நெகிழி (குழந்தைகள் கதை) – இரா.கலையரசி
கடலில் நீந்தியபடி ஆமை ஒன்று “கடலுக்குள்ள துடுப்பு எனக்கு வருது கடுப்பு” ஐலசா ஐலசானு பாடிட்டே ஒரு பாறையில படுத்து ஓய்வெடுத்துக்கு இருந்தது.
மெல்ல நீந்தி வந்த நட்சத்திரமீன் அடடடடா! பாட்டு ரொம்ப பலமா இருக்கே?! என்ன விசேஷம்?னு கேட்டது.
ஏன்பா? நீ வானத்துல இருக்க வேண்டியவன். இங்க வந்து இருந்துகிட்டு சிரமப் படற?!னு நக்கல் பண்ணி சிரிச்சுது ஆமை.
ஒன்ன கேட்டேன் பாருன்னு சலிச்சுகிட்டு இருக்கும் போதே நெகிழி பை ஒண்ணு மூஞ்சிய மூடுச்சு.
“ஆ.ஆ.ஆ.”னு கத்திய நட்சத்திரமீனை நெகிழி கிட்ட இருந்து காப்பாத்திய ஆமை “எப்பூடி” னு சொல்லி சிரித்தது.
நம்ம வீட்டுக்குள்ள குப்பைய போட்டு போற மனுசங்கள நெனச்சு பாடுனேன்.அதுக்குள்ள ஒன்னயவே தாக்கிருச்சு இந்த நெகிழி.
நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லாம் மனுசங்க போடற நெகிழியால செத்தும் போயிட்டாங்கனு வருத்தபட்டாங்க
“ஆழி எங்கள் ஆழி
போடாதீங்கய்யா நெகிழி
வாழ வழி விடு மனுசா
வாழனும் நாங்களும் புதுசா”
ஆமையார் பாட,” ஜங் ஜிங் ஜங், ஜிங் ஜங் ஜங்”னு நட்சத்திர மீன் பாட ஆரம்பிச்சது.
நம்ம போடற நெகிழியால கடல் உயிரினங்களும் கஷ்டபடறாங்க இல்ல பட்டூஸ்! நெகிழி தவிர்க்கலாமே!