ஹைக்கூ கவிதைகள் – வெ.நரேஷ்

கடலில் விளையாடச் சென்றேன்
விரட்டுகிறது கடல் அலை.
********

இரவு நேரம் என்றும் பார்க்காமல்
கண்ணடிக்கும் தெரு விளக்கு.
********

குலத்தையும் ஆற்றையும் குதுகலப்படுத்தும்
மழைத் துளிகள்.
********

ஜோசியரால் கணிக்க முடியவில்லை
செய்திதாளில் வரும் செய்தியை.
********
வெ.நரேஷ்
ராம்குமாரின் கவிதைகள்
1.
பல இரவுகளை தூக்கியெறிந்து நிற்கிறது என் தூக்கம்
நீயில்லாமல்
நின் நினைவில்லை
சாகாமல்
நிச்சயம் என்னைப்போல்
இருக்கக்கூடாது உனக்கும்
கண் மைக்கும் காதுமடலுக்கும்
வர்ணம் தீட்டியே என்னை
கவிஞன் ஆக்கியவள் நீ
உன் பார்வைக்கு பதிலுரைக்கவும்
புன்னகையில் விழுந்து மடியாமலும்
மீண்டு வந்த ஆட்கள் உண்டா
இப்படியான வேளையில்
கடல் அலை சீற்றத்தை போல்
பேரழிவாய் வந்தது நம் பிரிவு
வருடங்கள் மாறினாலும்
வயதுகள் கூடினாலும்
நரைவிழாமலே இருக்கிறது
நம் காதல்
ஆண்டுதோறும் வந்து நிற்கிறேன்
உன் பாதங்கள் பிரிந்து சென்ற
பாதை நோக்கி
இன்னொரு ஆழிப்பேரலை
வந்துவிடாதா நம்
பிரிவினை சேர்த்துவைக்க
2.
தலைப்புச்செய்திகள் ஆகலாம்
தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிக்கலாம்
கட்சிகளின் வெற்று அறிக்கையும் கண்டன உரையும்
காது துளைக்கலாம்
நடவடிக்கை எடுப்பதாக நாளை கழிக்கலாம்
நாட்டையே பரபரப்பாக்கலாம்
எல்லாம்
அடுத்த செய்தி வரும் வரைதான்
எதுவும் மாறவில்லை இங்கு
நினைவில் கொள்ளுங்கள்
அந்த அடுத்த செய்தி
நீங்காளாகலாம்
அப்பொழுது புரியும்
எங்கள் துயரும்
துடிக்கும் வலியும்
ஊழல் குறைந்த மாநிலம் கேரளா ஏன்? கட்டுரை – அரவிந்த் வாரியார் (தமிழில் அ.பாக்கியம்)
அரவிந்த் வாரியார்
(தமிழில்: அ.பாக்கியம்)
கேள்வி: தென்னிந்தியாவில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா இருப்பது ஏன்?
பதில்: பின்வரும் காரணங்களால் தென்னிந்தியாவில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா உள்ளது.
1) மலையாளிகள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு மிக அதிகமாக உள்ளது. அவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என மனுக்கள் தொடர்ந்து கொடுப்பதும் போராட்டங்களும் நடத்துகிறார்கள்.
2) எந்த அரசியல்வாதியையும் வணங்கும் பழக்கம் கேரளாவில் இல்லை. அரசியல்வாதிகள் எந்த தவறான செயல்களிலிருந்தும் தப்பிக்க முடியாது என்ற சூழல் நிலவுகிறது.
3) கேரளாவில் உள்ள மலையாள செய்தி சேனல்கள் அரசாங்கத்திற்கு இணங்கி போவது இல்லை. மேலும் அவை பிரைம் டைம் விவாதங்களில் அரசாங்கத்தின் குறைபாடுகளையும், கமிஷன் பற்றியும் விமர்சன ரீதியாக ஆய்வு செய்கின்றன.
4) மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கேரளாவில் ஆட்சி அதிகாரம் மிகவும் பரவலாக்கப்பட்டுள்ளது. இது ஊழலின் அளவைக் குறைக்கிறது. ஏனெனில் பஞ்சாயத்துகள் உள்ளூர் நிர்வாகம் தொடர்பான பல விஷயங்களில் முடிவுகளை எடுக்க அதிகாரம் பெற்றுள்ளன.
5) கேரளாவில் டிஜிட்டல் கல்வியறிவு மிக அதிகமாக உள்ளது. இது அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான மனித தொடர்புகளைக் குறைக்கிறது. இது ஊழலைக் குறைக்கிறது.
நன்றி:
அரவிந்த் வாரியார் (Arvind variar.
Quora தளத்தில் எழுதியது.)
ஊடக உலகில் பெரும் முதலாளிகளின் ஊடுருவலும் ஊடக சுதந்திரமும் – பேரா.அருண்கண்ணன்
கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி அன்று அதானி குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான என்டிடிவியின் (NDTV) 29% பங்குகளை வாங்கியுள்ளதாக தெரிவித்தது. மேலும் அந்த அறிவிப்பில் கூடுதலாக 26% பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அதானி அவர்களுடைய குழுமத்தின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சி அடையசெய்தது. மேலும் மோடி அவர்களின் நெருக்கமானவராக அறியப்பட்ட அதானியின் குழுமம் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனத்தை வாங்குவதன் மூலம் இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் பெரிதும் பாதிக்கபடும் என்கிற அச்சத்தைப் பலரும் வெளிபடித்தியுள்ளனர்.
இந்நிலையில் அதாணி குழுமத்தால் எப்படி என்டிடிவியின் பங்குகளை வாங்க முடிந்தது? ஏற்கனவே அம்பானி போன்ற பெரும் கார்பரேட் நிறுவனங்கள் ஊடக வெளியில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அதானியின் இந்த முயற்சி என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்? என்பது போன்ற கேள்விகளை முன்வைத்து ஆங்கில ஊடகங்களில் பலரும் விவாதிப்பதைப் பார்க்க முடிகிறது. அதைத் தமிழ்ச் சூழலில் புரிந்து கொள்வதற்கான சிறிய முயற்சியே இந்தக் கட்டுரை.
