதிய இந்தியா” என்பது சுயசார்புடன் திகழும் என்று பொருள்படும்படி இவ்வாறு கூறினார். அவர் மேலும், “நாம் 75ஆவது சுதந்திர தினத்தை நோக்கி இன்னும் ஓர் அடி எடுத்து வைக்க வேண்டிய நிலையில் இருப்பதால், இந்தியா போன்ற ஒரு நாடு, தன் சுய காலில் நிற்க வேண்டியதும், சுயசார்புடன் இருக்க வேண்டியதும் அவசியமாகும்,” என்று கூறினார்.

கபடநாடகத்தின் அளவுக்கு எல்லையே இல்லை. மோடி, சுய சார்பு எனப் பிரகடனம் செய்தபின்னர், “சுயசார்பு பாரத் அபியான்” (“Aatmanirbhar Bharat Abhiyan”) என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மிகமுக்கியமான போர்த்தந்திரரீதியிலான துறைகளைத் தவிர (except strategic sectors) இதர பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாரிடம் தாரை வார்க்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. போர்த்தந்திரரீதியிலான துறைகளிலும்கூட, அதிகபட்சம் நான்கு துறைகள் மட்டுமே பொதுத்துறையில் நீடிக்கும். அரசாங்கம், பாதுகாப்புத்துறையில் ஏற்கனவே 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்துவிட்டது. இந்நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியப் பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் அந்நிய நிறுவனங்கள் நம் மக்களின் வளங்களைப் பயன்படுத்திக் கட்டி எழுப்பப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்திட அனுமதிக்கப்படக் கூடியவைகளாகும். இந்நடவடிக்கைகள் அனைத்தும் நம் பொருளாதார இறையாண்மையை அரித்துவீழ்த்திடும்.

75-வது சுதந்திர தின விழா 75 வாரங்களுக்கு நடைபெறும் - பிரதமர் மோடி || Tamil News Amrit Mahotsav' will be celebrated to mark 75 years of India's Independence: PM Modi

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்த்திடும் ஒரு பகுதியாக விளங்கும், அரக்கத்தனமான முறையில் பின்பற்றப்பட்டுவரும் நவீன தாராளமயக் கொள்கைகள், நம் அரசியலமைப்பு முறையின்மீதும் நாசகர விளைவுகளை ஏற்படுத்திடும், ஜனநாயகத்தினைத் தேய்வுறச் செய்திடும். இதன்காரணமாகத்தான் அரசியல்வாதிகள் மற்றும் பெரும் வர்த்தகப் புள்ளிகளுக்கு இடையேயான கள்ளப் பிணைப்பு மிகவும் வலுவானமுறையில் மாறியிருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் அமைப்புமுறை இந்தக் கள்ளப்பிணைப்பிற்குச் சிறந்ததோர் உதாரணமாகும். நாடாளுமன்ற நடைமுறையே மதிப்பிழந்துவிடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுவரும் பிரதிநிதிகள், அந்த மக்களின் கட்டளைகளையே முறியடித்திடும் விதத்தில், மிகப்பெரிய அளவில் கட்சித் தாவலில் ஈடுபடுவதும், மாநில அரசாங்கங்களையே மாற்றியமைப்பதும் நடக்கும். இவ்வாறு இவர்களுடைய “புதிய இந்தியா”வும் அரை-ஜனநாயகமும் ஒரேபொருள்படக்கூடியவையாக மாறி யிருக்கின்றன.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை மோடி அரசாங்கம் கையாள வேண்டியிருந்ததால், இவர்களின் திட்டம் நிறைவேறுவதில் சற்றே தாமதம் ஏற்பட்டபோதிலும்கூட, இவர்கள் இந்தியாவை மாற்றியமைப்பதை மிகவும் வெறித்தனமான முறையில் வேகமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் கூறும் “புதிய இந்தியா”வுக்கும் அறிவியல் மனப்பான்மையுடன் கூடிய ஒரு நவீன, மதச்சார்பற்ற சமூகத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது. இவர்களின் “புதிய இந்தியா”, “இந்து ராஷ்ட்ரத்தின்” அடிப்படையில் அமைந்தது. விடுதலைப் போராட்டத்தில் எவ்விதமான பங்கும் அளிக்காத பேர்வழிகளால் இது வடிவமைக்கப்பட்டு வருகிறது. இவர்களின் இந்தப் புதிய இந்தியாவிற்கும் மதச்சார்பாற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும் எவ்விதத்திலும் ஒட்டுதலோ உறவோ கிடையாது.

