Posted inPoetry
நியோ தாந்திரீகக் கவிதைகள் | இந்திரன்
தாந்திரீக சுவாசம் ------------------------------------------------ உன் உடம்பின் உள்ளும் புறமும் பயணிக்கிறேன் என்னைத் தேடி. நிர்வாணத்தை நோக்கிய எண்கோணப் படிகளில் சட்டை உரித்து நகர்கிறது குண்டலினிப் பாம்பு. ஆணும் பெண்ணுமாய் இரண்டாய்ப் பிளந்த நாவின் மூலமாய் பஞ்சபூத ரகசிய உரையாடலின் வார்த்தைகளை கட்டிலில் உரக்கப் பேசுகிறது காமம். பிரபஞ்ச முட்டை உடைத்து எடையின்றி பறக்கும் பயணத்தில் நட்சத்திர மண்டலத்தில் உள்ளக் களித்தலும் காண மகிழ்தலுமாய் தலைவனும் தலைவியும். சூரிய கலையும் சந்திர கலையுமாய் நாகங்கள் பின்னிப் பிணைகையில் தாந்திரீகச் சுவாசம் பயில்கிறது மானுடம். பூஜ்ஜிய புவி ஈர்ப்பு விசை ------------------------------------ பிரக்ஞையின் ஆர்ப்பரிக்கும்…