இந்தியாவில் செய்தித் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும்
இந்தியாவில் 1959-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி ஒரு சோதனை முயற்சியாக தூர்தர்சன் என்னும் பொதுத்துறை நிறுவனத்தின் வாயிலாக தொலைக்காட்சி ஒளிபரப்புத் தொடங்கப்பட்டது. அதன்பிறகு 1965-ம் ஆண்டு முதன் முதலில் தூர்தர்சன் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியது. இப்படி தொடங்கிய இந்திய செய்தித் தொலைக்காட்சி யின் வரலாற்றில் அடுத்து 30 ஆண்டுகள் தூர்தர்சன் மட்டுமே முழுமையான ஆதிக்கம் செலுத்திவந்தது. இந்தியாவில் 90களுக்குப் பிறகுப் பொருளாதார கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவும் 1995-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அலைக்கற்றைகள் தொடர்பாக வழங்கிய முக்கியமான தீர்ப்பின் காரணமாகவும் தனியார் தொலைக்காட்சியின் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்த பின்னணியில் 1998-ம் ஆண்டு என்டிடிவி ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியதுதான் இந்தியாவின் முதல் தனியார் செய்தித் தொலைக்காட்சி நிறுவனமாகும்.
என்டிடிவியின் தோற்றமும் வளர்ச்சியும்
இந்தியாவின் சில நகரங்களுக்கு மட்டுமே இருந்த தூர்தர்சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை 1982-ல் தேசிய ஒளிபரப்பாக விரிவாக்கப்படுகிறது. அதே காலகட்டத்தில் தூர்தர்சன் தொலைக்காட்சியில் தனியார் நிகழ்ச்சி தயாரிக்கும் நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்படியான ஒரு நிகழ்ச்சி தாயரிப்பு நிறுவனமாக 1988-ம் ஆண்டு பிரனாய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர்களால் தொடங்கப்பட்டது தான் என்டிடிவி நிறுவனம்.
முதல்கட்டமாக அதே ஆண்டு “உலகம் இந்த வாரம்” என்கிற நிகழ்ச்சி தயாரித்தது என்டிடிவி இந்நிகழ்வு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. உலகில் நடந்த சில மிக முக்கியமான நிகழ்வுகளை அலசும் செய்தித் தொகுப்புதான் இந்நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி பெறும் வரவேற்பைப் பெற்றதுடன் இந்திய செய்தித் தொலைக்காட்சி வரலாற்றில் இந்நிகழ்ச்சித் தொகுப்பை ஒரு புரட்சிகரமான மாற்றம் என்றே பலரும் குறிப்பிடுகின்றனர்.
அதற்குப் பிறகு தேர்தல் முடிவுகளைத் தொகுத்து வழங்குவது பட்ஜெட் தொடர்பான விவாதங்களை நடத்துவது என தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளைத் தூர்தர்சன் தொலைக்காட்சிக்குத் தயாரித்து கொடுத்தது என்டிடிவி நிறுவனம். மேலும் 1995-ம் ஆண்டு முதல் முறையாக தினமும் இரவு எட்டு மணி செய்தியை நேரடி ஒளிபரப்பாகத் தயாரித்து கொடுத்தது என்டிடிவி. இந் நேரடி ஒளிபரப்பிற்கு அரசு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்ததாகவும் இருப்பினும் என்டிடிவி நேரடி ஒளிபரப்பைச் சாமார்த்தியமாகத் தொடர்ந்து ஒளிபரப்பியதாக என்டிடிவியின் இருபத்தைந்து ஆண்டு நிறைவை ஒட்டி வெளியிடப்பட்டப் புத்தகத்தில் பிரனாய் ராய் குறிப்பிட்டுள்ளார்.
1998-ம் ஆண்டு ரூப்பர்ட் மர்டாக்கின் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து முதல் தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது என்டிடிவி. நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமாக 6 பணியாளர்களுடன் தொடங்கி 1998-ல் 300 பணியாளர்களுடன் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது என்டிடிவி நிறுவனம். 1999-ல் ndtv.com இணையதளம் தொடங்கப்பட்டது மேலும் அதே ஆண்டில் வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பையும் ஆரம்பித்தது. மத்திய அரசின் முன்னாள் தகவல் ஒலிபரப்பு துறை செயலராக இருந்த ரதிகாந்த் பாசு ஸ்டார் நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்தவரை ஸ்டார் என்டிடிவி இடையேயான உறவில் பெறும் சிக்கல் ஏற்படவில்லை. ஆனால் அவர் இடத்தில் பீட்டர் முகர்ஜி வந்த பிறகு இரு நிறுவனங்களுக்கு இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டது.
இதனை அடுத்து 2003-ம் ஆண்டு தனியாக என்டிடிவி 24×7 என்கிற ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சியும் என்டிடிவி இந்தியா என்கிற இந்தி செய்தித் தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டன. என்டிடிவி ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சி தொடங்கிய சில வாரங்களில் ஹெட்லயன்ஸ் டுடே (தற்போதைய இந்தியா டுடே டிவி) ஆரம்பிக்கப்பட்டது இருப்பினும் அது என்டிடிவி சேனலுக்கு எந்த வகையிலும் போட்டியாக அமையவில்லை.