இவர்களின் புதிய இந்தியாவுக்கும், பூர்ஷ்வா லிபரல் “இந்தியாவின் சிந்தனை”க்கும் கூட (bourgeois liberal to “Idea of India”) எவ்விதமான சம்பந்தமும் கிடையாது. இவர்களுடைய இந்துத்துவாவின் “புதிய இந்தியா”விற்கு மாற்று, ஒரு புதிய கச்சிதமான வடிவத்தின் மூலமாக வெளிவரும். அது மக்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களால் உருவாக்கப்படும்.

இவர்களுடைய “புதிய இந்தியா”வுக்கான சவால், வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்கள் மூலமாக ஏற்கனவே வடிவம் பெறத் துவங்கிவிட்டன. வரலாறு படைத்துவரும் ஒன்பது மாத விவசாயிகளின் போராட்டம் கார்ப்பரேட் இந்துத்துவா ஆட்சியின் அடிப்படைக்கு சவாலாக மாறி இருக்கிறது. முன்னதாக, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற வெகுஜன கிளர்ச்சி நடவடிக்கைகள் நாட்டின் பெரும்பான்மைவாதத்தை அனுமதித்திட மாட்டோம் என்று அறிவார்ந்த குடிமக்கள் வெளிப்படுத்தியதைக் காட்டியது. தனியார்மயத்திற்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள், விசாகப்பட்டினம் உருக்காலைத் தனியார் மயத்திற்கு எதிராக மிகப்பெரிய அளவில் நடைபெற்று வரும் போராட்டம் போன்றவை புதிய முத்திரைகளைப் பதித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோன்று பாதுகாப்பு உற்பத்தித் தொழிலாளர்கள் போராட்டங்கள், இன்சூரன்ஸ் துறை ஊழியர்கள் போராட்டங்கள் மற்றும் இதர துறைகளில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு விரிவான அளவில் போராட்டங்கள் வளர்ந்துவருவதற்கான பங்களிப்புகளைக் காட்டுகின்றன.

இத்தகைய எதிர்ப்பு மற்றும் வெகுஜன இயக்கங்களினூடே ஒரு மாற்று உருவாகும். அது ஓர் இடது மற்றும் ஜனநாயகத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு மாற்றாக அமைந்திட வேண்டும். இத்தகையதொரு திட்டம் நம் விடுதலைப் போராட்டத்தின் இலக்குகளை, அதாவது மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலையை முன்னெடுத்துச் செல்லும். இப்போது நம்முன் உள்ள கடமை என்னவென்றால், உழைக்கும் மக்களில் விரிவான பகுதியினரை அமைப்புரீதியாக அணி திரட்டிட வேண்டும், அத்தகையதொரு மாற்றைச் சுற்றி அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்டிட வேண்டும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (ஆகஸ்ட் 4, 2021)
(தமிழில்: ச.வீரமணி)

Two-fold position on reservation Peoples Democracy Article Translated in Tamil By Sa. Veeramani. Book Day is Branch of Bharathi Puthakalayam.

