Printhalum Unnai (Even if you split up) Poetry by Neya Puthuraja in Tamil. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

பிரிந்தாலும் உன்னை – நேயா புதுராஜா



பிரிந்தாலும் உன்னை…
———————————
எத்தனைத் துயர்களைக்
கொடுத்தாலும்…
உன்னை என்னால்
சபிக்க இயலாது…
என்றோ….
என் இனிய நேரங்களுக்கு
நீ காரணமாக இருந்திருக்கிறாய்…
என்றோ…
என் வலிகளை உன்னோடு
அணுக்கமாகப் பகிர்ந்திருக்கிறேன்…
என்றோ…
பொய்யாகவேனும் என்னை
பலவகையில் சமாதானப் படுத்தியிருக்கிறாய்…
என்றோ…
என் வரம்பு மீறல்களை
அனுமதித்திருக்கிறாய்…
என்றோ…
என் வயிறு உன்னால்
பசித்தீ அடங்கியது…
என்றோ…
என் கண்ணீர்த் துளிகள்
உன் சட்டையை நனைத்திருக்கின்றன..
என்றோ….
உன் மடி எனக்கு ஆறுதலாக
இருந்திருக்கிறது…
என்றோ…
என் பயத்தில் உன் கைப்பிடித்து
நடந்திருக்கிறேன்…
என்றோ…
உனக்கான பல நேரங்களை
எனக்காக செலவு செய்திருக்கிறாய்…
என்றோ….
என் தாகம் தணிக்கும்
நீராக நீ இருந்திருக்கிறாய்…
என்றோ…
யாருமற்ற தனிமைத்துயர்களில்
உன் இருப்பு மட்டுமே
எனக்குப் பலமாக….
கால ஓட்டத்தில்…
சில துரோங்களும்…
அணுக்கமின்மையும்…
புதிய தேடல்களுமாக…நீ…
உன் மன விலகலும்..உன்
மௌனங்களும் தொடர்ந்து
என்னைக் கொல்லாமல் கொல்கின்றன…
பிரிவுத்துயர் பிரசவ வலியிலும்
கேடாக இருக்குமென்று
இப்போது புரிகிறது…
ஆனாலும்…
உன்னை என்னால்
சபிக்க இயலாது…ஏனெனில்
நினைத்துப்பார்க்க பலநல்ல
நேரங்களை எனக்கு நீ தந்திருக்கிறாய்…
என் கண்ணீர் தவிர்த்து…
என் புன்னகையை
அள்ளிப்போ…
உனக்கான புத்தகத்தில்…
என் பக்கம் மறைந்துவிடுமா என்ன…
மாயை விலகி மறுபடியும்
நீ வரும் நாளை எதிர்நோக்கி…
நான்.

நேயா புதுராஜா
தமுஎகச-அறம் கிளை.

Neya Puthuraja Poetry Trust (Nambikkai) in Tamil Language. Book Day And Bharathi TV Are Branches Of Bharathi Puthakalayam.

நேயா புதுராஜாயின் கவிதை *நம்பிக்கை*

நம்பிக்கை என்னிடம் கடவுள் இல்லையென்று சொல்லிவிடாதீர்கள்... இந்த பெரும் வலியில் இருந்து என்னைக் கரையேற்றுவார் என ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையாக... என்னிடம் கடவுள் இல்லையென்று சொல்லிவிடாதீர்கள்.... இந்தப் பாவிகளை எல்லாம் அவர் தண்டிக்காமல் விடமாட்டார் என நம்பிக்கையோடு இருக்கிறேன்.. என்னிடம் கடவுள்…
Friend Poetry by Poet Neya Puthuraja. Book Day (Website) And Bharathi TV (Youtube) are Branches of Bharathi Puthakalayam.

நண்பன் – நேயா புதுராஜா

நண்பன் ----------------- எங்கு போனாலும் கூடவே வருகிறாய்... என் நினைவு தெரிந்து நமது முதல் சந்திப்பு இன்னும் பசுமையாய்.... பக்கத்து வீட்டு பாலாஜியின் பந்து எங்கள் வீட்டு மொட்டை மாடியில் கிடந்தது... அவன் வந்து கேட்டபோது நான் அதைப் பார்க்கவில்லை என்று…
கவிதை: மனசு – நேயா புதுராஜா 

கவிதை: மனசு – நேயா புதுராஜா 

மனசு ~~~~~     உள்ளத்தையும் உடலையும் பறிமாறிக்குங்கன்னு.. ஊரைக்கூட்டி விழா எடுக்க நாள் குறிச்சாங்க...   காத்து கருப்பு அண்டாம காக்கா குருவி பாக்காம பத்திரமாய்ப் பொத்திப் பொத்திப் பாதுகாத்த.. பொக்கிஷத்தை எல்லாம்.. ஒத்த நாளில் உன்கிட்டே ஒப்படைச்சேன்...   உன்னோட …