ஆனால் 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட டைம்ஸ் நொவ் (Times Now) அதற்க்கு அடுத்த ஆண்டு தொடங்கப்பட்ட சிஎன்என் (CNN) போன்ற செய்தி சேனல்கள் அதுவரை தனியார் செய்தித் தொலைக்காட்சிப் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வந்த என்டிடிவியைப் பின்னுக்குத் தள்ளியது. தொடங்கிய சில வருடங்களிலேயே முதல் இரண்டு இடங்களையும் இந்த சேனல்கள் கைப்பற்றின. என்டிடிவியில் பயிற்சி பெற்றவர்களான ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் அர்னாப் கோஸ்வாமி ஆகிய இருவரும் இச் சேனல்களின் வளர்ச்சிக்குப் பெறும் பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப நிறுவனமாக இருந்த என்டிடிவி 2004-ல் பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனமாக மாறுகிறது. அதற்கு அடுத்த ஆண்டு ராய் இணையரால் ஆர்ஆர்பிஆர் என்கிற பெயரில் நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டு அதில் உடனடியாக என்டிடிவியில் தங்களுக்கு இருந்த 60% பங்குகளில் 29% பங்குகள் மாற்றுப்படுகிறது. அதே நேரத்தில் என்டிடிவி நிறுவனம் அசுர வேகத்தில் விரிவாக்க முயற்சிகளைத் தொடங்கியது. 2005-ம் ஆண்டு என்டிடிவி ப்ராபிட் (NDTV Profit) என்கிற வணிகச் செய்தி சேனல் தொடங்கப்பட்டது. பிறகு மெட்ரோ நேஷனல் உடன் இணைந்து கொல்கத்தா மும்பை போன்ற நகரங்களில் பிராந்திய மொழியில் செய்திச் சேனல்களைத் தொடங்க முயற்சி செய்யப்பட்டது ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது. மேலும், உலக அளவில் செய்தி சேனல்கள் தொடங்குவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றும் தொடங்கப்பட்டது. அதன் வழியாக மலேசியா நாட்டில் அஸ்ட்ரோ என்கிற 24×7 செய்தி சேனலைத் தொடங்குவதற்கு உதவியது. 2006-ம் ஆண்டில் ரேடியோ சேனல் ஒன்றை தொடங்குவதற்காகச் செய்த முயற்சியும் வெற்றிபெறவில்லை. மேலும் தொலைக்காட்சி சேவையைத் தாண்டி தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்து சேவை வழங்குவதற்குத் தொடங்கப்பட்ட என்டிடிவி லேப்ஸ் (NDTV Labs) நிறுவனமும் நீண்ட காலம் தொடர்ந்து நடத்தப்படவில்லை.
இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களின் பெரும்பான்மையான வருமானம் என்பது விளம்பரங்கள் மூலமே கிடைத்துவருகிறது. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு சந்தையில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக என்டிடிவியின் விளம்பர வருமானம் பெறும் சரிவைச் சந்திக்க தொடங்கியது. அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி இந்நிலைமையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியது. ஒரு புறம் வருமானத்தில் நெருக்கடி உருவான அதே நேரத்தில் பல விரிவாக்க முயற்சிகள் தோல்வியடைந்ததின் காரணமாகவும் 2005 வரை லாபம் ஈட்டி வந்த என்டிடிவி நிறுவனம் அடுத்த வந்த சில ஆண்டுகளில் லாபம் இன்றி நஷ்டத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டது.
அதானி குழுமம் என்டிடிவி நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதன் வரலாறு
இப்படியான சூழலில் 2007-ம் ஆண்டு குளோபல் இன்வெஸ்ட்மென்ட் என்கிற நிறுவனத்திடம் இருந்த 7 சதவீத பங்குகளை வாங்கும் முயற்சியில் ராய் இணையர் இறங்கினர். இதற்குப் போதுமான நிதி இல்லாததால் இந்தியா புல்ஸ் (India Bulls) என்கிற நிதி நிறுவனத்திடம் இருந்து 501 கோடி ரூபாய் கடன் பெற்றனர் ராய் இணையர். அதற்கு அடுத்த சில மாதங்களிலேயே உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி அடைகிறது 400 ரூபாயாக இருந்த என்டிடிவியின் பங்குகள் 100 ரூபாயாக சரிந்தது.
இத்தகைய சூழலில் இந்தியா புல்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய கடனை அடைக்க வேண்டிய நிலை உருவாகிறது. எனவே அக்கடனை அடைப்பதற்கு ஐசிஐசிஐ வங்கியிடமும் (ICICI Bank) இருந்து 350 கோடி ரூபாய் கடனை 19% வட்டியுடன் பெறுகின்றனர் ராய் இணையர். பிறகு வங்கி கடனை அடைப்பதற்கு அம்பானியின் பினாமி நிறுவனம் என்று நம்பப்படுகிற விபிசிஎல் (VPCL) நிறுவனத்திடம் இருந்து 2009-ம் ஆண்டு 403 கோடி ரூபாய் வட்டி இல்லா கடனை ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தின் வழியாகப் பெற்றுள்ளனர். மேலும் ஆர்ஆர்பிஆர் நிறுவனம் கடனைத் திருப்பித்தராமல் போகும் பட்சத்தில் அதனிடம் உள்ள என்டிடிவியின் 29% பங்குகளை விபிசிஎல் நிறுவனம் எடுத்துக்கொள்ளலாம் என்கிற ஒப்பந்தத்துடன் தான் அக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விபிசிஎல் நிறுவனத்தின் கணக்கில் கடன் வழங்கும் அளவிற்குப் பணம் இல்லை என்பதும் இது ஒரு ஆலோசனை நிறுவனமாகத்தான் பதியப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் பின்னால் தான் பொது வெளிக்கு வந்தது. இதனுடன் விபிசிஎல் நிறுவனம் ஆர்ஆர்பிஆர் நிறுவனத்திடம் கடனை வழங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு சிநோனா (Shinano) நிறுவனத்திடம் இருந்து அதே அளவு தொகையைக் கடனாக பெற்றுள்ளது தெரியவருகிறது. மேலும் விபிசிஎல் நிறுவனத்தின் இயக்குனர்கள் இருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அதேபோல் சிநோனா நிறுவனமே ரிலையன்ஸின் ஒரு கிளை நிறுவனம் என்பதும் தெரியவருகிறது. இதனுடன் சிநோனா மற்றும் விபிசிஎல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒரே அலுவலக முகவரியில் இயங்கிவந்தது என்பதும் வருமான வரித்துறை அறிக்கையின் வாயிலாக அறிய முடிகிறது.
அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் விபிசிஎல் நிறுவனத்தை எமினென்ட் குழுமம் வாங்குகிறது இதன் முலம் என்டிடிவியின் 29% பங்குகளை எடுத்துக்கொள்ளும் உரிமத்தைப் பெறுகிறது அக்குழுமம். அந்த நிறுவனமும் கூட அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் இயக்குனராக உள்ள மகேந்திர நகாத்தா ( Mahendra nhata) அவர்களுடையதுதான். இந்த நிறுவனத்தைச் சில ஆண்டுகள் கழித்து சுரேந்திர லுனிய என்கிற நிறுவனம் வாங்கியுள்ளது. சமீபத்தில் அந்நிறுவனத்தை அதானி குழுமம் வாங்கியது. இந்த பின்னணியில்தான் அதானி குழுமம் என்டிடிவியின் 29% பங்குகளைப் பெற்றுள்ளது. இதனுடன் கூடுதலாக மேலும் 26% பங்குகளை வாங்க உள்ளதாகவும் அதானி குழுமம் கூறியுள்ளது. ஒருவேளை இதில் அதானி குழுமம் வெற்றி பெறும் பட்சத்தில் என்டிடிவியின் கட்டுப்பாடு ராய் இணையரிடம் இருந்து அதானி குழுமத்திடம் சென்றுவிடும்.
என்டிடிவி நிறுவனத்தின் நிதி மேலாண்மை
என்டிடிவி நிறுவனத்தின் நிதி மேலாண்மை தொடர்பான சச்சரவுகள் என்பது அதனுடைய தொடக்க காலகட்டந் தொட்டே இருந்து வருகிறது. 1997-ம் ஆண்டு பாராளுமன்றக் குழு என்டிடிவி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனத்திற்கும் தூர்தர்சன் தொலைக்காட்சிக்கும் இடையிலான நிதி பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் எதுவும் நடைபெற்றுள்ளதா என்பதை விசாரித்தது. அதனைத் தொடர்ந்து 1998-ம் ஆண்டு சிபிஐ பிரனாய் ராய் மற்றும் தூர்தர்சனில் பணிபுரிந்த ரதிகாந்த் பாசு உள்ளபட பல அதிகாரிகள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இவ் வழக்கை நீண்ட காலம் விசாரித்த சிபிஐ 2013-ம் ஆண்டு முடித்து வைத்தது. இதில் முன்வைக்கப்பட்ட எந்த குற்றச்சாட்டுகளும் கடைசி வரை நிரூபிக்கப்படவில்லை.
இது ஒரு புறம் இருக்க தூர்தர்சனின் இயக்குனராக இருந்த ரதிகாந்த் பாசு (IAS Officer) 1996-ம் ஆண்டு திடீரென பணியில் இருந்து விலகுகிறார். மேலும் அடுத்த சில ஆண்டுகளில் ஸ்டார் நிறுவனத்தின் இந்திய பொறுப்பாளராகப் பதவி ஏற்கிறார். அதனைத் தொடர்ந்து என்டிடிவி மற்றும் ஸ்டார் இடையிலான ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கையைழுத்தனாது. ஸ்டார் உலக அளவில் பெரிய நிறுவனமாக இருந்த பொழுதும் இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் என்டிடிவிக்குச் சாதகமாக இருந்ததாகவும் அதற்கு ரதிகாந்த் பாசு ஒரு முக்கியமான காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதன் காரணமாகவே பாசுவிற்குப் பிறகு ஸ்டாரில் பொறுப்பேற்ற பீட்டர் முகர்ஜி கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் இதன் விளைவாகவே என்டிடிவி உடனான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் ரிலையன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்ற விதமும் பல கேள்விகளையே நமக்கு எழுப்புகிறது. வாய்ப்பு இருந்தும் ரிலையன்ஸ் நிறுவனம் ஏன் என்டிடிவியின் பங்குகளை வாங்கவில்லை போன்ற கேள்விகளுக்குப் பதில் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் 2009-ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக லாபி செய்த ராடிய மற்றும் முன்னாள் எக்கானிமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் பணிபுரிந்த வேணுவிற்கும் இடையில் நடந்த உரையாடலில் அம்பானியின் நெருக்கமானவராக கருதப்பட்ட மனோஜ் மோடி டெல்லிக்கு வர உள்ளதாகவும் நாம் பிரனாய் ராய்க்கு உதவு வேண்டும் என்று சொல்லும் ஆடியோ வெளியானது. இந்த பின்னணியில் தான் விபிசிஎல் நிறுவனத்திடம் இருந்து ராய் கடன் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. மேலும் என்டிடிவியின் 25-ம் ஆண்டு விழாவில் 25 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது அதில் அம்பானியும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலையில் என்டிடிவி நிறுவனத்தின் பங்குகளில் அதானி நிறுவனத்திடம் 29% பங்குகளும் ராய் இணையருக்கு 32% பங்குகளும் எல்டிஎஸ் இன்வெஸ்ட்மென்ட் என்கிற நிதி நிறுவனத்திடம் 9.75% பங்குகளும் விகாஸ் இந்தியா என்கிற நிறுவனத்திடம் 4.42% பங்குகளும் 29,691 தனிநபர்களிடம் 23.85% பங்குகளும் உள்ளன. எல்டிஎஸ் மற்றும் விகாஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் மொரிசியஸ் நாட்டில் இருந்து செயல்படுகின்றன. இதில் எல்டிஎஸ் நிறுவனத்தின் மொத்த இந்திய முதலீடுகளில் 98% சதவித முதலீடுகள் அதானியின் நான்கு நிறுவனங்களில் உள்ளது. இது இருவருக்கும் இடையில் இருக்கும் நெருக்கத்தைக் காட்டுகிறது. எனவே என்டிடிவியில் அதானி குழுமத்தால் கூடுதல் பங்குகளை எளிதாக பெற முடியும் என்றே தோன்றுகிறது
இந்தியாவில் ஊடகங்களின் இன்றைய நிலை
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பொதுவாக ஊடகங்கள் அரசிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளன. இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின் போது இந்தியன் எக்ஸ்ப்ரஸ் உள்ளிட்ட சில பத்திரிக்கைகள் அரசை எதிர்த்து செய்திகளை வெளியிட்டன. இந்திய ஊடக வரலாற்றில் இது போன்ற விதிவிலக்குகளும் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் 2014-க்கு பிறகு நிலைமை முற்றிலும் வேறுமாதிரியாக உள்ளது. பிரதான ஊடகங்களைத் தனிமைப்படுத்தும் முயற்சியை முழு பாய்ச்சலுடன் இந்த அரசால் மேற்கொள்ளப்படுகிறது. ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே அமைச்சகத்தின் எந்தக் கோப்புகளும் பத்திரிக்கைகளுக்கு அனுப்பக்கூடாது என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டதாக ஸ்க்ரோல் இணையதளம் செய்தி வெளியிட்டது.