இட ஒதுக்கீட்டில் இரண்டகமான நிலைப்பாடு

மோடி அரசாங்கம் அகில இந்திய கோட்டாவிற்கு வரும் கல்வியாண்டிலிருந்து இளநிலைப் பட்டவகுப்புகள் மற்றும் முதுநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மருத்துவம் மற்றும் பல் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு அகில இந்திய கோட்டாவிற்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு…
People's Democracy Editorial Article Modi government distorts truth Translated in Tamil By Sa. Veeramani. Book Day, Bharathi Puthakalayam.

உண்மையைத் திரித்துக்கூறும் மோடி அரசாங்கம் (தமிழில்: ச.வீரமணி)

கடந்த ஒருவாரமாக நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல்வார நிகழ்வுகள், மோடி அரசாங்கத்தின் குணத்தைப்பற்றி, ஏராளமான அம்சங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. நாடாளுமன்றம் துவங்கிய ஒருசில நாட்களிலேயே, அரசாங்கம் உண்மைக்குப் புறம்பான இரு அம்சங்களைப் பதிவு செய்தது. முதலாவது, ஒன்றிய தகவல்…
Health care inequality in India Economic Article by Prof P. Anbalagan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு சமத்துவமின்மை – பேரா. பு. அன்பழகன்

பேரா. பு. அன்பழகன் இந்தியாவில் கோவிட் பெருந்தொற்று கடந்த மார்ச் 2020இல் உருவான முதல் அலையிலும் பிப்ரவரி 2021இல் உருவான இரண்டாவது அலையிலும் பெருமளவிற்கு வாழ்வாதார நிலையிலும், நோய் தொற்றாலும் பாதிக்கப்பட்டவர்களில் 92 விழுக்காட்டினர் முறைசாரா தொழிலாளர்களும், சமுதாயத்தில் விளிம்புநிலையில் உள்ளவர்களாகும்.…
Reforms that do not consider the welfare of the people - Sitaram Yechury. This article Translated by Sa. Veeramani. Book Day

மக்கள் நலனை கருத்தில் கொள்ளாத சீர்திருத்தங்கள்

- சீத்தாராம் யெச்சூரி எப்போதும் நம்மிடம் கேட்கப்படும் கேள்வி, நீங்கள் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாளரா அல்லது எதிரானவரா என்பதாகும். உள்ளடக்கம் இல்லாமல் எந்த சீர்திருத்தமும் இருந்திட முடியாது. ஒவ்வொரு சீர்திருத்தமும் உள்ளடக்கத்தை, ஒரு நோக்கத்தைப் பெற்றிருக்கும். இடதுசாரிகள் ஒரு சீர்திருத்தத்தை ஆதரிக்கிறார்களா அல்லது…
Jammu and Kashmir: Union Government's Maneuver Strategy Peoples Democracy Editorial Article Tamil Translation by Veeramani. Book Day

ஜம்மு – காஷ்மீர்: ஒன்றிய அரசின் சூழ்ச்சித்திட்டம்

மோடி-ஷா இரட்டையர் ஜம்மு-காஷ்மீரின் குணாம்சத்தைத் தங்களின் இந்துத்துவா சித்தாந்தத்திற்கேற்ப மாற்றியமைத்திடும் வெறித்தனத்தில் உறுதியுடன் இருக்கிறார்கள். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வந்த 14 அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தது வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. 2019 ஆகஸ்ட்…
பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்: Control Price Rise Peoples Democracy Editorial Tamil Translation by Veeramani. Book day is Branch of Bharathi Puthakalayam

விலை உயர்வைக் கட்டுப்படுத்து

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, மக்கள் மீது மிகப்பெரிய அளவில் துன்பத்தையும், துயரங்களையும், மரணங்களையும் அளித்துள்ள அதே சமயத்தில் மோடி அரசாங்கத்தாலும் மக்களின் துன்பங்கள் பல முனைகளிலும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் வேலையின்மைக் கொடுமையை அனுபவித்துக கொண்டிருக்கிறார்கள். வருமானங்கள் குறைந்து, பசி-பட்டினிக்…