அதேபோல் வழக்கமாக அரசின் முக்கியமான முடிவுகள் அனைத்தும் பத்திரிக்கைகள் வழியாக தெரிவிக்கப்படும் ஆனால் பிரதமர் உள்ளபட அமைச்சர்கள் பலரும் சமூக ஊடகத்தின் வழியாகத்தான் செய்திகளை வெளியிடுகின்றனர். திட்டக்குழுவைக் கலைத்து விட்டு நிதி அயோக் என்கிற அமைப்பை உருவாக்கியது போன்ற விடயங்களைப் பிரதமரின் சமூக ஊடகத்தில் வந்த பிறகே ஊடகங்கள் செய்தி வெளியிடும் நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது. இது போன்று தகவல்களைத் தர மறுப்பதின் மூலம் மக்களுக்கு இருக்கும் பிரதான ஊடகத்தின் மீதான நம்பிக்கையைச் சிதைத்து கொண்டிருக்கிறது இந்த அரசு. அதேபோல் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி பெரும்பாலான பிரதான ஊடகங்களை அரசின் ஊதுகுழல்களாக மாற்றுவதில் பெரிதும் வெற்றி பெற்றுள்ளது இந்த அரசு.
இதில் இருந்து மாறுபட்டு செயல்படும் ஊடக நிறுவனங்களும் பத்திரிக்கையாளர்களும் பெறும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இப்படி இந்த அரசை விமர்சித்து செய்தி வெளியிட்டதற்காக நேரடியாகவோ அல்லது நெருக்கடி கொடுத்தோ பலரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ல் எடிட்டராக இருந்த பாபி கோஷ் 2017-ல் இந்திய சீன எல்லை பகுதியில் நடந்த உரசல்கள் தொடர்பாக அரசை விமர்சித்து செய்தி வெளியிட்டபோது நிர்வாகம் அவரை எச்சரித்தது. அதற்குப் பிறகும் அரசை விமர்சிக்கும் வகையில் சில செய்திகளை வெளியிடுகிறார் இதனால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது.
கொரோனா இரண்டாம் அலையின் போது அரசு செயல்படவில்லை என்பதை விமர்சிக்கும் வகையில் காணவில்லை என்கிற தலைப்பின் கீழ் தேடப்படும் நபர் இந்திய அரசாங்கம் என்றும், அதன் வயது 7 என்றும், அதை தேடுபவர்கள் இந்திய குடிமக்கள் என்கிற அட்டைப் படத்துடன் அவுட்லூக்கின் இதழ் ஒன்று மே மாதம் 2021-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் காரணமாக அப்பத்திரிக்கையின் எடிட்டர் ரூபன் பானர்ஜியை வேலையில் இருந்து நீக்கியது அவுட்லூக் நிர்வாகம். கடந்த எட்டு ஆண்டுகளில் இப்படி பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களின் பட்டியில் நீண்டு கொண்டே செல்கிறது. அரசின் மிகவும் நெருக்கமான பத்திரிகையாகக் கருதப்பட்ட தைனிக் பாஸ்கரும் (Dainik Bhaskar) கொரோனா இரண்டாம் அலையின் பொழுது அரசைக் கடுமையாக விமர்சித்தது. அதன் எதிரொலியாக சில நாட்களுக்குப் பிறகு அந்நிறுவனத்தில் ரைடு நடத்தப்பட்டது. அரசை விமர்சித்து செய்திகளை வெளியிட்ட நியூஸ் கிளிக் இணையதளத்தின் அலுவலகத்திலும் இது போன்ற ரைடு ஒன்று நடத்தப்பட்டது.
அதேபோல் என்டிடிவியில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடந்த சண்டை தொடர்பாக வெளியிட்ட செய்திகள் தேசப்பாதுகாப்பிற்கு எதிராக இருந்ததாக சொல்லி என்டிடிவியின் இந்தி சேனலின் ஒரு நாள் ஒளிபரப்பைத் தடை செய்தது இந்த அரசு. இதே கால கட்டத்தில் நிதி முறைகேடு தொடர்பாக ராய் இணையரின் வீடுகளில் சிபிஐ சோதனையும் நடத்தப்பட்டது. எனவே இந்த அரசை விமர்சித்து செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு நடுவிலேதான் செயல்படும் நிலை உள்ளது என்பதுத் தெளிவாகிறது.
இறுதியாக
என்டிடிவிக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் தொடக்க காலம் தொட்டே நெருக்கமான உறவே இருந்து வந்துள்ளது. 1998-ம் ஆண்டு நடந்த என்டிடிவி செய்தி நிறுவனத்தின் தொடக்க நிகழ்வு அப்போதைய பிரதமராக இருந்த ஐகே குஜராலின் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் என்டிடிவியின் 25-ம் ஆண்டு விழா ஜனாதிபதியின் அலுவலகமான ராஷ்டிர பதி பவனில் நடைபெற்றது இதுவே அந்த அலுவலகத்தில் நடந்த முதல் தனியார் நிறுவனத்தின் நிகழ்வாகும்.
ஆனால் தற்போதைய அரசுக்கும் ராய் இனையருக்கும் இடையிலான உறவு அவ்வளவு இணக்கமானதாக இல்லை என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளமுடிகிறது. 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரங்களை என்டிடிவி காட்டிய விதங்களை அன்றைய ஆளும் அரசாக இருந்த மோடி அவர்கள் தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கம் கடுமையாக விமர்ச்சித்ததுடன் அதனுடைய ஒளிபரப்பையும் தற்காலிகமாகக் குஜராத்தில் நிறுத்திவைத்தது. பிரதமர் ஆவதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய மோடி அவர்கள் அரசு புலிகளைப் பாதுகாக்க ஒதுக்கிய நிதியில் தான் சில சேனல்கள் நடத்தப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு ஒன்றையும் வைத்தார். அதே காலகட்டத்தில் என்டிடிவி புலிகளைப் பாதுகாப்போம் என்கிற நிகழ்ச்சி ஒன்றை நடத்திவந்தது. இந்நிகழ்ச்சி தனியார் நிறுவனம் ஒன்றின் ஸ்பான்சர் செய்ப்பட்ட நிகழ்ச்சி என்றாலும் மோடி அவர்கள் மறைமுகமாக என்டிடிவியையே விமர்சித்தாக பலரும் கூறுகின்றனர்.
மேலும் 2014-ம் ஆண்டு தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பெரும்பாலான முன்னனி செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டி அளித்த மோடி என்டிடிவிக்கு மட்டும் பேட்டி அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு மோடி அவர்கள் தலைமயிலான அரசு பொறுப்பேற்ற பிறகு என்டிடிவி பலவகைகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் ஒரு செய்தி நிறுவனமாக உள்ளது. அதேபோல் அரசின் சில விடயங்களை விமர்சனப்பூர்வமாக அணுகியதற்காகக் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பல சிக்கல்களை என்டிடிவியும் அதில் பணிபுரியும் பல பத்திரிக்கையாளர்களும் சந்தித்து வருகின்றனர். இதில் பணிபுரியும் பத்திரிக்கையாளர் ரவிஸ் குமார் போன்றவர்கள் சந்தித்த இன்னல்கள் ஏராளம்.
இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும் பொழுது என்டிடிவியை ராய் இணையர் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளன என்றே சொல்ல தோன்றுகிறது. என்டிடிவியின் செயல்பாடுகளில் நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருப்பினும் இன்னும் அது அகில இந்திய அளவில் நம்பத்தகுந்த ஒரு செய்தி நிறுவனமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ராய்ட்டர்ஸ் (Reuters) நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையிலும் இந்தியாவில் அதிகமான நபர்களால் (76%) நம்பத்தகுந்த ஊடகமாக என்டிடிவி திகழ்கிறது. இந்நிலையில் தற்போதைய ஆளும் அரசின் மிகவும் நெருக்கமாகக் கருதப்படுகிற அதானியின் கட்டுப்பாட்டிற்கு என்டிடிவி செல்லும் பட்சத்தில் அதனுடைய அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்பதுதான் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.
பேரா. அருண்கண்ணன்
இயக்குநர்- தொழில் கல்விக்கான லயோலா கல்விக்கழகம்,
லயோலா கல்லூரி,
சென்னை
நன்றி: வளரி, ஜெம்சென் சென்னை இயேசு சபை ஊடக மையம்,
காட்சி தகவலியல் துறை, இலயோலா
கல்லூரி
ஒரு செய்தி சிறுகதை – சாந்தி சரவணன்
“உனக்கு ஒரு செய்தி தெரியுமா மங்கை? , என கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தாள்”, ருக்மணி.
“வா அக்கா, எங்கே ஆளையே காணோம் என்ற மங்கையை பார்த்து
“நான் எங்கே போக போறேன், மங்கை”. இங்கே தான் தள்ளு வண்டியில் நாஷ்டா கடைக்கு பக்கத்திலேயே தான் நம்ம பூ கடையில் உக்காந்து இருக்கேன். உனக்கு தெரியாதது என இருக்கு. இந்த டிரிப்பிளிகேணி விட்ட எனக்கு எங்க போக நாதியிருக்கு என அங்கலாயித்துக் கொண்டு ஒரு கப் காபி தண்ணி கொடேன் “, என அமர்ந்தாள்.
ருக்மணி பூ விற்க ஆரம்பித்து 35 வருடங்கள் ஆகிவிட்டது திருவல்லிக்கேணியில் தனது 10 வயதில் பூ விற்க ஆரம்பித்தாள். ஒரு விபத்தில் பெற்றோர்களை இழந்து விட்டாள். அம்மாவின் தூரத்து சொந்தம் கமலா பாட்டி தான் ருக்மணிக்கு அடைக்கலம். பாட்டி பூ கடை. கடை என்றால் பெரிய கடை அல்ல. பார்த்தசாரதி கோயில் வாசலில் கூடையில் பூ போட்டு அமர்ந்துவிடுவார்
ருக்மணியிடம் முதலில் இரண்டு முழம் பூ கொடுத்து கோயில் ஒட்டிய தெருக்களில் பூ விற்க அனுப்பினாள்.. குழந்தை பருவம். துருதுருவென கண்கள். அக்கா பூ வாங்கிக்கங்க அக்கா என் அவள் கேட்கும் போது தா மா என்று கடப்பவர்கள் சொல்லும் நிலையே உண்டாகும்.
இரண்டு முழம் 5, 10 என அதிகரித்தது.
தன் வியாபாரத்தை 10 வயதில் துவங்கினாள். இன்று வயது 30. இந்த இடைப்பட்ட காலத்தில் அவள் பூ வியாபாரம் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலையில் இருந்து ஆரம்பித்து லைட் ஹவ்வுஸ் வரை வளர்ந்தது, இன்று கமலா பாட்டி வைத்த இடத்திலேயே ஒரு சிறுமேடை அமைத்து பூ கடை வைக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டாள். கமலா பாட்டி திடிரென்று ஒரு நாள் உறக்கத்திலேயே இயற்கை எய்தினார். மகளாக இருந்து அயோத்தி குப்பம் மக்கள் உதவியோடு ஈமக் காரியங்கள் செய்து முடித்தாள்.
5 வருடம் முன் பூ மார்க்கெட் செல்லும் வழியில் கதிரேசன் நட்பு கிடைத்தது. அது திருமணத்தில் முடிந்தது. ஒரே வருடத்தில் அழகான பெண் குழந்தைக்கு தாயானாள் ருக்மணி. கதிரேசன் குடி பழக்கம் அவனை நோயாளி ஆக்கியது. ஆக குழந்தை வளர்ப்பு கணவன் மருத்துவச் செலவு என இரு பொறுப்புகள் ருக்குவின் தலையில் பலு கூடியது. திருமணமும் திருப்பு முனையாக அமையவில்லை. ஆனால் ருக்கு நம்ம டிசைன் அப்படி என எதையும் சமாளிக்கும் தன்மை கொண்டவளாக இருந்தாள்.
அக்கா, “இந்தாங்க காஃபி; என காஃபி கொடுத்து விட்டு பக்கத்தில் வந்து அமர்ந்தாள் “மங்கை.
சட்டென நினைவு திரும்பினாள் ருக்கு. சக்கரை சரியாக இருக்கா அக்கா?
“சரியா இருக்கு” மங்கை. “தலைவலிக்கு காஃபி நல்லாயிருக்குது என சொல்லிக் கொண்டே காப்பியை குடித்து முடித்தாள்”.
“என்னா விஷயம் சொல்லுங்க, அக்கா”.
இந்த கொரோனா நோய் வந்ததாலும் வந்தது, நம்ம பொழப்பு பாழாய் போச்சி. சாமி. இருக்கற கோயிலையே மூடிபுட்டாங்கா. கொரோனா நம்மை பாட ஏத்துதோ இல்லையோ இந்த பட்டினி நம்ம ஏத்திடும் போல் இருக்கு
“ஆமா உன் கடை எப்படி போது மங்கை”.
“அதே கதை தான் கா”.
“வயித்துல ஈர துணி போட்டு உக்கார்ந்து இருக்கிறோம் பல நேரங்களில். தையல் தெரிஞ்சதால நம்ம ஸனங்களுக்கு மாஸ்க் வைச்சி தரேன். பாதி பேரு நம்ம ஆளுங்க மாஸ்க் போடரது இல்லை. நம்ம தைக்கிற மாஸ்க்கை பணக்காரர்கள் வாங்குவதில்லை. மாஸ்கில் கூட ஏழை பணக்காரன் மாஸ்க் என ஆயிடுச்சு போன வரைக்கும் போகட்டுமே”.
“ஆமா மங்கை, எல்லாம் அவன் விட்ட வழி”
இப்போ வந்த செய்தி கேளு. நமக்கு கவர்மெண்ட் 4500 ருபாய் பொங்கலுக்கு தர போராங்களாம். அந்த நல்ல செய்தி சொல்ல தான் வந்தேன். நீயும் ஒரு பழைய தையல் மிஷன், அந்த பழைய பொருட்கள் கடையில பார்த்தேன் என் சொன்னயே. அத போய்
அந்த கடைக்காரன் ராமுவான்ட சொல்லி வைச்சிடு. வேற யாருக்காச்சும் கொடுத்துட போறான்
“நானும் கடையில் கொஞ்சம் பூ வைச்சிட்டு, பெனாயிலு, சோப்பு, லைய்சால் வாங்கி வைக்கலாம்,என இருக்கிறேன்”. “சின்ன வயசுல ஆரம்பிச்ச என கஷ்ட காலம் என்னிக்கு திருமோ கடவுளுக்கு தான் வெளிச்சம”.
“சாமியையே பார்க்வே வரமாட்டேன்னும் போது, நம்ம கடை பூ என்ன ஆவறது”. “ஏகாதசி அப்போ நம்ம கடை எப்படி இருக்கும் சிவப்பு, மஞ்சள் பெங்களூர் ரோஸ், ஜாதி மல்லி, குண்டு மல்லி, துளசி, சாமந்தி என கடை தினமும் கல்யாண கலை கட்டும். இப்போ அப்படி இல்லை”.
“காலத்திற்கு ஏற்ப நாம் மாறி தானே வேண்டும் அவரை ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போகனும். பிள்ளைக்கு நல்ல சாப்பாடு செஞ்சி கொடுக்கனும் . கவர்மெண்ட் கொடுக்கிற 4500 ரூபாய் நம் வாழ்க்கையே மாற போகுது. நமக்கு 4500 ரூபாய் எவ்வளவு பிரச்சினைகள் தீர்க்கும். கடவுள் புண்ணியத்தில் நமக்கு அந்த மகராசன் கொடுக்கிறான். நல்லா இருக்கனணும். சரி நான் வர மங்கை என கிளம்பினாள் ருக்கு பல கனவுகளோடு.
ருக்கு கிளம்பி சென்றவுடன் பழைய கடை நோக்கி நடந்தாள் மங்கை ராமுவிடம் பழைய தையல் மிஷன் சொல்லி வைக்க.
அதே தெருவில் இருக்கும் சிலர் தன் சகாவிடம், டேய் அரசு 4500 /2500 என பொங்கல் ஈனாம் என சொல்லி கொண்டு இருக்காங்க. முடிஞ்ச வரை கொடுக்கலாம். மீதம் வழக்கம் போல ….. என திட்டமிட்டு கொண்டு இருந்தான்.
எதிரகட்சி இந்த பொங்கல் ஈனாம் மக்களுக்கு எந்த விதத்திலும் உபயோகப் படாது. மக்களின் தேவை அதிகமாக உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தால் இந்த தொகையைவிட அதிக அளவில் சலுகை கொடுத்து இருப்போம் என அவர்களின் சொந்த செனல் செய்தியில் ஒளிபரப்பு ஆகி கொண்டு இருந்தது.
ஒரு செய்தியை மையமாக வைத்து எத்தனை எத்தனை திட்டங்கள்??
இதற்கிடையில் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது. அரசு பொங்கல் ஈனாம் 2500 ரூபாய் மட்டுமே அளிக்க நிர்மாணிக்கப்பட்டது என..
மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நூலகங்கள் உருவாக்க வேண்டும் – பபாசி (BAPASI) வேண்டுகோள்
சென்னை, டிச. 7-
அனைத்து பள்ளிகளிலும் நூலக பாட வேலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதை பபாசி வரவேற்கிறது என பபாசி தலைவர் எஸ்.வயிரவன் மற்றும் செயலாளர் எஸ்.கே.முருகன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில்…
அனைத்து பள்ளிகளிலும் வாரம் ஒரு முறை நூலக பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாக கருதுகிறோம். முன்பெல்லாம் நீதி வகுப்பு மற்றும் பள்ளி, கல்லூரிகளில் நூலக வாசிப்புக்கு என முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதற்கு என நூலகர்களும், ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி பாடப்புத்தகங்களோடு பொது நூல்களும் படிக்கும் ஆர்வம் மாணாக்கர்களிடையே இருந்தது.
பள்ளி படிப்போடு பொது மற்றும் இலக்கிய புத்தகங்களைப் படிக்கும் போது மாணவர்கள் அறிவார்ந்தவர்களாக, அறிஞர்களாக, மதிப்புமிக்க பொறுப்பாளர்களாக உயர முடிந்தது. அதோடு மாணவர்களின் மனநிலையும் ஆரோக்கியமாக இருந்தது. இன்றைய சூழலை கருத்தில்கொண்டு மாணவர்களின் நலன் கருதி நூலக பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை அனைத்து பதிப்பாளர்கள் சார்பாக தமிழக முதல்வர், பள்ளி கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு பபாசி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நூலகங்களை உருவாக்கி மாணவர்களுக்கு பயன்படும் புத்தகங்களை தேர்வு செய்துவதுடன், பதிப்பாளர்களிடம் அந்த புத்தகங்களை வாங்க அரசு உதவ வேண்டும் எனவும், அதற்கான நிதி ஆதாரத்தை பள்ளிகளுக்கு அரசு தரவேண்டும் எனவும் இந்த நேரத்தில் தமிழக முதல்வருக்கு கோரிக்கையாக வைக்கிறோம் என்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில்…ஆண்டுதோறும் சென்னையில் ஜனவரி மாதம் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். அதுபோன்று 2022ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னைப் புத்தகக்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கான பணியை பபாசி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பபாசி தலைவர் எஸ்.வயிரவன்,
செயலாளர் எஸ்.கே.முருகன்.
Library letter to all ceo's (1)முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் அரசியல் விவாதங்களில் தலையிடுகின்றனவா? – தமிழில்: இரா. இரமணன்
தலையிடுவது மட்டுமல்ல அதிலும் சில அரசியல் சக்திகள் பக்கமாகவும் சில அரசியல் சக்திகளுக்கு எதிராகவும் செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு மேற்கு ஆசியாவில் காசா போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது ‘அல்அக்சா’ (#Al Aqsa)) என்கிற ஹேஷ்டேகை இன்ஸ்டாகிராம் -அதன் உரிமையாளர் முகநூல் – தடை செய்தது. ‘அல்அக்சா’ என்பது ஜெருசலம் நகரிலுள்ள மசூதி. இஸ்லாமியர்களின் புனித தலம். அதை ‘அல் அக்சா தியாகிகள் படை‘ என்கிற தீவிரவாத அமைப்பு என தவறாக தங்களுடைய அல்கோரிதம் புரிந்து கொண்டதால் நீக்கியதாகக் கூறி மன்னிப்பு கேட்டது.
அரபு மொழி பேசுபவர்களுக்கு இது முகநூலின் மற்றுமொரு அரசியல் அடக்குமுறையே. இது போன்று பல முறை நடந்துள்ளது. முகநூலில் சர்வ சாதரணமாக புழங்கும் மொழிகளில் அரபியும் ஒன்று. இது போல் தவறு நடந்துவிட்டதாக முகநூல் அடிக்கடி வெளிப்படையான மன்னிப்பு கேட்டுள்ளது.
ஆனால் இது அவ்வளவு அப்பாவித்தனமான தவறு அல்ல என்கிறது முகநூலின் முன்னாள் ஊழியரும் எச்சரிக்கை மணி அடிப்பவராக மாறியுள்ளவருமான பிரான்சிஸ் ஹேகன் வெளியிட்டுள்ள ஆவணங்கள்.. இது அதன் கட்டமைப்பிலேயே உள்ள குறைபாடு என்கிறார். இது போன்ற தவறுகளின் ஆழத்தை பல ஆண்டுகளாகப் புரிந்திருந்தாலும் அதை சரி செய்வதற்கு முகநூல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது அரபி மொழியில் மட்டும் நடக்கவில்லை. அந்த நிறுவனம் இது போன்ற மோதல் நடக்கும் பல பகுதிகளில் அந்த மொழி மற்றும் கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளும் நடுவர்களை போதுமான அளவு நியமிப்பதில்லை. அதன் செயலியும் செயற்கை நுண்ணறிவு கொண்டு பல்வேறு மொழிகளில் பதிவிடப்படும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கண்டுபிடிக்கும் திறனை வளர்க்கவில்லை. இதனால் அங்கெல்லாம் வெறுப்பை விதைக்கும் பேச்சுகளும் தீவிரவாத பிரச்சாரங்களும் பெருகுகின்றன.
முகநூலின் இரட்டை வேடத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு ஆப்கானிஸ்தானிலும் மியான்மரிலும் இந்த ஓட்டைகள், மக்களை தூண்டிவிடும் பதிவுகள் ஏராளமாக பதிவிடுவதற்கு அனுமதிக்கும் அதே வேளையில் சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும் பொதுவான வார்த்தைகளைக் கூட ஒட்டு மொத்தமாக தடை செய்து சாதாரண பேச்சுகளையும் நசுக்குகிறது.
உலகின் எல்லோருடைய அரசியல் கருத்துகளையும் தான் ஒரு நாள் இடையீடு செய்வோம் என்ற நோக்கத்துடன் முகநூல் செயலி அமைக்கப்படவில்லை. ஆனால் இன்று அதனுடைய அரசியல் முக்கியத்துவத்திற்கும் அதன் வசம் உள்ள வள ஆதாரங்களுக்கும் ஏற்ப பதிவுகளை ஆய்வு செய்யும் நடுவர்களை நியமிக்க ஏன் அது போதிய நிதி ஒதுக்கவில்லை என்பது வியப்பளிப்பதாக உள்ளது என்கிறார் மத்திய கிழக்கு எண்ணியல் நிறுவன இயக்குனர் எலிசா கேம்பெல்.
மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்களை குறிவைக்கும் வெறுப்பு பதிவுகளை பரப்புவதை தான் தடுக்கவில்லை என தன் உள் ஆவணங்களில் முகநூல் ஒத்துக்கொண்டுள்ளது.
இந்தியாவிலும் ஒரு வலதுசாரி இந்துத்துவ தேசியவாத குழு முகநூலில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பயப் பிராந்தியை கிளப்பக் கூடிய பதிவுகளை வெளியிடுவதை தடை செய்யலாமா என்று அதன் ஊழியர்கள் விவாதித்ததாக இந்த ஆவணங்கள் காட்டுகின்றன.
26.10.2021 தேதியிட்ட இந்து ஆங்கில நாளிதழ் செய்தியிலிருந்து.








